கடல் பாசி - ரூஃப் ஹப்சா
தேவையான பொருட்கள்
கடல் பாசி = 10 கிராம்
தண்ணீர் = முன்று டம்ளர்
ரூ ஆப் ஷா = ஒரு குழி கரண்டி
சர்க்கரை = தேவையான அளவு
பாதம் , பிஸ்தா = வேண்டிய நட்ஸ் வகைகள் = ஒரு மேசை கரண்டி
செய்முறை
1. ஒரு வாயகன்ற சட்டியில் முன்று டம்ளர் தண்ணீர் ஊற்றி கடல்பாசியும் சேர்த்து + சர்க்கரை சேர்த்து கொதிக்க விடவும்.
2. நன்கு கிளறி விட்டு கொதிக்க விடவும்.
3. நன்கு கொதித்து கடல் பாசி கரைந்து தண்ணீர் தெளிய ஆரம்பிக்கும் போது சட்டியை அடுப்பில் இருந்து இரக்கவும்.வடிகட்டி கொள்ளவும்.மீதி அதில் தங்கும் கடல் பாசியை மீண்டும் சிறிது தண்ணீர் சேர்த்து வேகவிடலாம்.
4. இப்போது ரூ ஆப் ஷா சேர்த்து, நட்ஸ் வகைகளை பொடியாக தூவி ஒரு தட்டில் ஊற்றி ஆறவைத்து பிரிட்ஜில் வைத்து செட்டாக்கவும்.
5. வேண்டிய வடிவில் கட் செய்து சாப்பிடவும்.
குறிப்பு: இந்த கடல்பாசியை தேங்காய் உடைத்த தன்ணீர், இளநீர், ஜவ்வரிசி,டேங்க்,மற்றும் ரஸ்னா ஜுஸ் பவுடர்கள், பால் சேர்த்து பல வகையாக தயாரிக்கலாம்.
அதில் பழங்கள் போட்டு செய்தால் இன்னும் சுவை கூடும்.கலர்புல்லாக இருப்பதால் குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும்.
வயிற்று புண் மற்றும் வாய் புண்ணிற்கும் நல்லது.
நோன்புகாலத்தில் உடம்பு ரொம்ப டிரையாகி வாயில் வெடிப்புகள் வரும் அது சூட்டினால் வருவது அதற்கும் இது ரொம்ப நல்லது.
இணையத்திலிருந்து மெஹர் சுல்தான்
Engr.Sulthan
No comments:
Post a Comment