மேற்கில் உதித்த சூரியன்...
Posted: 10 Nov 2012 08:39 AM PST
மர்யம் ஜமீலா (1934-2012) எண்ணற்ற இளைஞர்கள், இளம் பெண்களின் வாழ்வில் புரட்சிகரமான மாற்றத்தை விதைத்த எழுத்துக்களுக்கு சொந்தக்காரர். அவருடைய எழுத்துகளைப் போலவே அவருடைய வாழ்வும் வசீகரமானது. மலைக்க வைக்கும். சிந்திக்க வைக்கும். இறையருளை நினைவு கூர வைக்கும்.
மேற்கில் உதித்த சூரியனாய் உலகெங்கும் எண்ணற்ற இதயங்களை தனது எழுத்துக்களால் ஈர்த்த மர்யம் ஜமீலா அக்டோபர் 31, 2012 அன்று லாகூரில் அவருடைய இல்லத்தில் இந்த உலகை விட்டுப் பிரிந்தார். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்.
இறக்கின்ற வரை அவருடைய பேனா ஓயவேயில்லை. இங்கிலாந்திலிருந்து வெளியாகும் தி வர்ல்ட் முஸ்லிம் புக் ரிவியூ காலண்டிதழில் அவர் தொடர்ந்து பல்வேறு நூல்களுக்கு விமர்சனம் எழுதி வந்தார்.
ஒரு ஆசை
என்னை ஷஃபீக்கா ஆபாவின் பக்கத்தில்...
‘ஒரு பெண் உலகை விட்டுப் போகும்போது கணவன் கண்ணீர் விட்டு அழுகின்றார் எனில் அந்தப் பெண் எத்துணை நற்பேறு பெற்றவளாக இருப்பார் என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும். அண்ணல் நபிகளார்(ஸல்) கூறினார்கள்: ‘ஒரு பெண் வணக்க வழிபாடுகளில் பேணுதலாக இருந்து, பெரும் பாவங்களை விட்டு முற்றிலும் விலகி இருந்து, அவள் இறக்கின்ற வரை கணவனின் மகிழ்வையும் திருப்தியை யும் பெற்றிருந்தாள் எனில் அவள் சுவனவாசி என்பதற்கு நான் உறுதி அளிக்கின்றேன்’
இந்த நபிமொழிக்கு இலக்கணமாக வாழ்ந்தவர்தாம் மர்யம் ஜமீலா. மர்யம் ஜமீலா அவர்களின் கணவர் யூசுப் கானின் நண்பர் ஒரியா மக்பூல் ஜான் சொல்வதைக் கேளுங்கள்:
‘ஆண்கள் எளிதில் உணர்ச்சிகளை வெளிப்படுத்த மாட்டார்கள். அதுவும் யூசுப் கான் போன்ற மிடுக்கான, கம்பீரமான ஆண் மகனைக் குறித்துச் சொல்ல வேண்டுமா? எல்லா வேளைகளிலும் அவர் பட்டான்களுக்கே உரிய மிடுக்குடனும் கண்டிப்பான தோரணையுடனும்தான் பார்த்திருக்கின்றேன். அவரை உணர்ச்சிவசப்பட்டு எந்த நாளும் பார்த்ததில்லை. ஆனால் அவர் அந்த மகத்தான பெண்மணியின் மரணத்தின்போது குழந்தையைப் போல் தேம்பித் தேம்பி அழுது கொண்டிருந்தார்.
நியூ யார்க் நகரத்தின் ஒரு செக்குலர் குடும்பத்தைச் சேர்ந்த அந்தப் பெண்மணி யூசுப் கானின் இரண்டாவது மனைவி ஆவார். எத்தகைய உணர்வும் உந்துதலும் அவரை நியூ யார்க்கிலிருந்து லாகூர் கொண்டு வந்து சேர்த்தது என்பதை யாரால் தான் உணர முடியும்? ஆனால் லாகூரில் அந்த இரண்டு மாடி வீட்டில் அவர் யூசுப் கானின் இரண்டாவது மனைவியாகச் சேர்ந்து வாழத் தொடங்கியதிலிருந்து அந்த வீட்டில் நிலவிய இணக்கமும், அன்பும், பாசமும் இருக்கின்றதே... அதனை இறைவனின் அருள் என்றே சொல்ல வேண்டும். இரண்டு பெண்களுக்குள்ளும் அப்படியொரு இணக்கமும் அன்பும் இழையோடியது. இருவரின் குழந்தைகளும் சகோதர வாஞ்சையுடன் ஒன்றாய்க் கலந்து விட்டார்கள். ஒரே ஒரு நாள் கூட அந்நிய உணர்வு அங்கு எட்டிக்கூடப் பார்க்கவில்லை.
குழந்தைகள் முதல் மனைவியை அம்மி (அம்மா) என்றும் இந்தப் பெண்மணியை ஆபா(அக்கா) என்றும் அழைத்து வந்தார்கள். குழந்தைகள் முதல் மனைவியின் கண்காணிப்பிலும் பராமரிப்பிலும் வளர, இந்தப் பெண்மணி உலகம் முழுவதற்கும் மேற்கத்திய சிந்தனைகளின் வெற்றுத்தனத்தையும் இஸ்லாத்தின் சத்தியச் செய்தியையும் உணர்த்துவதற்காக எழுத்துப் பணி ஆற்றி வந்தார். அதிலேயே ஓயாமல் ஒழியாமல் ஈடுபட்டு வந்தார்.
- இவ்வாறு புகழ்பெற்ற எழுத்தாளர் ஒரியா மக்பூல் ஜான் எழுதியிருக்கின்றார்.
அவர் குறிப்பிட்டுள்ள இன்னொரு செய்தி நெஞ்சம் நெகிழச் செய்வதாகும். மக்பூல் ஜான் எழுதுகின்றார்: “மர்யம் ஜமீலா அவர்கள் மறைந்த நாள் அன்று நான் அவருடைய வீட்டில் ஜனாஸாவைக் கொண்டு செல்வதற்காகக் காத்திருந்தேன். மறைந்த மர்யம் ஜமீலா அவர்களின் கணவருக்குப் பக்கத்தில் அமர்ந்திருந்தேன். அந்தப் பட்டான் சாகிப் கண்களில் கண்ணீர் மல்க துக்கம் தோய்ந்த குரலில் என்னிடம் சொன்ன வாக்கியம் என்னை உருகச் செய்துவிட்டது. தன்னையும் ஷஃபீக்கா ஆப்பாவுக்குப் பக்கத்திலேயே அடக்கம் செய்ய வேண்டும் என்று இறப்பதற்கு முன்பு மர்யம் ஜமீலா வசிய்யத் செய்திருந்தாராம். ஆஹா...! என்னே அன்பு.. என்னே பாசம்...! இது போன்ற அன்பும் பாசமும் இஸ்லாத்திற்காக எல்லாவற்றையும் துறந்துவிட்ட தூய்மையான உள்ளத்தில்தான் உதிக்கும்.”
ஒரு சான்று
திருப்பத்தைத் தந்த சென்னைவாசி
மர்யம் ஜமீலா இஸ்லாத்தை ஏற்றதில் சென்னைவாசி ஒருவருக்கும் சிறு பங்கு இருந்தது.
அந்த சென்னைவாசியின் பெயர் சி அப்துல் ஜலீல்.
சென்னை நகர ஜமாஅத்தே இஸ்லாமியின் அமீர்-ஏ-முகாமியாக இருந்துள்ளார். வணிகராக, பழ வியாபாரியாக, பத்திரிகையாளராக இருந்துள்ளார். உர்துவிலிருந்து ஆங்கிலத்துக்கு மொழிப்பெயர்ப்பும் செய்து வந்துள்ளார்.
அவர் இவ்வாறு மௌலானா மௌதூதி அவர்களின் ஜிந்தகி பாத் மௌத் என்கிற கட்டுரையை (தமிழில் ’மரணத்திக்குப் பின்’ என்கிற பெயரில் தனி நூலாக வெளியாகியுள்ளது IFT வெளியீடு. ) ஆங்கிலத்தில் Life after death என்கிற பெயரில் மொழிப்பெயர்க்க அதனை தென் ஆப்ரிக்காவின் கேப்டவுன் நகரிலிருந்து அந்தக் காலத்தில் வெளி வந்த முஸ்லிம் டைஜஸ்ட் என்கிற மாத இதழ் வெளியிட, நியு யார்க் நகரில் வாழ்ந்து வந்த மார்கரட் என்கிற யூதப் பெண்மணிக்கு அந்தக் கட்டுரை வெகுவாக கவர, அவர் மௌலானா மௌதூதியுடன் தொடர்புக் கொள்வதற்காக கேப்டவுன் முஸ்லிம் டைஜஸ்ட் பத்திரிகையை தொடர்புக் கொள்ள, அவர்கள் சி அப்துல் ஜலீலைத் தொடர்புக் கொள்ள, மெட்ராசிலிருந்து ஜலீல் சாகிப் முகவரியை அனுப்ப, மார்கரெட் அம்மையார் மௌலானாவைத் தொடர்புக் கொள்ள... அதன் பிறகு நடந்தது வரலாறு ஆயிற்று.
சி. அப்துல் ஜலீல் அவர்களின் அந்த Life after death என்கிற ஆங்கிலக் கட்டுரை வெளியான அந்த முஸ்லிம் டைஜஸ்ட் நான் மாநில அலுவலகத்தில் கண்ணாரப் பார்த்திருக்கின்றேன். அப்போது அந்தக் கட்டுரைக்குப் பின்னால் இது போன்ற சரித்திரம் இருக்கும் என நான் நினைத்துக்கூடப் பார்த்ததில்லை.
இன்று அல்கோபாரிலிருந்து அப்துல் அஸீம் என்கிற பெரியவர் எனக்கு அனுப்பிய மின் அஞ்சல் இந்த சரித்திர நிகழ்வின் இன்னொரு செய்தியைத் தாங்கியிருந்தது. மேற்படி முஸ்லிம் டைஜஸ்ட் பத்திரிகை, லைஃப் ஆஃப்டர் டெத் கட்டுரை போன்றவற்றையெல்லாம் நினைவுகூர்ந்த அப்துல் அஜீம் இன்னொன்றையும் சொன்னார்:
“1969-இல் நான் சி. அப்துல் ஜலீல் அவர்களைப் பார்த்தேன். அவர் என்னிடம் மர்யம் ஜமீலா அவர்கள் எழுதிய இஸ்லாம் இன் தியரி அண்டு பிராக்டீஸ் என்கிற நூலைக் காட்டினார்.
அதில் ‘ I am glad to present to you my book , as your translation " LIFE AFTER DEATH" inspired me to discover Islam" (உங்களுக்கு என்னுடைய நூலை அன்பளிப்பாக வழங்குவதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி. ஏனெனில் லைஃப் ஆஃப்டர் டெத் என்கிற உம்முடைய மொழிபெயர்ப்புக் கட்டுரைதான் என்னை இஸ்லாத்தின் பக்கம் கொண்டு வந்து சேர்த்தது) என மர்யம்ஜமீலா அவர்களே கைப்பட எழுதியிருந்தார்.”
மர்யம் ஜமீலாவின் வரலாற்றின் இந்த அம்சம் உண்மையிலேயே மலைக்க வைப்பதாகும்.
கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்.
பாகிஸ்தானிலிருந்து ஒருவர் ஒரு கட்டுரையை எழுதுகின்றார். அதனை தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கின்றார். அது தென் ஆப்ரிக்காவிலிருந்து வெளியாகும் ஆங்கில பத்திரிகை ஒன்றில் வெளியாகின்றது.
அந்தக் கட்டுரையை நியூயார்க்கில் வாழ்ந்து வந்த ஒரு பெண்மணி வாசிக்கின்றார். பிறகு இஸ்லாத்தை ஏற்றுக் கொள்கின்றார்.
சத்தியத்தைத் தேடியடைகின்ற ஆர்வம் ஒருவருக்கு இருக்குமேயானால் அவருக்கு வழிகாட்டுதல் கிடைக்கச் செய்ய வேண்டுமென்பதற்காக இறைவன் என்ன வேண்டுமானாலும் செய்வான்; எவரை வேண்டுமானாலும் பணியில் ஈடுபடுத்திக் கொள்வான் என்பதற்கு மர்யம் ஜமீலாவின் வரலாறு சான்று.
ஒரு கருத்து
காலமெல்லாம் பேசப்படும்
மர்யம் ஜமீலா அவர்களின் வாழ்வின் இன்னொரு பரிமாணமும் இன்றைய அழைப்பாளர்களுக்கும் சத்தியப் போராளிகளுக்கும் பெரிதும் ஊக்கமும் உந்துதலும் தருவதாகும். இதனை அமீரே ஜமாஅத் மௌலானா சையத் ஜலாலுத்தீன் உமரி அவர்கள் குறிப்பாகச் சுட்டிக்காட்டி இருக்கின்றார். அமீரே ஜமாஅத் குறிப்பிட்டிருப்பதாவது:
“நியூ யார்க்கில் வாழ்ந்து வந்த தீவிரமான, கட்டுக்கோப்பான மதப்பற்று மிக்க யூதக் குடும்பத்தில் பிறந்த மர்யம் ஜமீலா குர்ஆனை வாசித்ததன் மூலமாக இஸ்லாத்தின் உண்மைநிலையையும் இஸ்லாம்தான் சத்திய மார்க்கம் என்பதையும் உணர்ந்ததும் சற்றும் தயங்காமல் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார்.
எதற்கும் பயப்படவில்லை.
எத்தகைய பேராசைக்கு ஆளாகவில்லை.
உறவினர்களின் அன்புக்குப் பணிந்து விடவில்லை.
எத்தகைய முட்டுக்கட்டைக்கும் குனிந்துபோக-வில்லை.
சத்தியத்தை ஏற்று அதில் நிலைத்து நிற்க வேண்டும் என்பதில் அவருக்கு எந்த அளவுக்கு மன உறுதியும் ஊக்கமும் இருந்ததெனில் தன்னுடைய உற்றார் உறவினøயும் பிறந்த நாட்டையும் எல்லாவற்றையும் துறந்து அந்நியமான நாடு ஒன்றுக்கு புலம் பெயர்ந்தார். ஹிஜ்ரத் செய்துவிட்டார். அதன் பிறகு திரும்பிப் போகவே இல்லை.
மர்யம் ஜமீலா அவர்களின் வாழ்வின் இந்தப் பரிமாணம் ஒளிமயமானதாகும். காலமெல்லாம் பேசப்-படக்கூடியதாகும். சத்தியத்தைத் தேடியடைய விரும்பு-கின்ற அனைவருக்கும்ஊக்கம் அளிப்பதாகும்’
ஒரு ஏக்கம்
தமிழில் மொழிபெயர்ப்பது எப்போது?
மேற்கில் உதித்த சூரியனாக அறிவுலகில் ஜொலித்த மர்யம் ஜமீலா முப்பதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியிருக்கின்றார். மாக்கியவல்லியின் உலகாயதச் சிந்தனைகளை நார் நாராய்க் கிழித்திருக்கின்றார். அய்ரோப்பியர்கள் பெரிதும் தூக்கிவைத்துக்கொண்-டாடுகின்ற கிரேக்க தத்துவஞானி பிளாட்டோவை ஒரு பிடி பிடித்திருக்கின்றார். வால்டேரின் செக்குலரிசத்தை-யும் சிக்மண்டு ஃபிராடின் பாலியல் சார்ந்த உளவியலையும் ப்பூவென ஊதித் தள்ளியிருக்கின்றார். பிரிட்டிஷ் அறிஞர் தாமஸ் ராபர்ட் மால்தஸின் மக்கள்தொகை அபாய அறிவிப்பையும் கார்ல் மார்க்ஸின் கம்யூனிஸ சிந்தனையையும் எந்த அளவுக்கு அறிவுப்பூர்வமாக, ஆழமாக விமர்சித்திருக்கின்றார் எனில் படிப்பவரின் புருவங்கள் வில்லாய் வளைந்துவிடும்.
மேற்கத்திய சிந்தனைகள் மீதான அவருடைய விமர்சனங்கள் கூர்மையானவை. கனமானவை. காலத்தை வென்று நிற்பவை. அதே சமயம் ஆழமான தத்துவங்-களையும் எளிமையாக, தீர்க்கமாக எழுதுகின்ற வல்லமை அவருக்கு இருந்தது. மர்யம் ஜமீலா அத்துடன் நிற்கவில்லை. இந்த மேற்கத்திய பாடாவதி சிந்தனைகளுக்கு மாற்றாக ஒளிமயமான இஸ்லாமிய அறவுரைகளை அழகாக, தீர்க்கமாக எடுத்துரைத்திருக்கின்றார்.
குறிப்பாக வெஸ்டர்ன் சிவிலிசேஷன் அண்டு தி டிஹியூமனைசேஷன் ஆஃப் மேன்கைண்டு என்கிற நூலையும் வெஸ்டர்ன் சிவிலிசேஷன் கண்டம்ன்ட் பை இட்செல்ஃப் என்கிற நூலையும் இஸ்லாம் அண்டு தி வெஸ்ட் என்கிற நூலையும் சொல்லலாம்.
எளிமையான ஆங்கிலத்தில் ஓட்டமும் துள்ளலும் நிறைந்த நட்பு மணம் கமழ்கின்ற சரளமான நடையில் ஆழமான கருத்துகளை மிகவும் சாதாரணமாக எழுதி முடித்திருக்கின்றார் மர்யம் ஜமீலா. மர்யம் ஜமீலாவின் நூல்கள் தமிழில் வெளியாகாமல் இருப்பது ஒரு குறையே. இனி வருங்காலத்திலாவது அவற்றைத் தமிழில் வெளியிடுவதற்கு ஆவன செய்யப்பட வேண்டும்.
மர்யம் ஜமீலா அவர்கள் எழுதிய நூல்களின் பட்டியல்:
1. ISLAM VERSUS THE WEST (இஸ்லாம் வர்சஸ் தி வெஸ்ட்)
2. ISLAM AND MODERNISM (இஸ்லாம் அண்டு மாடர்னிஸம்)
3. ISLAM IN THEORY AND PRACTICE (இஸ்லாம் இன் தியரி அண்டு பிராக்டிஸ்)
4. ISLAM VERSUS AHL AL KITAB PAST AND PRESENT (இஸ்லாம் வெர்சஸ் அஹ்லே கிதாப் பாஸ்ட் அண்டு பிரசன்ட்)
5. AHMAD KHALIL (அஹ்மத் கலீல் - வரலாற்று நாவல்)
6. ISLAM AND ORIENTALISM (இஸ்லாம் அண்டு ஒரியன்டிலிஸம்)
7. WESTERN CIVILIZATION CONDEMNED BY ITSELF (வெஸ்டர்ன் சிவிலிசேஷன் கண்டம்ட் மை இட்செல்ஃப்)
8. CORRESPONDENCE BETWEEN MAULANA MAUDOODI AND MARYUM JAMEELAH (க�
1 comment:
Slot Machine Review | ChoE Casino
ChoE Casino Review - An Honest cheap retro jordans Casino Online Air Jordan 10 Retro Outlet The site is licensed 토토 사이트 by the 1xbet 먹튀 Malta 출장안마 Gaming Authority. The casino is rated 4.7 out of 5 by our members and 37% Rating: 4.6 · Review by Christian Webber
Post a Comment