Wednesday, August 1, 2012

கணினிப்பாவனையாளர்களுக்காக நான் வாசித்த சில விடையங்களை கணினியைப் பயன்படுத்தும் உங்களுக்கு உதவியாக இருக்கும் என்பதற்கான இதனை கணினிச் செய்தியாக உங்களுக்கு அனுப்புகின்றேன் வாசித்துப்பயன் அடையுங்கள்.

முக்கிய குறிப்பு

இணைக்கப்பட்ட செய்திகள் தமிழ்மொழியில் உள்ளன அவற்றினை வாசிப்பதற்கு முதலில் அதனைத் திறக்கவும். பின்பு அதனை ஒரு ஆங்கிலப் பெயர் கொண்டு பதிவு செய்யவும் பின்பு அதனைத் திறந்து வாசிக்கவும்.

கம்ப்யூட்டரை முறையாக இயக்கி உலக வெப்பமயம் ஆவதைத் தடுப்போம்

இன்றைய சுற்றுப் புறச் சூழல் ஆய்வாளர்கள் அனைவரும் உலக வெப்பமயமாவதைத் தடுக்க அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகின்றனர். இதில் கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர்களும் ஆற்ற வேண்டிய கடமை உள்ளது. இது குறித்து ஆய்வு செய்த டப்ட்ஸ் (Tufts) பல்கலைக் கழகம், சில அறிவுரைகளை வழங்கியுள்ளது. இவற்றைப் பின்பற்றுவதால், ஏற்கனவே நாம் புவி வெப்பமயமாதலில் ஏற்படுத்திய அழிவைச் சரி செய்ய முடியாது என்றாலும், சீதோஷ்ண நிலை மாறிவருவதனை ஓரளவிற்குத் தடுக்கலாம்.
15 நிமிடங்கள் அல்லது அதற்கும் மேலாக (உணவு சாப்பிடுதல், வெகுநேரம் தொலைபேசியில் பேசுதல், மேலதிகாரி அறைக்கு வேலை நிமித்தம் செல்லுதல் போன்றவைகளுக்காக) கம்ப்யூட்டரைப் பயன்படுத்தப் போவதில்லை என்றால், மானிட்டரை ஆப் செய்துவிடுங்கள்.
ஒரு மணி நேரத்திற்கு மேல் கம்ப்யூட்டரைப் பயன்படுத்தப் போவதில்லை என்றால், கம்ப்யூட்டரை நிறுத்திவிடுங்கள். இது காப்பி எடுக்கும் சாதனம், பிரிண்டர், ஸ்கேனர் மற்றும் பேக்ஸ் சாதனங்களுக்கும் பொருந்தும். கம்ப்யூட்டர் ஒன்றை 24 மணி நேரம் தொடர்ந்து இயக்குவதால், ஓராண்டில் அது 1,500 பவுண்ட் கார்பன் டை ஆக்ஸைடை வெளியே அனுப்புகிறது. மரம் ஒன்று ஒவ்வொரு ஆண்டும் 3 முதல் 15 பவுண்ட் கார்பன் டை ஆக்ஸைடை உறிஞ்சுகிறது. அப்படியானால், ஒரு கம்ப்யூட்டர் விடும் கெட்ட காற்றை நீக்கிச் சுத்தப்படுத்த 100 முதல் 500 மரங்கள் வரை தேவையாயிருக்கும்.
நீங்கள் புது கம்ப்யூட்டர் வாங்குவதாக இருந்தால், லேப்டாப் கம்ப்யூட்டரை வாங்குங்கள். லேப்டாப், டெஸ்க்டாப் கம்ப்யூட்டரைக் காட்டிலும் கால் பங்கு மின்சக்தியே பயன்படுத்துகிறது. மானிட்டர் வாங்குவதாக இருந்தால், எல்.சி.டி. மானிட்டர்களையே வாங்கவும். அவை சி.ஆர்.டி. மானிட்டரைக் காட்டிலும் மூன்றில் ஒரு பங்கு சக்தியையே பயன்படுத்துகின்றன.
உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள பவர் மேனேஜ்மெண்ட் வசதியை அவசியம் பயன்படுத்தவும். கம்ப்யூட்டரை ஸ்டேன்ட் பை மோடில் வைத்திட வேண்டாம்.ஏனென்றால் அந்நிலையிலும், மின்சக்தியை கம்ப்யூட்டர் பயன்படுத்திக் கொண்டு தான் இருக்கும். ஸ்விட்ச் ஆப் செய்தால் தான் இது முற்றிலும் நிறுத்தப்படும்.
மானிட்டரை ஆப் செய்து, பின் மீண்டும் அதனை இயக்குவது சிலருக்கு வரக்கூடிய பழக்கமாக இருக்காது. இவர்களுக்கு உதவிட ஒரு சிறிய அப்ளிகேஷன் புரோகிராம் உள்ளது. இதனை இன்ஸ்டால் செய்து, செட் செய்திட வேண்டிய தில்லை. ஜஸ்ட், டவுண்லோட் செய்து இயக்கினால் போதும். இந்த புரோகிராமின் பெயர் MonitorES (Monitor Energy Saver). இதனை http://ping.fm/eLBZB MonitorES_05.exe என்ற முகவரியில் உள்ள தளத்திலிருந்து இலவசமாகப் பெறலாம்.
இது தானாக மானிட்ட ரை ஆப் செய்கிறது; மீடியா புரோகிராம்கள் பயன்படுத்தவில்லை என்றால் தற்காலிகமாக நிறுத்தி வைக்கிறது. இன்ஸ்டண்ட் மெசஞ்சரையும் பயன் படுத்தாவிட்டால், தற்காலிக செய்தி அனுப்பி நிறுத்தி வைக்கிறது; பெரிய அளவில் ஏற்படும் ஒலியை நிறுத்துகிறது. நீங்கள் உங்கள் கம்ப்யூட்டரிலிருந்து எழுந்து நகர்ந்து, ஆனால் கம்ப்யூட்டர் அருகிலேயே இருந்தால், மானிட்டரை கண்ட்ரோல் + எப்2 அழுத்தி ஆப் செய்துவிடலாம். பின் மீண்டும் கம்ப்யூட்டர் முன் அமர்ந்து வேலை பார்க்கத் தொடங்குகையில், ஏதாவது ஒரு கீயை அழுத்தினால் போதும்.
இதே போல Green Monitor என்றும் ஒரு அப்ளிகேஷன் http://ping.fm/tHqie Site/GreenUtils.html என்ற முகவரியில் உள்ள தளத்திலிருந்து கிடைக்கிறது. இதனையும் டவுண்லோட் செய்து பயன்படுத்தலாம்.
நாம் இந்த கம்ப்யூட்டர் மானிட்டரை நிறுத்தியா, உலகம் வெப்பமயமாவது தடைபடப் போகிறது என்று எண்ண வேண்டாம். சிறுதுளி பெருவெள்ளம். எனவே உங்கள் பங்கையும் அளியுங்கள். மற்றவர்களையும் இந்த வழியைப் பின்பற்றுமாறு தூண்டுங்கள்.

பின்வரும் இணையத்தளங்கள் உங்களுக்குப் பயனுள்ளவை பரிசோதித்துப் பாருங்கள்.


1. www.downloadsquad.com : இந்த தளம் சாப்ட்வேர் மற்றும் வெப் புரோகிராம்களில் அவ்வப்போது ஏற்படும் மாற்றங்கள் குறித்து இந்த தளத்தில் தகவல்கள் அப்டேட் செய்யப்படும். மிகவும் பயனுள்ள தகவல்களைத் தருவதுடன் வேடிக்கையாகவும் சில சமயம் செய்திகளைத் தரும்.


2. www.gmailtips.com : கூகுள் மெயில்பயன்படுத்துபவர்களுக்கான தகவல் களஞ்சியம். அதிகமான எண்ணிக்கையில் குறிப்புகள்,டிப்ஸ் மற்றும் ட்ரிக்ஸ் தரப்பட்டுள்ளன. இதனை நடத்துபவர் இன்னொரு தளத்தையும் நடத்துகிறார். அதன் முகவரி www.jimsltips.com . இதில் இமெயில் தகவல்களுடன் மொபைல் குறித்த தகவல்கள் மற்றும் டிப்ஸ்கள் உள்ளன.


3. www.thegreenbutton.com : விண்டோஸ் மீடியா சென்டர் எடிஷன்குறித்த அனைத்து தகவல்களுக்கும் இந்த கிரீன் பட்டன் தளம் உதவிடும். லேட்டஸ் அப்டேட் பைல்களைத் தருவதோடு டவுண்லோட் செய்திட சில புரோகிராம்களையும் தருகிறது.



4. www.stopbadware.org : இது பக்கத்துவீட்டு காவல்காரன் போல செயல்படுகிறது. ஏதேனும் மோசமான விளைவுகளைத் தருவதற்கென்றே உருவாக்கப்படும் தளங்கள் குறித்த தகவல்களைத் தருகிறது. இது போன்ற தளங்களால் பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து வரும் தகவல்களைத் திரட்டி அவற்றின் அடிப்படையில் மோசமான தளங்கள் மற்றும் புரோகிராம்களின் பட்டியலை அளிக்கிறது.

5. www.techcrunch.com : இன்டர்நெட் வெப்சைட் குறித்த செய்திகள் மற்றும் ஆய்வுகள் குறித்த தகவல்களைத் தருகிறது. குறிப்பாக வெப்2.0 குறித்த அண்மைக் காலத்திய செய்திகள் ஏராளம்.


6. www.techdirt.com தொழில் நுட்ப உலகின் தில்லுமுல்லுகள் மற்றும் முக்கிய செய்திகள், ஆய்வு முடிவுகள் ஆகியவை குறித்து சுருக்கமான தகவல்களைத் தருகிறது.



சில வேடிக்கையான துணுக்கு செய்திகளும் உண்டு. நீங்களும் உங்களுக்குத் தெரிந்த செய்திகளையும் தகவல்களையும் அனுப்பலாம்.


7. www.tweakguides.com உங்கள் சிஸ்டத்தை ட்யூன் செய்து அதன் திறனை அதிகப்படுத்த வேண்டுமா? இதுதான் நீங்கள் செல்ல வேண்டிய தளம். விளையாட்டுகள், பிரவுசர்கள், டிரைவர்கள் என அனைத்தையும் இந்த தளம் மூலம் மேம்படுத்தி கம்ப்யூட்டர் இயக்கத்தை புதுப்பிக்கலாம்.


8.www.ilounge.com இதனுடைய பெயர் தெரிவிப்பது போல இது ஐ–பாட் மற்றும் ஐ–ட்யூன் ஆகியன குறித்த தகவல்களைத் தரும் தளம். இந்த இரண்டு குறித்து உங்களுக்கு என்ன உதவி வேண்டுமானாலும் இங்கு கிடைக்கும். எப்படி பயன்படுத்துவது என்ற டுடோரியல் தகவல்கள் மிகவும் பயனுள்ளன. இந்த இரண்டைப் பொறுத்தவரை இந்த தளத்தை ஒரு கடல் எனலாம். இதில் ஐ–பாட் 2.2 வழிகாட்டி இபுக்காக உள்ளது. இதில் 202 பக்க தகவல்கள் ஐ – பாட் குறித்து உள்ளன.


9. www.photonhead. com டிஜிட்டல் கேமரா வாங்கிவிட்டீர்களா? அபெர்ச்சர், ஸ்பீட், ரெட் ஐ எனப் பல விஷயங்கள் உங்களைக் குழப்புகிறதா? உடனே இந்த தளத்திற்குச் செல்லுங்கள். இங்கு குழந்தைக்குச் சொல்லிக் கொடுப்பது போன்ற பல டுடோரியல்கள் உள்ளன. சிமுலேட்டர் முறையில் ஒரு கேமரா ஆன்லைனிலேயே தரப்பட்டு எப்படி இயக்குவது என்பதைச் சொல்லிக் கொடுக்கிறது. ஆனால் கொஞ்சம் பழமையானது போல சில விஷயங்கள் இருக்கின்றன. எனவே அப்படி எண்ணுபவர்கள் www.slrgear.com என்ற தளத்திற்குச் செல்லலாம்.


10. www.crazymeds.org : மனநிலை குறையுடையவர்களுக்கான தளம் இது. இங்கு இவ்வகையில் மருந்து உட்கொள்பவர்கள், சிகிச்சை எடுப்பவர்கள் தங்களது அனுபவத்தினைத் தருகின்றனர். சும்மா தகவலுக்காக இதனைப் பார்க்கலாம்.


11.www.goaskalice.com அமெரிக்க கொலம்பியா பல்கலைக் கழகம் நடத்தும் மெடிக்கல் இணைய தளம். சிலர் கேட்க கூச்சப்படும் கேள்விகளைத் தாங்கள் யாரென்று காட்டிக் கொள்ளாமல் இங்கு கேள்விகளை இடலாம். சரியான முறையான பதில் கிடைக்கும்.


12. www.quotedb.com சிலர் எப்போது பேசினாலும் இது அவர் சொன்னது இவர் சொன்னது என்று பிரபலங்கள் கூறியதைச் சொல்வார்கள். சிலர் பொதுமேடைகளில் பேசச் செல்கையிலும் சில ஆசிரியர்கள் வகுப்புகளில் பாடம் நடத்துகையிலும் அவர்களுக்குச் சில கொட்டேஷன்கள் கட்டாயம் வேண்டியதிருக்கும். அவர்களுக்கான தளம் இது. 60 வகை பொருள்களில் ஏறத்தாழ 4,000 புகழ் பெற்ற கொட்டேஷன்கள் உள்ளன.


13. www.thefreedictionary.com ஆன் லைனில் உள்ள அருமையான டிக்ஷனரி. ஒரு சொல்லுக்குப் பொதுவான பொருள் மட்டுமின்றி, மருத்துவம், சட்டம், கம்ப்யூட்டர், நிதிச் சந்தை தொடர்பான பொருளும் தரப்படும். இவற்றுடன் ஒத்த பொருள் தரும் சொற்கள். எதிர்ப்பதங்கள், பழமொழிகள், வழக்குச் சொற்களும் இந்த தளத்தில் கிடைக்கின்றன. இவற்றுடன் பல உதிரி பிரிவுகளும் இருக்கின்றன. இவற்றில் நியூஸ் அலர்ட், வார்த்தை விளையாட்டு எனப் பிரிவுகளும் உள்ளன.


14. www.webmath.com ஒரு பெயிண்டர் ஒரு அறையை எட்டு மணி நேரத்திலும் இன்னொருவர் 10 மணி நேரத்திலும் வெள்ளை அடித்தால் இருவரும் சேர்ந்து எவ்வளவு நேரத்தில் வெள்ளை அடிப்பார்கள்? என்ன – இதெல்லாம் ஸ்கூலில் முடித்து வந்தாச்சே ! இப்போ எதுக்கு என்கிறீர்களா? இதைப் போன்ற கணக்குகள் மற்றும் அல்ஜிப்ரா, கால்குலஸ் எனப் பல பாடப்பிரிவுகளுக்குத் தீர்வுகளை இந்த தளம் தருகிறது.


15. www.worldwidewords.org ஆங்கிலச் சொற்கள் குறித்து தெரிந்து கொள்ள அருமையான ஓர் தளம். ஒரு சொல்லை எடுத்துக் கொண்டு அதன் பல பரிமாணங்களை இந்த தளம் எடுத்துச் சொல்கிறது.

தகவலுக்கு நன்றி


கணினிக் கல்வி இதழ்
ஆசிரியர்
தி.லம்பேட்

No comments: