Thursday, June 28, 2012

Muhammad shahjahan ✆ md_shahjahan2001@yahoo.com
26 Jun (1 day ago)

to mohamed


Re: ஸஹாபாகள் விளக்கமும் அதன் அவசியமும்
வ அலைக்குமுஸ் ஸலாம் வரஹ்..,

சஹாபாக்களிடம் இருந்த கல்வியை மூன்று வகையாக பிரிக்கலாம்.

1 . பரிபூரணமான விளக்கம்
2 . சஹிஹான கல்வி
3 . சாலிஹான அமல்கள் .

அதாவது, பரிபூரணமான விளக்கம் என்றால், நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் நேரடியாக பெற்ற விளக்கம். சஹிஹான கல்வி என்றால், எந்த விதமான கலப்படமும் இல்லாத, இட்டுகட்டப்பட்ட , பொய்யான , களங்கமான என்ற எந்தவிதமான மாசும் இல்லாத தூய்மையாக ஏழு வானத்தின் மேல் இருந்து நேரடியாக இறங்க்கப்பட்ட கல்வி.

எங்களுடைய எந்த கல்வியை எடுத்தாலும், அது அகீதாவாக இருந்தாலும் வரலாறாக இருந்தாலும், பிஃஹ் ஆக இருந்தாலும் பொய்யும், இட்டுக் கட்டப்பட்ட , களங்கமான செய்திகள் கலக்கப்பட்டு , உலமாக்களால் பிரித்து துப்பரவு செய்யப்பட வேண்டியவைகள்.

ஏனெனில், புத்தி ஜீவிகள் என்று சொல்லக்கூடிய அநியாயக்காரர்களால் திரிக்கப்பட்டு, மாசுபடுத்தப்பட்டு, மனோ இச்சைகள் திணிக்கப்பட்டவைகள் அல்ல.

அதனால் தான் அல்லாஹ் சுபஹானஹுதாலா காலத்துக்கு காலம், சிறப்பான அறிஞர்களை வெளியாக்குகிறான் என்று இமாம் இப்னு தைமியா அவர்கள் மஜ்மூ பதாவாவில் குறிப்பிடுகிறார்கள். எந்த வழிகேடர், எந்த அநியாயக்காரன் இந்த மார்க்கத்தில் எதனை புகுத்தினாலும் அதனை துப்பரவு செய்ய காலத்துக்கு காலம் அல்லாஹ் சிறப்பான உலமாக்களை அனுப்பிக்கொண்டு இருக்கிறான்.

சாலிஹான அமல் என்றால் அவர்களுடைய அத்துணை நடவடிக்கைகளும் சாலிஹானதாக தான் இருந்தது. அதனால் தான் அல்லாஹ் அவர்களை ஏழு வானத்தில் இருந்து ரலியல்லாஹு அன்ஹு வரலு அன்ஹு என்று புகழ்ந்து பாராட்டியுள்ளான்.

எனவேதான், இந்த சிறப்பான மூன்று பண்புகளை அந்த அருமை சஹாபாக்கள் கொண்டதனால்தான், அவர்களிடம் இருந்து நாம் கல்வியை, விளக்கத்தை பெற்று கொள்ள வேண்டும் என்று இமாம் இப்னு கஸீர் ரஹீமஹுல்லாஹ் அவர்கள், தப்ஸீர் இப்னு கஸீர் நூலில் குறிப்பிடுகிறார்கள்.

இது போன்று ஏனைய இமாம்களும் தங்களுடைய நூற்களில் அருமை சஹாபாக்களை விளக்கத்தில் தான் அல்குர் ஆனையும் சுன்னாவையும் விளங்க வேண்டும் என்று குறிப்பிடுகின்றார்கள்.

இமாம் முஸ்லிம் ரஹீமஹுல்லாஹ் அவர்களும் தங்களுடைய ஸஹிஹ் முஸ்லிம் கிரந்தத்தின் முன்னுரையில் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்கள்.

எவன் ஸலபுஃஸ் ஸாலிஹீன்களை திட்டுகிரானோ அவனிடம் கல்வி பெறவேண்டாம் என்று எச்சரிக்கிறார்கள். ஏனெனில், ஸலபுஃஸ் ஸாலிஹின்களில் முதன்மையானவர்கள் அருமை சஹாபாக்கள் ஆவார்கள். அவர்களை திட்டுபவனிடம் இருந்து கல்வி பெறுவதை, இமாம் முஸ்லிம் (ரஹ்) அவர்கள் தடை செய்கிறார்கள்.

இதே போன்று, ஸஹீஹுல் புகாரிக்கு விளக்கம் எழுதிய இமாம் இப்னு ஹஜர் அல் அஸ்கலாணி (ரஹ்) அவர்கள், பத்ஹுல் பாரியின் கடைசி பாகத்தில் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்கள். அதாவது, அவர்கள் விளக்கமாக எழுதியவைகள் அனைத்தும் சஹாபா விளக்கத்தில் இருந்து பெறப்பட்டவைகள் என்று.

இதே போன்று, முஅத்தா மாலிக் நூலை எடுத்துக் கொண்டால், இமாம் மாலிக் (ரஹ்) அவர்களும் சஹாபா விளக்கத்தை அடிப்படையில் தான் கிதாபையே தொகுத்துள்ளார்கள். மேலும் அவர்கள் கூறினார்கள், அதாவது இந்த முஸ்லிம் உம்மத் சீர் பெற வேண்டுமெனில், அந்த சஹாபா சமூகம் சென்ற பாதையில் சென்றால் தான் சீர் பெற முடியும் என்றும் குறிப்பிடுகின்றார்கள்.

அதே போன்று இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல் ரஹீமஹுல்லாஹ் பின்வருமாறு கூறுகிறார்கள். எங்களிடம் சுன்னா என்பது, அஹ்லுஸ் சுன்னாஹ் உலமாக்களிடம் சுன்னா என்பது, நபியும், சஹாபாக்களும் எதில் இருந்தார்களோ அதுதான் என்பதாக குறிப்பிடுகிறார்கள்..

இவ்வாறு, அஹ்லுஸ் சுன்னாஹ் உலமாக்களின் எந்த நூலை எடுத்தாலும் சஹாபா விளக்கம் அடிப்படையில் எழுதப்படாத ஒரு நூலை காண முடியாது. அவர்களின் அனைத்து நூல்களும் சஹாபா விளக்கத்தை அடிப்படையில் தான் எழுதப்பட்டு உள்ளன.

எனவே, சஹாபாகளின் விளக்கத்தை தவிர்ந்துக் கொண்டு மார்க்கப் பிரச்சாரம் செய்யவந்தது மிகப் பெரிய கைசேதமும், துர்பாக்கியமுமாகும்.

எனவே, பொது மக்களின் கடமையாகிறது , இந்த மார்க்கத்தை சஹாபாகள் விளக்கத்தில் தந்தால் எடுத்துக் கொள்வது ஆகும். இதனை, இமாம் பர்பஹாரி ரஹீமஹுல்லா பின்வருமாறு சுட்டிக் காட்டுகிறார்கள்.

உங்களுடைய காலத்தில் ஒரு மனிதர் ஒரு விடயத்தை சொன்னால் , அதனை எடுத்தது நடப்பதில் அவசரப்பட்டு விடாதீர்கள். அதனை நல்ல முறையில் சீர்தூக்கி பாருங்கள. நல்ல முறையில் கவனித்து பாருங்கள். இந்த விஷயத்தை சஹாபாக்கள் இப்படிதான் சொன்னார்களா என்று பாருங்கள் . அஹ்லுஸ் சுன்னாஹ் உலமாக்கள் ஏதும் சொல்லி இருக்கிறார்களா என்று பாருங்கள். சஹாபாக்கள் அந்த விடயத்தை பேசவில்லை என்றால் , ஸலபுஃஸ் ஸாலிஹீன்கள் அந்த விடயத்தில் பேசவில்லை என்றால், அதனை விட்டும் ஒதுங்கி விடுங்கள்.

இதனை 8 வது குறிப்பாக ஸரஹ் சுன்னாஹ் என்ற நூலில் குறிப்பிடுகின்றார்கள். எனவே, அல்குர் ஆனையும் சுன்னாவையும் சஹாபா விளக்கத்தில் பெற்றுக் கொள்ளுங்கள்.

இன்னும் ஸஹாபாக்கள் செய்த தவறுகள் என்னென்ன என்பதை யாராவது பட்டியலிட்டு தந்தால் அதை அஹ்லுஸ் ஸுன்னா இமாம்கள் எவ்வாறு அனுகினார்கள் என்பதை பார்க்கலாம் இன்ஷாஅல்லாஹ்.
--
_______________
Thanks & Regards,

S.A.SULTHAN


2012/6/25 Abu Noora
அஸ்ஸலாமு அலைக்கும்

அன்புச் சகோதரரே,

நீங்கள் பகிர்ந்து கொண்ட கட்டுரையின் தலைப்புக்கு எவ்விதத்திலும் ஆதாரம் தராத வகையிலான கட்டுரையாகவே இது அமைந்துள்ளது.

அதிலும் குறிப்பாக ஒரு இறை வசனம் இதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

وَالسَّابِقُونَ الْأَوَّلُونَ مِنَ الْمُهَاجِرِينَ وَالْأَنصَارِ وَالَّذِينَ اتَّبَعُوهُم بِإِحْسَانٍ رَّضِيَ اللَّهُ عَنْهُمْ وَرَضُوا عَنْهُ وَأَعَدَّ لَهُمْ جَنَّاتٍ تَجْرِي تَحْتَهَا الْأَنْهَارُ خَالِدِينَ فِيهَا أَبَدًا ۚ ذَٰلِكَ الْفَوْزُ الْعَظِيمُ

“முஹாஜிர்களிலும் அன்சாரிகளிலும் முன்னைய முந்தியவர்கள் மேலும் அவர்களை நன்முறையில் பின்பற்றினார்களே அவர்கள் அவர்களை அல்லாஹ் பொருந்திக்கொண்டான். மேலும் அவர்கள் அவனைப் பொருந்திக்கொண்டார்கள். மேலும் அவற்றுக்குக் கீழே ஆறுகள் ஓடக்கூடிய சுவனங்களை அவர்கள் அவற்றில் நிரந்தரமாக இருக்கும் நிலையில் அவன் அவர்களுக்கு தயார் செய்து வைத்துள்ளான். அது மகத்தான வெற்றியாகும்”. (09:100)

மேற்கண்ட வசனத்தில் அல்லாஹ் யாரைப் பொருந்திக்கொண்டானோ அவர்களை பற்றி மட்டுமே குறிப்பிடுகின்றானே தவிர நபித்தோழர்கள் என அறியப்பட்ட அனைவரையும் குறிப்பிடவில்லை என்றே நினைக்கிறேன்.

பின்வரும் குறிப்பை மேற்கண்ட வசனத்துக்கு முன்னுரையாக பொறித்து வைத்துள்ளனர்.

//இம்மாமனிதர்களை சந்தேகத்துக்கு இடம் வைக்காது அல்லாஹ் அவர்களை மிகச் சரியான அளவுகோல் கொண்டு அளந்து விட்டான். அவர்கள் யார்? அவர்களின் சிறப்பு, மகிமை, அந்தஸ்து என்ன? இதோ குர்ஆனும் ஸுன்னாவும் பட்டவர்த்தனமாகப் பேசுகின்றன.//

இந்த முன்னுரையில் கூட அவர்கள் பின்பற்றத் தக்க நபர்கள் என்ற வாசகத்தை குறிப்பிடாமல் உள்ளதிலிருந்தே முறையான ஆதாரம் தராமல் சிலாகித்தலின் மூலம் தலைப்பு கூறும் கருத்தை நிலைநாட்டலாம் என்ற போங்கு தெரிகிறது

சஹாபாக்களுடைய வெளிப்படையான நடத்தையின் மூலம் நாம் அவர்களை எவ்வாறு அறிந்து வைத்துள்ளோமோ அதைத் தாண்டி எந்த விவகாரத்திலும் மார்கத்துடன் இணைத்துக் கூறும் அதிகாரம் எவருக்கும் இல்லை.

மேலும் நபிகள் நாயகம் அவர்களை நாம் பின்பற்றுவது கூட வஹியின் அடிப்படையிலேயே அன்றி அவர்கள் தாமாக உருவாக்கி வழங்கிய எந்த ஒன்றையும் அல்ல. நிலைமை இவ்வாறிருக்க ஸஹாபாக்களின் விளக்கங்களை பின்பற்றவேண்டியதன் அவசியம் என்ற தலைப்புடன் ஆதாரமின்றி நிறுத்திக்கொள்தால் ஆகாது.

தயவு செய்து குர்ஆனிலிருந்தோ அல்லது நபிகள் நாயகம் அவர்களின் அறிவிப்பிலிருந்தோ உரிய ஆதாரத்தை வைத்தால் அதுவே ஏற்கத்தக்க ஒன்றாக ஆகும்.

அன்புடன் அபூ நூறா
--

No comments: