சார்லிமேன் (742 - 814)
கி.பி. 6 ஆம் நூற்றாண்டில் ஃபிரான்ஸ் நாட்டை வென்று பரவிய ஜெர்மானிய இனக்குழுவினரின் (Franks) அரசரான சார்லிமேன் (மகா சார்லஸ்), மத்திய காலத்தில் புகழ்பெற்று விளங்கிய ஒரு பேரரசர். இவர் சாக்சனி (Saxony) நாட்டை வென்றார். புனித ரோமானியப் பேரரசை (Holy Roman Empire) இவரே நிறுவினார். இவர் ஐரோப்பிய வரலாற்றில் மிகச் சிறந்த அரசர்களுள் ஒருவராகப் புகழ் பெற்றார்.
சார்லஸ் 742 ஆம் ஆண்டில் ஆக்கென் (Aachen) என்ற நகருக்கு அருகே பிறந்தார். இந்நகரம் பின்னர் இவரது தலைநகராகியது. இவருடைய தந்தை குள்ள பெப்பின் (Pepin the Short) ஆவார். இவருடைய பாட்டனார், சார்லஸ் மார்ட்டல் (Charles Martel) ஜெர்மானிய இனக் குழுவினரின் பெருந்தலைவராக விளங்கியவர். அவர், முஸ்லிம்கள் ஃபிரான்சைக் கைப்பற்ற முயன்றபோது, 732 ஆம் ஆண்டில் டூர்ஸ் (Tours) என்னுமிடத்தில் நடந்த சண்டையில் அவர்களை முறியடித்தார். 751 ஆம் ஆண்டில் ஜெர்மானிய இனக் குழுவினரின் அரசராக பெப்பின் அறிவிக்கப்பட்டார். அத்துடன், வலுவிழந்து கொண்டிருந்த பண்டைய ஃபிரான்ஸ் ஜெர்மானியப் பரப்பாண்ட குடிவழி அரசர்களின் (Merovingian) ஆட்சி முடிவுற்று, சார்லிய பேரரசரின் பெயரால் இன்று வழங்கப்படும் இரண்டாவது ஃபிரெஞ்சு மரபினரின் (Carolingian) புதிய ஆட்சி தொடங்கியது. 768 ஆம் ஆண்டில் பெப்பின் காலமானதும், அவருடைய அரசு, சார்லசுக்கும் அவருடைய சகோதரன் சார்லோமானுக்குமிடையே (Carloman) பகிர்ந்தளிக்கப்பட்டது. ஆனால், சார்லசின் நல்வினைப் பயனாக, 771 ஆம் ஆண்டில் சார்லோமான் திடீரெனக் காலமானார். இதன்பின் சார்லஸ் தமது 29 ஆம் ஆண்டில் நாடு முழுவதற்கும் தனி அரசரானார். இந்த நாடு, ஏற்கெனவே மேற்கு ஐரோப்பாவில் மிக வலிமை வாய்ந்த நாடாக உருவாகியிருந்தது.
சார்லஸ் ஆட்சி வந்தபோது, இவருடைய நாடு இன்றைய ஃபிரான்ஸ், பெல்ஜியம், சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளையும், இன்றைய ஹாலந்து, ஜெர்மனி ஆகிய நாடுகளின் கணிசமான பகுதிகளையும் உள்ளடக்கியிருந்தது. சார்லஸ் சிறிதும் காலம் தாழ்த்தாமல் தமது ஆட்சிப் பகுதியை விரிவுபடுத்துவதில் முனைந்தார். சார்லோமோனின் மனைவியும், மக்களும் வட இத்தாலியிலிருந்த லோம்பார்டு (Lompard) அரசரிடம் அடைக்கலம் புகுந்திருந்தனர். இதனால் ஆத்திரம் கொண்ட சார்லஸ், லோம்பார்டு அரசர் குடியைச் சேர்ந்த தம் மனைவி டெசிடெராட்டடாவை (Desiderata) மணவிலக்குச் செய்துவிட்டு, வட இத்தாலி மீது படையெடுத்துச் சென்றார். 774 ஆம் ஆண்டுவாக்கில் லோம்பார்டுகள் அடியோடு முறியடிக்கப் பட்டனர். தமது வெற்றியை நிலைப்படுத்துவதற்காக மேலும், நான்கு முறை படையெடுத்த பின்பு, வட இத்தாலி முழுவதையும் சார்லஸ் தம் ஆட்சியில் இணைத்துக் கொண்டார். சார்லோமானின் விதவையும், குழந்தைகளும், சார்லிமேனிடம் சிக்கினர். அதன்பின், அவர்களைப் பற்றிய தகவலே இல்லை.
வடக்கு ஜெர்மனியிலிருந்த சாக்னி என்ற ஒரு பெரிய மண்டலத்தை சார்லிமேன் வெற்றிக் கொண்டது மிக முக்கியமான - மிக - கடினமாக - ஒரு சாதனையாகும். இதற்கு அவர் 18 முறை படையெடுக்க வேண்டியிருந்தது. முதல் படையெடுப்பை 772 இல் மேற்கொண்டார். கடைசி படையெடுப்பு 804 ஆம் ஆண்டில் நடந்தது. சாக்சன்களுக்கு எதிரான இந்தப் போர்கள் இத்துணைள நீண்டகாலம் பெரும் இரத்தக்களரியோடு நடைபெற்றதற்கு சமயமும் ஒரு முக்கிய காரணமாகும். சாக்சன்கள் புறச் சமயச் சார்புடையவர்கள் (Pagans) தம்முடைய சாக்சன் குடிமக்கள் அனைவரும் கிறித்தவ சமயத்தைத் தழுவ வேண்டுமென்று சார்லிமேன் வற்புறுத்தினார். கிறித்தவர்களாக ஞானஸ்தானம் செய்து கொள்ள மறுத்தவர்களும், பின்னர், புறச் சமயத்திற்கு மாறியவர்களும் கொல்லப்பட்டனர். இந்தக் கட்டாய மத மாற்றத்தின்போது சாக்சனி மக்களில் ஏறத்தாழக் கால்பகுதியினர் கொல்லப்பட்டதாகக் கணக்கிடுவர்.
தெற்கு ஜெர்மனியிலும், தென்மேற்கு ஃபிரான்சிலும் தமது வெற்றிகளை வலுப்படுத்திக் கொள்வதற்காகவும், சார்லஸ் படையெடுப்புகளை மேற்கொண்டார். தம் பேரரசின் கிழக்கு எல்லைகளை வலுப்படுத்துவதற்காக, ஆவார்களுக்கு (Avars) எதிராக சார்லிமேன் பலமுறை போர் செய்தார். ஆவார்கள் என்பவர்கள் 4 ஆம் 5 ஆம் நூற்றாண்டுகளில் ஐரோப்பாவைப் படையெடுத்துக் கொள்ளையடிக்க ஹூணர்கள் (Hune) எனப்படும் ஆசிய நாடோடி இனத்தவர் ஆவர். இவர்கள், இன்றைய ஹங்கேரியையும், யூகோஸ்லாவியாவையும் சேர்ந்த ஒரு பெரும் பகுதியை ஆண்டு வந்தனர். இறுதியில், இந்த ஆவார்களின் படைகளை சார்லிமேன் முற்றிலுமாகத் தோற்கடித்தார். சாக்சனிக்குக் கிழக்கிலிருந்து பகுதிகளும் பவேரியாவும் சார்லிமேன் ஆதிக்கத்திற்கு உட்படவில்லையெனினும் ஒரு விரிந்த பரப்பில் அவருடைய ஆட்சி நிறுவப் பெற்றது.
தம் ஆட்சிப் பரப்பின் தெற்கு எல்லையை வலுப்படுத்துவதற்கும் சார்லிமேன் முயன்றார். இதனால், 778 ஆம் ஆண்டில், ஸ்பெயின் மீது அவர் படையெடுத்தார். இந்தப் படையெடுப்பு வெற்றி பெறவில்லை. ஆயினும் வடக்கு ஸ்பெயினில் "ஸ்பானிய எல்லை நாடு" (Spanish March) என்னும் எல்லைப்புற நாட்டை நிறுவுவதில் வெற்றி கண்டார். அந்த நாடு, சார்லிமேனின் இறையாண்மையை (Soveregnty) ஏற்றுக் கொண்டது.
சார்லிமேன் தமது 45 ஆண்டு ஆட்சிக் காலத்தின்போது 54 படையெடுப்புகளை மேற்கொண்டார். தமது வெற்றிகரமான போர்களின் விளைவாக, தம் ஆட்சியின் கீழ் மேற்கு ஐரோப்பாவின் பெரும்பாலான பகுதிகளை ஒருங்கிணைப்பதில் அவர் வெற்றி கண்டார். அவரது ஆட்சி மாட்சிமையை எட்டியிருந்தபோது, இன்றை ஃபிரான்சின் பெரும்பகுதி, ஜெர்மனி, சுவிட்சர்லாந்து, ஆஸ்திரியா, கடல் மட்டத்திலும் தாழ்ந்த நிலமுடைய நெதர்லாந்து (Low Countries), இத்தாலியின் பெரும் பகுதி, பல்வேறு எல்லையோர நாடுகள் ஆகியவை அவரது பேரரசில் அடங்கியிருந்தன. ரோமானியப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பிறகு, ஐரோப்பாவின் இத்துணை பெருமளவுப் பகுதியை ஒரு தனிநாடு எப்போதும் ஆண்டதில்லை.
சார்லிமேன், தமது ஆட்சிக்காலம் முழுவதிலும், போப் பாண்டவருடன் நெருங்கிய அரசியல் நல்லுறவு கொண்டிருந்தார். எனினும், அவருடைய ஆயுட் காலத்திலேயே, இந்தக் கூட்டாண்மையில், போப் பாண்டவரைவிட சார்லிமேன் தான் முதன்மைக் கூட்டாளி என்பது தெளிவாகியது.
சார்லிமேன் ஆட்சி காலத்திலேயே முக்கியமான நிகழ்ச்சி, 800 ஆம் ஆண்டில், கிறிஸ்துமஸ் நாளன்று ரோம் நகரில் நிகழ்ந்தது. அன்று, போப்பாண்டவர்மூன்றாம் லியோ (Pope Leo III) ஒரு மணிமுடியை (Crown) சார்லசின் தலையில் சூட்டி, அவரை ரோமானியர்களின் பேரரசராகப் பிரகடனம் செய்தார். இது மூன்று நூற்றாண்டுகளுக்கு முன்னர் வீழ்ச்சியுற்ற மேற்கு ரோமானியப் பேரரசு மீண்டும் உயிர்பிக்கப் பட்டிருக்கிறது என்பதையும், அதற்கு அகஸ்டஸ் சீசரின் நேர் உரிமைப்படியான மரபுரிமையாளராக (Right Successor) சார்லிமேன் ஆகிறார் என்பதையும் குறித்தது.
ஆனால், உண்மையில், சார்லிமேனின் பேரரசை, ரோமானியப் பேரரசின் மறு உருவாக்கம் (Restoration) எனக் கூறுவது நகைப்பிற்குரியதாகும். ஏனெனில் முதலில் இரு பேரரசுகளும் ஆட்சி புரிந்த நிலப்பிரபுக்கள் முற்றிலும் வேறானவை. சார்லிமேனின் பேரரசு மிகப் பெரிதாக இருந்தபோதிலும், அது மேற்கு ரோமானியப் பேரரசின் நிலப்பகுதியில் பாதியை மட்டுமே உள்ளடக்கியிருந்தது. இரு பேரரசுகளிலும் அடங்கியிருந்த பொதுவான பகுதிகள் பெல்ஜியம், ஃபிரான்ஸ், சுவிட்சர்லாந்து வடக்கு இத்தாலி ஆகியவை மட்டுமே. ஆனால், ரோமானியப் பேரரசின் ஆளுகைக்குட்பட்டிருந்த இங்கிலாந்து, ஸ்பெனின், தெற்கு இத்தாலி, வட ஆஃப்ரிக்கா ஆகியவை சார்லிமேனின் ஆட்சியில் அடங்கியிருக்கவில்லை. இரண்டாவதாக, எந்த வகையில் பார்த்தாலும், கண்ணோட்டத்தாலும், பண்பாட்டாலும் அவர் முற்றிலும் வேறு இனத்தவர். அவர் டியூட்டானியர் (Teutonic) என்ற ஜெர்மன் இனவழியைச் சேர்ந்தவர். இவருடைய தாய்மொழி ஒரு ஜெர்மானிய கிளை மொழியாகும். அவர் பின்னர் லத்தீன் மொழியைப் பேசக் கற்றுக் கொண்டார். சார்லிமேன் தம் வாழ்நாளின் பெரும்பாலான காலத்தில் வடக்கு ஐரோப்பாவில்-முக்கியமான ஜெர்மானியில்-வாழ்ந்தார். நான்கு தடவைகள் மட்டுமே அவர் இத்தாலிக்குச் சென்று வந்தார். அவருடைய தலைநகர் ரோம் அன்று; இன்றைய மேற்கு ஜெர்மனியிலுள்ளதும், டச்சு, பெல்ஜியம் எல்லைகளுக்கு மிக அருகிலிருந்ததுமான ஆக்கன் நகரைத்தான் அவர் தம் தலைநகராகக் கொண்டிருந்தார்.
சார்லிமேனுக்குப் பெரும்புகழ் தேடித் தந்திருந்த அவரது அரசியல் கூர்மதி, அவருக்குப்பின் பட்டத்து அரசரை நியமிப்பதில் படுதோல்வியடைந்து விட்டது. மேற்கு ஐரோப்பாவின் பெரும்பகுதியை ஒருங்கிணைப்பதற்கான போர்களிலேயே அவர் தம் வாழ்நாளின் முக்கிய பகுதியைச் செலவிட்டிருந்தபோதிலும் தமது மரணத்திற்குப் பிறகு தம் பேரரசைத் தம்முடைய மூன்று புதல்வர்களுக்கும் பகிர்ந்தளிக்க வேண்டும் என்ற திட்டத்தை விட வேறு மதிநுட்பம் வாய்ந்த திட்டத்தைச் சிந்திக்க அவரால் இயலாமற் போயிற்று. இத்தகைய திட்டம், பதவிப் போரை நிச்சயமாகத் தூண்டிவிடும் ஒரு தவறான செயல்முறையாகும். எனினும், சார்லிமேன் இறப்பதற்கு முன்னரே, மூத்த புதல்வர்கள் இருவரும் காலமாகிவிட்டனர். அவரது மூன்றாவது மகன் "கடவுட்பற்றார்வலர்" லூயி (Louis the Pious) சார்லிமேன் 84 ஆம் ஆண்டில் இறந்ததும், அவரது பேரரசு முழுவதற்கும் பேரரசரானார். ஆனால் அரசுரிமை குறித்துத் தம் தந்தை செய்த அதே தவற்றையே லூயியும் செய்தார். அவரும், தம் பேரரசைத் தம்முடைய புதல்வர்களிடையே பகிர்ந்தளிக்க விரும்பினார். லூயியின் புதல்வர்கள் முடியுரிமைக்காகச் சிறிது காலம் தங்களுக்குள் போரிட்டார்கள். பிறகு, அவர்களிடையே 'வெர்தன் உடன்படிக்கை' (843இல்) ஏற்பட்டது. இதன்படி, சார்லிமேன் பேரரசு மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டன; முதற்பகுதி, இன்றைய ஃபிரான்சின் பெரும்பகுதியைக் கொண்டிருந்தது. இரண்டாம் பகுதியில் ஜெர்மனியின் பெரும்பகுதி அடங்கியிருந்தது. மூன்றாம் பகுதி, வட இத்தாலியையும், ஃபிரெஞ்சு ஜெர்மன் எல்லையோர மிகுந்த ஓர் அகன்ற பரப்பையும் உள்ளடக்கியிருந்தது.
சார்லிமேனுடைய செல்வாக்கை நான் கணித்துள்ளதை விட மிக உயர்வாக மதிப்பிடுபவர்கள் சிலர் உண்டு. "அவர் ரோமானியைப் பேரரசுக்குப் புத்துருக் கொடுத்தார்; மேற்கு ஐரோப்பாவை ஒருங்கிணைத்தார்; சாக்சானியை மேற்கு ஐரோப்பாவிற்குள் கொண்டு வந்தார்; மேற்கு ஐரோப்பாவின் பிந்திய வரலாற்றின் பெரும்பகுதியை நெறிப்படுத்தினார்; அயல்நாட்டு அச்சுறுத்தல்களிலிருந்து மேற்கு ஐரோப்பாவுக்குப் பாதுகாப்பு ஏற்படுத்தினார்; ஃபிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி ஆகியவற்றின் எல்லைகளை ஏறத்தாழ வரையறுத்தார்; கிறிஸ்துவ சமயத்தைப் பரப்பினார்; ஐரோப்பாவில் அரசுக்கும் திருச்சபைப்ழுமிடையிலான பல நூற்றாண்டுக் காலப் போராட்டத்தைத் தொடங்கி வைத்தார்" என்ற கூறுவர். ஆனால், இந்த வாதங்கள் அனைத்தும் மிகைப்படக் கூறுவதாகும் என நான் கருதுகிறேன். ஏனெனில், முதலில் "புனித ரோமானியப் பேரரசு" எனக் கூறப்படுவது உண்மையில் ரோமானியப் பேரரசு புத்துருவாக்கம் அன்று. மாறாக, சார்லிமேன் மரபுரிமையாகப் பெற்ற ஜெர்மானிய இனக் குழுவினர் அரசின் (Frankish Kingdom) ஒரு தொடர்ச்சியேயாகும்.
மேற்கு ஐரோப்பாவில் சார்லிமேன் ஏற்படுத்திய ஒற்றுமையை அவர் நிலைபெறச் செய்திருப்பாராயின் அந்த ஒற்றுமை உண்மையிலேயே பெருஞ்சாதனையாக அமைந்திருக்கும். ஆனால், சார்லிமேன் இறந்த 30 ஆண்டுகளுக்குள்ளேயே அவரது பேரரசு உடைந்து சிதறுண்டது. அதன்பின் ஒரு போதும் அந்த ஒற்றுமை மீட்கப்படவில்லை.
ஃபிரான்சு, ஜெர்மனி, இத்தாலி ஆகிய நாடுகளின் இன்றைய எல்லைகளுக்கு சார்லிமேனோ, அவருக்குப் பின் அரச பதவிக்கு வந்த லூயியோ உண்மையில் காரணமன்று. இத்தாலியின் வடக்கு எல்லை பெரும்பாலும் ஆல்ப்ஸ் மலைத் தொடரின் இறய்கையமைப்பை அடியொற்றி அமைந்திருக்கிறது. ஃபிரான்ஸ், ஜெர்மன் எல்லை ஏறத்தாழ மொழி வழி எல்லையாக அமைந்துள்ளது. இந்த எல்லை, பழைய ரோமான
No comments:
Post a Comment