Wednesday, August 8, 2012

கார்லிக்(பூண்டு) பேஸ்ட் :


தேவையான பொருட்கள்:


பூண்டு -10 பல்


முட்டை வெள்ளைக்கரு - 2


எலுமிச்சை சாறு - 2 டீஸ்பூன்


ஆலிவ்எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்


உப்பு, தேவைக்கேற்ப

செய்முறை:
தோல் உரித்த பூண்டு பற்களை ஆவியில் அரை வேக்காடாக வேக வைத்துக் கொள்ளவும்
வேக வைத்த பூண்டுடன்,உப்பு,எலுமிச்சை சாறு விட்டு ப்ளெண்டரில் நன்கு மை போல் அரைக்கவும். பின் இதனுடன் எண்ணெய்,முட்டை வெள்ளைக்கரு சேர்த்து நன்கு கெட்டியாகும் வரை அடிக்கவும்.அவ்வளவு தான். கார்லிக் பேஸ்ட் ரெடி.பிரிட்ஜில் வைத்து தேவைப் படும் போது எடுத்து ரொட்டி, நாண், கிரில் சிக்கன் இவற்றோடு சேர்த்து சாப்பிட மிகுந்த சுவையாக இருக்கும்.

குறிப்புகள்: மெஹர் சுல்தான்

Engr.Sulthan
__._,_.___

No comments: