Wednesday, June 13, 2012

सत्यमेव जयते – SATYAMEV JEYATE – வாய்மையே வெல்லும் - அமீர்கான்!



'வாய்மையே வெல்லும்' என்ற பொருள் பொதிந்த இந்த 'சத்யமேவ ஜயதே' என்ற தொலைக்காட்சித் தொடர் பலரையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. வெகுஜன ஊடகங்களில் தொலைக்காட்சியின் தாக்கத்தை நாம் அவ்வளவாக ஒதுக்கி விட முடியாது. பொழுது போக்கு சாதனங்கள் மூலமாகவும் சில நல்லவைகளை நடத்திக் காட்ட முடியும் என்பதற்கு உதாரணமாக இந்த நிகழ்ச்சி அமைந்துள்ளது. திரைப்படங்கள் மூலம் பல தேச பக்தி படங்களை எடுத்து வரும் அமீர்கான் தொலைக்காட்சியிலும் தனது முத்திரையை இந்த நிகழ்ச்சியின் மூலம் பதித்துள்ளார். இந்த தொடரில் ஒரு பிரிவாக வரும் குழந்தைகள் பாலியல் முறைகேட்டைப் பற்றிய தொடரைப் பற்றி சிறிது அலசுவோம்.

நாம் நமது குடும்பத்தில் நமது குழந்தைகளுக்கு உடை, படிப்பு, விளையாட்டு போன்ற அனைத்திலும் எந்த குறையையும் வைப்பதில்லை. அந்த குழந்தை மனரீதியாக சந்தோஷமாக இருக்கிறதா? அது பாதுகாப்பாக இருக்கிறதா என்று நாம் என்றாவது சிந்தித்திருக்கிறோமா? என்றால் இல்லை என்ற பதிலே பலரிடத்திலிருந்தும் வரும்.

அமீர்கான்: இங்கு வந்திருப்பவர்களில் தங்களின் கருத்தைக் கூறலாம். குழந்தைகள் வலுக்கட்டாயமாக சமூகத்தில் பாலியல் தொந்தரவுக்கு எத்தனை சதவீதம் உள்ளாக்கப்படுகிறார்கள்?

பார்வையாளர் 1: இரண்டு சதவீதம்

பார்வையாளர் 2: பத்து சதவீதம்

பார்வையாளர் 3: நான்கிலிருந்து ஐந்து சதவீதம்

அமீர்கான்: நான் சொல்லும் தற்போதய உண்மை நிலவரம் என்னையும் உங்களையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கும். 53 சதவீத குழந்தைகள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுவதாக அறிக்கை கூறுகிறது. இதில் பலாத்காரமாக குழந்தைகளை பாலியல் தொல்லைக்கு ஆளாக்குதல்: அவர்களை கண்ட இடங்களில் முத்தமிடுதல்: அவர்களின் உடைகளை களைதல் என்று இந்த தொல்லைகள் நீள்கிறது. ஆனால் பெற்றோர்களான நாம் நமது குழந்தை எந்த பிரச்னையும் இல்லாமல் சந்தோஷமாக இருப்பதாக நினைக்கிறோம். சில பேர் நினைப்பது போல் குழந்தைகள் வீட்டில் சந்தோஷமாகவும் பாதுகாப்பாகவும் இருப்பதாக பலரும் நம்பிக் கொண்டிருக்கிறோம். அது எந்த அளவு தவறான வாதம் என்பதை விளக்குவதற்காக உத்தர பிரசேத்தைச் சேர்ந்த அனாமிகாவை அழைக்கிறேன்.

(அனாமிகா வந்து அமர்கிறார். தனது அனுபவத்தைக் கூற ஆரம்பிக்கிறார்.)

அனாமிகா: எனக்கு ஆறு வயதாக இருக்கும் போது எனது படிப்பில் அதிக ஆர்வம் எடுத்துக் கொண்ட எனது பெற்றோர் எனக்கு ஒரு டியூஷன் வாத்தியாரை ஏற்பாடு செய்தனர். எனது அறைக்கு ஆசிரியர் வந்தவுடன் அறையின் கதவை எனது தாயார் சாத்திவிட்டு சென்று விடுவார். குழந்தைக்கு படிப்பு நன்றாக வரட்டும் என்று. ஆனால் அந்த ஆசிரியரோ என்னை பாலியல் தொல்லைக்கு ஆளாக்கினார். இது தொடர்கதையாகவே எனக்கு வாழ்க்கையே சில சமயம் வெறுத்தது. நான் எதற்கும் லாயக்கில்லாதவள் என்று எண்ணத் தொடங்கினேன். என் குடும்பத்தாரிடம் அந்த ஆசிரியர் மிகுந்த நம்பிக்கையை வளர்த்து வைத்திருந்தார். இது பற்றி எனது பெற்றோரிடம் சொன்னால் அது எனக்கு எதிராக திரும்பி விடுமோ என்று பயந்தேன். ஏழு வருடம் இந்த நரக வேதனையை படிப்பு என்ற போர்வையின் மூலம் அனுபவித்தேன்.

அமீர்கான்: தோழர்களே! நாம் நினைக்கிறோம் நமது குழந்தை வீட்டில் பாதுகாப்பாக இருக்கிறது என்று. இது சிலர் மேல் வைத்த அதீத நம்பிக்கையினால் நிகழ்ந்த தவறு. ஆசிரியர்களை நாம் அந்த அளவு மதிக்கிறோம். ஆனால் உண்மையோ வேறு விதமாக இருக்கிறது.

(நம் தமிழகத்தில் கூட மாதா, பிதா, குரு, தெய்வம்: என்று வரிசைப் படுத்தி தெய்வத்தை கடைசியில் கொண்டு வைத்து விட்டோம். ஆனால் உண்மை நிகழ்வு என்ன? வாத்தியாரும் ஒரு மனிதர்தான். ஒரு பெண்ணை தனியாக அறையில் பார்க்கும் போது 'நான் ஒரு ஆண்: நீ ஒரு பெண்' என்ற உறவு மேலோங்கி 'ஆசிரியர், மாணவி' என்ற உறவு பின்னுக்குத் தள்ளப்படுகிறது. எல்லோரும் வந்து போகும் ஹாலில் தனது மகளுக்கு டியூஷன் ஏற்பாடு செய்திருந்தால் இந்த தவறு நடக்க வாய்ப்பு ஏற்பட்டிருக்குமா? வயது வந்த குழந்தைக்கு டியூஷன் எடுக்க பெண் ஆசிரியைகள் யாரும் கிடைக்கவில்லையா? எனவே இங்கு தவறு செய்தது பெற்றோர்களே என்பேன்.)

தனது சொந்தங்களில் ஒருவரால் சீரழிக்கப்பட்டதை சொல்ல வருகிறார் சஞசய்லா:

சஞ்சய்லா: படிப்பு, விளையாட்டு என்று அனைத்திலும் முதலிடத்தில் வருவேன். சங்கீதமும் வரும். எனது பாடலை நானே ரெகார்ட் செய்து ரசித்து மகிழ்வேன். பம்பாய் எங்களது சொந்த ஊர்.எனது அண்ணன் அமெரிக்காவில் மேல் படிப்பு படிக்கிறார். அம்மா இறந்து விட்டார். எனது குடும்பத்தில் பல உறவினர்களும் சகஜமாக வந்து போவர். எனது அப்பாவுக்கு டயாலஸிஸ் பண்ண அடிக்கடி மருத்துவமனை செல்லும் போது நான் சில நேரம் வீட்டில் தனியாக இருக்கும் சூழல் ஏற்படும். இதை நோட்டமிட்ட எனது தாத்தா வயமையொத்த ஒருவர் நான் தனியாக வீட்டில் இருக்கும் போது என்னோடு தகாத முறையில் நடந்து கொண்டார். அப்போது எனக்கு 11 அல்லது 12 வயதிருக்கும். இதை நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை. எனது அம்மா அவரை 'அப்பா..அப்பா' என்றுதான் அழைப்பார். அந்த அளவு குடும்பத்தில் சிறந்த இடத்தை பிடித்த இவர் நடந்து கொண்டவிதம் என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. எனது குடும்பத்தினர் குடும்ப நிகழ்ச்சி எதையுமே இவரைக் கேட்டுத்தான் செய்வது வழக்கம். அந்த அளவு நம்பிக்கையை பெற்றிருந்தார். சில நேரம் அவர் வீட்டிற்குள் வந்தாலே நான் எங்காவது ஓடி விடுவேன். சில நேரங்களில் தனிமையில் அமர்ந்து நிறைய அழுதிருக்கிறேன். இப்பொழுதும் கூட எதுவும் நடவாததது போல் வீட்டுக்கு வந்து கொண்டுதானிருக்கிறார்.

அமீர்கான்: இது பற்றி உங்கள் பெற்றோரிடம் எப்போது சொன்னீர்கள்?

சஞசய்லா: நான்கு வருடங்கள் முன்பு. 'இதைப் பற்றி ஏன் நீ முன்பே சொல்லவில்லை' என்று அப்பா கடிந்து கொண்டார். என் அப்பா மீது எந்தக் குறையும் இல்லை. இப்படி ஒரு மிருகம் இவருக்குள் இருப்பது அவருக்கு எப்படித் தெரியும்? இதை எல்லாம் அப்போதே சொன்னால் டயாலஸிஸூக்கு அப்பா போவது தடை படுமோ என்றும் பயந்தேன். இன்று வரை அந்த சம்பவங்களை நினைத்து அழுகாத நாட்கள் இல்லை. கோபம் அவர் மேல் வந்தும் என்னால் ஒன்றும் செய்ய முடியாத நிலை.

அமீர்கான்: இது போன்ற சம்பவங்கள் யாருக்கும் நடந்தால் அவர்கள் வெட்கப்படக் கூடாது. இதில் உங்கள் தவறு எதுவும் இல்லை. உங்களுக்கு வெட்கம் வருவதை விட அந்த அரக்கர்களுக்கு வெட்கம் வரும்படி உங்களின் செய்கைகள் அமைய வேண்டும்.

சஞசய்லா: நான் எழுதுவதில் ஆர்வம் உடையவள். அதை பாடலாகவும் வடித்திருக்கிறேன்.

அமீர்கான்: கொஞ்சம் பாடிக் காட்ட முடியுமா?

(பாடுகிறார். தனது சிறு வயதில் இவரது இயலாமையை பயன்படுத்தி தான் துன்பப்பட்டதை பாடலாக வடிக்கிறார்.)

அமீர்கான்: இவ்வளவு ஓபனாக பேசுகிறீர்கள்: இன்னும் திருமணமும் ஆகவில்லை. இது உங்களின் வாழ்க்கையை பாதிக்காதா?

சஞ்சய்லா: இத்தனை நடந்தாலும் இது எனது விருப்பத்தில் நடந்ததல்லவே. எனது சகோதரிகள் யாரும் என்னைப் போல் பாதித்து விடக் கூடாது என்பதற்காகத்தான் இந்த நிகழ்ச்சிக்கே வந்தேன். இதை எல்லாம் உணர்ந்து என்னை எவராவது திருமணம் செய்து கொள்ள விரும்பி வந்தால் ஏற்றுக் கொள்வேன்.

அமீர்கான்: கண்டிப்பாக உங்களுக்கு நல்ல வாழ்க்கை அமையும். பல குடும்பத்து குழந்தைகள் உங்களால் விழிப்புணர்வு பெறுவார்கள். வாழ்த்துக்கள்.

(கரகோசம். அடுத்து வருகிறார் ஹரீஸ்)

ஹரீஸ்: மும்பையில் வசிக்கிறேன். கூட்டுக் குடும்பம். எனது தாய் வழி உறவினர் ஒருவரால் நான் சீரழிக்கப்பட்டேன். அவர் மட்டும் அல்ல. அவரது நண்பர்களையும் அழைத்து வருவார். சில நேரங்களில் இது ஓவராகப் போய் மலத் துவாரத்தின் வழியாக ரத்தம் வர ஆரம்பித்தது. அம்மா அப்பாவிடம் சொன்னால் கொன்று விடுவேன் என்று சொன்னார். நீ சொன்ன ஆளையும் கொன்று விடுவேன் என்று மிரட்டினார். ஒரு முறை தைரியத்தை வரவழைத்துக் கொண்டு என் அம்மாவிடம் ரத்தம் வருகிறது என்று கூறினேன். உறவினர் தவறாக நடந்து கொள்வதைப் பற்றியும் கூறினேன். அதற்கு அம்மா 'இப்படி எல்லாம் தவறாக பேசக் கூடாது. மாம்பழம் அதிகம் சாப்பிடாதே! அதனால்தான் ரத்தம் வருகிறது' என்று என்னை அம்மா சமாதானப்படுத்தினார். இந்த தொல்லைகள் எனக்கு ஏழு வயதிலிருந்து 18 வயது வரை தொடர்ந்தது.

ஒரு முறை எனது அறைக்குள் அந்த ஆள் அதற்காக நுழைந்த போது வேகமாக கத்தினேன். காலால் உதைத்தேன். அன்றிலிருந்து இந்த நரக வேதனையிலிருந்து விடுதலை பெற்றேன். இந்த தைரியம் எனக்கு வருவதற்கு 11 வருடம் பிடித்தது.

அமீர்கான்: நண்பர்களே! யாருக்கும் இது போன்ற தொந்தரவு எற்பட்டால் பயப்படாது சத்தம் போடுங்கள்.எதிர்த்து சண்டையிடுங்கள். ஹரீஸின் தாயாரும் இங்கு வந்திருக்கிறார். அவரையும் அழைப்போம்.

ஹரீஸின் தாயார்: என் மகன் கூறும் போது அதிர்ச்சியடைந்தேன். என் தங்கையின் குடும்ப உறவு பாதிக்கப்படுமோ என்று பயந்தேன். அன்று என் மகன் சொன்னதை நம்பவில்லை. அது என் தவறு. உங்கள் குழந்தை இது போன்று ஏதாவது ஒரு செய்தியைக் கொண்டு வந்தால் அவர்கள் சொல்வதை நம்புங்கள்.அவனது சூழ்நிலையை மாற்றுங்கள். நான் செய்த தவறைப் போல வேறு எந்தப் பெற்றோரும் செய்து விட வேண்டாம்.

அமீர்கான்: பத்மாஜி சொன்னதை ஒவ்வொரு பெற்றோரும் கடை பிடிப்போம். குழந்தைகள் இது போன்று வித்தியாசமாக ஏதேனும் செய்திகளைக் கொண்டு வந்தால் நம்புவோம்.

(பத்மாஜி செல்கிறார் மனநல மருத்துவர் ரஜப் மித்ரா வந்தமர்கிறார்)

அமீர்கான்: டாக்டர்! இது போன்று குழந்தைகளை இம்சைபடுத்தும் நபர்களை எவ்வாறு கண்டறிவது?

ரஜப் மித்ரா: கண்டுபிடிப்பது சிரமம். யாரையும் இவர்தான் என்று குறிப்பாக சொல்வது சிரமம். சந்தர்ப்பம் கிடைத்தால் இந்த விஷயத்தில் எவரையும் நம்ப முடியாது. பெரியவர்களுக்கு மரியாதை தர வேண்டும் என்று குழந்தைகளுக்கு நாம் கற்றுக் கொடுக்கிறோம். இது தவறு. வயதானாலும் நல்ல குணமுள்ள நல்ல பழக்கமுள்ள பெரியவர்களையே மதிக்க வேண்டும். என்ற பாடத்தை நாம் பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும். ஒரு தாத்தா தனது பேத்தியிடம் தவறாக நடந்து கொண்ட கேஸ் கூட எங்களிடம் வந்திருக்கிறது. எனவே இந்த விஷயத்தில் நாம் வெகு ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.

சமூக சேவகி அனுஜா குப்தா: குழந்தை பேசாது: தனக்கு என்ன நடக்கிறது என்பதை புரியாத போது எவ்வாறு தனது பெற்றோரிடம் வந்து புகார் கொடுக்கும்? எனவே பெற்றோரான நாம் தான் குழந்தைகளை யாரிடம் நம்பி விடுவது? எந்த சூழ்நிலையில் விடுவது? என்பதை தீர்மானிக்க வேண்டும். 1098 என்ற நம்பருக்கு போன் செய்தால் அரை மணி நேரத்தில் நாங்கள் குறிப்பிட்ட இடத்தில் வந்து குழந்தைகளுக்கு உதவ தயாராக இருக்கிறோம். எனவே பாதிக்கப்படும் எவரும் எங்களை தொடர்பு கொள்ளலாம்.

நிகழ்ச்சியின் முடிவில் குழந்தைகளுக்கு சில தற்காப்பு கலைகளையும் அமீர்கான் கற்றுக் கொடுக்கிறார். வேறு சிலரின் பேட்டிகளோடு நிகழ்ச்சி இனிதே நிறைவுறுகிறது.

எனது கருத்து: ஆண்களையும் பெண்களையும் ஒன்றாக படிக்க வைப்பது: ஒன்றாக வேலை செய்ய அனுமதிப்பது என்ற காரணங்கள் கூட இது போன்ற தவறுகள் நடக்க காரணமாகி விடுகின்றது. வயது வந்த பெண்ணுக்கு டியூஷன் எடுக்க பெண் ஆசிரியைகள் கிடைக்க மாட்டார்களா? வயது வந்த ஆணையும், வயது வந்த பெண்ணையும் பல வருடங்கள் தனி அறையில் பாடம் எடுக்க அந்த பெற்றோர் எப்படி சம்மதித்தனர்? உறவினர்கள் என்று மாமா சித்தபபன் பெரியப்பன் ஒன்று விட்ட உறவுகள் என்று சகஜமாக குடும்பத்தில் பழக விடுகிறோம். இரவில் படுக்கையையும் சில இடங்களில் ஒன்றாக்குகிறோம். இதெல்லாம் தவறுகள் நடக்க நாமே வாசல்களை திறந்து விடுகிறோம். பெண் உரிமை என்று பேசக் க�

No comments: