Wednesday, February 8, 2012

நாடெங்கும் இஸ்ரேலிய உளவாளிகள்?

செவ்வாய், 07 பிப்ரவரி 2012 12:18 செய்திகள் - இந்திய செய்திகள்
E-mail| Print |
inShare1
SocButtons v1.4
இரண்டாண்டுகளுக்கு முன் கேரளா வந்து தங்கியிருக்கும் இஸ்ரேலிய தம்பதியினர் ரகசிய உளவாளிகளா? என்று மத்திய உளவுத்துறை சந்தேகம் அடைந்துள்ளது. அவர்கள் சந்தேகத்திற்குரிய செயல்களில் ஈடுபட்டுவருவதால் விரைவில் நாட்டைவிட்டு வெளியேற்றப்படுவார்கள் என்று தெரிகிறது.
ஷினோர் ஸல்மான், யஃப்ஃபா ஷினாய் என்னும் பெயர்களினைக் கொண்ட இத்தம்பதி ஃபோர்ட் கொச்சியின் ரோஸ் சாலையில், 50,000 ரூபாய் மாத வாடகைக்கு வீடு எடுத்துத் தங்கியுள்ளனர். மாத வாடகை 50,000 ரூபாய்கள் என்பது அந்த ஸ்தலத்தில் மிக மிக அதிகபட்ச வாடகையாகும்.

"மாத வாடகைத் தொகையே இவர்கள் மீதான முதல் ஐயத்திற்கு வித்திட்டது" என்று கூறிய மத்திய உளவுத்துறை அதிகாரி ஒருவர், "தினமும் ஒரு குழுவினர் வந்து இத்தம்பதிகளைச் சந்தித்துச் செல்வதும், அச்சந்திப்பு நீண்ட நேரம் நீடிப்பதும் மேலும் ஐயத்தை உறுதி செய்தது" என்றார்.
"மும்பையில் சம்பவித்த 26/11 துர்ச்சம்பவத்திற்குப் பிறகு (அதில் யூத மதகுரு, அவர் கர்ப்பிணி மனைவி உள்ளிட்ட ஆறு யூதர்கள் கொல்லப்பட்டிருந்தனர்) நாட்டின் அநேக நகரங்களில் இஸ்ரேலியர்கள் சுற்றுலாவில் வந்து குடியேறியுள்ளதை தற்செயலானது என்று கருத இயலாது" என்றும் அவர் கூறினார்.

கடந்த திங்களன்று அவர்களுக்கு நாட்டை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டதாகவும், அதற்குமுன் அவர்களிடம் முறையான விசாரணையும், அவர்களின் நிதி ஆதாரங்கள் மீதான விசாரணநடைபெறும் என்றும் தெரிகிறது.

நாடெங்கும் பல்வேறு நகரங்களில் இஸ்ரேலியர்கள் வந்தமர்ந்துள்ளதாக உளவுத்துறை 'தகவல்' ஒன்று தெரிவிக்கிறது.

Read more about நாடெங்கும் இஸ்ரேலிய உளவாளிகள்? [2887] | இந்திய செய்திகள் | செய்திகள் at www.inneram.com
=====================================================================================================

மோடியும் ஹிட்லரும் ஒன்றே : நடிகை நந்திதா தாஸ்

திங்கள், 06 பிப்ரவரி 2012 23:52 செய்திகள் - இந்திய செய்திகள்
E-mail| Print |
inShare2
SocButtons v1.4
வதோதரா : பாலிவுட்டின் துணிச்சலான நடிகையும் படத்தயாரிப்பாளருமான நந்திதா தாஸ் இந்தியாவின் வளர்ச்சி பெற்ற மாநிலமாக சொல்லப்படும் குஜராத்தை ஆட்சி செய்யும் மோடிக்கும் ஹிட்லருக்கும் எவ்வித்தியாசமும் இல்லை என்று கூறியுள்ளார்.
”ஹிட்லரின் ஆட்சி காலத்தில் தான் ஜெர்மனியின் மிகச் சிறந்த சாலைகள் அமைக்கப்பட்டன. அது போல் ஜெர்மனியின் மிகச் சிறந்த மருத்துவமனைகளும் அப்போது தான் கட்டப்பட்டன. ஹிட்லர் ஒரு இசைப் பிரியராகவும், சைவ உணவு உண்பவராகவும் மது குடிக்காமலும் இருந்தார். அக்காரணங்களுக்காக ஜெர்மனியார்கள் யாரும் கூட ஹிட்லரை உயர்வாக நினைப்பதில்லை. மாறாக அவர் செய்த அநீதிகளாலேயே அவர் நினைக்கப்படுகிறார்” என்று பத்திரிகையாளர்களிடம் நந்திதா தாஸ் கூறினார்.
தமிழிலும் சில சினிமாக்களில் நடித்துள்ள நந்திதா தாஸ் 2002 ல் குஜராத்தில் நடந்த முஸ்லீம்களுக்கு எதிரான அரசு பயங்கரவாதத்தை அடிப்படையாக வைத்து ‘பிராக்’ எனும் படம் எடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. குஜராத்தில் நடைபெற்ற ஒரு கருந்தரங்குக்கு வந்த நந்திதா தாஸிடம் 2002ன் குஜராத்திற்கும் 2012ன் குஜராத்திற்கும் உள்ள வித்தியாசம் குறித்து பத்திரிகையாளர்கள் வினவிய போதே நந்திதா இவ்வாறு பதிலளித்தார்.
2002ன் கலவரத்தை மறந்து விட வேண்டும் என்று தம்மிடம் சிலர் அறிவுரை கூறியதாக சொன்ன நந்திதா தாஸ் இன்னும் சிலர் முஹம்மது கஜினியை குறித்து பேசுகின்றனர். இன்னும் சிலர் ஒரு சமூகத்தை அவுரங்கசீப்பின் ரத்தமாக நினைத்து வெறுப்பை உமிழ்கின்றனர். அப்படியிருக்கும் போது தங்கள் உடமையும் உறவுகளையும் இழந்து நிற்கும் ஒரு சமூகத்தை இச்சம்பவங்களை பத்து வருடங்களுக்குள் மறந்து மன்னிக்க சொல்வது சரியானது அல்ல என்று கூறினார்.
மேலும் பத்து வருடங்களுக்கு முன்னும் பிற மாநிலங்களை விட குஜராத் நன்றாகவே இருந்தது என்றும் வெறும் அஹமதாபத்தையும் வதோதராவையும் வைத்து ஒட்டு மொத்த குஜராத்தின் வளர்ச்சியும் எடை போடக் கூடாது என்றும் பின் தங்கிய செளராஷ்டிரா பகுதிகளயும் உள்ளடக்கி எடை போட வேண்டும் என்றும் கூறினார்.

Read more about மோடியும் ஹிட்லரும் ஒன்றே : நடிகை நந்திதா தாஸ் [2877] | இந்திய செய்திகள் | செய்திகள் at www.inneram.com

No comments: