Monday, September 7, 2009

நேத்து சீன டி.வியில் கீழ் கோர்ட்டில் நடந்த ஒரு வழக்கு பற்றிய நிகழ்ச்சி.

நேத்து சீன டி.வியில் கீழ் கோர்ட்டில் நடந்த ஒரு வழக்கு பற்றிய நிகழ்ச்சி.

வழக்கு:

A,B 18வயது [மேஜர்] நிரம்பிய நண்பர்கள்
X,Y 17வயதான [மைனர்] நண்பர்கள்.

A மோட்டார் சைக்கிளின் சொந்தக்காரர்.

ஒரு நாள் X,Y ஒரு நண்பரின் பிறந்தநாள் பார்டியை ஒயினுடன் முடித்து விட்டு
வேறு ஒரு நண்பனை சந்திக்க செல்ல Bயிடம் மோட்டார் சைக்கிளை கேட்டுள்ளனர்.

B தன் நண்பனான Aயிடமிருந்து மோட்டார் சைக்கிளை வாங்கி Xயிடம் கொடுத்துள்ளார்.
Bக்கு X,Y மைனர் என்பது தெரியும்.

X வண்டியை ஒட்ட Y பின்னே அமர, இருவரும் ஹெல்மட் அணியாமல் மோட்டார் சைக்கிளை
வேகமாக ஓட்டி கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகி மருத்துவமனையில் இறந்துள்ளனர்.

இப்ப Yன் ரிடையர்ட் ஆன பெற்றோர் நீதிமன்றத்தில் Xக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளனர்,
X வண்டியை ஓட்டி கட்டுப்பாட்டை இழந்ததால் தான் தங்கள் ஒரே மகன் கொல்லப்பட்டுவிட்டான்.
17வருடங்கள் அவனுக்காக உழைத்து , அவன் எங்களை காப்பாற்றுவான் என நம்பி அவன் படிப்புக்காக சொத்தை எல்லாம் விற்று பல லகரங்கள் செலவு செய்துள்ளோம். இப்பொழுது எல்லாமே இழந்து விட்டு நிற்கிறோம்.
எனவே X குடும்பத்தார் தங்களுக்கு நஷ்ட ஈடாக 50ல தரவேண்டும்னு கேட்டு வழக்கு தொடர்ந்திட்டாங்க.



.............சீன கீழ் கோர்ட் அளித்த தீர்ப்பு........
ஆவணங்கள் / சாட்சிகள் எல்லாம் சரி பார்த்து விட்டு.. 50லகரங்கள் நஷ்ட ஈடாக தரலாம் என எடுத்துக்கொண்டது.

இதில் மைனர் டிரைவர் என தெரிந்தும் பின்னால் அமர்ந்து பயணம் செய்த்து Yன் தவறு எனவே அவர் 20% நஷ்டத்தை
ஏற்க வேண்டும் எனவும்.

மைனர் டிரைவர் குடித்து விட்டிருக்கிறான் என தெரிந்தும் அவனுக்கு வண்டி கொடுத்தது Bன் தவறு எனவே அவர் 5% நஷ்டத்தை ஏற்க வேண்டும்.

தான் மைனர் என தெரிந்தும், குடித்து விட்டு வண்டி ஓட்டுவது தவறு என தெரிந்தும், வண்டியில் Yயை அமரவைத்தது
X ன் தவறு எனவே அவர் 75% நஷ்டத்தை ஏற்கவேண்டும்.

A வண்டி ஓனருக்கு எந்த சம்மந்தமும் இல்லை என விடுவிக்கப்பட்டார்.
..................................................


.........நம்ப ஊர் சட்டப்படி இந்த வழக்கில் யார் யாருக்கு என்ன தண்டனை கொடுக்கப்படும்...? Yன் பெற்றோர் கேட்பது ஞாயமா ?



~காமேஷ்~

No comments: