இராவுத்தர்
இராவுத்தர் அல்லது ராவுத்தர் (Rowther or Ravuthar) என்பவர்கள் தமிழ் நாட்டில் வாழக்கூடிய தமிழ் முஸ்லிம் மக்களில் ஒரு பிரிவினர் ஆவர். லெப்பை மற்றும் மரக்கயார் என்பார் மற்ற இரு பிரிவினர் ஆவர். தமிழ் முஸ்லிம் பிரிவை சேர்ந்த இவர்கள் ஹனபி வழிமுறையை பின்பற்றுகிறனர். மேலும் இவர்கள் தென் இந்தியா மற்றும் தென் கிழக்கு ஆசிய முழுவதும் பரவி உள்ளனர்.
பொருளடக்கம்
* 1 பெயர் காரணம்
* 2 மூலமும் வரலாறும்
* 3 மேலும் சில தகவல்கள்
* 4 மேற்கோள்கள்
பெயர் காரணம்
இசுலாமியர்களில் மரைக்காயர், இராவுத்தர் என்பது அவர்கள் செய்து வந்த தொழில்களின் அடிப்படையிலேயே பிரிக்கப்பட்டிருக்கிறது. தமிழ் மொழியில் ராவுத்தர் என்றால் குதிரை ஓட்டி என்று பொருள். குதிரை வணிகம் செய்து வந்தவர்கள் இராவுத்தர் என்று அழைக்கப்பட்டனர். மரைக்காயர் (மரக்கலம்+ ஆயர்)என்றால் கப்பல் மூலம் வணிகம் செய்து வந்தவர்கள் என்று சொல்கிறார்கள். அரபி மொழியில் 'ரா-இத்' என்றால் குதிரை வீரன் என்று பொருள். வடமொழியில் 'ராஹுத்' என்றும், தெலுங்கில் 'ரவுத்து' என்றும் பொருள். மூலமும் வரலாறும்
நாயகம்(ஸல்) காலத்தில் இஸ்லாம் பரிபூரணப்படுத்தப் படுவதற்கு முன்பே தமிழக அரபு நாட்டுத் தொடர்பு வாணிபத்தின் மூலம் உருவானது அரபுக் குதிரைகளை தமிழக மன்னர்கள் பெரிதும் விரும்பினர். கி.பி இரண்டாம் நூற்றாண்டு இலக்கியமான பட்டினப்பாலை 'நீரில் வந்த நிமிர் பரிப்புரவி' என அரபுக் குதிரை இறக்குமதியைப் பதிவு செய்துள்ளது.
கி.பி 7-ஆம் நூற்றாண்டில் மலிக்குல் இஸ்லாம் ஜமாலுத்தீன் என்ற புகழ் பெற்ற வணிகரும் பிற வாணிகர்களும் சேர்ந்து ஆண்டு தோறும் 'கைஸ்' தீவிலிருந்து 1440 குதிரைகளை கலங்களில் ஏற்றிக் கொண்டு வந்து, பாண்டியனின் ஆட்சிக்குட்பட்ட கீழைக் கடற்கரைப் பகுதியில் இறக்குமதி செய்ய ஒப்பந்தம் செய்தனர் என்பதை அப்துல்லாஹ் வஸ்ஸாப் என்ற வரலாற்றறிஞர் குறிப்பிடுகிறார். குதிரையைக் கொண்டு வந்து விற்பனை செய்தவர்கள் அரபிகள் (யவனர்) என நீலகண்ட சாஸ்திரி குறிப்பிட்டுள்ளார்.
திருநெல்வேலி மாவட்டம் திருப்புடையார் கோவில் கோபுரத்தில் வரையப்பட்டுள்ள ஓவியம் ஒன்றில் குதிரைகளை ஏற்றி வந்த மரக்கலமும் அதில் குதிரைகளோடு அரபு வணிகர்கள் நிற்கும் காட்சியும் கம்பீரமாக தீட்டப்பட்டுள்ளதைக் காணலாம். இறக்குமதி செய்யப்பட்ட குதிரைகள் சரியான பராமரிப்பு இல்லாமல் இறந்த காரணத்தினாலும், குதிரைகளை போர்ப்பயிற்சிக்கு பழக்குவதற்கு சரியான ஆட்களூம் இல்லாத காரணத்தினால், வாணிபத்திற்காக வந்த முஸ்லிம்களை ஆட்சியாளர்கள் நியமித்தனர். முஸ்லிம் வீரர்களின் திறமையையும், வீரத்தியும் கண்ட மன்னர்கள் அவர்களை குதிரைப்படைத் தலைவர்களாகவும் நியமித்தனர்.
முஸ்லிம் குதிரை வீரர்கள் தங்குவதற்கு ஒதுக்கப்பட்ட பகுதிகள்தான் முதலில் 'பாளையம்' என்று அழைக்கப்பட்டது.
திருப்பெருந்துறை சிவன் கோவிலில் உள்ள மண்டபத்தில் ஒரு தூணில் குதிரை வீரர் சிலை உள்ளது. அச்சிலைக்கு குதிரை இராவுத்தர் என்றும் அம்மண்டபத்திற்கு குதிரை இராவுத்தர் மண்டபம் என்றும் பெயர்.
கடலூர் மாவட்டம் கள்ளக்குறிச்சியில் உள்ள திரெளபதியம்மன் கோயிலின் வாசலில் தலைப்பாகை தாடியுடன் கூடிய ஒரு காவல் வீரனின் சிலை உள்ளது அதன் பெயர் 'முத்தியாலு ராவுத்தர்'
வெள்ளை கலிங்கத்தர் வெண்திரு முண்டத்தர் பள்ளிக் குப்பாயத்தர் அன்னே என்னும் பள்ளிக் குப்பாயத்தர் பாய்பரிமேல் கொண்டேன் உள்ளம் கவர்வரேல் அன்னே... (திருவாசகம் அன்னைபத்து செய்யுள் சிவபெருமானை ராவுத்தர் கோலத்தில் வர்ணித்திருப்பது)
திருநாவுக்கரசரின் தேவரத்திலும் (5-29, 5-40) , நம்மாழ்வாரின் திருவாய் மொழியிலும் (4-4) இதைப்போன்ற பாடல்கள் இடம் பெற்றுள்ளன
ஒப்பரிய சட்டையும் உடுத்திலகு பட்டும் தொப்பியும் முகத்திடை துலக்க முளராகி (திருவாதவூர்ப் புராணத்தில்)
சிவபெருமான் நரிகளைப் பரிகளாக மாற்றி பாண்டியனிடம் சேர்ப்பித்த நிகழ்ச்சியில் சிவனை இராவுத்தநாயகனாகவே சித்தரிப்பதைக் காணலாம்.
அருணகிரிநாதர் தனது கந்தர் அலங்காரத்தில், 'மாமயிலேறும் ராவுத்தனே' என்றும் கந்தர் கலி வெண்பாவில் 'சூர்க்கொன்ற ராவுத்தனே' என்றும் புகழ்ந்திருக்கின்றனர்.
கி.பி 1212-ம் ஆண்டு சோழ மன்னர்களின் உதவியுடன் ஒட்டாமன் பேரரசை சேர்ந்த துருக்கிய வியாபாரிகள் கூட்டம் ஒன்று தமிழ்நாட்டுக்கு வந்து சேர்ந்தது. அவர்களுடன் வந்த இஸ்லாமிய போதனை குழுக்கள் தமிழ்நாட்டின் தரங்கம்பாடி, நாகப்பட்டினம், காரைக்கால், முத்துப்பேட்டை, கூத்தாநல்லூர் மற்றும் பொதக்குடி ஆகிய ஊர்களில் தங்கி இஸ்லாம் மதத்தை பரப்பினார். பின்னர் தஞ்சாவூர் வந்த இவர்கள், அங்கு உள்ள இந்து மக்களை மதம் மாற்றும் பொருட்டு அங்கயே தங்கிவிட்டனர்.
அதன் பிறகு தமிழ்நாட்டை ஆண்டு வந்த பாண்டிய மன்னன் மாறவர்மன் குலசேகர பாண்டியன் காலத்தில் அடுத்து பட்டத்துக்கு வருவது யார்? என்ற குழப்பம் ஏற்பட்டது. மாறவர்மன் குலசேகர பாண்டியனின் புதல்வர்களான ஜதவர்மன் சுந்தர பாண்டியன் மற்றும் ஜதவர்மன் வீர பாண்டியன் ஆகிய இருவரும் அடுத்த பட்டத்துக்காக சண்டையிட்டனர். இவர்களில் சுந்தர பாண்டியன் தன் தந்தை மாறவர்மன் குலசேகர பாண்டியனை கி.பி 1310-ல் கொன்று விட்டான். பின்பு ஆட்சியை பிடிக்க தனக்கு உதுவுமாறு டெல்லியை ஆண்ட தில்லி சுல்தான் அலாவுதீன்கில்ஜியை வேண்டினான். அவனது வேண்டுகோளை ஏற்ற அலாவுதீன்கில்ஜி, தனது தளபதி மாலிக் கபூர் என்பவனை தமிழ் நாட்டுக்கு அனுப்பி வைத்தான். மாலிக் கபூரும் அவ்வாறே சுந்தர பாண்டியனுக்கு உதவி செய்து அவனை கி.பி 1311-ல் அரியணையில் ஏற்றினான். பின்பு அவனுடைய உதவியின் மூலம் தமிழ் நாட்டில் இஸ்லாம் மதத்தை பரப்பினான்.
அதன் பிறகு சுந்தர பாண்டியனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தளபதி மாலிக் கபூர், சுந்தர பாண்டியனை முறியடித்து விட்டு மதுரை ஆட்சியை கைப்பற்றினான். அதன் பிறகு இன்னும் வேகமாக இஸ்லாம் மதத்தை அவன் தமிழ் நாட்டில் பரப்பினான். பொதுவாக அலாவுதீன்கில்ஜியும் சரி, மாலிக் கபூரும் சரி தமிழ் நாட்டை டெல்லி மொகலாய சாம்ராஜ்ஜியத்துடன் இணைக்க விரும்பவில்லை. அவர்கள் இருவரின் விருப்பமும் தமிழ் நாட்டில் இஸ்லாம் மதத்தை பரப்புவது மட்டுமே. அந்த ஆசை நிறைவேரிவிட்டதாலும் மேலும் சில பிரட்சணைகளாலும் மாலிக் கபூர் சில ஆண்டுகளுக்குப்பிறகு மதுரையை விட்டு வெளியேறினான். ஆனால் அதன் பிறகும் அல்லாவுடீன் உடான்றி, குட்புதீன், நாசிருடீன், அடில்ஷா, பஃருடீன் முபாரக் ஷா, அல்லாவுடீன் சிக்கந்தர்ஷா போன்றவர்களின் ஆட்சி மதுரையில் இருந்தது. இவர்கள் தம் பெயர்களினால் நாணயங்கள் வெளியிட்டனர். இவர்களைப் பற்றிய தகவல்கள் புதுக்கோட்டையில் உள்ள இரு கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இவ்வாறு துருக்கியர்கள் தரங்கம்பாடி, நாகப்பட்டினம், காரைக்கால், முத்துப்பேட்டை, கூத்தாநல்லூர் மற்றும் பொதக்குடி ஆகிய ஊர்களிலும் தமிழ் நாட்டின் மற்ற இடங்களிலும் இஸ்லாம் மதத்தை பரப்பினார். இவர்கள் இருவர்களின் வழியில் வந்தவர்களே இராவுத்தர் என்று அழைக்கப்படுகின்றனர்
[தொகு] மேலும் சில தகவல்கள்
* இராவுத்தர்கள் தமிழ் மொழியை மட்டுமே பேசுகின்றனர். மற்ற இஸ்லாமிய பிரிவினரை போல் ஹிந்தியோ, உருதோ பேசுவது இல்லை.
* இவர்களின் பெரும்பாலான பழக்கவழக்கங்கள், குறிப்பாக திருமணம் மற்றும் சுபவிழாக்கள் இந்து மதத்தினரின் சாயலை பெரும்பாலும் கொண்டுள்ளது.
* முற்காலத்தில் இவர்கள் பெரும்பாலும் குதிரை விற்கும் தொழிலே செய்து வந்ததாக கூறப்படுகின்றது. தற்போதும் இவர்கள் பெரும்பாலும் வியாபாபாரங்களிலேயே ஈடுபடுகின்றனர். விவசாயம் செய்பவர்கள் மிகவும் அரிது.
* இவர்கள் பேசும் தமிழில் ஓரிரு வார்த்தைகள் சிறிது வேறுபட்டுள்ளது. எடுத்துக்காட்டாக:- அப்பா - அத்தா, குழம்பு - ஆணம்.
* இவர்கள் மற்ற தமிழ் முஸ்லிம் பிரிவுகளை போல் அல்லாமல் பெரும்பாலும் வெளிர் நிறத்திலேயே உள்ளனர். ஏனெனில் இவர்களே மற்ற இஸ்லாமிய பிரிவினரை விட அதிகம் துருக்கியர்களுடன் நெருக்கம் உடையவர்கள்.
* இவர்களின் பெரும்பாலான சமய வழிபாட்டு முறைகள் துருக்கியர் மற்றும் இராக்கியர் பாணியிலேயே அமைத்துள்ளது.
* பொதுவாக தமிழ்நாட்டில் முஸ்லிம்களை 'துலுக்கர்' என்று அழைக்கும் வழக்கம் உள்ளது. இது 'துருக்கியர்' என்ற வார்த்தை மருவியதாலே வந்தது.
மேற்கோள்கள்
* J. P. Mulliner. Rise of Islam in India. University of Leeds chpt. 9. Page 215
No comments:
Post a Comment