Wednesday, June 13, 2012

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.

சாதிவாரி கணக்கெடுப்பு தமிழகத்தில் துவங்கியபோது, ''இஸ்லாத்தில் சாதி இல்லை. எனவே எந்த பிரிவு பெயரையும் முஸ்லிம்கள் குறிப்பிட வேண்டாம் என்று நாம் எழுதினோம். நாம் மட்டுமன்றி, மவ்லவி சம்சுதீன் காஸிமி அவர்களும், தமிழ் மாநில தேசியலீக் தலைவர் ஜவஹர் அலி அவர்களும் இந்த கருத்தை வலியுறுத்தினார்கள். ஆனால், இஸ்லாத்தில் சாதியிருக்கிறது என்று மாற்றார்கள் எந்த தக்னி-லெப்பை-மரைக்காயர் போன்ற பிரிவைக் காட்டி குற்றம் சாட்டியபோது அதை மறுத்து விளக்கம் சொன்னவர்கள், இந்த கணக்கெடுப்பில் அதே தக்னி லெப்பை தூதுகோலா பெப்சிகோலா என்று ஏதேனும் ஒரு சாதியை பதிவு செய்யுங்கள் என்று அறிவுரை வழங்கினார்கள். அறிக்கை வெளியிட்டார்கள். அதை நியாயப்படுத்துவதற்காக நம்மையும் மீறி சில விஷயங்கள் நடந்துவிடும். அதுபோலத் தான் இதுவும் என்று வியாக்கியானம் தந்தார்கள். அதோடு பல்லாண்டுகாலமாக போராடிப்பெற்ற இடஒதுக்கீட்டை நாம அனுபவிக்க இந்த சாதியை முஸ்லிமகள் ஏற்றே தீரவேண்டும் என்று ஆசை காட்டினார்கள்.

மேலும் வேறு சிலர் தங்களின் செயலை நியாயப்படுத்துவதற்காக இந்த லெப்பை-தக்னி- மரைக்காயர் போன்றவைகள் எல்லாம் தலித் போன்று நம்மோடு நடைமுறையில் ஒட்டிக்கொண்டு வரும் சாதியல்ல. மாறாக ஏட்டளவில் உள்ள சாதிகள் தான். எனவே இந்த சாதிப் பெயரை குறிப்பிட முஸ்லிம்கள் தயங்கத் தேவையில்லை என்றார்கள். ஒரு முன்னாள் காவல்துறை உயரதிகாரி, தான் பதவியில் இருந்த காலத்தில் முஸ்லிம் சமுதாயத்தை பற்றி அலட்டிக் கொள்ளாதவர், ஓய்வுக்குப் பின் கட்டுரை தீட்டுகிறார். அவரது கட்டுரைகள் நல்ல பல கருத்துக்களை உள்ளடக்கி பல வந்தாலும், சாதி விசயத்தில் தன்னை 'சாதீய ஆதரவாளராக காட்டியதோடு, சாதிப் பிரிவை சொல்லாதீர்கள் என்று சொன்ன அறிஞரை கடுமையாக சாடினார். இது எல்லாம் ஒருபுறமிருக்கட்டும். இந்த சாதிப்பிரிவுகளை ஏற்க இந்த சாதீயவாதிகள் பிரதானமாக கூறிய காரணம் இடஒதுக்கீட்டை சாதியைச் சொன்னால் தான் அனுபவிக்க முடியும் என்பதுதான். உண்மையில் முஸ்லிம்களுக்கு இந்தியாவில் இட ஒதுக்கீடு இல்லவே இல்லை. மதரீதியான இடஒதுக்கீடு தர சட்டத்தில் இடமுமில்லை. முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு கேட்கிறோம் என்று வெளியில் பேசிக்கொண்டு, முஸ்லிம் சாதிகளுக்கு இடைதுக்கீடு வாங்கினார்கள். ஆனால் அதுவும் ஏட்டளவில் தான் உள்ளது. இதை நாம் சொல்லவில்லை; சாதீயவாதிகளே சொல்கிறார்கள்.

முந்தைய கருணாநிதி ஆட்சிக்காலத்தில் தமிழகத்தில் சாதியை ஏற்றுக்கொண்ட முஸ்லிம்களுக்கு 3 .5 சதவிகிதம் இடஒதுக்கீடு சட்டம் கொண்டுவரப்பட்டது. இந்த இடஒதுக்கீடு நாங்கள்தான் பெற்றுத்தந்தோம் என்று சில இயக்கங்கள் தனித்தனியாக உரிமை கொண்டாடினார்கள். ஆனால் இடஒதுக்கீடு வழங்கப்பட்ட காலம் தொட்டு இன்றுவரை முழுமையாக சாதியை ஏற்றுக்கொண்ட முஸ்லிம்களுக்கு வழங்கப்படுகிறதா? என்றால் இல்லை. அதனால் தான் இதில் உள்ள குளறுபடியை சரி செய்யவேண்டும் என்று அன்றைய முதல்வர் கருணாநிதியிடம் முறையிட்டார்கள். அவரும் ஒரு கண்காணிப்புக் குழுவை ஏற்படுத்தினார். அதுபற்றிய செய்தி;

முஸ்லீம்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்டவைகளில் 3.5 சதவீத இடஒதுக்கீடு அவர்களுக்கு சரியாக போய் சென்றடைகிறதா என்பதை கண்காணிக்க, தலைமைச் செயலாளர் மாலதி தலைமையில் கண்காணிப்புக்குழு அமைக்க முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளதாக தமிழக அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.[29-1-11 -தினமலர்]

கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்ட பின்னால் இந்த குளறுபடிகள் சரி செய்யப்பட்டு 3 .5 சதவிகிதம் முழுமையாக கிடைத்தது என்று இந்த சாதீயவாதிகள் சொல்லமுடியுமா? அய்யோபாவம் அவர்களே அரசிடம் வெள்ளையறிக்கை கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். இப்போது தமிழகத்தில் சாதியை ஏற்றுக்கொண்ட முஸ்லிம்களுக்கு வழங்கப்படும் இடஒதுக்கீடு என்பது ஏட்டளவில் தான் உள்ளது என்பதை அவர்களே சொல்லி, அதற்கான ஒரு போராட்டத்தையும் அறிவித்துள்ளார்கள்.
முஸ்லிம்களுக்கு தமிழக அரசின் பச்சைத் துரோகம்!

முஸ்லிம்கள் கொந்தளிப்பு! – முற்றுகைப் போராட்டம் அறிவித்தது டிஎன்டிஜே!!

தமிழக அரசு ஒப்பந்தப் பயிற்சி மருத்துவர் பணி நியமனத்தில் மிகப்பெரிய பச்சைத் துரோகத்தை முஸ்லிம்களுக்கு இழைத்துள்ளது. முன்பெல்லாம் முஸ்லிம் சமுதாயத்திற்கு வழங்கப்பட்ட 3.5சதவீத இடஒதுக்கீட்டை 2 சதவீதம், அல்லது 2.5சதவீத வீதம் என இட ஒதுக்கீட்டைக் குறைத்து வழங்கி துரோகமிழைத்து வந்த தமிழகஅரசு தற்போது ஒரு இடம் கூட வழங்காமல் கோழி முட்டையை முஸ்லிம்களுக்கு வழங்கி தன்னுடைய முஸ்லிம் விரோதப் போக்கை வெளிப்படுத்தியுள்ளது.

நான் ஆட்சிக்கு வந்தால் முஸ்லிம்களின் இட ஒதுக்கீட்டை உயர்த்தித் தருவேன் என வாக்களித்து முஸ்லிம்களின் வாக்குகளைப் பெற்ற ஜெயலலிதா, ஆட்சிக்கு வந்து ஓராண்டு நிறைவடைந்த பின்னரும் அந்த வாக்குறுதி பற்றி வாய் திறக்கவில்லை. அடிக்கடி தேவையில்லாத விஷயங்களுக்கு எல்லாம் சட்டசபையில் அறிக்கை வாசிக்கும் ஜெயலலிதா முஸ்லிம்களின் இட ஒதுக்கீடு குறித்து வாய் திறந்ததில்லை.

இந்த நிலையில் ஜெயலலிதா முஸ்லிம்களின் இட ஒதுக்கீட்டை உயர்த்தித் தருவதற்குப் பதிலாக அவர் பாஷையில் பட்டை நாமம் போட்டுள்ளார்.

கடந்த மார்ச் மாதம் தமிழகத்தில் 1349 மருத்துவர்கள் அரசு மருத்துவப் பணிக்காகப் பணியமர்த்தப்பட்டுள்ளனர். முஸ்லிம்களுக்கான 3.5சதவீத இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் 47 மருத்துவர்கள் நியமிக்கப்பட்டிருக்க வேண்டும். இட ஒதுக்கீடு அடிப்படையில் மட்டும் இல்லாமல் பொதுப்பிரிவில் தகுதியான முஸ்லிம்கள் தேர்வு செய்யப்பட முடியும். அந்த வகையில் 20 நபர்களாவது தேர்வு செய்யப்பட்டிருக்க வேண்டும். இட ஒதுக்கீட்டின் அடிப்படையிலோ, பொதுத்தேர்வு அடிப்படையிலோ எந்த முஸ்லிமும் தேர்வு செய்யப்படவில்லை. ஒரே ஒரு முஸ்லிமைக் கூட இந்த அரசு நியமிக்கவில்லை.

இதோ தேர்வு செய்யப்பட்டவர்களின் பெயர் பட்டியல்:

அரசால் தேர்வு செய்யப்பட்ட மருத்தவர்களின் முழு பட்டியலை காண இங்கே கிளிக் செய்யவும்

கடந்த முறை இதே போன்று மருத்துவ பணி நியமனத்திற்காக அழைக்கப்பட்ட 2438 மருத்துவர்களில் 88 முஸ்லிம்கள் உள்ளனர். சரியாக 3.5 % வழங்கப்பட்டுள்ளது. பொதுப்பிரிவில் முஸ்லிம்கள் தேர்வு செய்யப்படாததால் இதுவே முஸ்லிம்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது.

ஆனால் இப்போது செய்யப்பட்டுள்ள பச்சைத் துரோகம் இந்திய அரசியல் வரலாற்றில் பீஜேபி கூட செய்யத் துணியாத பச்சைத் துரோகமாகும். ஒரு முஸ்லிம் கூட நியமிக்கப்படக் கூடாது என்ற அளவுக்கு இவர்கள் வெறிபிடித்து அலைவதற்குக் காரணம் என்ன? 3.5 சதவிகிதம் இட ஒதுக்கீடு அளிக்க சட்டம் இருந்தும் அதைக் கூட காலில் போட்டு மிதிக்கும் அளவுக்கு இவர்களுக்குத் துணிவு வரக் காரணம் என்ன?

இந்த அநீதி சரி செய்யப்பட்ட வேண்டும். முஸ்லிம்கள் பொதுப்பிரிவிலும் சேர்த்து 70 பேர் உடனடியாக நியமிக்க வேண்டும். இதற்குக் காரணமான அதிகாரிகள் மீதும், அமைச்சர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தனது அறிக்கையில் கூறியுள்ளதோடு சென்னை கிரீன்ஸ் ரோட்டிலுள்ள டிஎன்பிஎஸ்ஸி அலுவலகத்தை முற்றுகையிட்டு முஸ்லிம்களின் எதிர்ப்பைத் தெரிவிக்க, மாபெரும் முற்றுகைப் போராட்டத்தை 14.06.12 வியாழன் அன்று காலை 11மணிக்கு நடத்துவது என்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சென்னை மாவட்டம் அறிவித்துள்ளது.

பயிற்சி ஒப்பந்த மருத்துவர்கள் பணிநியமனத்தில் மட்டுமல்லாது, நூலகர்களை பணியமர்த்திய விஷயத்திலும் இந்த துரோகம் தொடர்கின்றது.

தமிழ்நாட்டில் மொத்தம் 32 மாவட்டங்கள் உள்ளன. விழுப்புரம் மாவட்டத்தில் 41 நூலகர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதிலும் ஒரு முஸ்லிமுக்குக் கூட இடம் வழங்கப்படவில்லை. இது போன்று தமிழகத்திலுள்ள 32 மாவட்டங்களிலும் நூலகர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அந்த 32 மாவட்டங்களிலும் இதுதான் நிலை என்று சொல்லப்படுகிறது. இதன் மூலம் தமிழக அரசு முஸ்லிம்களுக்கு மிகப்பெரும் துரோகம் செய்துள்ளது அம்பலமாகியுள்ளது. வேண்டுமென்றே திட்டமிட்டு முஸ்லிம்களை அனைத்து அரசுப்பணிகளிலும் அப்புறப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் தமிழக அரசு இவ்வாறு செயல்பட்டு வருவது இதன் மூலம் உறுதியாகின்றது.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், சீருடைப் பணியாளர் தேர்வாணையம், ஆசிரியர் தேர்வாணையம் ஆகியவை மூலம் போட்டித் தேர்வு நடத்தி, தமிழக அரசு பணியாளர்களை நியமித்து வருகிறது. இதுபோல் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தின் மூலம் பதிவு மூப்பு அடிப்படையிலும் ஏராளமானோரை தமிழக அரசு பணிக்கு நியமித்து வருகிறது.

இது போக சத்துணவு அமைப்பாளர், சமையலர், உதவியாளர் என பல்லாயிரம் பேரை மாவட்ட ஆட்சியர் மூலம் தேர்ந்தெடுக்கிறது. நகராட்சி மூலம் பேட்ஜ் டிரைவர் போன்றவர்களும் பணியமர்த்தப்படுகிறார்கள். இந்த அரசு வேலை வாய்ப்புகள் அனைத்திலும் முஸ்லிம்கள் 3.5 சதவீத அடிப்படையில் நியமிக்கப்படவில்லை. மாறாக வஞ்சக எண்ணத்துடன் இவர்கள் ரகசியமாக புறக்கணிக்கப்பட்டுள்ளனர் என்று முஸ்லிம்கள் குமுறுகின்றனர்.

முஸ்லிம்களின் இட ஒதுக்கீட்டை அதிகரிப்போம் என்று வெற்று வாக்குறுதி அளித்து முஸ்லிம்களை ஒரு புறம் ஏமாற்றிக் கொண்டு, மற்றொரு புறத்தில் அவர்களுக்கு ஏற்கனவே இருக்கும் 3.5 சதவீத இட ஒதுக்கீடையும் பறிக்கும் அ.தி.மு.க. வின் செயல் மிகவும் கண்டனத்திற்குரியது. எனவே தமிழக அரசு உடனே வெள்ளையறிக்கை வெளியிட்டு, முஸ்லிம்களுக்கு 3.5 சதவீத இட ஒதுக்கீடு அமுல்படுத்தப்பட்ட நாள் முதல் இன்று வரை தமிழக அரசின் எத்தனை பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. அதில் முஸ்லிம்களுக்கான 3.5சதவீத அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளனவா? என்பதை தெளிவுபடுத்த வேண்டும்.

இட ஒதுக்கீடு அடிப்படையில் முஸ்லிம்களுக்கு வாய்ப்பு தந்திருந்தால் அதை தெளிவுபடுத்த வேண்டும். வாய்ப்புத் தராமல் முஸ்லிம்களை புறக்கணித்திருந்தால் அவர்களுக்கான வாய்ப்புகளை வழங்க போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும்.

http://www.tntj.net/90674.

ஆக, தமிழக அளவில் இது ஏட்டளவில் தான் உள்ளது என்பது வெள்ளிடைமலை. இது ஜெயலலிதா ஆட்சியில் மட்டுமல்ல; கருணாநிதி ஆட்சியிலும் இதுதான் நிலை. ஒட்டுமொத்தமாக இல்லை என்று மறுத்தால் பிரச்சினையாகும் என்பதால், அவ்வப்போது சில நியமனங்களில் மட்டும் சாதியை ஏற்றுக்கொண்ட முஸ்லிம்களை நியைத்துள்ளது முந்தைய மற்றும் இப்போதைய அரசு. இந்த நியமனங்கள் மூலமாக சென்றவர்கள் எண்ணிக்கை அளவுக்கு, இட ஒதுக்கீடு இல்லாமல் இருந்தாலும் தகுதி அடிப்படையில் இதே அளவு நியமனம் பெற்றிருப்பார்கள் முஸ்லிம்கள். தமிழக நிலை இது. மத்திய நிலவரம் என்ன?

உ.பி. தேர்தலுக்கு முன்பாக சிறுபான்மையினருக்கு என்று 4 .5 சதவிகிதம் இடஒதுக்கீடு என்று அறிவித்தது மத்திய காங்கிரஸ் அரசு. சிறுபான்மையினர் என்றால் முஸ்லிம்கள், சீக்கியர்கள், கிறிஸ்தவர்கள், பார்சிகள் போன்றோர் கொண்ட குழுவாகும். இந்த இடஒதுக்கீடு மத அடிப்படையில் வழங்கப்படுள்ளது என்று கூறி ஆந்திர உயர்நீதிமன்றம் தடைவிதித்தது. அதை எதிர்த்து மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. அங்கே ஆந்திர உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு தடைவிதிக்க உச்சநீதிமன்றம் மறுத்து விட்டது. இதைப்பற்றி கருத்துக் கூறியுள்ள சாதீய ஆதரவாளர்கள்,
''முஸ்லிம்களுக்கு பத்து சதவிகிதம் இடஒதுக்கீடு தரவேண்டும் என்று சச்சார் கமிஷன் சொல்லியிருக்க, மத்திய அரசு 4 .5 சதவிகிதம் தந்�

No comments: