Thursday, November 1, 2012

இறைவனின் படைப்பில் நீங்கள் பாக்கியசாலியா


பொறாமைத் தீ(யது) அணைப்போம்....இறைவனை என்றும் நினைப்போம்

- “தென்றல்“ கமால் -;


அவர் என் நண்பர். வெளிநாட்டிலுள்ள ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் மாதம் நாற்பதாயிரம் சம்பளம் பெறுபவர். மனைவி மகள் என்று சிறிய குடும்பம். நிறைவான வாழ்வு.

அவர் ஒரு நாள் என்னிடம் அங்கலாய்த்துக் கொண்டார். 'இறைவனிடம் கேட்டு என்னங்க கிடைக்குது? இறைவனை நம்பாதவாகளுக்கும்;இ தகுதி இல்லாதவர்களுக்கும்இ கெட்டவர்களுக்கும்தான் மேலும்மேலும் சம்பள உயர்வும் இ செல்வ செழிப்பும் அவர்கள்; விரும்புவதும் கிடைக்கிறது' என்றார்.

பொதுவாக நாம் அனைவரும் என் நண்பரைப் போல் நமக்கும் மற்றவருக்கும் இடையே வருமானத்தை வைத்தும் செல்வத்தை வைத்தும் நம் வாழ்க்கையையும் நமக்கு இறைவன் செய்துள்ள நன்மைகளையும் எடை போடுபவர்களாக இருக்கிறோம். அதனால்தான் அதிகமாக சம்பாதிப்பவர்களை மற்றும் செல்வந்தர்களைப் பார்த்து பொறாமைப்படுகிறோம்

நான் அவரிடம் சொன்னேன் 'நண்பரே! உங்களையும் மற்றவர்களையும் வருமானத்தையும்; செல்வத்தையும் வைத்து எடை போடாதீர்கள்

இறைவன் அதற்குப் பதிலாக

'நல்ல குணமுள்ள மனைவியை தந்திருக்கலாம்'

'ஊனமற்ற அறிவுள்ள குழந்தையைத் தந்திருக்கலாம்'

'உங்களுக்கோ அல்லது மனைவி பிள்ளைகளுக்கோ கடுமையான நோயைத் தராமல்
நீண்ட ஆயுளைத் தந்து அருள் செய்திருக்கலாம்'

'உங்கள் பிள்ளைகளுக்கு நீண்ட மணவாழ்க்கையை தரலாம்'

இதற்கெல்லாம் மேலாக உங்களையும் என்னையும் எந்தவித ஊனமும் இல்லாமல் படைத்தானே....மாறாக உதாரணத்திற்கு நம்மை குருடனாக படைத்து செல்வத்தை அள்ளித் தந்தாலும் நம் உள்ளம் நிம்மதி அடையுமா? இல்லை நமக்கு செல்வத்தையும் வருமானத்தையும் வாரி வழங்கி விட்டு நமக்கு அற்பஆயுளை வழங்கி இருந்தால் என்ன நன்மை? என்றேன்.

'எத்தனையோ பேர்கள் இருக்கிறார்கள் அவர்களுக்கு அதிக சம்பளத்தையும் செல்வத்தை இறைவன்; தந்திருக்கலாம் ஆனால் நல்ல பண்புகளற்ற ஒரு மனைவி அமைந்தால் அவனால் நிம்மதியாக இருக்க முடியுமா?'

'எத்தனையோ பெரிய செல்வந்தர்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லாமல் இருக்கும். அவர்களிடம் போய்க் கேளுங்கள். இத்தனை பணம் இருந்து என்ன உபயோகம்? கொஞ்சி மகிழக் குழந்தை இல்லையே என்பார்கள்'

'எத்தனையோ பேருக்கு குழந்தை பிறந்து அதை அற்ப ஆயுளில் பறிகொடுத்து துன்பப்படுவார்கள்'

'எத்தனையோ பேருக்கு பிள்ளை பிறக்கும். ஆனால் கேன்சர் போன்ற கொடிய நோயுடனோ அல்லது கடுமையான ஊனத்துடன் பிறக்கும் அல்லது மூளைவளர்ச்சியற்ற பிள்ளையாக இருக்கும்'

'எத்தனையோ பேர்கள் அவர்களுக்கோ அல்லது அவர்களின் மனைவி அல்லது பிள்ளைகளுக்கோ கேன்சர் சிறுநீரகக் கோளாறு இதய நோய் போன்ற கொடிய நோய் தாக்கி சொல்ல முடியாத கஷ்டத்துடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்'

'எத்தனையோ பேர்கள் தங்களின் மகள்; சிறு வயதில் கணவனை இழந்து விதவையாக அல்லது விவாகரத்தாகி மணவாழ்க்கையை இழந்து தங்களுடன் வாழ்வதை கண்டு கண்ணீர் வடிக்கிறார்கள்'


இளவயதில் விதவையான பெண்ணிடம்; கேட்டால் நீண்ட மணவாழ்வு தான் பெரிய செல்வம் என்பாள். செல்வத்தை பெரிய கிருபை என மாட்டாள்.

பிள்ளை இல்லாதவர்களிடம்; கேட்டால் பிள்ளைபாக்கியம் தான் பெரிய பாக்கியம்; என்பார்கள்.

கெட்ட கணவன் அமைந்தவள் நல்ல கணவன் தான் பெரிய சொத்து என்பாள்.


ஆகவே இறைவனின் நமக்கு செய்துள்ள நன்மைகளை நாம் அனைவரும் நமது கண்கள் வெளிப்படையாக காணும் அல்லது இறைவனுக்கு அருளுக்கு அளவுகோலாக நாம் வைத்திருக்கும் வருமானம் மற்றும் செல்வம் இவற்றை மட்டும் வைத்து கணக்குப் போடாமல் அத்தகையோரை பார்த்துப் பொறாமைப்படாமல் நாம் சிந்திக்காமலே இருக்கும் மேற்சொன்ன நன்மைகளை வைத்து சிந்தித்து மனசாந்தி அடைவோமேயானால் நம் மனம் அமைதி அடையும். பொறாமை ஏற்படாது. நிச்சயம் இறைவனுக்கு நாம் எல்லா நிலைகளிலும் நன்றி செலுத்தக் கூடியவர்களாக ஆகிவிடுவோம்.


Thanks to the (unknown) Author and Brother Basheer Ahmed

- Cuddalore Jn. _ 3M Ghouse _ +966-569503324


Mohammed Ghouse
Wednesday, 17 October 2012
WorleyParsons Arabia Ltd.
Tel./Ext.: 03 -807 999 8
Mobile: +966 56 950 33 24

_

with peace,
Shahjahan bin Mohamed Umer
md.shahjahan2001@gmail.com
+91 81972 81300
Banglore
"Help People"
இரு மனிதர்களுக்கிடையில் நியாயமாக நடந்து கொள்வது ஒரு தர்மமாகும்.
வாகனத்தின் மீது ஏறுகின்ற ஒருவரை அதன் மீது ஏற்றி விடுவது ஒரு தர்மமாகும்.
அதுபோலவே அதன் மீது அவருடைய சுமைகளை ஏற்றி விடுவதும் ஒரு தர்மமாகும்.
ஒரு நல்ல வார்த்தை பேசுவதும் ஒரு தர்மமாகும்.
தொழுகைக்காக நீங்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் ஒரு தர்மமாகும்.
ஊறு விளைவிக்கக் கூடிய பொருளொன்றை நடைபாதையிலிருந்து அப்புறப்படுத்துவதும் ஒரு தர்மமாகும்.
- நபி (ஸல்) , நூற்கள்: புகாரி,
Don't forget to Do Exercise daily 30 min for healthy life
நல்ல தகவல்களை நாலு பேருடன் பகிருங்கள் நண்பர்களே...
தெரியாததை தெரிந்து கொள்வோம் தெரிந்ததை பகிர்ந்து கொள்வோம்

No comments: