இந்தியர்களுக்கு குழந்தை பிறந்தால் ஒரு வருடத்திற்குள் பதிவுச் செய்ய உத்தரவு
Posted By admin On 26 Feb 2012. Under வெளிநாட்டுசெய்தி
ஐக்கிய அரபு அமீரகத்தில் வாழும் இந்தியர்கள் தங்களுக்கு குழந்தை பிறந்தால் ஒருவருடத்திற்குள் பதிவு செய்ய வேண்டும்.
அபுதாபி,அல் அய்ன் ஆகிய இடங்களீல் வசிப்பவர்கள் அபுதாபி இந்திய தூதரகத்திலும், துபாய் மற்றும் வடக்கு எமிரேட் மாகாணங்களில்(ஷார்ஜா,அஜ்மான்,ராஸ் அல் கைமா, புஜைரா, உம்முல் குவைன்) வசிப்பவர்கள் துபாய் இந்திய துணை தூதரகத்திலும் பதிவு செய்யவேண்டும்.
பல பெற்றோர்களும் தங்களுக்கு குழந்தை பிறந்தால் பதிவுச் செய்யாமல் காலம் தாழ்த்துவதால் இந்திய தூதரகம் இந்த புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது.
குழந்தைகளின் பிறந்த தேதியை பதிவுச் செய்வதில் தாமதம் ஏற்பட்டால் பாஸ்போர்ட் கிடைப்பது சிரமம் என்று தூதரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஒரு வயதான குழந்தையின் பெயர் பிறப்பு பதிவேட்டில் இல்லையெனில் அவர்களுக்கு தூதரகம் அல்லது துணை தூதரகம் மூலமாக நேரடியாக பாஸ்போர்ட் கிடைக்காது. இந்திய உள்துறை அமைச்சகத்தின் அனுமதி பெற்ற பின்னரே அளிக்கப்படும். இதற்கான சிறப்பு விண்ணப்பத்தை பெற்றோர்கள் அளிக்கவேண்டும். இது புதுடெல்லிக்கு சென்று தேவையான நடவடிக்கைகளை பூர்த்திச் செய்து அனுமதி கிடைத்தால் மட்டுமே பாஸ்போர்ட் வழங்கப்படும். இதற்கு சில வேளைகளில் 1 அல்லது 2 மாதங்கள் ஆகும். ஆகையால் இத்தகைய சிரமத்தை போக்க விரைவாக பதிவுச் செய்ய வேண்டும் என்று இந்திய தூதர் எம்.கே.லோகேஷ் அறிவித்துள்ளார்.
குழந்தை பிறந்து ஒரு வருடத்திற்குள் பதிவுச்செய்ய தவறும் பட்சத்தில் யு.ஏ.இ அதிகாரிகள் அபராதம் விதிக்கும் சூழல் ஏற்படும்.
உன் செயல்கள் அனைத்தும்
உன் எண்ணங்களின் படிதான் நடக்கும்.
( நபி மொழி !!!)
M.Zahir husseன்
No comments:
Post a Comment