Saturday, February 4, 2012

In The Name Of Alllah Most Gracious Most Merciful
--------------------------------------------------------------------
Jan 28: பழனி பாபா; இலட்சியவாதிக்கு அழிவுண்டு! இலட்சியத்திற்கு அல்ல!!

ஒடுக்கப்பட்ட மற்றும் சிறுபான்மை மக்களின் போர் குரலாய் !

சுமார் 25 ஆண்டுகாலம் சுழன்ற போராளி !

இன்று நமது நினைவுகளில் நீங்கா இடம் பெற்றிருக்கிறார் !!!



திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே புது ஆயக்குடியில் பிறந்த அஹ்மது அலி; பின்னாளில் பழனிபாபாவாக மக்களிடம் அறிமுகமானார்.

வசதயான குடும்ப பின்னனியும், பிறவி போராட்ட குணமும் அவரை இளமையிலேயே தலைவராக வார்த்தெடுத்தது.

புது ஆயக்குடியில் நடைபெற்ற ஒரு வகுப்பு கலவரத்தின் தாக்கம்தான் அவரை மதவெறிக்கு எதிராக போராட தூண்டியது என்கிறார் அவரது ஊரை
சேர்ந்த ஆசிக் உசேன். இவரும் பாபாவும் பழனி அரசு கலைக்கல்லூரியில் ஒன்றாக படித்தவர்கள். ஊட்டி லேடவுல் என்ற புகழ்பெற்ற பள்ளிக்கூடத்தில்
படித்ததால். தேசிய புகழ்பெற்ற பல தலைவர்களின் பிள்ளைகளோடு அவருக்கு தொடர்பு ஏற்பட்டது.

இளம் வயதில் தனது தாய் மாமாவின் அரவணைப்பால் வளர்ந்திருக்கிறார். இடையில் குடும்பத்துடன் மனக்கசப்பு. அதை தொடர்ந்து சில காலம்
கேரளாவில் முகாம் என, திசையற்ற ஒரு பயணத்தை தொடர்ந்திருக்கிறார்.

காலச்சூழல் அவரை திமுகவின் முக்கிய தலைவர்களோடு நெருக்கத்தை ஏற்படுத்தியது. கலைஞர், MGR, வை.கோ, வீரமணி உள்ளிட்ட பலருடன்
நெருக்கம் ஏற்பட்டது.

1980களில் இவரது பொதுவாழ்வு பயணம் இப்படித்தான் தொடங்கியிருக்கிறது.

எம்.ஜி.ஆருடன் ஏற்பட்ட மனக்கசப்பில் கலைஞருடன் நெருக்கமாகி திமுகவின் தவிர்க்க முடியாத பிரச்சாரரானர் பாபா.

பாபாவின் உரைகள் எம்.ஜி.ஆரை மிரட்டியது. அதேகால கட்டத்தில் நெல்லை மாவட்டத்தில் மீனாட்சிபுரத்தில் நடைபெற்ற
சமூக புரட்சியின் விளைவாக இந்து முன்னணி உருவாகியது. ராமகோபால ஐயரின் வன்முறை பேச்சுகளால் பல இடங்களில்
வன்முறைகளும், கலவரங்களும் நடைபெற்றன.

ராமகோபல ஐயரின் மதவெறி பேச்சுக்கு, பாபா பதிலடி கொடுக்கலானார். அதுவே அவரை சிறுபான்மை மக்களிடம் பிரபலமாக்கியது.

அதே சமயம்; அவரது உரை பல இடங்களில் சர்சையானது அவரது கருத்துக்கள் ஏற்கப்பட்டாலும், சில வார்த்தைகள்
எதிர்க்கப்பட்டன என்பது உண்மை.
1989ல் திமுக ஆட்சிக்கு வந்த நேரம். ராமகோபால ஐயரால் நாகூரில் பதற்றம் ஏற்பட்டது. ஆனால் கலைஞர் அரசு பாபாவை கைது செய்து தேசிய
பாதுகாப்பு சட்டத்தில் சிறையிலடைத்தது. திமுக காரராகவே வலம் வந்த பாபா; ஒரு தலைவராக உருவாவதற்கு இச்சம்பவம் ஒரு முக்கிய
காரணமாகும். அகில இந்திய ஜிஹாத் கமிட்டியை உருவாக்கிய பாபாவுக்கு பெரும் ஆதரவு திரண்டது.


அன்றைய பிரபல முஸ்லிம் தலைவர்களான அப்துல் சமது சாஹிப், அப்துல் லத்தீப் சாஹிப் ஆகியோர் தங்களது களத்தை பற்றி கவலைப்படும்
அளவுக்கு அவரது வளர்ச்சி இருந்தது. அப்போது தான் பாட்டாளி மக்கள் கட்சி உருவாகியிருந்தது. டாக்டர்.ராமதாஸ் தமிழினப் போராளி என
அறிமுகமானார். சிறையிலிருந்து பாபாவை அவர் சந்தித்து பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர். ஒடுக்கப்பட்டோர் ஓரணியாக திரளவேண்டிய
அவசியத்தை வலியுறுத்தினார்.

அக்கால சூழலில் உத்திரப்பிரதேசம் மற்றும் பீகாரில் ஜனததளத்தின் கீழ் யாதவர்கள், முஸ்லிம்கள், தலித்துகள் உள்ளிட்டோர். ஓரணியாக திரண்டு
ஆட்சியை கைப்பற்றியிருந்தனர். அதே போன்ற சூழலை தமிழகத்தில் ஏற்படுத்த வேண்டும் என இருவரும் விரும்பினர்.

அதன் எதிரொளியாகவே பாமகவின் தலைவர் பொறுப்பு வன்னியருக்கும், பொதுச் செயலாளர் பொறுப்பு தலித்துக்கும்,
பொருளாளர் பொறுப்பு முஸ்லிமுக்கும் பிரித்தளிக்கப்பட்டது.

அந்த வகையில் தீரன், தலித் எழில்மலை, குணங்குடி ஹனீபா ஆகியோர் முறையே அப்பொறுப்புகளை ஏற்றனர்.
கலைஞர் தனக்கு செய்த துரோகத்தை மறக்காத பாபா, முஸ்லிம் சமுதாயம் திமுகவின் மந்திரபோதையில் மயங்கி கிடப்தை
இனியும் அனுமதிக்கக் கூடாது என முடிவெடுத்து களமிறங்கினார்.

ஜிஹாத் கமிட்டி சார்பில் நடைபெற்ற அனல் பறக்கும் பொதுக்கூட்டங்களில் திமுகவையும், கலைஞரையும் தோலுரித்தார்.
திமுகவின் முஸ்லிம் ஓட்டு வங்கி கலையத் தொடங்கியது.

ஜிஹாத் கமிட்டியின் சார்பில் பொதுக்கூட்டங்கள் போட முடியாத இடங்களில் பாமகவின் சார்பில் பொதுக்கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டன.

பாபாவின் சில கருத்துக்கள் முக்கியமாக இருப்பதாக கூறுவோரும் உண்டு. அது எதிரிகளை மிரளவைக்கவும், சொந்த சமூகத்திற்கு
நம்பிக்கையூட்டவும் அவர் அவ்வாறு பேசியதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகிறார்கள்.


வன்னியர்களுக்கும், தலித்துகளுக்கும் மத்தியில் அவரது செல்வாக்கு பல மடங்கு உயர்ந்தது. பாமாகவில் அப்போது பேரா. தீரனை தவிர வேறு யாரும்
பேச்சாளர்கள் இல்லை. பாபாவின் வன்னியர் தலித் முஸ்லிம் ஒருங்கிணைப்பை வலியுறுத்தும் உரைகளை வன்னியர்களும், தலித்துகளும்
வரவேற்றனர். அது சமூக நல்லிணக்கத்திற்கும் வழிகோலியது.

அவரது உரையும் எதிரிகள் யார்? என்பதையும் மற்றவர்கள் நமது நண்பர்கள் என்பதயும் விளக்கும் விதமாக பக்குவமடைந்தது.

அதே நேரம் பாபாவை ஆர்.எஸ்.எஸ் போன்ற மதவெறி பயங்கரவாத சக்திகள் கண்காணித்துக் கொண்டே இருந்தனர்.1992 டிசம்பர் 6 அன்று பாபர்
மஸ்ஜித் தகர்க்கப்பட்டதை தொடர்ந்து தமிழகமெங்கும் ஜிஹாத் கமிட்டிதான் கண்டன சுவரொட்டிகளை தமிழகத்தில் துணிந்து ஒட்டியது.

அப்போது RSS,VHP போன்ற இயக்கங்கள் தடை செய்யப்பட்டபோது அதை சமன் செய்யும் உவிதமாக சிறுபான்மையினர் தரப்பிலிருந்து தேவையின்றி
ஜமாத்தே இஸ்லாமியும் ISS-ம் தடை செய்யப்பட்டன.உடனே பாபா பாபர் மஸ்ஜித்தை இடிப்பதை கண்டித்தும்,
காரணமின்றி ஜமாஅத்தே இஸ்லாமியும், ISS-ம் தடைசெய்யப்பட்டதை கண்டித்தும் சென்னையில் மேடை போட்டு கண்டித்தனர்.
அந்த துணிச்சல் பாபாவுக்கு மட்டுமே இருந்தது.

மயிலாடுதுறையில் பாபர் மஸ்ஜித் இடிப்பை கண்டித்து ஜிஹாத் கமிட்டி சார்பாக நடைபெறவிருந்த மாநாடு தடை செய்யப்பட்டது. பிறகு வோறாரு
தேதியில் மீண்டும் நடைபெற்றது.

அம்மாநாட்டிற்கு வருவதாக வாக்களித்த கீ.வீரமணியும், வைரா முத்துவும் வரவில்லை. ஆனால் டாக்டர். ராமதாஸ், டாக்டர் சேப்பன்,
கிருஷ்ணசார் யாதவ் உள்ளிட்டோர் இருந்தனர்.கூரைநாடு பாலத்திலிருந்து மாலை 5 மணிக்கு தொடங்கிய பேரணி இரவு 8 மணிக்கு
மாநாடு நடைபெறுமிடத்திற்கு வந்து சேர்ந்தது.வழியில் ஓரிடத்தில் பாபா அவர்கள் பேரணியை வரவேற்றுக் கொண்டிருந்தார்.
டாக்டர்.ராமதாஸ் மற்றொரு இடத்தில் வரவேற்றுக் கொண்டிருந்தார்.

இதுதான் ஜிஹாத் கமிட்டியின் முதலும், கடைசியுமான பேரணி & மாநாடகும். பல்லாயிரக்கணக்கானோர் திரண்டிருந்தனர்.அப்போது நானும், எனது
ஊரை சேந்தவர்களும் 4 வேன்களில் கலந்துக் கொண்டோம். எங்களை சுற்றியுள்ள வன்னிய கிராமங்களிலிருந்து எங்களை விட அதிக வேன்களில்
வன்னியர்கள் திரண்டு வந்தனர்.பாபாவை முதன் முதலாக நான் அப்போதுதான் பார்க்கிறேன். மேடையில் எல்லோரும் இருக்கும்போது, வேதாரய்ணம்
ஒன்றிய பாமக செயலாளர் ராஜேந்திரன் என்னை மேடையில் வைத்து பாபாவிடம் அறிமுகம் செய்து வைத்தார்.

அவரது கரங்கள் மிகவும் மென்மையாக இருந்தது. இதுவே எனது முதலும், கடைசியுமான நேரடி சந்திப்பாகும்.பாபர் மஸ்ஜித் இடிப்புக்கு பின்னால்

தமிழக சிறுபான்மையினர் பெருமளவில் பாதிக்கப்பட்டனர். ஆனால், ஜிஹாத் கமிட்டியால் உரிய அளவில் எதிர்வினை ஆற்ற முடியவில்லை என்ற
குறையும் எழுந்தது. ஆயினும் பாபாவின் செல்வாக்கு குறையவில்லை. வெளிநாடுகளில் புலம் பெயர்ந்து உழைக்கும் தமிழக மக்களின் ஆதரவு
அவருக்கு வலுவாக இருந்தது.

அன்றைய ஜெயலலிதா அரசின் அடக்குமுறைகள் மற்றும் தடா சட்ட பாதிப்புகளின் எதிர்வினைவால் 1995&ல் தமுமுக உருவாகியது.ஜனநாயக
போரட்டங்களின் வழியாக உரிமைகளையும், பாதுகாப்பையும் பெற வேண்டும் என்ற அடிப்படையில் பல்வேறு தரப்பு சிந்தனையாளர்களும்
ஒருங்கிணைந்த வேளையில்; புதிய அமைப்பை தொடங்குவதை விட தற்போது தான் நடத்திக் கொண்டிருக்கும் தமுமுகவையே எடுத்துக்
கொள்ளுங்கள் என்று அன்றைய பாமக பொருளாளர் குணங்குடி ஹனீபா அவர்கள் கூறியதை அனைவரும் ஏற்றனர். ஆர்ப்பாட்டம், பேரணி,
முற்றுகை, பத்திரிகையாளர் சந்திப்பு என தமுமுகவின் பரபரப்பு நடவடிக்கைகளால் சமுதாயத்தின் கவனம் தமுமுக பக்கம் திரும்பியது.

அப்போது பாபாவின் செயல்பாடுகளும், பிரச்சாரங்களும் சற்று குறையத் தொடங்கின. அவர் மீது சிலர் அவதூறுகளையும், பழிகளையும் கூறியது
அவரை பாதித்தது. அவர் சென்னையில் தங்குவதை விட கோபிச்சட்டிபாளையம், பொள்ளாட்சி என கொங்கு பகுதியில் அதிகமாக முகாமிட்டார்.

இந்நிலையில் தான் டாக்டர்.ராமதாஸ் சென்னையில் ஈழத்தமிழர்களுக்கான மாநாட்டை அறிவித்தார். அதில் பால்தாக்ரேயும கலந்துக் கொள்வார்
என்றதும், பாபா கொந்தளித்தார். ராமதாசுடனான அவரது உறவு முற்றுப்புள்ளிக்கு வந்தது.இனி அடுத்தவர்களுக்கு ஏணியாக இருப்பதை விட நாமே
ஜிஹாத் கமிட்டியின் சார்பாக ஓர் அரசியல் கட்சியை ஏன் தொடங்கக் கூடாது? என்ற சிந்தனைக்கு அவரை தள்ளியது. இது தொடர்பாக அவர் நிறைய
ஆலோசித்தாக அவரோடு நெருக்கமாக இருந்த தாம்பரம் காமில் என்னிடம் ஒருமுறை கூறினார்.

ஆனால் மதவெறி சக்திகள் அவரது உயிருக்கு குறி வைத்து சுற்றிக் கொண்டிருந்ததை ஏனோ அலட்சியப்படுத்திவிட்டார்.1997 ஜனவரில் 28 ஆம் தேதி
அப்போது ரமலான் மாதம். இஃப்தார் முடிந்த நேரம். பொள்ளாசியில் தனது கவுண்டர் சமுதாய நண்பரின் வீட்டிலில் தொலைக்காட்சி செய்திகளை
பார்த்துவிட்டு வெளியே வந்து தனது ஜீப்பில் ஏறிய போது 6 பேர் கொண்ட பயங்கரவாத கும்பல் அவர் மீது வெடிகுண்டை வீசி சரமாரியாக வெட்டித்
தள்ளியது.எதிரியின் கையால் நான் வெட்டப்பட்டு சாக வேண்டும் என பிரார்த்திக்கிறேன் என பல மேடைகளில் அவர் முழங்கியவாரே அவர்
ஷஹீதானார்.

தமிழகம் கொந்தளிப்பு

பாபா கொல்லப்பட்ட செய்தி இரவு 9 மணிக்கெல்லாம் பரவத் தொடங்கியது. தமிழகமெங்கும் மக்கள் தராவீஹ் தொழுகையில் ஈடுபட்டுக்
கொண்டிருந்தனர். அப்போது இப்போதிருப்பது போல் எல்லோரிடமும் செல்போன் வதிகள், ஈமெயில், குறுஞ்செய்தி வசதிகள் எதுவும் இல்லை.பல
ஊர்களுக்கு ஷஹர் நேரத்தில்தான் செய்தி போய் சேர்ந்தது. பலரும் பதறினார்கள். பெண்கள் எல்லாம் கூட அழுதார்கள்.

ஆங்காங்கே கல்வீச்சுகளும், பேருந்து உடைப்புகளும், கடை அடைப்புகளும் நடைபெற்றன. வன்னிய மக்களும், தலித்துகளும், முஸ்லிம்களும் மற்ற
சமூகங்களும் கொந்தளித்து பாபாவுக்காக ஆங்காங்கே மவுன பேரணிகளை நடத்தினார்கள்.தாம்பரம் உள்ளிட்ட பல ஊர்களில் கலவரம் 6 முஸ்லிம்கள்
கொல்லப்பட்டார்கள் காவல்துறை அராஜகம் செய்தது.

வைகோ, அப்துல் சமது, லத்தீப், ராமதாஸ் போன்ற தலைவர்கள் இரங்கள் அறிக்கை வெளியிட்டார். ஆனால், கலைஞர் சட்டமன்றத்தில் பாபாவை
குற்றவாளி போல பதிவு செய்தார்.அவர் MGR-க்கும் பின்னர் தனக்கும் நெருக்கமாக இருந்தவர். என்றும் பிறகு கடுமையாக விமர்சித்தவர் என்றும்
பேசினார்.

பழைய நட்புக்காக கூட இரங்கள் அறிக்கை வெளியிடவில்லை.வெளிநாடுகளில் வாழும் தமிழக மக்கள் பெரும் வேதனையில் ........
தமுமுக சார்பில் பாபாவின் படுகொலையை கண்டித்து சென்னை உள்ளிட்ட பல ஊர்களில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டது. தமுமுகவின்
ஆர்ப்பாட்டத்திற்கு அப்போதுதான் பல தரப்பு மக்களும் பெருமளவில் கலந்து கொண்டனர்.

பாபாவின் உடல் அவரது சொந்த ஊரான புது ஆயக்குடிக்கு எடுத்து செல்லபபட்டது. பல்வேறு சமூகங்களை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து
கொண்டனர். தமுமுக சார்பில் பொதுச் செயலாளர் செ.ஹைதர் அலி, இந்திய தேசிய லீக் சார்பில் அப்போதைய சட்ட�

No comments: