Chinese health secret
வாழ்நாளை உயர்த்தும் உணவுப் பழக்கங்கள் சீனர்களின் ஆரோக்கிய இரகசியம் –
உலகின் மிகச் சிறந்த உணவாக சீன உணவே போற்றப்படுகிறது. இந்த உணவு முறையைப் பின்பற்றினால் நீண்ட நாள் வாழலாம். குறிப்பாக 1. கொழுத்த சரீரம் உருவாகாது. 2. இதய நோய்களுக்கான அறிகுறியே காணப்படாது.
இந்த இரண்டு தன்மைகளும் ஒருவரிடம் தொடர்ந்து இருந்தால் அவர் ஆரோக்கியமாக வாழலாம். ஆரோக்கியம் தொடர்வதால் வாழ்நாளும் நீடிக்கிறது. பிறநோய்கள் இருந்தாலும் எளிதில் அவற்றைக் குணப்படுத்தலாம்.
ஹாங்காங்கின் சீனப்பல்கலைக் கழகப் பேராசிரியர் டாக்டர் ஊகாம்ஸாங் (Woo-Kam-Sang) என்பவர் தனது ஆய்வின் மூலம் இந்த உண்மையைக் கண்டுபிடித்துள்ளார்.
சரி. சீனர்கள் அப்படி என்னதான் சாப்பிடுகிறார்கள்?
பால் சேர்க்காத கிரீன் டீ யை நாலைந்து தடவை தினமும் அருந்துகின்றனர். நீராவியில் வேகவைத்த காய்கறிகள் மற்றும் சில நேரங்களில் காய்கறிகளை சிறிய அளவில் எண்ணெயில் வறுத்தும் சாப்பிடுகின்றனர்.
சோயா பீன்ஸ், தயிரையும் நிறையச் சேர்த்துக் கொள்கின்றனர்.
மேற்கத்திய பாணி உணவு முறையில் அவ்வப்போது கோழி வறுவல் அல்லது மீன் வறுவல் ஒன்றிரண்டு துண்டுகள் மட்டும் சாப்பிடுகின்றனர்.
காலையில் முட்டை ஆம்லட் அல்லது கொத்துக்கறி சேர்த்துக் கொள்கின்றனர். இதில், இஞ்சி, வெள்ளைப் பூண்டு உட்பட மசாலா வகைகள் சேர்த்துவிடுகின்றனர். இதுவே காலை நேரத்திற்கும் பகல் உணவிற்கும் எற்ற ஒரே உணவாகும்.
மற்ற நேரமெல்லாம் நீராவியில் வேகவைத்த காய்கறிகளுடன் சோயா மற்றும தயிர் சேர்த்த சாதம் ஒரு முறையும், பச்சையான காய்கறிகளை ஒரு முறையும் சாப்பிடுகின்றனர்.
இவர்கள் அடிக்கடி விரும்பியும் போற்றியும் குடிப்பது கிரீன் டீதான். இது முதுமை அடைவதை தடுக்கும் தேநீர். மேலும் இந்தத் தேநீரில் இளமையை நீடிப்பதுடன் இதயத்துக்குப் பாதுகாப்பையும் வழங்கும் பாலிபெனால் என்ற சத்துப் பொருள் இருக்கிறது.
மேற்கண்ட அனைத்து உண்மைகளும் உலகிலேயே இதய நோயாளிகள் மிகவும் குறைவான எண்ணிக்கையில் உள்ள பான்யு என்ற சீனக்கிராம மக்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களாகும். சீனாவின் குவாங்டங் மாகாணத்தில் இந்தக் கிராமம் இருக்கிறது.
சீனர்கள் ஹாங்காங், சிட்னி, சான்பிரான்ஸிஸ்கோ ஆகிய நகர்களில் பெருமளவில் வாழ்கின்றனர். பத்து ஆண்டுகள் மேற்கத்திய உணவுமுறைகளைப் பின்பற்றிய சீனர்களை அல்ட்ரா சவுண்டு மூலம் பரிசோதித்ததில் இவர்களின் இரத்தக்குழாய்களில் 5 இல் ஒரு பங்கு என்ற விதத்தில் தடிப்பாகிவிட்டது தெரிந்தது. எனவே, இவர்கள் இதயநோய் அபாயத்தில் உள்ளனர்.
வெளிநாடு சென்று கடந்த பத்தாண்டுகளுக்குப்பிறகு சீனா திரும்பிய 417 பேர் இதய நோய் அபாயத்தில் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.
இதே டாக்டர் ஊ சீனர்களின் மெயின்லாண்ட் பகுதி மக்கள் தாங்கள் சாப்பிடும் உணவில் பாதி இறைச்சியாகவும், மிகச்சிறிய அளவிலேயே பால் சம்பந்தப்பட்ட பொருட்கள் சாப்பிடுவதையும் கண்டு பிடித்துள்ளார்.
“சீனர்கள் தங்களின் மரபு வழி உணவுத் திட்டத்தையே பின்பற்ற வேண்டும். சோயா தயிரில் உள்ள லெசித்தின் என்னும் நார்ப்பொருள் உடலில் கொழுப்பு சேராமல் பார்த்துக் கொள்கிறது. இதனால் இதய நோய் அபாயம் இல்லை. உடலும் கொழுத்த சரீரமாக உருவாகாது” என்கிறார்.
ஹாங்காங்கில் வறுத்த கோழிக்கறி என்ற மேற்கத்திய உணவால் இங்குள்ள சீனர்கள் குண்டாக உள்ளனர். செல்வச் செழிப்பான சிங்கப்பூரில் வாழும் சீன இளைஞர்கள் 25 வயதுக்குள்ளேயே இரத்தக் கொதிப்பு, நீரிழிவு, இதய நோய்கள் அபாயத்தில் உள்ளனர் என்கிறார் டாக்டர் ஊ.
கிரீன் டீக்கும் நீராவியில் வேகவைத்த காய்கறிகளுக்கும் நீங்களும் முக்கியத்துவம் கொடுங்கள். உலகின் மிகச்சிறந்த இந்த உணவால் ஆரோக்கியம் தொடர்வது உறுதி. உலக சுகாதார நிறுவனம் சிபாரிசு செய்துள்ள உணவுமுறை இது என்பது குறிப்பிடத்தக்கது. இவை அனைத்தும் 2000ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்ட உண்மைகள்.
குளிர்ந்த நீரில் குளியுங்கள்!
இந்தக் கோளில் 70% தண்ணீர் தான் மூன்று பக்கமும் சுற்றிப் பரவியுள்ளது. அதே போல் மனித உடலும் 75% தண்ணீரால்தான் உருவாக்கப்பட்டுள்ளது. எனவே, தண்ணீர் வைத்தியம் என்பது சக்தி வாய்ந்த ஒன்றாகத் திகழ்கிறது. எனவே, உடலுக்கும் உள்ளத்திற்கும் சக்தி தேவை என்றால் குளிர்ந்த தண்ணீரில் குளியுங்கள்.
இதற்காகப் பத்து அங்குல ஆழமுள்ள தொட்டியில், 16 செல்சியஸ் மட்டுமே வெப்பம் உள்ள அதாவது ‘ஜில்’ தண்ணீர் நிரப்பிக் கொண்ட தொட்டிக்குள் உட்காருங்கள். ஒரு நிமிடம் தண்ணீருக்குள் முழு உடலும் இருக்கும் விதத்தில் மூழ்கிக் கொண்டு உடலை அங்கங்கே தேய்த்து விடவும். ஒரு நிமிடம் முதல் மூன்று நிமிடங்கள் வரை இப்படி குளிர்ந்த தண்ணீரில் சோப் இன்றித் தேய்த்துக் குளிக்கும்போது நிணநீர் மண்டலம் சுறுசுறுப்பாக இயங்கி உள்ளே உள்ள உறுப்புகளை சுத்தம் செய்துவிடுகிறது. இதனால் இதயமும் சுறுசுறுப்படைகிறது. குளித்ததும் உடலை நன்கு துடைத்துவிடுங்கள். இதனால் அடுத்த பல மணிநேரம் சுறுசுறுப்பாகப் பணிபுரியலாம். வெளியூர் சென்று திரும்பியதும் உடன் அலுவலகம் செல்ல வேண்டும் எனில் பிரிட்ஜில் உள்ள ஐஸ்கட்டிகளை தொட்டியில் போட்டு உடன் குளிர்ந்த நீராக மாற்றி இந்த சக்திக் குளியலை எடுக்கலாம்.
வாய் நாற்றமா?
தோலில் வறட்சி மற்றும் வாய் நாற்றம் உள்ளவர்கள் வாரத்திற்கு இரண்டு நாளாவது வெண்டைக்காய்ப் பச்சடியை உணவில் சேர்த்து வந்தால் நல்ல பலன்கள் கிட்டும். அமெரிக்கர்கள் தென்னாப்பிரிக்காவிலிருந்து வெண்டைக்காய்களை அதிகம் வரவழைத்துச் சாப்பிடுகின்றனர்.
web sources
Engr.Sulthan
__._,_.___
No comments:
Post a Comment