Wednesday, February 29, 2012

கொலைத்துறையின் திட்டமிட்ட கொலைகளும்; திடுக்கிடும் பின்னணிகளும்! சட்டத் தீர்வுகளும்!!
http://ping.fm/TZxq1
செவ்வாய், 28 பிப்ரவரி 2012 18:13 கட்டுரைகள் - சட்ட விழிப்பறிவுணர்வு
E-mail | Print |
inShare1
கொலைத்துறையின் திட்டமிட்ட கொலைகளும்; திடுக்கிடும் பின்னணிகளும்! சட்டத் தீர்வுகளும்!!

சட்ட ஆராய்ச்சியாளர் வாரண்ட் பாலா
மின்னஞ்சல்: warrantbalaw@gmail.com

உலக அளவில், குறிப்பாக இந்தியாவில் எந்த பயங்கரவாதச் சம்பவங்கள் நடந்தாலும் அதற்கு இஸ்லாமிய சமுதாய மக்களே காரணம் என்ற தோரணையைப் போல், தமிழகத்தில், எந்த குற்றச்சம்பவம் நடந்தாலும், வட மாநிலத்தை சேர்ந்த கூலித் தொழிலாளர்களே காரணம் என்கிற தோரணை வலுப்பெற்று வருகிறது.

இதனால், வட இந்திய மாநிலங்களைச் சேர்ந்த பல கூலித் தொழிலாளர்கள் சுதந்திரமாக வெளியில் நடமாட முடியாத அவலச் சூழ்நிலையும், காவல்துறையின் சட்டத்துக்கு உட்படாத உச்சகட்ட கொடுமைகளையும், விசாரணைகளையும், மனித உரிமை மீறல்களையும் நம் வட நாட்டவர்கள் சந்திக்க வேண்டிய அவல நிலை உருவாகியுள்ளது.

குறிப்பிட்ட சில பகுதிகளில், சினிமா பார்த்து விட்டோ அல்லது வேறு காரணத்தால் நள்ளிரவில் நடமாடும் நபர்களிடம் கூட, கை ரேகை வாங்கி கொள்கிற வழக்கம் ஆங்காங்கே இருக்கத்தான் செய்கிறது என்பதை நானே நேரடியாக அறிந்துள்ளேன். இப்படி பதிவு செய்து கொடுத்தவர்களும், பதிவு செய்ய மறுப்பவர்களும் படித்து தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியச் செய்தி இதுதான்.

திருப்பூர் ஆலுக்காஸ் நகைக்கடையில் நடைப்பெற்ற கோடிக்கணக்கான கொள்ளையை அடுத்து, அவ்வூரில் தங்கியுள்ள வட மாநிலத்தவர்களை அழைத்த இக்கொலைத்துறை குற்றவாளிகளை அடையாளம் காணும் சட்டம் 1920 இன் பிரிவு 4 மற்றும் 5 க்கு எதிராக, அவர்களைப் புகைப்படம் பிடித்தும், கை ரேகையை பதிவு செய்தும் கொண்டும் இருந்த காட்சிகள் பல்வேறு தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்டன.

பொதுவாக சந்தேகத்தின் பேரில் கூட, ஒருவரின் கைரேகையைப் பதிவு செய்ய முடியாது. மாறாக, பிரிவு 4-இன்படி, ஒருவரின் மீதான குற்றச்சாற்றுகள் நிருபிக்கப்பட்டு, கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டு இருந்தால் மட்டுமே இதனைச் செய்ய முடியும்.

ஒருவேளை குற்றம் சாற்றப்பட்டுள்ள நிலையில் எடுக்க வேண்டும் என்றாலும் கூட, பிரிவு 5 இன்படி, அக்குற்றச்சாற்றை விசாரணை செய்ய அருகதையுள்ள குற்றவியல் நீதித்துறை ஊழியரின் அனுமதியைப் பெற்றே, அடையாளங்களைப் பதிவு செய்ய முடியும். குற்றமற்றவர் என விடுதலை செய்யப்பட்டால், தன்னிடம் இருந்து எடுக்கப்பட்ட அங்க அடையாள அளவீடுகளை திரும்ப பெற உரிமையுண்டு.

மேலும், அடையாளம் காண்பது அல்லது எடுத்துக் கொள்வது என்பது எல்லோரும் நினைப்பது போல் அல்லது ஊடகங்களில், பூடகமாக, பூதாகரமாக காட்டப்படுவது போல் குற்றம் சாற்றப்பட்டவரின் உருவத்தை ஒளிப்படமோ அல்லது ஒலி-ஒளிப்படமோ பிடித்தல் அன்று. மாறாக, கை மற்றும் கால்களின் அளவகளை அளந்து கொள்ளுதல் மற்றும் ரேகைகளை பதிவு செய்து கொள்வது மட்டுமே ஆகும்.

ஆனால், இந்த விபரங்கள் எல்லாம் எவருக்கும் தெரியாததால், சட்டத்தை கையாளும் ஊழியர்கள் முட்டாள்தனமாக எதைச் செய்தாலும் அதுவே சட்டம் என்று மூடத்தனமாக நம்பி, சட்டம் சரியில்லை அல்லது சட்டத்தில் ஆயிரத்தெட்டு ஓட்டைகள் என்று புலம்பிக் கொண்டு இருக்கிறார்கள். சட்டத்தை எவர் ஒருவர் தவறாக கையாண்டாலும் அதற்கு எழுத்து வடிவில் இருக்கின்ற சட்டம் ஒன்றும் செய்ய முடியாது. அச்சட்ட அறிவுறுத்தலை உணர்ந்திருக்கிற நாம்தான் செயலில் களமிறங்க வேண்டும்.

ஆனால், நமது வேலைக்காரர்களான அரசு மற்றும் பொது ஊழியர்களுக்கு தெரிந்த ஓரிரண்டு சட்ட விதிகள் கூட, நாட்டின் முதலாளிகளான நமக்கு தெரியாமல் இருந்தால், எப்படி அவ்வேலைக்காரர்களை வேலை வாங்க முடியும்? வேலையைத் தப்பாக செய்கிறார்கள் என முடிவு செய்ய முடியும்? அதன் நிரந்தர தீர்வுக்கான அடுத்தகட்ட நடவடிக்கையை மேற்கொள்ள முடியும்?

தமிழ்நாட்டில் பல்லாயிரக்கணக்கான வட நாட்டவருக்கு நடந்து வரும் இக்கொடுமையான நிலை, இந்தியாவின் வேறு மாநிலத்தில் நமக்கு (ஒரு தமிழருக்கு) உருவாகியிருந்தால், இந்நேரம் குய்யோ, முய்யோ என்று நாம் குரல் கொடுத்திருப்போம். நமது உயிர் மட்டும்தான் உயிரா? மற்ற மனிதர்களின் உயிரெல்லாம் உயிர் இல்லையா?

மேலும், வட மாநிலத்தவர்களே இது போன்ற குற்றச் செயல்களை புரிகின்றனர் என்கிற இத்தோரணை தவறு என்பதற்கு, சென்னையில் மோதல் கொலைகளை (என்கவுண்டர்) நடத்தி மார்தட்டிக் கொள்ளும் அதே வேளையில், தமிழகம் முழுவதும் அங்காங்கே கோடிக்கணக்கில் அரங்கேற்றப்படும் வங்கி மற்றும் நகைக்கடை கொள்ளைச் சம்பவங்களே சாட்சிகளாக உள்ளன. கொல்லப்பட்டவர்கள்தான் அங்கும் கொள்ளையடித்தார்களா?

இதுவரை, தமிழ்நாடு கொலைத்துறை தமிழர்கள் மீது மட்டுமே அரங்கேற்றி வந்த கொலை வெறியை தற்போது, வட மாநிலத்தவர் மீதும் காட்ட ஆரம்பித்துள்ளது. அதுவும் ஒரே சமயத்தில் ஐந்து பேர். இதில் ஒரே மாநிலத்தை சேர்ந்தவர்கள் நான்கு பேர், என்பதால் அக்குறிப்பிட்ட வட மாநிலத்தால் நிச்சயம் தமிழக அரசுக்கு பெருத்த தலைவலிதான். அதற்கான அறிகுறிகள் தற்போதே தென்பட தொடங்கிவிட்டன.

ஏற்கனவே, தென் மாநிலங்களுடன் ஆன உறவு சுமூகமாக இல்லாத நிலையில், வட நாடுகளின் பகையையும் சேர்த்துக் கொண்டிருக்கிறது. ஏற்கனவே, மத்திய அரசு வேறு மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் செயல்பட்டு வருகிறது. அதனால், என்னிடம் ஆட்சிப் பொறுப்பை ஒப்படைத்த உங்களிடம்தானே நான் எனது கோரிக்கைகளை வைக்க முடியும் என்கிற அற்பமான காரணத்தை கூறி மக்களின் அத்தியாவசிய பண்டங்கள் மற்றும் பயணங்களின் செலவை கூட்டியதே மக்களை கடும் அவதிக்கு உள்ளாக்கியிருக்கிறது. இவைகள் எல்லாம் ஒருபோதும் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு உதவாது. மாறாக, அழிவின் அதல பாதாளத்துக்கே கொண்டு செல்லும்.

இதுபோன்ற சம்பவங்கள் எல்லாம் சட்டத்திற்கு உட்பட்டுதான் நடக்கிறதா என்பதை கண்டறிந்து விமர்சித்தும், தடுத்த நிறுத்தவும் கடமைப் பொறுப்புள்ள ஊடகங்கள், இதுபோன்ற மனித உரிமைகளை மீறும் துரதிருஷ்டவசமான மற்றும் அப்பட்டமான கொலை, கொள்ளை உட்பட அனைத்து விதமான குற்றச் செயல்களையும் தங்களுக்கு கிடைத்த அட்சய பாத்திர தீனியாகவே கருதி காலாண்டுக்கும் குறையாத காலத்திற்கு, இஷ்டத்திற்கு கதை எழுதவும், வாசிக்கவும் வழிவகை செய்து கொள்கின்றன. இந்தக் கூத்துக்கள் போதாது என்று, யாருக்குமே தெரியாத பரம ரகசியத்தை சொல்வது போல பல வகைகளில் புலனாய்வு தொடர்கள் வேறு இனி அரங்கேறும்.

ஒருவரின் சட்டத்துக்கு உட்படாத குற்றச் செயல்களை விவரிக்கும் ஊடகங்கள் அச்செயலை புரிந்தோருக்கு செக்ஸ் டாக்டர், செக்ஸ் சாமியார், காம மன்னன், காதல் வெறியன் என்பன உட்பட பல்வேறு பட்டப்பெயர்களை தர தயங்காத ஊடகங்கள், காவல் காக்க வேண்டிய கடமையில் இருந்து தவறி, கொலைச் செய்யும் போது ‘‘கொலைத்துறை‘‘ என விமர்சனம் செய்வதில்லையே ஏன்?

இதுபோன்ற தவறுகள் நீதித்துறையில் நடந்த போது கூட, நீதிபதிகளை ‘‘நிதிபதிகள் அல்லது நிதிக்கு அதிபதிகள்‘‘ என்று நேருக்கு நேர் எழுத்து மூலமாகவே ஆவணங்களை சமர்ப்பித்துள்ளேன். இப்படி உண்மையைச் சொன்னதால் எனக்கு எந்த பிரச்சினையும் வந்ததில்லை. இதனை ஊடகங்கள் செய்யாவிட்டாலும் கூட, நாம் ஏன் சொல்லக்கூடாது / பின்பற்ற கூடாது? தைரியமாக பின்பற்றுவோம்.

இதுபோலவே, நீங்களும் யாருக்காகவும், எதற்காகவும் பயந்து புனைப் பெயரில் உலாவராமல், உங்களது சொந்த பெயரிலேயே அனைத்து விதமான கருத்துக்களையும் மிகவும் தைரியமாக பதிவு செய்யலாம். தப்பு செய்கிறவர்கள்தான் பயப்பட வேண்டுமே தவிர, கருத்து சொல்கிற நீங்கள் ஏன் பயப்பட வேண்டும்?

பொதுவாக, குற்றம் நடைபெறாமல் தடுக்க வேண்டியதே, நம் ஒவ்வொருவரின் கடமை. இதனை சட்டம் பொதுமக்களான நமக்கு, ஊதியமில்லாத கடமையாகவும், காவல் ஊழியர்களுக்கு கூலியுடன் கூடிய கடமையாகவும் விதிக்கிறது. அவ்வளவே!

இதனை குற்ற விசாரணை முறை விதிகள் 1973 இன் விதி 36 ஆனது, காவல் நிலைய ஊழியர்களுக்கு மேலான ஊழியர்களுக்கும், விதி 149 காவல் நிலைய ஊழியர்களுக்கும் சட்டப்படியான ஊழியமாக அறிவுறுத்துகிறது.

இதன் அடிப்படையில், கொள்ளைச் சம்பவங்களை தடுக்க துப்பில்லாத, குற்றம் நடந்த பின்னும் கண்டு பிடிக்க வக்கில்லாத காவல்துறை, விதி 37 இன்படி, பொது மக்கள் முன்வந்து தர வேண்டிய கடமையில் சந்தேகத்தின் பேரில் கொடுத்த தகவலின் அடிப்படையில், வீட்டை சுற்றி வளைத்த கொலைத்துறை காக்கா குருவிகளை சுட்டுக் பொசுக்குவது போல் ஐந்து மனித உயிர்களை சுட்டுக் கொன்றுள்ளது வெட்கப்பட வேண்டிய ஒன்றே தவிர, எவ்விதத்திலும் பெருமைப்பட வேண்டிய ஒன்றல்ல.

என்கவுண்டர் எனப்படும், ‘‘மோதல் கொலைகள் எல்லாமே, சட்டத்துக்கு உட்படாத திட்டமிட்ட கொலைகள்தான்‘‘.

ஏனெனில், இதுபோன்ற மோதல் சாவுகளில், காவல் ஊழியர்கள் எவருமே இதுவரையிலும் செத்தது கிடையாது. ஆனாலும், தங்களின் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்டது என்று கணக்கு காட்ட வேண்டும் என்பதற்காகவே, ஓரிரு காவல் ஊழியர்களை கை, கால் என ஆங்காங்கே கட்டுப்போட்டு அரசு மருத்துவமனையில் படுக்க வைத்து விடுவார்கள்.

பணத்துக்காக எதையும் செய்யும், ஒரே வீச்சில் தலையை துண்டாக (வீ)விழச் செய்யும், கொத்து கறி போல கண்டம் துண்டமாக வெட்டி கொலை செய்யும் திறன் கொண்ட தாதாக்கள், ரவுடிகள் எல்லாம், கொலை செய்ய வேண்டும் என்ற நோக்கோடு காவல் ஊழியர்களை தாக்கும் போது மட்டும் அவர்களுக்கு வலிக்க கூடாது என்பதற்காக கை, கால்களில் சும்மா வெற்றுக் கீறல்களை உண்டுபண்ணுவதன் ரகசியம்தான் என்ன? யாராவது சொல்ல முடியுமா?

இதனை பணியில் இருந்து ஓய்வு பெற்ற மனசாட்சிக்கு பயப்படுகின்ற ஊழியர்கள் பகிரங்கமாகவே தொலைக்காட்சிகளில் நடைபெறும் விவாதங்களில் ஒத்துக் கொள்கின்றனர். இதுபோலவே அரசு மருத்துவமனையின் மருத்துவ ஊழியர்களும் ஒத்துக் கொள்கின்றனர். இருந்தாலும் என்ன செய்வது? சோத்துக்கு வேறு வழியில்லாமல், இதைத்தான் செய்ய வேண்டியிருக்கிறது என்று அரசின் அற்ப கூலிக்கும், ஓய்வூதியத்திற்கும் மாரடிக்கும் பொது ஊழியர்கள் புலம்புகின்றனர்.

கொலைத்துறையால் கொள்ளையில் சம்பந்தப்பட்டதாக கூறப்படும் ஒரு நபர், வங்கியை நோட்டமிடுவது போல் வெளியிட்டுள்ள வீடியோவில், அந்த நபரைத்தவிர, மற்ற முன்பின், பக்கவாட்டுப் புறப்பகுதிகள் எதுவுமே தெரியாத வண்ணம் இருட்டடிப்பு செய்யப்பட்டிருப்பது,

உண்மையில் அந்த காட்சி வங்கியில் நோட்டமிட்ட போது பதிவானதுதானா?
இதுதான் உண்மையென்றால், அவரது சுற்றுப்புறங்களை மறைக்க வேண்டிய அவசியம் என்ன? என்பன போன்ற பல்வேறு சந்தேகத்தை கிளப்புகிறது.
எது எப்படியோ, இந்த கொலையைத் திட்டமிட்டு அரங்கேற்றியவர்கள் இந்த ஆட்சியில் அதற்கான நீதி விசாரணையை எதிர்கொள்ளாவிட்டாலும், அடுத்த ஆட்சியில் நிச்சயம் எதிர்கொள்வார்கள். ஒருவேளை சட்டம் மற்றும் சமூக தண்டனையில் இருந்து தப்பினாலும், இயற்கையின் தண்டனையில் இருந்து ஒருவரும், ஒருபோதும் தப்பப் போவதில்லை.

கொலை, கொள்ளை போன்ற சம்பவங்கள் பல காவல்துறையின் உயர்மட்ட ஊழிய இடத்தை பிடிப்பதற்காகவே நடைபெறுகிறது என்கிற திடுக்கிடும் ஒரு செய்தி கடந்த சில ஆண்டுகளுக்கு முன் வடபழனி, விருகம்பாக்கம் உள்ளிட்ட சுற்று வட்டாரப் பகுதிகளில் தொடர்ந்து நடைபெற்ற, ‘‘சைக்கோ கொலை‘‘ விடயத்தில் எனக்கு கிடைத்தது. அது குறித்த ஆராய்ந்த போது அதில் உண்மை இல்லாமல் இல்லை என்பது தெளிவானது.

ஒரு சம்பவம் நடந்து விட்டால் மக்கள் அதுபற்றி அறிவுப்பூர்வமாக யோசிப்பதற்கு மாறாக, உணர்ச்சி வயப்படுவதே வழக்கமாக இருக்கிற

No comments: