Wednesday, November 7, 2012

திருமண ஆசையில் வீட்டை விட்டு ஓடிய 16 வயது பெண்ணை காதலன் உள்பட 12 பேர் கற்பழித்த கொடுமை:

சண்டிகர், நவ. 5-

அரியானா மாநிலம் கர்னால் ரெயில் நிலையம் அருகில் மயங்கிய நிலையில் கிடந்த ஒரு இளம்பெண்ணை ரெயில்வே போலீசார் நேற்று இரவு மீட்டு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். மயக்கம் தெளிந்த அந்த பெண்ணிடம் இன்று போலீசார் விசாரணை நடத்தியதில், கர்னால் மாவட்டத்தை சேர்ந்த அந்த 16 வயது பெண்ணை, நேற்று இரவு 12 பேர் கொண்ட கும்பல் கற்பழித்துவிட்டு ரெயில் பாதை அருகே போட்டுவிட்டு சென்றது தெரியவந்தது.

என் காதலன் என்னை திருமணம் செய்துகொள்வதாக கூறி கடந்த வியாழக்கிழமை அழைத்துச் சென்று கற்பழித்துவிட்டான். அதன்பின்னர் அவருடைய கூட்டாளிகள் 11 பேர் ஒன்று சேர்ந்து கற்பழித்தனர் என்று அந்த பெண் போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளார்.

இதையடுத்து அந்த பெண்ணின் காதலன் உள்ளிட்ட சிலரை கர்னால் போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் சிலரை தேடி வருகின்றனர்

Source: http://ping.fm/GtDAd

Comments:

ஓடி போன பெண்ணின் திருமணதிற்கு பின் கணவன் மனைவி பிரச்சனை வந்தால் அந்த பெண் எங்கு போய் அடைக்கலம் தேடுவாள். அவள் வாழ்கையே நாசமாகி விடும் ஆதலால் பெற்றோர் அனுமதி இல்லாமல் பெண் திருமணம் செய்து கொள்ளகூடாது

இது போல எத்தனை சம்பவங்கள் நடந்தாலும் இந்த பொம்பள பிள்ளைங்க திருந்தவே மாட்டாங்களா
ஓடி போவது தொடர் கதையாக உள்ளது இன்னும் அதிகரித்து உள்ளது

பெற்றோர்கள் பெண் குழந்தைகளை கவனமுடன் கண்காணித்து வளர்க்க வேண்டும்

இன்று பெண்களின் முக்கிய பிரச்சனைகளுக்கு மொபைல் தான் மிக மிக்கிய காரணம்
வேண்டும்

No comments: