ரிச் ஃபுரூட் சலாட்
தே.பொருட்கள்
கஸ்டட் பவுடர் - ஒரு மேசை கரண்டி முழுவதும்
பால் - இரண்டு டம்ளர்
கண்டென்ஸ்ட் மில்க் - ஒரு சிறிய டின்
பாதம் - முன்று
முந்திரி - முன்று
சாப்ரான் - நாலு இதழ்
பழங்கள்
பச்சை திராட்சை - ஆறு
கருப்பு திராட்சை - ஆறு
பப்பாளி பழம் - அரைகப்
கிரீன் பியர்ஸ் - கால் கப்
ஆப்பிள் - கல் கப்
ஸ்ட்ராபெர்ரி - ஆறு
ஐஸ்கிரீம் - ஏதாவது இரண்டு (அ) முன்று பிளேவர்கள்
செய்முறை
1.பழங்கள் ரெடி மேட் டின்னைஐ விட பிரெஷாக இருந்தால் நல்ல இருக்கும்.
2.பாலை சாப்ரான் போட்டு காய்ச்சவும். கால் கப் தண்ணீரில் கஸ்டட் பவுடரை கரைத்து பாலுடன் சேர்த்து மீண்டும் காய்ச்சவும்.காய்ச்சும் போது கை விடாமல் இரண்டு நிமிடம் தொடர்ந்து காய்ச்சி இரக்கி ஆற வைக்க வேண்டும்.
3.ஆறிய கஸ்டடை பிரிட்ஜில் நல்ல குளிரவிடவும்.
4.முந்திரியை பட்டரில் வருத்து வைக்கவும், பாதத்தை பொடியக அரிந்து (கொர கொரப்பாக) அதையும் பட்டரில் வருத்து கொள்ளவேண்டும்.
5.பழங்களை நல்ல பொடியாக அரிந்து பிரிட்ஜில் வைக்க வேண்டும்.
6.சாப்பிடும் நேரத்தில் பிரெஷாக கஸ்டடில் கண்டெண்ஸ்ட் மில்க் கலந்து முன்று அல்லது நான்கு சேலட் கப்பு களில் ஊற்றி, அதன் மேல் ஒவ்வொரு கப்பிலும் ஒரு முந்திரி, சிறிது பாதம் தூவ வேண்டும்.
7.பிறகு பொடியாக அரிந்து வைத்துள்ள பழங்களை ஒன்றாக கலந்து முன்று மேசை கரண்டி அளவு போட்டு மேலே முன்று அல்லது இரண்டு பிளேவர் ஐஸ்கிரீமை வைத்து குழந்தைகளுக்கு கொடுக்கவும்.
8.ஐஸ்கிரீம் ஸ்ட்ரபெர்ரி , சாக்லேட் பிளேவர் என்றால் எல்லா குழந்தைகளுக்கும் பிடிக்கும்.
குறிப்பு: முதலே பழங்களை காய்ச்சிய கஸ்டடில் போடு வைத்து விட்டால் சாப்பிடும் போது கருத்து போய்விடும். ஆகையால் பழங்களை சாப்பிடும் போது போட்டு கலக்கி கொண்டால் போதும்.மாம்பழம், வாழைபழம் கூட சேர்க்கலாம். நோன்பு நேரத்தில் வாஙகும் பழங்கள் சில நேரம் புளிப்பாகிவிடும் அதை கூட இப்படி செய்யலாம். பார்டிகளுக்கு வைத்தால் நல்ல ரிச் லுக் கிடைக்கும்.
நான்கு நபர்கள் சாப்பிடலாம்.
இணையத்திலிருந்து மெஹர் சுல்தான்
Engr.Sulthan
__._,_.___
No comments:
Post a Comment