Friday, September 18, 2009

தன்னம்பிக்கையே வெற்றிக்கு முதல்படி எனலாம். - r.elagovan

தன்னம்பிக்கையே வெற்றிக்கு முதல்படி எனலாம். பல வழிகளில் நாம் தன்னம்பிக்கையை இழந்தாலும் கீழ் காணும் எளிய முறைகளை பின்பற்றினால் இலட்சியத்தை எளிதில் எட்ட முடியும்.

* ஆடை - உங்கள் ஆடையில் கவனம் செலுத்த வேண்டும். மலிவு விலையில் ஆடைகளை வாங்குவதற்கு பதிலாக, சந்தர்ப்ப சூழ்நிலைக்கு ஏற்றவாறு அணியக்கூடிய நல்ல தரமான ஆடைகளை அணியலாம். அவை எளிதில் கிழியாது. பார்க்கவும் எடுப்பாகா இருக்கும். ஆடையை மாற்றி எளிய ஸ்டைலுக்கு மாறினால் நீங்கள் நினைப்பது நடக்கும். தன்னம்பிக்கையை ஊக்கபடுத்தும் குணம் நாம் அணியும் ஆடைகளுக்கு உண்டு. உங்கள் காலணியிலும் கவனம் செலுத்தவும்

* வேக நடை - அட வேக நடை என்ன ஆக போகிறது என்று தானே நினைக்க போறிங்க?? ஒருவரது நடையை வைத்தே அவர் சோம்பேரியா இல்லை தெம்பானவரா என்பதை அறியலாம். சற்று வேகமான நடையை பார்த்ததுமே எதிரே இருப்பவருக்கு இவரால் எதையும் சுறுசுறுப்பாக முடித்துவிட முடியும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தும். ஆகவே உங்கள் வழமையான நடையில் இன்னும் 25% அதிகமாக்குங்கள்.

* நிமிர்ந்த நிலை - எப்போதுமே நிமிர்ந்த நிலையில் நிற்கவோ, அமரவோ வேண்டும். தோள்களை தொங்கவிட்ட படியே வந்தால் அவரால் தன்னம்பிக்கையோடு எதையும் செய்யமுடியாது என பார்ப்பவர் எண்ணிவிடுவர். நிமிர்ந்து நிற்பது , தலையை தொங்கப்போடமால் இருப்பது, எதிரில் உள்ள்வர்களின் கண்களை நேரே பார்ப்பது, பேசுவது போன்றவை தன்னம்பிக்கை உள்ளது என்பதை சொல்லாமல் சொல்லும் குணங்களாகும். பார்ப்பவர்க்கு நாம் தன்னம்பிக்கை உடையவர் என்ர உணர்வை உண்டாக்கும்.


* கேட்பது - நல்ல விஷயங்களையும், தன்னம்பிக்கை ஊட்டும் நல்ல பேச்சாளர் பேச்சையும் அடிக்கடி கேட்கவும். 30 - 60 நொடிக்குள் உங்களது இலட்சியம் மற்றும் எதிர்காலம் பற்றி சிறு குறிப்பு எடுத்து கண்ணாடி முன் நின்று தினமும் சத்தமாக பேசி பழகுங்கள். அல்லது எப்பொழுது தன்னம்பிக்கையை தூண்ட வேன்டுமோ அப்போது இவ்வாறு பலமுறை சொல்லி பாருஙள்.

* நன்றி - உங்களது வாழ்க்கையில் எவ்வளவோ நல்லதும் வெற்றியும் கிடைத்திருக்கும். அவற்றை பட்டியல் இடுங்கள்.அது உங்களது படிப்பாகட்டும், உங்களது திறமையாகட்டும், நல்ல உறவாகட்டும், அவ்வாறு பட்டியல் இடும்போதுதான் எத்தனை விதமான நல்ல வாய்ப்புக்கள் மற்றும் தன்னம்பிக்கை உண்டாக்ககூடிய விஷயங்களை நம் வாழ்வில் நடந்து உள்ளன என தெரியும். இவை நமது மனச்சோர்வை அகற்றி தன்னம்பிக்கையோடு வாழ வழி வகுக்கும்.

* மனதார பாராட்டுங்கள் - நம்மை நாமே "நெகட்டிவ்" ஆக நினைக்கும்போது மற்ற்வர்களை பார்ப்பதும், பேசுவதும் கூட நெகட்டிவ் ஆக இருக்கும். இதிலிருந்து விடுபட முதலில் மற்றவர்களை மனதார பாராட்ட கற்று கொள்ளுங்கள். சின்ன விஷயமாக இருந்தாலும் பெரிதாக பாராட்டுங்கள். மற்றவர்கள் பற்றி குறை கூறுவதை விடுங்கள். இப்படி நடந்து கொண்டால் உங்களை மற்றவர்களுக்கு பிடித்து போகும்.. இதனால் நமக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும்.

* முன்னால் உட்காருங்கள் - மற்றவர்களின் நல்ல குணாதிசயங்களை பார்க்கும்போது நமக்குள்ளே மறைந்திருக்கும் நல்ல குணாதிசயங்களும் தானே வெளிவரும். பாடசாலை, பொது விழாக்கள், மற்றும் கூட்டங்களில் அமரும்போது எப்போதும் பின் இருக்கையில் அமரவே விரும்புவர். இது தன்னம்பிக்கை குறைபாடாகும். ஆகவே இனிமேல் எங்கு சென்றாலும் முன் இருக்கையில் தைரியமாக உட்காருங்கள். மனதில் உல்ல பயம் போய் நம்பிக்கை அதிகரிக்கும்.

* பேசுங்கள் - சிலர், பலர் கூடி இருக்கும்போது பேசவே தயங்குவர். மற்றவர்கள் நம்மை முட்டாள் என நினைத்து விடுவார்களோ என்ற பயம் தான். இனி பயம் இன்றி உங்கள் மனதில் பட்டதை தைரியமாக சபைகளில் எடுத்து பேசுங்கள். இதனால் நமது எண்ணத்தில் ஒரு நம்பிக்கை பிறக்கும். மற்றவர்கள் உங்களை தலைவர்களாக ஏற்று கொள்வர். எல்லோரிடத்திலும் தரியமாக பேசினாலே தன்னம்பிக்கை உங்களை தேடி வரும்.

* உடல்வாகு - நமது உடையும், உடல் வனப்பும், தன்னம்பிக்கைக்கு கை கொடுக்கும். அளவுக்கு மீறி குண்டாகவோ, மிக ஒல்லியாகவோ இருந்தால் நம்மீது நமக்கே நம்பிக்கை இழக்க நேரிடும். ஆகவே உடற்பயிற்சி செய்து, நமது உடலை பாதுகாப்பாக வைத்து கொண்டால் தன்னம்பிக்கை உங்களுக்கு கிரீடமாகும்.

* நாடு - நாடென்ன செய்தது நமக்கு, என கேள்விகள் கேட்பது எதற்கு?? நாம் என்ன செய்தோம் அதற்கு என்று நினைத்தால் நன்மை நமக்கே..! நம்மை பற்றியே எப்போதும் சிந்திக்க கூடாது. நம்மை சுற்றி உள்ளவர்களையும் சமுதாயத்தையும் பற்றியும் சிந்திக்க வேண்டும். "கடமையை செய் பலனை எதிர்பாராதே" இது நாவுக்கரசரின் அழகிய வரிகள். எனவே பிறருக்காகவும் வாழ பழகுவோம்..!

இந்த தன்னம்பிக்கை நமது எல்ல திறனையும் வெளிக்காட்ட உதவும்.இவற்றை நாளைக்கு நாளைக்கு என தள்ளி போடமல் இன்றே முடிவு செய்து தொடங்குங்கள். இனி வெற்றி உங்கள் பக்கமே..!

No comments: