Sunday, November 25, 2012

ஆஷூரா முஹர்ரம் மாத நோன்பு

India: நாளை சனிக்கிழமை 24 , 25 or 25, 26 முஹர்ரம் 9, 10 or 10, 11-இல் நோன்பு வைப்பது சுன்னத்தாகும்

முஹர்ரம் மாதம் அல்லாஹ்வின் மாதம் என எம்பெருமானார் (ஸல்) அவர்களால் புகழ்ந்துரைக் கப்பட்ட சிறப்புமிகு மாதம் ஆகும்.

“ரமலான் நோன்பிற்குப் பிறகு சிறந்த நோன்பு அல்லாஹ்வுடைய மாதமாகிய முஹர்ரத்தின் நோன்பாகும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.அறிவிப்பவர் : அபூ ஹூரைரா (ரலி) நூல்: முஸ்லிம்.

ஆஷூரா(-முஹர்ரம் மாதம் பிறை10)அன்று ஒரு நோன்பு நோற்றால் சென்ற ஒரு வருடத்தின் (சிறு)பாவங்கள் மன்னிக் படும்.
நூல்:முஸ்லிம். ஹதீஸ்1976*அறிவிப்பாளர்:அபுகதாதா(ரலி)அவர்கள்.

(இனி)வரும் வருஷம் நான் இருந்தால் பிறை ஒன்பதிலும் நோன்பு நோற்பேன்.என்று நபி(ஸல் )சொன்னார்கள்
(ஆனால் இருக்க வில்லை இறந்து விட்டார்கள்).
நூல்:முஸ்லிம். ஹதீஸ்1917.அறிவிப்பாளர்:இப்னு அப்பாஸ்(ரலி)அவர்கள்.

ஆஷூரா(முஹர்ரம்10)அன்று நோன்பு நோற்று கொள்ள்ளுங்கள். யஹூதிகளுக்கு மாற்றம் செய்யுங்கள். எனவே ஆஷூராவின் முன்போ/பின்போ ஒரு நாள் சேர்த்து நோன்பு நோற்று கொள்ள்ளுங்கள்.
நூல்:அஹ்மத். ஹதீஸ்2047. அறிவிப்பாளர்:இப்னு அப்பாஸ் (ரலி)அவர்கள்.


முஹர்ரம் மாதம் 9 (தாசுஆ) மற்றும் 10 (ஆஷுரா) ஆகிய இரு தினங்களில் நோற்கப்படும் நோன்புகள் ரமலான் மாத நோன்புகளுக்கு அடுத்தபடியான சிறந்த நோன்புகளாக நபி (ஸல்) அவர்களால் இங்கு அடையாளப் படுத்தப்படுகிறது.

ஆஷூரா நோன்பைப்பற்றி நபி (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. (அதற்கு), “சென்றவருடத்தின் பாவங்களுக்கு (அது)பரிகாரமாக அமையும்” என்று கூறினார்கள்.அறிவிப்பவர் : அபூகதாதா(ரலி),நூல்: முஸ்லிம்.

ஒரு வருட பாவங்களுக்குப் பரிகாரமாக விளங்கும் இந்த ஆஷூரா தினம் என்பது முஹர்ரம் மாதத்தின் 10ஆம் நாள் என்பது அனைவரும் அறிந்த விஷயமே

“மூஸா (அலை) அவர்களைப் பெருமைப்படுத்துவதற்கு யூதர்களைவிட நான் அதிகத் தகுதி வாய்ந்தவன்” எனக் கூறி அவ்வருடம் முஹர்ரம் 10 அன்று நோன்பு நோற்ற நபி(ஸல்) அவர்கள், “எதிர்வரும் வருடம் (உயிருடன்) இருந்தால் ஒன்பதாவது நாளும் நோன்பு நோற்பேன்” என்று கூறினார்கள்.அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ்(ரலி)நூல்: முஸ்லிம்

இதன் அடிப்படையில் முஹர்ரம் மாதத்தின் 9(எவ்ம தாசிஆ) மற்றும் 10(எவ்ம ஆஷுரா) ஆகிய இரு தினங்களில் நோன்பை முஸ்லிம் உலகம் நோற்று வருகின்றது.

இந்த நோன்பு வைப்பதில் மூன்று படித்தரம் உண்டு.
1ம் படித்தரம் மூன்று நாள் நோன்பு.பிறை 9,10,11 அல்லது
2ம் படித்தரம் இரண்டு நாள் நோன்பு பிறை 9 ,10 அல்லது 10,11.
3ம் படித்தரம் ஒரு நோன்பு பத்தாம் நாள் மட்டும்.

சவுதி அரேபியாவில் 23/11/2012 FRIDAY முஹர்ரம் 9 ஆகும்.
இந்தியாவில் 24/11/2012 SATURDAY முஹர்ரம் 9 ஆகும்.

ஹிஜ்ரி 1434, முஹர்ரம் 1-ம் தேதி (15.11.2012) வியாழக்கிழமை ஆகும்.
இன்ஷாஅல்லாஹ் வரும் 23, 24 வெள்ளி, சனிக்கிழமை முஹர்ரம் 9, 10 ஆகும். இந்த இரண்டு தினங்களில் நோன்பு வைப்பது சுன்னத்தாகும். நாம் அனைவரும் இந்த சுன்னத்தைக் கடைபிடித்து அல்லாஹ்வின் நல்லருள் பெறுவோமாக!

No comments: