Thursday, August 2, 2012

ஒரே நாளில் 2 கலவரம் : செத்து மடியும் "பொறுமை"யுடன் முஸ்லிம் சமூகம்!
Tuesday, 24 July 2012 01:14 MARUPPU மீடியா - மறுப்பு செய்திகள்


JULY 24, உத்தரபிரதேசம் பரேலியில், 22/07 அன்று இரவு 8 மணிக்கு தொழுகை நடைபெற்றுக்கொண்டிருந்த போது பள்ளிவாசல் முன்பு, கொட்டடித்துக்கொண்டும் ஒலி பெருக்கியில் மேலமடித்துக்கொண்டும் பாட்டுப்பாடி கூச்சளிட்டவர்களுக்கும்,
முஸ்லிம்களுக்கும் மத்தியில் நடந்த மோதலில் இம்ரான் என்ற முஸ்லிம் இளைஞர் பலியானார். பத்துக்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் படுகாயமடைந்தனர். நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன. முஸ்லிம்களுக்கு சொந்தமான ஆட்டோ ஸ்பேர் பார்ட்ஸ் கடை உள்ளிட்ட பல கடைகள் எரிந்து நாசமாயின. அனைத்தும் அரங்கேறிய பிறகு, தற்போது 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் திங்களன்று, மரணித்த இளைஞர் இம்ரானின் "ஜனாஸா" தொழுகைக்கும் பல முஸ்லிம்கள் வீட்டை விட்டு வெளியே வரமுடியாத சூழல் ஏற்பட்டது .
மறுபுறம்," பிரதாப் கட் மாவட்டம்" ஏஸ்தஹானில், ஒரு பெண் கொலையில், முஸ்லிம் வாலிபர் மீது எழுந்த சந்தேகத்தினால், அவ்வூரை சேர்ந்த அனைத்து முஸ்லிம்களின் வீடுகளும் தீக்கிரயாக்கப்பட்டதால், அவர்கள் அனைவரும் ஒரு கல்வி நிறுவன வளாகத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். போலீசாரின் விசாரணையில் மேற்படி பெண் கொலையில், குற்ற செயலில் ஈடுபட்டது, ஒரு பூசாரி உள்ளிட்ட 4 ஹிந்துக்கள் என்பது தெரிய வந்து, வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம் (22/07) விஷுவ ஹிந்து பரிஷத்தின் "பிரவீன் தொகாடியா" மரணித்த பெண் வீட்டாரை துக்கம் விசாரிக்கிறேன் பேர்வழி என்று, ஊருக்குள் வந்து கொளுத்திப்போட்ட தீக்குச்சி, கொழுந்து விட்டு எரிந்துக்கொண்டிருக்கிறது. முஸ்லிம்களின் 8 வீடுகளை முற்றிலுமாக எரித்து நாசமாக்கியதுடன், அங்கிருந்த குரான் உள்ளிட்ட இஸ்லாமிய புத்தகங்களை கிழித்தும், காலில் மிதித்தும் அவமதித்தனர். பிரவீன் தொகாடியா, தனது விஷம் கக்கும் பேச்சில், முஸ்லிம்களை "பாகிஸ்தானுக்கு" விரட்டியடியுங்கள் என்றும் வீராவேசமாக பேசியுள்ளான். பிரவீன் தொகாடியா வரும் விஷயம், முன்னமே தெரிய வந்ததால், 4 நாட்களுக்கு முன்பே மாநில முதலமைச்சர், கவர்னர், உள்துறை அமைச்சர், போலீஸ் அதிகாரிகள் உள்ளிட்ட பலருக்கும் முஸ்லிம்கள் "பேக்ஸ்" மூலம் தொடர்பு கொண்டு, விபரீதத்தை விளக்கி இருந்தனர். முஸ்லிம்களின் வாக்குகளை பெற்று ஆட்சிக்கு வந்த உத்தர பிரதேச அரசு, முஸ்லிம் பாதுகாப்பு விஷயத்தில் அலட்சியமாகவே உள்ளது.

K.F. Md. Irsadh
Worship the creator not creatures.......

No comments: