Thursday, June 28, 2012

Important A friend of ours became very sick after drinking water left in a car overnight but she was ill for a couple of months.

No matter how many times you get this E-mail,
Please send it on!!!!
Bottled water in your car is very dangerous!

On the Ellen show, Sheryl Crow said that this is what caused her breast cancer.
It has been identified as the most common cause of the high levels of dioxin in breast cancer tissue..

Sheryl Crow's oncologist told her : women should not drink bottled water that has been left in a car.
The heat reacts with the chemicals in the plastic of the bottle which releases dioxin into the water. Dioxin is a toxin increasingly found in breast cancer tissue.
So please be careful and do not drink bottled water that has been left in a car.

Pass this on to all the women in your life. This information is the kind we need to know that just might save us!
Use a stainless steel canteen or a glass bottle instead of plastic!

LET EVERYONE WHO HAS A WIFE / /DAUGHTER KNOW PLEASE! (This was new to me ) This information is also being circulated at Walter Reed Army Medical Center ...
No plastic containers in microwaves.
No plastic water bottles in freezers.
No plastic wrap in microwaves.

Dioxin chemical causes cancer, especially breast cancer.
Dioxins are highly poisonous to cells in our bodies.
Don't freeze plastic bottles with water in them as this releases dioxins from the plastic.
Recently the Wellness Program Manager at Castle Hospital was on a TV program to explain this health hazard.

He talked about dioxins and how bad they are for us. He said that we should not be heating food in the microwave using plastic containers......
This especially applies to foods that contain fat.

He said that the combination of fat, high heat and plastic releases dioxin into the food.

Instead, he recommends using glass, such as Pyrex or ceramic containers for heating food... You get the same result, but without the dioxin..
So, such things as TV dinners, instant soups, etc., should be removed from their containers and heated in something else.

Paper isn't bad but you don't know what is in the paper. It's safer to use tempered glass, such as Pyrex, etc.

He reminded us that a while ago some of the fast food restaurants moved away from the styrene foam containers to paper. The dioxin problem is one of the reasons....

Also, he pointed out that plastic wrap, such as Cling film, is just as dangerous when placed over foods to be cooked in the microwave.
As the food is nuked, the high heat causes poisonous toxins to actually melt out of the plastic wrap and drip into the food..
Cover food with a paper towel instead. This is an article that should be sent to anyone important in your life.

__._,_.___
http://ping.fm/gqmWj

Fifteen Health benefits of banana

1. Bananas are a caloric dense fruit. Consumption of just one banana anytime through the day makes one feel energetic.

2. Banana is a food most appropriate when small but nutrient dense food has to be given in situations of extreme weight loss or extreme fever where the body becomes weak and there is food aversion.

3. They are a good source of potassium and magnesium which aid in maintaining normal blood pressure and are heart protective.

4. The high potassium content promotes bone health too.

5. Banana help counteract the urinary calcium loss caused due to increase ion potassium levels in the urine.

6. Bananas have an antacid effect and are said to protect against stomach ulcers. They contain a compound called as protease inhibitor which protects the stomach from unfriendly bacteria which cause stomach or gastrointestinal disturbances.

7. Bananas are also known to stimulate cell proliferation which thickens the stomach mucosa and is a barrier against stomach acids.

8. Conditions like diarrhea can easily dehydrate the body and deplete the electrolytes.. Consumption of banana helps to restore the lost potassium and helps maintain heart function.

9. Bananas are rich in the soluble fibre pectin. Thereby it assists healthy digestion and eases out constipation.

10. They are a rich source of fructooligosaccharides which act as a prebiotic and stimulate the growth of friendly bacteria in the intestine. They protect us from harmful bacteria that cause gastric disturbances.

11. Fructooligosaccharides also produce digestive enzymes which improve the ability to absorb nutrients.

12. Bananas contain short chain fatty acids which are essentially needed by the cells lining the intestinal tract to stay healthy. This further improves the nutrient absorption.

13. They are a good source of carotenoids which are antioxidants and have a protective effect against chronic disease condition. They also have a high content of antioxidant phenolic compounds.

14. Banana is known to render a soothing effect. It has a compound called as tryptophan which on getting converted to serotonin improves mood.

15. It is one of the ideal foods to be eaten immediately after a strenuous workout too. The simple sugars present in them quickly provide energy and normalize the blood sugar levels.

Bananas can be eaten whole, as a part of a salad, as a healthy beverage or as an ingredient of a vegetable. It is a fruit made by god for one and all and for every age group.

Read more: Health Benefits of Bananas | Medindia http://ping.fm/4w6ls
K A Rahiman
Coimbatore
http://ping.fm/ZBL28

நீங்கள் கைதானால், போலீஸ் காவலிலிருந்து உடனடியாக விடுதலை பெறுவது எப்படி?



பிடிப்பாணை வழக்குகளில், பிடிப்பாணையில் கூறப்பட்டுள்ள நெறிமுறைகளைப் பார்த்து, அதற்கேற்ப பிணையாளிகளுடன் பிணைமுறி எழுதித்தர வேண்டும் (குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு. 71).
சுமத்தப்பட்டுள்ள குற்றம் பிணையில் விடுவிக்கப்படக் கூடியதாகவும், பிடிப்பாணை இல்லாமல் கைது செய்யப்பட்டிருந்தாலும், பிணைமுறி எழுதிக்கொடுத்த பின்பு உங்களை பிணையில் விடுவிக்கும் படி காவல் நிலையப் பொறுப்பில் உள்ள காவல்துறை அதிகாரியிடம் கேட்கலாம்.
ஒரு நபரிடம் பிணையாளிகள் இல்லாமல் பிணைமுறிவு எழுதி வாங்கிக் கொண்டு, பிணையில் விடுவிப்பதற்கு காவல்துறை அதிகாரிக்கு தன் விருப்புரிமை அதிகாரம் உண்டு (குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 436).
உடனடியாக உங்களை பிணையில் விடுவிக்காவிட்டால் உங்களது வழக்கறிஞருக்கோ, நண்பர் அல்லது உறவினருக்கோ தொலைபேசியில் தகவல் கூற உங்களுக்கு உரிமை உண்டு. உங்களது வழக்கறிஞரிடம் பிணையாளிகளாக வரக்கூடிய நபர்களின் பெயர், முகவரிகளைத் தரவும், உங்களுக்கு வழக்கறிஞர் இல்லாவிட்டால், நண்பர் அல்லது உறவினருக்கு கீழ்கண்ட விவரங்களைத் தெரிவிக்கவும்.
நீங்கள் ஆஜராகப் போகும் குற்றவியல் நீதிமன்றம்.
நீதிமன்றம் துவங்கும் நேரம்.
உங்களுக்காக பிணையாளிகளாக வரத்தயாராக உள்ளவர்கள் நீதிமன்றத்திற்கு அழைத்து வரச்செய்வது.
முடிந்தால், ஒரு வழக்கறிஞரை தொடர்புக் கொள்ளச் சொல்வது.
நீதிமன்றத்திற்குச் செல்லும் முன்பாக, இத்தகையவற்றைக் கவனித்துக் கொண்டால், தேவையில்லாமல் காவலில் வைக்கப்படுவதிலிருந்து நீங்கள் காப்பாற்றப்படுவீர்கள்.
குற்றவியல் நீதித்துறை நடுவரால் பிணையில் விடுவிக்கப்படல்:
பிணையில் விடுவிக்கப்பட முடியாத குற்றத்திற்காக ஒருவர் கைது செய்யப்பட்டு, அவர் குற்றம் புரிந்திருக்கக் கூடும் என்பதற்கு நியாயமான காரணங்களிருந்தால் காவல்துறை அதிகாரி அவரை பிணையில் விடுவிக்க மறுத்துவிடலாம். அவ்வாறான நிலைமையில், பிணையில் விடுவிக்கும் படி நீதிமன்றத்தில் எழுத்து மூலமான மனுவைத் தாக்கல் செய்ய வேண்டும். மரணதண்டனை அல்லது ஆயுள் தண்டனை விதிக்கக் கூடிய குற்றங்களாக இருந்தாலன்றி, நீதிமன்றம் அவரைப் பிணையில் விடுவிக்க வேண்டும். அவ்வாறான குற்றங்களுக்கு மாவட்ட அமர்வு நீதிமன்றம் அல்லது உயர்நீதி மன்றம் மட்டுமே பிணையில் விடுவிக்க முடியும்.
பிணையில் விடுவிப்பதை எதிர்த்து காவல் துறையினர் கூறும் பொதுவான காரணங்கள்:
குற்றவாளி, விசாரணையின் போது ஆஜராகமாட்டார்.
சாட்சிகள் அல்லது முக்கிய சாட்சியங்களில் அவர் குறுக்கிடுவார்.
பிணையில் விடுவிக்கப்பட்ட பிறகு, மேலும் குற்றம் புரிவார்.
காவல்துறையினரின் புலன் விசாரணை முடியவில்லை.
மேலும் குற்றச்சாட்டுகள் தொடர வேண்டியுள்ளது.
களவு போன பொருட்கள் கைப்பற்றப்படவில்லை.
சக குற்றவாளிகள் தலைமறைவாக உள்ளனர்.
குற்றம் புரிவதற்குப் பயன்படுத்தப்பட்ட ஆயுதம் கைப்பற்றப் படவில்லை.
பொதுவாக, குற்றவாளியை காவலில் வைக்கும்படி, காவல் துறையினர் மனுச் செய்வார்கள். அத்தகைய மனுவில், குற்றவாளியை மேலும் காவலில் வைக்க வேண்டியதற்கான காரணங்களை அவர்கள் அளித்திருப்பார்கள். கூடுமான அளவிற்கு, காவல் துறையினர் கூறும் காரணங்களை மறுத்துரைக்க வேண்டும்.
பிணையில் விடுவிக்க மனு:
குற்றவாளியால் ஒரு வழக்கறிஞரை அமர்த்திக் கொள்ள முடியுமென்றால், அவர் நீதிபதியின் முன்பாக குற்றவாளிக்காக மனுக் கொடுத்து ஆஜராகலாம்.
வழக்கறிஞரை அமர்த்திக் கொள்ள இயலாதென்றால், குற்றவாளியே நீதிபதிக்கு மனுச் செய்து கொள்ளலாம். இதற்காக சிறை அலுவலரிடமிருந்து மனுவைப்பெற்று, பூர்த்தி செய்து, நீதிபதியைத் திருப்திப்படுத்தும் வகையில், தான் பிணையில் விடுவிக்கப்பட வேண்டியதற்கு தகுந்த காரணங்களைக் கூற வேண்டும்.
அம்மனுவில், தாம் விடுவிக்கப்படுவதற்காக, கீழ்க்கண்ட சிறப்பு காரணங்களைச் சுட்டிக் காட்ட வேண்டும்.
நிபந்தனையும் தங்குமிடத்தின் நிலைமையும் பிணையில் விடுவிக்கப்படாவிட்டால் வெளியேற்றபட நேரிடுமா?
பணியை இழக்க நேரிடுமா?
பிணையில் விடுவிக்க மறுக்கப்பட்டால், தன்னைச் சார்ந்துள்ள குடும்பத்தினருக்கு எத்தகைய துன்பம் ஏற்படும்?
காவலில் வைத்திருப்பதால் நலிவுற்ற உடல் நிலையும், சிகிச்சையும் எவ்வாறு பாதிக்கப்படும்?
குற்றவியல் நீதித் துறை நடுவர் பிணையில் விடுவிக்க மறுத்தல்:
பிணையில் விடுவிக்க மறுத்தால், குற்றவியல் நீதித் துறை நடுவர், அதற்கான காரணங்களைப் பதிவு செய்ய வேண்டும். உயர்நீதி மன்றங்களில் மேல் முறையீடு செய்வதற்கு அத்தகைய பதிவுக் குறிப்பு அவசியமாகும்.
மேல் முறையீடு:
பிணையில் விடுவிக்கக் கோரும் மனுவானது குற்றவியல் நீதித்துறை நடுவரால் தள்ளுபடி செய்யப்பட்டு விட்டால், குற்றவாளி மாவட்ட அமர்வு நீதிமன்றம் அல்லது உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்து கொள்ளலாம். பிணையில் விடுவிப்பதற்கு மறுப்பு அல்லது நீதிமன்றத்தில் ஆட்சேபணை தெரிவிக்கப்படவில்லை என்பதையும் பிணை விடுவிப்பு மனுவில் குறிப்பிட வேண்டும். ஒருவருடைய மனு தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டால், மீண்டும் அடுத்த முறை மனுச் செய்து முயற்சிக்கலாம்.
பிணையில் விடுவிப்பதற்கான நிபந்தனைகள்:
குற்றவியல் நீதித்துறை நடுவர்,
நிபந்தனை எதுவும் இல்லாமல்
சிறப்பு நிபந்தனைகளுக்கு உட்பட்டு
பிணையாளிகளுடன் அல்லது பிணையாளிகளின்றி பிணை முறி எழுதிக் கொடுத்தால் பிணையில் விடுவிக்கலாம்.
சிறப்பு நிபந்தனைகளில், குறிப்பிட்ட நேரங்களில் காவல் நிலையத்தில் குற்றவாளி ஆஜராக வேண்டும் அல்லது அவரது பாஸ் போர்ட்டை ஒப்படைக்க வேண்டும் என்பது போன்று கூறப்பட்டிருக்கும். குற்றவியல் நீதித்துறை நடுவரால் விதிக்கப்பட்டுள்ள நியாயமற்ற நிபந்தனைகள் நீதிமன்றத்தில் ஆட்சேபிக்கலாம். நிபந்தனைகளை மாற்ற நீதிமன்றம் மறுத்தால், குற்றவாளி அதை மறுத்துவிடலாம். ஆனால். அவ்வாறான நிலைமையில், மேல் முறையீடு விசாரிக்கப்பட்டு. அவருக்குச் சாதகமான முடிவு செய்யப்படும் வரையில் அவர் விடுதலை செய்யப்படமாட்டார்.
பிணை முறிவும், பிணையாளிகளும்:
பிணையாளிகளுடனோ அல்லது பிணையாளிகள் இல்லாமலோ சொந்தப் பிணையில் ஒரு குற்றவாளியை இல்லாமலோ சொந்தப் பிணையில் ஒரு குற்றவாளியை விடுவிக்கலாம்.
குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட நேரத்தில் நீதிமன்றத்தில் குற்றவாளி ஆஜராவதற்கு, குறிப்பிட்ட தொகையைப் பிணையாக உத்திரவாதம் அளிக்கும் நபர்களே பிணையாளிகள் ஆவர்.
பிணையாளிகளாக உள்ளவர்கள் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும். கேட்கப்பட்டால் பிணையாளியாக இருக்கத் தயார் என்பதையும் போதிய நிதிவசதி உண்டு என்பதையும் பிரமாணத்தின்பேரில் நீதி மன்றத்திற்கு உத்திரவாதம் அளிக்க வேண்டும்.
அவர்களுக்குப் பிணை அளிப்பதற்குப் போதிய நிதிவசதி உள்ளது என்பதோடு வேறு வகையிலும் பிணையாளிகளாக இருக்கத் தகுதியுடையவர்கள் என்பதை எடுத்துக்காட்டி, நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரமும் தாக்கல் செய்யலாம்.
எந்தவிதக் காரணமும் கூறாமல். பிணையாளியை ஏற்க மறுத்துவிடக் குற்றவியல் நீதித்துறை நடுவருக்கு அதிகாரம் உண்டு. பிணையாளிகள் நீதிமன்றத்தில் இல்லாவிட்டால், காவல் துறையினர் அவர்களை விசாரித்து, ஏற்றுக் கொள்ளத்தக்கவர்கள் எனத் தீர்மானிக்கும் வரை, கைது செய்யப்பட்ட நபர் காவலில் வைக்கப்பட்டிருப்பார்.
பிணையாளிகள் 18 வயதுக்கு மேற்பட்டவர்களாகவும், நிரந்தர முகவரியும், பிணையளிப்ப தற்கு அவர்களது கடன்கள் நீக்கி, போதுமான அளவிற்கு நிதி வசதியும் இருக்க வேண்டும். பிணையாளிகள் தங்களது ரேஷன் கார்டு, வாடகை ரசீது, வைப்பீட்டு நிதி அட்டை, சம்பளப் பட்டியல். வருமான வரி ரசீது போன்ற ஆவணங்கள் நீதிமன்றத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும்.
தொழில் முறையில் பிணையாளிகளாக இருந்தலன்றி, அவர்களது தனிப்பட்ட குண இயல்பு, அரசியல் கருத்துக்கள், பழைய குற்றவாளியா, ஆணா, பெண்ணா என்பதைக் காரணங்காட்டி பிணையாளிகளைத் தள்ளுபடி செய்யும் அதிகாரம் காவல் துறைக்கும், குற்றவியல் நீதித்துறை நடுவருக்கும் இல்லை.


Read more: http://ping.fm/anPPr
குழந்தைகளைக் கொஞ்சுவோம்

ஷம்சுல்லுஹா:

இறைவனின் அருள் வேதம் அருளப்படுவதற்கு முன் அரபியர்கள் தங்களுக்குப் பிறக்கும் பெண் குழந்தைகளைப் புதை குழிகளுக்கு அனுப்பிக் கொண்டிருந்தனர். இந்த நேரத்தில் தான் இறைவனின் வேதம் அருளப்பட்டு, அன்பின் அர்த்தம் அவர்களுக்குப் புரிய வைக்கப்பட்டது. வணக்க வழிபாடுகள் மூலம் மட்டுமே இறைவனின் அருளை அடைய முடியும் - அதல்லாத வழிகளில் அடைய முடியாது என்று நிலவி வந்த வறட்டுச் சிந்தனை வழியனுப்பி வைக்கப்பட்டது.

பெற்ற குழந்தைகள் மீது நாம் பொழிகின்ற அன்பு மழையில், பரிமாறிக் கொள்கின்ற பாச அலைகளில், இறைவனின் அருளை அடைய முடியும் என்று வளமான சிந்தனை வளர்க்கப்பட்டது.

இறைவனின் தூதர் நபி (ஸல்) அவர்கள் ஹஸன் பின் அலீயை முத்தமிட்டார்கள். அப்போது அவர்களுக்கு அருகில் அமர்ந்து கொண்டிருந்த அக்ரஃ பின் ஹாபிஸ் அத்தமீமி (ரலி), “எனக்குப் பத்து குழந்தைகள் இருக்கின்றன. அவர்களில் ஒருவரைக் கூட நான் முத்தமிட்டதில்லை” என்றார். அவரை ஏறெடுத்துப் பார்த்த இறைவனின் தூதர் நபி (ஸல்) அவர்கள், “அன்பு காட்டாதவர் அன்பு காட்டப்பட மாட்டார்” என்று கூறினார்கள்.


அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), நூல் : புகாரி 5997

ஒரு கிராமவாசி இறைவனின் தூதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “நீங்கள் சிறு குழந்தைகளை முத்தமிடுகின்றீர்களா? நாங்களெல்லாம் அவர்களை முத்தமிடுவதில்லை” என்று கூறினார். அதற்கு இறைவனின் தூதர் நபி (ஸல்) அவர்கள், “இறைவன் உமது இதயத்திருந்து அன்பைக் கழற்றி விட்ட பின்னர் உமக்காக நான் என்ன செய்ய முடியும்?” என்று கேட்டார்கள்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி), நூல் : புகாரி 5998

இந்த ஹதீஸ்கள், உனது குழந்தையின் பூ முகத்தில் நீ பதிக்கின்ற முத்தங்கள் இறைவனின் அருளைப் பெற்றுத் தரும் என்பதை உணர்த்துகின்றன. அவ்வாறு குழந்தைகளை முத்தமிடாதவரது இதயத்தில் அன்பை இறைவன் எடுத்து விட்டான், அவருக்கு இறைவனின் அன்பு கிடைக்காது என்று நபி (ஸல்) அவர்கள் கூறுவதை நாம் காண முடிகின்றது.

தொழுகை, தஸ்பீஹ், திக்ர், நோன்பு ஆகிய வணக்கங்கள் மூலம் மட்டுமே இறைவனின் அருள் கிடைக்கும் என்ற எண்ணத்தை இறைவனின் தூதர் நபி (ஸல்) அவர்கள் தகர்த்தெறிகின்றார்கள். அதனால் தான் தொழுகை என்பது இறைவனின் முன்னிலையில் நாம் நடத்துகின்ற உரையாடல் என்றிருப்பினும் குழந்தையின் அழுகைக் குரல் காதில் விழுந்து விட்டால் அதை அப்படியே சுருக்கி விட்டிருக்கின்றார்கள் என்பதைக் கீழ்க்கண்ட ஹதீஸ் விளக்குகின்றது.

“நீண்ட நேரம் தொழுவிக்கும் எண்ணத்துடன் நான் தொழுகையைத் துவக்குகின்றேன். அப்போது குழந்தையின் அழுகுரலை நான் கேட்கின்றேன். (என்னைப் பின்பற்றித் தொழும்) அந்தக் குழந்தையின் தாயாருக்குச் சிரமம் அளிக்கக் கூடாது என்பதால் தொழுகையைச் சுருக்கமாக முடித்து விடுகின்றேன்” என்று இறைவனின் தூதர் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூகதாதா (ரலி), நூல் : புகாரி 707, 709, 710
சோறு கொடுத்தால் சொர்க்கம்

தன் இரு பெண் குழந்தைகளைக் கூட்டிக் கொண்டு என்னிடத்தில் ஓர் ஏழைப் பெண் வந்தார். அவருக்கு நான் மூன்று பேரீச்சம் பழங்களைக் கொடுத்தேன். அவ்விரு குழந்தைகளுக்கும் (ஆளுக்கு) ஒரு பேரீச்சம் பழத்தைக் கொடுத்து விட்டு, ஒரு பேரீச்சம் பழத்தைத் தான் சாப்பிடுவதற்காக தனது வாய்க்குக் கொண்டு சென்றார். அப்போது அவ்விரு குழந்தைகளும் தங்களுக்கு சாப்பிடத் தருமாறு கேட்டன! தான் சாப்பிட நினைத்த அந்தப் பேரீச்சம் பழத்தை இரு துண்டுகளாகப் பிய்த்து (குழந்தைகளிடம்) கொடுத்தார். அந்தப் பெண்ணின் அச்செயல் என்னை ஆச்சரியப்பட வைத்தது. அவர் செய்த அந்தக் காரியத்தை நான் இறைவனின் தூதர் நபி (ஸல்) அவர்களிடம் தெரிவித்தேன். அதற்கு அவர்கள், “இதன் மூலம் இறைவன் அப்பெண்ணுக்கு சுவனத்தை விதித்து விட்டான்” என்றோ அல்லது “அப்பெண்ணுக்கு நரகிருந்து விடுதலை அளித்து விட்டான்” என்றோ கூறினார்கள்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி), நூல் : முஸ்லிம் 4764

பாருங்கள்! தனக்கின்றி தான் பெற்ற குழந்தைக்கு வழங்கும் அந்தத் தாய்க்கு இறைவனின் தூதர் நபி (ஸல்) அவர்கள் சொர்க்கம் என்கின்றார்கள். அந்தத் தாய் தன் குழந்தைகளுக்குக் காட்டிய கருணைக்காக - ஊட்டிய பேரீச்சம்பழங்களுக்காக இறைவன் அவரை சுவனத்திற்குக் கொண்டு செல்கின்றான்.

இன்று நம்முடைய புண்ணியமிகு தாய்மார்களுக்கு தாய்ப்பால் ஊட்டுவதற்குக் கூட வருத்தமாக உள்ளது. இறைவன் தன் திருமறையில் இரண்டு ஆண்டுகள் தாய்ப் பாலூட்டுமாறு கட்டளையிடுகின்றான். இதை இந்தத் தாய்மார்கள் பொருட்படுத்துவது கிடையாது. பாலூட்டுவதால் தங்கள் மேனி கட்டழகு கெட்டு விடும் என்று கற்பனை செய்து தங்கள் பிள்ளைகளுக்குச் செய்ய வேண்டிய மனிதாபிமானக் கடமையைச் செய்யத் தவறி விடுகின்றார்கள்.

நம்மைச் சுற்றி வலம் வருகின்ற ஆடு, மாடு போன்ற கால்நடைகள் தாங்கள் ஈனுகின்ற குட்டிகளுக்குப் பால் கொடுக்கத் தவறுவதில்லை. ஆனால் மனித இனத்தைச் சேர்ந்த இந்தப் புனிதவதியோ பெற்ற பிள்ளைக்கு புட்டி’ பாலைக் கொடுத்து, அந்தப் பால் மாவில் கலந்துள்ள இரசாயனக் கலவையின் மூலம் குடல் கோளாறு ஏற்பட வழிவகுக்கின்றாள்.

ஒரு குழந்தை அரை மணி நேரம் குடிக்கும் தாய்ப்பால் அதன் ஆயுள் முழுமைக்கும் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியைக் கொடுக்கின்றது என்று மருத்துவம் கூறுகின்றது. இந்தத் தாய் அதையெல்லாம் கண்டு கொள்ளாது காலா காலம் நோயில் சிக்கித் தவிக்க வழி வகுக்கின்றாள். இது மனிதப் பண்பா? என்பதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும். எனவே தாய்மார்கள் இதைக் கவனத்தில் கொண்டு தங்கள் குழந்தைகள் மீது உண்மையான பாசத்தைக் காட்ட வேண்டும். பாலூட்ட வேண்டும்.

நாகரீக மோகத்தில் இராப் பகலாய் பொருளீட்டுவதற்காகப் பாடுபடுகின்ற இயந்திர வாழ்க்கையில் தாய் தந்தையர்கள் தங்கள் பிள்ளைகளைக் குழந்தைக் காப்பகங்களில் விட்டு விடுகின்றனர். அல்லது உறவினர் வீட்டில் விட்டு விட்டு இயந்திர வாழ்க்கையில் ஐக்கியமாகி விடுகின்றார்கள்.

இந்தக் குழந்தைகளுக்கு உயர்தரமான உணவு, உறைவிடம், வாகனங்கள் என்று எல்லாவித வசதிகளும் தாராளமாகக் கிடைக்கின்றன. ஆனால் அந்தக் குழந்தைகளுக்குத் தேவையான தாயின் அன்பு அரவணைப்பு, தந்தையின் பாசப் பிணைப்பு கிடைக்காமல் விரக்தியாக, மனித சடலங்களாக வளர்கின்றனர். உலகத்தை வெறுத்து, வெறித்துக் பார்க்கின்றனர். இந்த வெறுமை அக்குழந்தைகளை ஒரு கால கட்டத்தில் தடம் புரள வைத்து விடுகின்றது.
இப்படிப்பட்ட படு மோசமான நிலைகளை விட்டு நீங்கி, குழந்தைகளுடன் பாசப் பிணைப்புடன் வாழ வேண்டும். குழந்தைகள் மீது இறைவனின் தூதர் நபி (ஸல்) அவர்கள் காட்டிய அன்பு அரவணைப்பை நாமும் காட்ட வேண்டும்.

குழந்தைகளுடன் இரண்டறக் கலந்து விடுதல்

இறைவனின் தூதர் நபி (ஸல்) அவர்கள் மக்களிலேயே நற்குணமுடையவராக விளங்கினார்கள். எனக்கு அபூ உமைர் என்று அழைக்கப்பட்ட ஒரு தம்பி இருந்தார். அப்போது அவர் பால்குடி மறக்க வைக்கப்பட்ட பருவத்தில் இருந்தார் என்றே எண்ணுகின்றேன். இறைவனின் தூதர் நபி (ஸல்) அவர்கள் (என் வீட்டிற்கு வந்தால்), “அபூஉமைரே! பாடும் உன் சின்னக் குருவி என்ன செய்கின்றது?” என்று கேட்பார்கள். அவன் அப்பறவையுடன் விளையாடிக் கொண்டிருப்பான்.
அறிவிப்பவர் : அனஸ் (ரலி), நூல் : புகாரி 6203
ஹராம் ஹலாலைக் கற்றுக் கொடுத்தல்

ஹஸன் (ரலி) ஸதகா(தர்மப்)பொருளான ஒரு பேரீச்சம்பழத்தை எடுத்து வாயில் போட்டார். இதைக் கண்ட இறைவனின் தூதர் நபி (ஸல்) அவர்கள், “சீ, சீ,” எனக் கூறி துப்பச் செய்து விட்டு, “நாம் தர்மப் பொருளைச் சாப்பிடக் கூடாது என்பது உனக்குத் தெரியாதா?” என்று கேட்டார்கள்.
(
ஹலால் என்றால் இறைவன் அனுமதித்த வழியில் பொருள் சம்பாதித்து, இறைவன் அனுமதித்த உணவை உண்ணுவது
ஹராம் என்றால் இறைவன் தடுத்த வழியில் பொருள் சம்பாதித்து, இறைவன் தடுத்த உணவை உண்ணுவது
ஹலால் என்றால் நேர்மையான முறையில் சம்பாதித்து நல்லவற்றை உண்ணுவது
ஹராம் என்றால் தவறான முறையில் சம்பாதித்து கெட்டவற்றை உண்ணுவது
ஹராம் என்றால் அடுத்தவனுடைய பொருளை உணவை எடுப்பது உண்பது
)
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), நூல் : புகாரி 1491

கையிலெடுத்துக் கொஞ்சுதல்

இறைவனின் தூதர் நபி (ஸல்) அவர்கள் என்னையும், ஹஸன் (ரலி) அவர்களையும் கையிலெடுத்து, “இறைவா! இவர்கள் இருவரையும் நான் நேசிக்கின்றேன். நீயும் நேசிப்பாயாக!” என்று பிரார்த்திப்பார்கள்.
அறிவிப்பவர் : உஸாமா பின் ஸைத் (ரலி), நூல் : புகாரி 3735

இறைவனின் தூதர் நபி (ஸல்) அவர்களிடம் ஒரு ஆண் குழந்தை கொண்டு வந்து கொடுக்கப் பட்டது. அக்குழந்தை அவர்களின் ஆடையில் சிறுநீர் கழித்து விட்டது. அப்போது தண்ணீர் கொண்டு வரச் சொல் அதை சிறுநீர் பட்ட இடத்தில் ஊற்றினார்கள்.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி), நூல் : புகாரி 222


குழந்தைகளின் மீது இறைவனின் தூதர் நபி (ஸல்) அவர்களைப் போல் அன்பு காட்டி, அரவணைத்து, அவர்களுக்கு நேர்வழியைக் கற்றுக் கொடுத்து இறைவனின் அருளைப் பெறுவோமாக!



__._,_.___
Source: http://www.naanmuslim.com/2012/06/blog-post.html?showComment=1340486393882#comment-c681018601128255699


1.முஸ்லிம்களுக்கு தமிழக JJ அரசின் பச்சைத் துரோகம்!

முஸ்லிம்கள் கொந்தளிப்பு! – முற்றுகைப் போராட்டம் அறிவித்தது டிஎன்டிஜே!!

தமிழக அரசு ஒப்பந்தப் பயிற்சி மருத்துவர் பணி நியமனத்தில் மிகப்பெரிய பச்சைத் துரோகத்தை முஸ்லிம்களுக்கு இழைத்துள்ளது.

முன்பெல்லாம் முஸ்லிம் சமுதாயத்திற்கு வழங்கப்பட்ட 3.5சதவீத இடஒதுக்கீட்டை 2 சதவீதம், அல்லது 2.5சதவீத வீதம் என இட ஒதுக்கீட்டைக் குறைத்து வழங்கி துரோகமிழைத்து வந்த தமிழகஅரசு தற்போது ஒரு இடம் கூட வழங்காமல் கோழி முட்டையை முஸ்லிம்களுக்கு வழங்கி தன்னுடைய முஸ்லிம் விரோதப் போக்கை வெளிப்படுத்தியுள்ளது.

நான் ஆட்சிக்கு வந்தால் முஸ்லிம்களின் இட ஒதுக்கீட்டை உயர்த்தித் தருவேன் என வாக்களித்து முஸ்லிம்களின் வாக்குகளைப் பெற்ற ஜெயலலிதா, ஆட்சிக்கு வந்து ஓராண்டு நிறைவடைந்த பின்னரும் அந்த வாக்குறுதி பற்றி வாய் திறக்கவில்லை.

அடிக்கடி தேவையில்லாத விஷயங்களுக்கு எல்லாம் சட்டசபையில் அறிக்கை வாசிக்கும் ஜெயலலிதா முஸ்லிம்களின் இட ஒதுக்கீடு குறித்து வாய் திறந்ததில்லை.

இந்த நிலையில் ஜெயலலிதா முஸ்லிம்களின் இட ஒதுக்கீட்டை உயர்த்தித் தருவதற்குப் பதிலாக அவர் பாஷையில் பட்டை நாமம் போட்டுள்ளார்.

கடந்த மார்ச் மாதம் தமிழகத்தில் 1349 மருத்துவர்கள் அரசு மருத்துவப் பணிக்காகப் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

முஸ்லிம்களுக்கான 3.5சதவீத இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் 47 மருத்துவர்கள் நியமிக்கப்பட்டிருக்க வேண்டும்.

இட ஒதுக்கீடு அடிப்படையில் மட்டும் இல்லாமல் பொதுப்பிரிவில் தகுதியான முஸ்லிம்கள் தேர்வு செய்யப்பட முடியும். அந்த வகையில் 20 நபர்களாவது தேர்வு செய்யப்பட்டிருக்க வேண்டும்.

இட ஒதுக்கீட்டின் அடிப்படையிலோ, பொதுத்தேர்வு அடிப்படையிலோ எந்த முஸ்லிமும் தேர்வு செய்யப்படவில்லை. ஒரே ஒரு முஸ்லிமைக் கூட இந்த அரசு நியமிக்கவில்லை.

இதோ தேர்வு செய்யப்பட்டவர்களின் பெயர் பட்டியல்:
அரசால் தேர்வு செய்யப்பட்ட மருத்தவர்களின் முழு பட்டியலை காண இங்கே கிளிக் செய்யவும்

கடந்த முறை இதே போன்று மருத்துவ பணி நியமனத்திற்காக அழைக்கப்பட்ட 2438 மருத்துவர்களில் 88 முஸ்லிம்கள் உள்ளனர்.
சரியாக 3.5 % வழங்கப்பட்டுள்ளது.

பொதுப்பிரிவில் முஸ்லிம்கள் தேர்வு செய்யப்படாததால் இதுவே முஸ்லிம்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது.

ஆனால் இப்போது செய்யப்பட்டுள்ள பச்சைத் துரோகம் இந்திய அரசியல் வரலாற்றில் பீஜேபி கூட செய்யத் துணியாத பச்சைத் துரோகமாகும்.

ஒரு முஸ்லிம் கூட நியமிக்கப்படக் கூடாது என்ற அளவுக்கு இவர்கள் வெறிபிடித்து அலைவதற்குக் காரணம் என்ன?

3.5 சதவிகிதம் இட ஒதுக்கீடு அளிக்க சட்டம் இருந்தும் அதைக் கூட காலில் போட்டு மிதிக்கும் அளவுக்கு இவர்களுக்குத் துணிவு வரக் காரணம் என்ன?

இந்த அநீதி சரி செய்யப்பட்ட வேண்டும்.

முஸ்லிம்கள் பொதுப்பிரிவிலும் சேர்த்து 70 பேர் உடனடியாக நியமிக்க வேண்டும்.

இதற்குக் காரணமான அதிகாரிகள் மீதும், அமைச்சர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தனது அறிக்கையில் கூறியுள்ளதோடு சென்னை கிரீன்ஸ் ரோட்டிலுள்ள டிஎன்பிஎஸ்ஸி அலுவலகத்தை முற்றுகையிட்டு முஸ்லிம்களின் எதிர்ப்பைத் தெரிவிக்க, மாபெரும் முற்றுகைப் போராட்டத்தை 14.06.12 வியாழன் அன்று காலை 11மணிக்கு நடத்துவது என்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சென்னை மாவட்டம் அறிவித்துள்ளது.

பயிற்சி ஒப்பந்த மருத்துவர்கள் பணிநியமனத்தில் மட்டுமல்லாது, நூலகர்களை பணியமர்த்திய விஷயத்திலும் இந்த துரோகம் தொடர்கின்றது.

2.முஸ்லிம்களுக்கு தமிழக JJ அரசின் பச்சைத் துரோகம்!

தமிழ்நாட்டில் மொத்தம் 32 மாவட்டங்கள் உள்ளன. விழுப்புரம் மாவட்டத்தில் 41 நூலகர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதிலும் ஒரு முஸ்லிமுக்குக் கூட இடம் வழங்கப்படவில்லை.

இது போன்று தமிழகத்திலுள்ள 32 மாவட்டங்களிலும் நூலகர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அந்த 32 மாவட்டங்களிலும் இதுதான் நிலை என்று சொல்லப்படுகிறது.

இதன் மூலம் தமிழக அரசு முஸ்லிம்களுக்கு மிகப்பெரும் துரோகம் செய்துள்ளது அம்பலமாகியுள்ளது.

வேண்டுமென்றே திட்டமிட்டு முஸ்லிம்களை அனைத்து அரசுப்பணிகளிலும் அப்புறப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் தமிழக அரசு இவ்வாறு செயல்பட்டு வருவது இதன் மூலம் உறுதியாகின்றது.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், சீருடைப் பணியாளர் தேர்வாணையம், ஆசிரியர் தேர்வாணையம் ஆகியவை மூலம் போட்டித் தேர்வு நடத்தி, தமிழக அரசு பணியாளர்களை நியமித்து வருகிறது.

இதுபோல் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தின் மூலம் பதிவு மூப்பு அடிப்படையிலும் ஏராளமானோரை தமிழக அரசு பணிக்கு நியமித்து வருகிறது.

இது போக சத்துணவு அமைப்பாளர், சமையலர், உதவியாளர் என பல்லாயிரம் பேரை மாவட்ட ஆட்சியர் மூலம் தேர்ந்தெடுக்கிறது.

நகராட்சி மூலம் பேட்ஜ் டிரைவர் போன்றவர்களும் பணியமர்த்தப்படுகிறார்கள்.
இந்த அரசு வேலை வாய்ப்புகள் அனைத்திலும் முஸ்லிம்கள் 3.5 சதவீத அடிப்படையில் நியமிக்கப்படவில்லை.

மாறாக வஞ்சக எண்ணத்துடன் இவர்கள் ரகசியமாக புறக்கணிக்கப்பட்டுள்ளனர் என்று முஸ்லிம்கள் குமுறுகின்றனர்.

முஸ்லிம்களின் இட ஒதுக்கீட்டை அதிகரிப்போம் என்று வெற்று வாக்குறுதி அளித்து முஸ்லிம்களை ஒரு புறம் ஏமாற்றிக் கொண்டு, மற்றொரு புறத்தில் அவர்களுக்கு ஏற்கனவே இருக்கும் 3.5 சதவீத இட ஒதுக்கீடையும் பறிக்கும் அ.தி.மு.க. வின் செயல் மிகவும் கண்டனத்திற்குரியது.

எனவே தமிழக அரசு உடனே வெள்ளையறிக்கை வெளியிட்டு, முஸ்லிம்களுக்கு 3.5 சதவீத இட ஒதுக்கீடு அமுல்படுத்தப்பட்ட நாள் முதல் இன்று வரை தமிழக அரசின் எத்தனை பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன.

அதில் முஸ்லிம்களுக்கான 3.5சதவீத அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளனவா? என்பதை தெளிவுபடுத்த வேண்டும்.

இட ஒதுக்கீடு அடிப்படையில் முஸ்லிம்களுக்கு வாய்ப்பு தந்திருந்தால் அதை தெளிவுபடுத்த வேண்டும்.

வாய்ப்புத் தராமல் முஸ்லிம்களை புறக்கணித்திருந்தால் அவர்களுக்கான வாய்ப்புகளை வழங்க போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும்.



__._,_.___
Muhammad shahjahan ✆ md_shahjahan2001@yahoo.com
26 Jun (1 day ago)

to mohamed


Re: ஸஹாபாகள் விளக்கமும் அதன் அவசியமும்
வ அலைக்குமுஸ் ஸலாம் வரஹ்..,

சஹாபாக்களிடம் இருந்த கல்வியை மூன்று வகையாக பிரிக்கலாம்.

1 . பரிபூரணமான விளக்கம்
2 . சஹிஹான கல்வி
3 . சாலிஹான அமல்கள் .

அதாவது, பரிபூரணமான விளக்கம் என்றால், நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் நேரடியாக பெற்ற விளக்கம். சஹிஹான கல்வி என்றால், எந்த விதமான கலப்படமும் இல்லாத, இட்டுகட்டப்பட்ட , பொய்யான , களங்கமான என்ற எந்தவிதமான மாசும் இல்லாத தூய்மையாக ஏழு வானத்தின் மேல் இருந்து நேரடியாக இறங்க்கப்பட்ட கல்வி.

எங்களுடைய எந்த கல்வியை எடுத்தாலும், அது அகீதாவாக இருந்தாலும் வரலாறாக இருந்தாலும், பிஃஹ் ஆக இருந்தாலும் பொய்யும், இட்டுக் கட்டப்பட்ட , களங்கமான செய்திகள் கலக்கப்பட்டு , உலமாக்களால் பிரித்து துப்பரவு செய்யப்பட வேண்டியவைகள்.

ஏனெனில், புத்தி ஜீவிகள் என்று சொல்லக்கூடிய அநியாயக்காரர்களால் திரிக்கப்பட்டு, மாசுபடுத்தப்பட்டு, மனோ இச்சைகள் திணிக்கப்பட்டவைகள் அல்ல.

அதனால் தான் அல்லாஹ் சுபஹானஹுதாலா காலத்துக்கு காலம், சிறப்பான அறிஞர்களை வெளியாக்குகிறான் என்று இமாம் இப்னு தைமியா அவர்கள் மஜ்மூ பதாவாவில் குறிப்பிடுகிறார்கள். எந்த வழிகேடர், எந்த அநியாயக்காரன் இந்த மார்க்கத்தில் எதனை புகுத்தினாலும் அதனை துப்பரவு செய்ய காலத்துக்கு காலம் அல்லாஹ் சிறப்பான உலமாக்களை அனுப்பிக்கொண்டு இருக்கிறான்.

சாலிஹான அமல் என்றால் அவர்களுடைய அத்துணை நடவடிக்கைகளும் சாலிஹானதாக தான் இருந்தது. அதனால் தான் அல்லாஹ் அவர்களை ஏழு வானத்தில் இருந்து ரலியல்லாஹு அன்ஹு வரலு அன்ஹு என்று புகழ்ந்து பாராட்டியுள்ளான்.

எனவேதான், இந்த சிறப்பான மூன்று பண்புகளை அந்த அருமை சஹாபாக்கள் கொண்டதனால்தான், அவர்களிடம் இருந்து நாம் கல்வியை, விளக்கத்தை பெற்று கொள்ள வேண்டும் என்று இமாம் இப்னு கஸீர் ரஹீமஹுல்லாஹ் அவர்கள், தப்ஸீர் இப்னு கஸீர் நூலில் குறிப்பிடுகிறார்கள்.

இது போன்று ஏனைய இமாம்களும் தங்களுடைய நூற்களில் அருமை சஹாபாக்களை விளக்கத்தில் தான் அல்குர் ஆனையும் சுன்னாவையும் விளங்க வேண்டும் என்று குறிப்பிடுகின்றார்கள்.

இமாம் முஸ்லிம் ரஹீமஹுல்லாஹ் அவர்களும் தங்களுடைய ஸஹிஹ் முஸ்லிம் கிரந்தத்தின் முன்னுரையில் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்கள்.

எவன் ஸலபுஃஸ் ஸாலிஹீன்களை திட்டுகிரானோ அவனிடம் கல்வி பெறவேண்டாம் என்று எச்சரிக்கிறார்கள். ஏனெனில், ஸலபுஃஸ் ஸாலிஹின்களில் முதன்மையானவர்கள் அருமை சஹாபாக்கள் ஆவார்கள். அவர்களை திட்டுபவனிடம் இருந்து கல்வி பெறுவதை, இமாம் முஸ்லிம் (ரஹ்) அவர்கள் தடை செய்கிறார்கள்.

இதே போன்று, ஸஹீஹுல் புகாரிக்கு விளக்கம் எழுதிய இமாம் இப்னு ஹஜர் அல் அஸ்கலாணி (ரஹ்) அவர்கள், பத்ஹுல் பாரியின் கடைசி பாகத்தில் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்கள். அதாவது, அவர்கள் விளக்கமாக எழுதியவைகள் அனைத்தும் சஹாபா விளக்கத்தில் இருந்து பெறப்பட்டவைகள் என்று.

இதே போன்று, முஅத்தா மாலிக் நூலை எடுத்துக் கொண்டால், இமாம் மாலிக் (ரஹ்) அவர்களும் சஹாபா விளக்கத்தை அடிப்படையில் தான் கிதாபையே தொகுத்துள்ளார்கள். மேலும் அவர்கள் கூறினார்கள், அதாவது இந்த முஸ்லிம் உம்மத் சீர் பெற வேண்டுமெனில், அந்த சஹாபா சமூகம் சென்ற பாதையில் சென்றால் தான் சீர் பெற முடியும் என்றும் குறிப்பிடுகின்றார்கள்.

அதே போன்று இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல் ரஹீமஹுல்லாஹ் பின்வருமாறு கூறுகிறார்கள். எங்களிடம் சுன்னா என்பது, அஹ்லுஸ் சுன்னாஹ் உலமாக்களிடம் சுன்னா என்பது, நபியும், சஹாபாக்களும் எதில் இருந்தார்களோ அதுதான் என்பதாக குறிப்பிடுகிறார்கள்..

இவ்வாறு, அஹ்லுஸ் சுன்னாஹ் உலமாக்களின் எந்த நூலை எடுத்தாலும் சஹாபா விளக்கம் அடிப்படையில் எழுதப்படாத ஒரு நூலை காண முடியாது. அவர்களின் அனைத்து நூல்களும் சஹாபா விளக்கத்தை அடிப்படையில் தான் எழுதப்பட்டு உள்ளன.

எனவே, சஹாபாகளின் விளக்கத்தை தவிர்ந்துக் கொண்டு மார்க்கப் பிரச்சாரம் செய்யவந்தது மிகப் பெரிய கைசேதமும், துர்பாக்கியமுமாகும்.

எனவே, பொது மக்களின் கடமையாகிறது , இந்த மார்க்கத்தை சஹாபாகள் விளக்கத்தில் தந்தால் எடுத்துக் கொள்வது ஆகும். இதனை, இமாம் பர்பஹாரி ரஹீமஹுல்லா பின்வருமாறு சுட்டிக் காட்டுகிறார்கள்.

உங்களுடைய காலத்தில் ஒரு மனிதர் ஒரு விடயத்தை சொன்னால் , அதனை எடுத்தது நடப்பதில் அவசரப்பட்டு விடாதீர்கள். அதனை நல்ல முறையில் சீர்தூக்கி பாருங்கள. நல்ல முறையில் கவனித்து பாருங்கள். இந்த விஷயத்தை சஹாபாக்கள் இப்படிதான் சொன்னார்களா என்று பாருங்கள் . அஹ்லுஸ் சுன்னாஹ் உலமாக்கள் ஏதும் சொல்லி இருக்கிறார்களா என்று பாருங்கள். சஹாபாக்கள் அந்த விடயத்தை பேசவில்லை என்றால் , ஸலபுஃஸ் ஸாலிஹீன்கள் அந்த விடயத்தில் பேசவில்லை என்றால், அதனை விட்டும் ஒதுங்கி விடுங்கள்.

இதனை 8 வது குறிப்பாக ஸரஹ் சுன்னாஹ் என்ற நூலில் குறிப்பிடுகின்றார்கள். எனவே, அல்குர் ஆனையும் சுன்னாவையும் சஹாபா விளக்கத்தில் பெற்றுக் கொள்ளுங்கள்.

இன்னும் ஸஹாபாக்கள் செய்த தவறுகள் என்னென்ன என்பதை யாராவது பட்டியலிட்டு தந்தால் அதை அஹ்லுஸ் ஸுன்னா இமாம்கள் எவ்வாறு அனுகினார்கள் என்பதை பார்க்கலாம் இன்ஷாஅல்லாஹ்.
--
_______________
Thanks & Regards,

S.A.SULTHAN


2012/6/25 Abu Noora
அஸ்ஸலாமு அலைக்கும்

அன்புச் சகோதரரே,

நீங்கள் பகிர்ந்து கொண்ட கட்டுரையின் தலைப்புக்கு எவ்விதத்திலும் ஆதாரம் தராத வகையிலான கட்டுரையாகவே இது அமைந்துள்ளது.

அதிலும் குறிப்பாக ஒரு இறை வசனம் இதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

وَالسَّابِقُونَ الْأَوَّلُونَ مِنَ الْمُهَاجِرِينَ وَالْأَنصَارِ وَالَّذِينَ اتَّبَعُوهُم بِإِحْسَانٍ رَّضِيَ اللَّهُ عَنْهُمْ وَرَضُوا عَنْهُ وَأَعَدَّ لَهُمْ جَنَّاتٍ تَجْرِي تَحْتَهَا الْأَنْهَارُ خَالِدِينَ فِيهَا أَبَدًا ۚ ذَٰلِكَ الْفَوْزُ الْعَظِيمُ

“முஹாஜிர்களிலும் அன்சாரிகளிலும் முன்னைய முந்தியவர்கள் மேலும் அவர்களை நன்முறையில் பின்பற்றினார்களே அவர்கள் அவர்களை அல்லாஹ் பொருந்திக்கொண்டான். மேலும் அவர்கள் அவனைப் பொருந்திக்கொண்டார்கள். மேலும் அவற்றுக்குக் கீழே ஆறுகள் ஓடக்கூடிய சுவனங்களை அவர்கள் அவற்றில் நிரந்தரமாக இருக்கும் நிலையில் அவன் அவர்களுக்கு தயார் செய்து வைத்துள்ளான். அது மகத்தான வெற்றியாகும்”. (09:100)

மேற்கண்ட வசனத்தில் அல்லாஹ் யாரைப் பொருந்திக்கொண்டானோ அவர்களை பற்றி மட்டுமே குறிப்பிடுகின்றானே தவிர நபித்தோழர்கள் என அறியப்பட்ட அனைவரையும் குறிப்பிடவில்லை என்றே நினைக்கிறேன்.

பின்வரும் குறிப்பை மேற்கண்ட வசனத்துக்கு முன்னுரையாக பொறித்து வைத்துள்ளனர்.

//இம்மாமனிதர்களை சந்தேகத்துக்கு இடம் வைக்காது அல்லாஹ் அவர்களை மிகச் சரியான அளவுகோல் கொண்டு அளந்து விட்டான். அவர்கள் யார்? அவர்களின் சிறப்பு, மகிமை, அந்தஸ்து என்ன? இதோ குர்ஆனும் ஸுன்னாவும் பட்டவர்த்தனமாகப் பேசுகின்றன.//

இந்த முன்னுரையில் கூட அவர்கள் பின்பற்றத் தக்க நபர்கள் என்ற வாசகத்தை குறிப்பிடாமல் உள்ளதிலிருந்தே முறையான ஆதாரம் தராமல் சிலாகித்தலின் மூலம் தலைப்பு கூறும் கருத்தை நிலைநாட்டலாம் என்ற போங்கு தெரிகிறது

சஹாபாக்களுடைய வெளிப்படையான நடத்தையின் மூலம் நாம் அவர்களை எவ்வாறு அறிந்து வைத்துள்ளோமோ அதைத் தாண்டி எந்த விவகாரத்திலும் மார்கத்துடன் இணைத்துக் கூறும் அதிகாரம் எவருக்கும் இல்லை.

மேலும் நபிகள் நாயகம் அவர்களை நாம் பின்பற்றுவது கூட வஹியின் அடிப்படையிலேயே அன்றி அவர்கள் தாமாக உருவாக்கி வழங்கிய எந்த ஒன்றையும் அல்ல. நிலைமை இவ்வாறிருக்க ஸஹாபாக்களின் விளக்கங்களை பின்பற்றவேண்டியதன் அவசியம் என்ற தலைப்புடன் ஆதாரமின்றி நிறுத்திக்கொள்தால் ஆகாது.

தயவு செய்து குர்ஆனிலிருந்தோ அல்லது நபிகள் நாயகம் அவர்களின் அறிவிப்பிலிருந்தோ உரிய ஆதாரத்தை வைத்தால் அதுவே ஏற்கத்தக்க ஒன்றாக ஆகும்.

அன்புடன் அபூ நூறா
--
ஒரு மனிதன் தானும் தன்னைச் சார்ந்தவரும் செய்கின்ற தவற்றை மறைப்பதற்காகவும், தன்னை சமூகத்தில் “நல்லவன்” போல் காட்டிக்கொண்டு அதை மற்றவர் முன் நடித்து வெளிப்படுத்துபவர்களும் பயன்படுத்தும் ஆயுதமே “பொய்”

சிலருக்கு பொய் கூறுவதென்பது குற்றால அருவியிலிருந்து நீர் கொட்டுவது போல் அவ்வளவு சுலபமாக வரும். எதற்கெடுத்தாலும் நூர் லாட்ஜ் கடை “ஹல்வா” போல பொய்யைத் தயாராக வைத்திருப்பார்கள். இவர்களுக்கு தங்களின் பொய்யினால் காரியத்தை சாதித்து விட்டோம் என்ற “கெத்து” வேறு. ஒருவன் “பொய்” சொல்லும் போது அவனின் கண் புருவங்களையும், உதட்டையும் கவனித்தாலே போதும்......காட்டிக்கொடுத்து விடும்.

1. விளையாட்டுக்காகவும், அடுத்தவர்களை சிரிக்க வைப்பதற்காகவும் பொய் சொல்பவரும் சரி.............

2. இல்லாத ஒன்றை மிகைப்படுத்தி தன்னிடம் இருப்பதாக கூறிக்கொள்பவரும் சரி..............

3. தன்னிடம் இருக்கும் ஒன்றை இல்லாதது போல் காட்டிக்கொள்பவரும் சரி...............

4. வீட்டில் இருந்துகொண்டே இல்லை என அவரிடம் சொல் என சொல்பவரும் சரி.............

5. ஒரு பொய்யைச் சொல்லி அதை மறைப்பதற்கு மீண்டும் மீண்டும் பொய்யைச் சொல்பவரும் சரி.............

6. சமூகத்தில் தன்னை உயர்த்திக் காட்டுவதற்காக பொய் சொல்பவரும் சரி.............

7. வியாபாரத்திற்காக பொய்யை மூலதனமாக பயன்படுத்துபவர்களும் சரி............

8. பொய்யானக் காரணத்தைக் கூறி கடன் கேட்பவர்களும் சரி.............

9. பிறருக்காக சாட்சி சொல்லும்போது பயன்படுத்துபவர்களும் சரி...............

10. இறைவன் மீது பொய் சத்தியம் செய்பவர்களும் சரி..............

என சமூகத்தில் இருக்கத்தான் செய்கின்றனர்.

பொய் சொல்பவனுக்கு தான் சொன்ன ஒரு பொய்யை மறைக்க பல மடங்கு பொய்கள் சொல்லக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டு, இதனால் யாருக்கு எந்த இடத்தில் என்ன சொன்னோம் என்பதும் மறந்து, வாழ்க்கையில் சிக்கலான நிலை ஏற்படக்கூடிய அபாய நிலைக்கு தள்ளப்பட்டு விடுகிறார்கள்.

மேலும் பொய் பேசுவது என்பது மனித சமுதாயத்தை சீர்கேட்டிற்கு இட்டுச் செல்லும் ஒரு தீயச்செயலாகும். இப்படி தனி மனித ஒழுக்கத்திற்கும், பிறர் நலனுக்கும் கேடுவிளைவிக்கும் இத்தகைய ஈனச்செயலை விட்டொழிக்க முன்வர வேண்டும்.

இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்ட சூழல்கள் :

அல்குர்ஆன் மற்றும் சுன்னாவின் அடிப்படையில் பொய் பேசுவது என்பது அனைத்து விஷயங்களிலும் தடுக்கப்பட்டுள்ளது. ஆனால் குறிப்பிட்ட கீழ்கண்ட மூன்று விஷயங்களில் அளவுக்கு மீறாமல் பொய் அனுமதிக்கப்பட்டுள்ளது, அதாவது எந்த மனிதனுக்கும் ஏதாவது ஒருவகையில் நஷ்டமோ அல்லது குழப்பமோ அல்லது தீமையோ ஏற்படாது என்றிருந்தால்

1. போரின் போது.....
2. சண்டையிட்டுக் கொள்ளும் இருதரப்பினரை சமாதானப்படுத்த.....
3. ஒரு கணவன் தன் மனைவியிடமும், மனைவி தன் கணவனிடமும் அன்பையும், பாசத்தையும், பரிமாறிக்கொள்ள.....

போன்றவற்றிற்கு கூறிக்கொள்ளும் பொய் அனுமதிக்கப்பட்டதாகும்.

அல்லாஹ் நம் அனைவரையும் அவன் வகுத்த நேரான வழியில் வாழ துணை புரிவானாக ! ஆமின் !

சேக்கனா M. நிஜாம்
இறைவன் நாடினால் ! தொடரும்....http://ping.fm/Dhgl9


--


ALAVUDEEN
குழந்தைகள் பாதுகாப்பு -சில டிப்ஸ்

Posted by Sathik Ali
உறவுகளில் திருமணம் செய்து கொள்வது பிறக்கும் குழந்தைகள் குறையுடன் பிறக்கும் வாய்ப்பு அதிகம்.
கர்ப்பிணிகள் மருத்துவர் ஆலோசனையின்றி கண்ட கண்ட மாத்திரைகள் சாப்பிடுவது கருவில் இருக்கும் குழந்தைக்கு நிச்சயம் பாதிப்பு உண்டாக்கும்.
சிகரெட், போதைப் பொருட்கள் தாய் உபயோகிப்பது கருவில் உள்ள குழந்தையைப் பாதிக்கும்.
தாய் உண்ணும் உணவில் போதிய சத்துக்கள் குறைவு, மன அழுத்தம் வயிற்றிலிருக்கும் குழந்தையை பாதிக்கும்.
குழந்தகளின் பால் புட்டிகளை நிப்பிள்களை கொதிக்கும் நீரில் போட்டு கிருமி நீக்கம் செய்து பால் நிரப்பிக் கொடுக்கவும். வாரம் ஒரு முறை நிப்பிளை மாற்றவும்
மீதம் வைத்த பாலை சிறிது நேரம் கழித்துக் கொடுக்கக் கூடாது. கொட்டி விடவும்.
குழந்தைகளை தலைக்கு மேல் தூக்கிப் போட்டு விளையாட்டுக் காட்டக் கூடாது.
சின்ன சின்னப் பொருட்கள் தரையில் கிடந்தால் உடனே அதை எடுத்து மாற்றி விடுங்கள். குழந்தைகள் அதை எடுத்து வாயிலோ மூக்கிலோ போட்டுக் கொள்ளாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.
சுவர் விளிம்புகள், கதவு மேஜை விளிம்புகள் கூராக இல்லாமல் பார்த்து அமைக்கவும்.
குழந்தைகள் அறைக்குள் சென்று கதவை தாள் போட்டுக் கொள்ளா வண்ணம் உயரமாக தாள்பாளை அமைக்கவும்.
குழந்தைகளுக்கான மருந்து குப்பியில் வேறு எதையும் ஊற்றி வைக்காதீர்கள் அவசரத்தில் மருந்தென்று மறந்து கொடுத்து விடுவோம்.
கத்திகள், ஊசிகள், கத்திரிகள், மருந்து மாத்திரைகள் ஆகியவற்றை குழந்தைக்கு எட்டாத இடத்தில் வைக்கவும்.
குழந்தைக்கு எட்டாத இடத்தில்தான் மண்ணெண்ணெய், பினாயில் போன்றவற்றை வைக்கவேண்டும். முக்கியமாக ஒன்றரையிலிருந்து இரண்டரை வயதுக் குழந்தை உள்ளவர்கள் வீட்டில் இந்த விஷயத்தில் மிகவும் முன்னெச்சரிக்கை தேவை.
கொசுவர்த்தி சுருள்கள் மூடிய அறைக்குள் மூச்சுத் திணறலை உண்டாக்கும். கொசு வலை தான் நல்லது. கொசுவிரட்டி மருந்துகள் குழந்தைக்கு எட்டாத இடத்தில் வைக்கவும்.
இரும்பு பீரோக்களைப் பற்றிப் பிடித்து குழந்தகள் ஏறும். அப்படியே பீரோ சரிந்து விழுந்து குழந்தையை நசுக்கி விடும். பீரோக்களை சுவருடன் அசையாமல் பிணைத்து வைக்கவும்.
ஜிப் வைத்த உடைகளை முடிந்த அளவுக்கு தவிர்க்கலாம். அல்லது உள்ளாடை அணிவித்த பிறகு அதுபோன்ற உடைகளை அணிவிக்க வேண்டும். (ஜிப்பை இழுக்கும்போது தோலோடு சிக்கிக் கொண்டுவிட்டால்?!)
தொட்டிகள் அல்லது பெரிய பாத்திரங்களில் தண்ணீர் நிரப்பி திறந்து வைக்காதீர்கள் .குழந்தை உள்ளே விழ சான்ஸ் இருக்கிறது.
சமையலறையில் முடிந்தவரை குழந்தை செல்லாமல் தவிர்க்கப் பாருங்கள். இடுப்பில் குழந்தையைத் தூக்கிக்கொண்டே கொதிக்கும் ரசத்தை ஒரு அம்மா இறக்கி வைத்திருக்கிறார். அப்போது குழந்தை சற்றே திமிர, ரசம் குழந்தையின் காலில்பட்டு, அங்கு தோல் வழன்றுவிட்டது.
கதவை திறந்து குழந்தை சாலையில் சென்று விடாமல் இருக்க கதவு தாள்பாள் கைக்கு எட்டாத உயரத்தில் வைக்கவும்.
பெட் ரூமில் படுத்துக் கொண்டே சுவிட்ச் போட தாழ்வாக சுவிட்ச் போர்டுகளும் ப்ளக் பாயின்றுகளும் சில இடங்களில் இருக்கும். குழந்தைகள் பேனா அல்லது கம்பியை ப்ளக் பாயின்றுக்குள் செருகி மின்சாரத் தாக்குதலுக்கு ஆளாகலாம். அத்தகைய இடங்களில் பாதுகாப்பான விஷேச ப்ளக் பாயின்றுகள் உபயோகிக்கலாம் அல்லது அத்தகைய மின் இணைப்பைத் தவிர்க்கலாம்.
வீட்டில் உபயோகப்படுத்தும் எலெக்ட்ரானிக் பொருட்களின் மின் இணைப்புகள் குழந்தைகள் கை படாத வகையில் இருக்க வேண்டும்.
மிக்ஸி, கிரைண்டர் உபயோகம் முடிந்தால் சுவிட்சை அணைப்பதோடு ப்ளக்கையும் உருவிப் போடுவது நல்லது. சுவிட்ச் போட்டு விளையாடுவது குழந்தைகளுக்கு ரொம்பப் பிடிக்கும்.
மொபைல் ,எலெக்ட்ரிக் ரேசர் போன்ற பொருட்களை குழந்தைகள் தண்ணீருக்குள் தூக்கிப் போட்டு விடலாம் அல்லது பிரித்து மேய்ந்து விடலாம் எனவே அதை விளையாடக் கொடுக்காதீர்கள்.
இஸ்திரி செய்து விட்டு இஸ்திரி பெட்டியை சூடாக குழந்தைகள் அருகே விட்டு செல்லக் கூடாது.
சுமார் ஒரு வயது வரை தரைமட்டத்தில் உள்ள பொருள்களைக் கையாளும் குழந்தை அதற்குப் பிறகு எதையாவது பிடித்துக் கொண்டு நிற்கவேண்டும், நடக்க வேண்டும் என முயற்சிக்கிறது. ஸ்டூலைப் பிடித்துக் கொண்டு நிற்பது, டைனிங் டேபிளில் உள்ள துணியை இழுப்பது போன்ற முயற்சிகளையெல்லாம் செய்யும் காலகட்டம் இது என்பதால் அதிக விழிப்புணர்வோடு இருக்க வேண்டும்.
சுமார் இரண்டு வயதில் ஸ்டூலின்மீது ஏறுவது மட்டுமல்ல. பிற சாகசங்களையும் செய்து பார்க்க முயற்சிக்கிறது. மேஜை டிராயரை இழுக்க முயற்சிக்கிறது. நம்மைப் போலவே காஸ் லைட்டரை அழுத்திப் பார்க்க ஆசைப்படுகிறது. சிகரெட் லைட்டர், காஸ் லைட்டர் ஆகியவற்றை குழந்தைகளுக்கு எட்டாத இடங்களில் வைத்திருப்பது மிக அவசியம்.
ஏணிப்படிகளில் ஏற குழந்தைகள் முயற்சிக்கும். சிறு குழந்தைகள் அவ்வாறு ஏறாமல் இருக்க மரத்தில் சின்ன தடுப்புக் கதவு ஒன்று போட்டு பூட்டி வைக்கலாம்.
சென்ட், ஷேவிங் லோஷன் போன்றவற்றை அப்பா ஸ்ப்ரே செய்து கொள்வதைப் பார்க்கும் குழந்தைக்குதானே அவற்றை முயற்சித்துப் பார்க்கும் ஆர்வம் பொங்கும். முக்கியமாக, ஷேவிங் ப்ளேடுகள் மற்றும் ரேஸர்களை மறந்தும்கூட குழந்தைக்கு எட்டும் இடத்தில் வைத்து விடவேண்டாம்.
வாயில் போட்டு விழுங்கும் அபாயமுள்ள விளையாட்டுப் பொருட்களை சிறு குழந்தைகளுக்குக் கொடுக்காதீர்கள்.
கீழே விழுந்த அல்லது கீழே கிடக்கும் எதையும் வாயில் போடக்கூடாது என அறிவுறுத்துங்கள்.
தரையில் குழந்தைகள் சிறு நீர் கழித்தால் உடனே அந்த ஈரத்தை துடைத்து விடவும். குழந்தை அதில் வழுக்கி விழ நேரும்
சூடான எந்தப் பொருளையும் டைனிங் டேபிளின் முனைக்கருகே வைக்க வேண்டாம். அந்த மேஜைமீது விரிக்கப்படும் துணி, மேஜையின் எல்லையைத் தாண்டிக் கீழே தொங்கவேண்டாம்.
ஜன்னல்கள், பால்கனிகள் போன்றவற்றின் வழியாகக் குழந்தை கீழே விழுந்துவிடும் வாய்ப்பு உண்டு. போதிய தடுப்புக் கம்பிகளை உடனடியாகப் பொருத்துங்கள்.
கதவை மூடும்போது குழந்தை கையை நசுக்கிக் கொள்வது வெகு சகஜம். கவனம் தேவை.
எங்கேயாவது பைக்கில் போய் விட்டு வீட்டிற்கு வரும்போது பைக் சைலென்ஸர் சூடாக இருக்கும் . குழந்தைகள் அப்பா என்று ஓடி வந்து சைலன்ஸரில் பட்டுவிடலாம்.
வீட்டில் சைக்கிள், பைக் போன்ற வாகனங்களில் குழந்தைகள் ஏற முயற்சித்து விழுந்து ஆபத்து உண்டாக்கலாம். சைக்கிளில் செயின் கார்டு தேவை. பைக்கை மூடி வைக்கலாம்.
குழந்தைகளை ஒருபோதும் அதிகமான வெப்பத்துக்கு உட்படுத்த வேண்டாம். நீண்டதூரம் குழந்தையை அழைத்துச் செல்ல வேண்டுமென்றால் இருசக்கர வாகனங்களில் செல்வது சரியல்ல.
குழந்தைகளை ஷாப்பிங் போகும் போது கொண்டு செல்லதீர்கள்.
தீபாவளி போன்ற பண்டிகை நாட்களில் குழந்தைகள் நெருப்புக் காயம் படாமல் கண்காணிப்பாக இருங்கள்.
வீட்டில் அனாவசியமாக குப்பை போல் தேவையற்றப் பொருட்களை கொட்டி வைப்பது நல்லதல்ல. ஊர்வன மற்றும் விஷ ஜந்துக்கள் அதில் மறைந்திருக்கலாம்.
குழந்தைகள் மண்ணில் விளையாடுவதை அனுமதிக்காதீர்கள்.
துரு பிடித்த மற்றும் கிருமித் தொற்று ஏற்படுத்தும் பொருட்களை அப்புறப்படுத்தவும். டெட்டானஸ் போன்ற கொடிய கிருமிகள் அவற்றில் காணப்படலாம். அப்படிப் பட்ட பொருட்களால் காயம் பட்டால் உடனே தடுப்பூசி போடவும்.
தரையை அடிக்கடி டெட்டால் போன்ற கிருமி நாசினிகளைக் கொண்டு சுத்தமாக வைத்திருக்கவும்.
குழந்தைகளது விளையாட்டுப் பொருட்களையும் அடிக்கடி கழுவி சுத்தமாக்கிக் கொடுக்கவும்.
குழந்தகளுக்கு உடைகள்,ஷூ போடும்போது நன்றாக உதறிய பின் போடவும்.
நாய் பூனை போன்ற செல்லப் பிராணிகளை குழந்தைகள் உள்ள வீட்டில் வளர்க்கதீர்கள்.அதன் உமிழ் நீர்,நகம்,முடி ஆகியவற்றில் நோயுண்டாக்கும் ஏராளம் கிருமிகள் உள்ளன.
வீடுகளில் தரைப்பகுதி அதிக ஏற்றத் தாழ்வுகள் இல்லாது சமமாக அமைக்க வேண்டும்.
குழந்தைகளுக்கு நல்ல ஆடையிட்டு அழகு பாருங்கள். தங்க நகைகள் வேண்டாம். திருடர்களை ஈர்க்கும்.
விருந்தினர் வீடுகளுக்குக் செல்லும்போது கவனம் தேவை. அங்கு பழக்கமில்லாத இடங்களில் புதிய ஆபத்துகள் காத்திருக்கலாம்.

Tuesday, June 26, 2012

வீட்டுக்குள் தகவல் தொழில்நுட்பம்!



“”சார் புதுசா ஒரு ஐ-பேட் வாங்குனோம். எப்படி ஆபரேட் பண்ணுறதுன்னு நானும் என் ஒய்ஃப்பும் முழிச்சிக்கிட்டிருந்தப்ப, டென்த் படிக்கிற எங்க பையன் அசால்ட்டா ஆபரேட் பண்ணிட்டான் சார். கம்ப்யூட்டரில் பூந்து விளையாடுறான். பார்ட் பார்ட்டா கழட்டி, அசெம்பிள் பண்ணிடுறான். செவன்த் படிக்கிற எங்க பொண்ணும் ஃபேஸ்புக்கு, இ-மெயிலுன்னு கலக்கிக்கிட்டிருக்கா சார்”
-தங்கள் பிள்ளைகளின் தகவல் தொழில் நுட்பத் திறமை பற்றி இப்படிச் சொன்ன எக்ஸ்போர்ட் கம்பெனி பிராஞ்ச் மேனேஜர் கார்த்திகேயன் போன்றவர்களுக்கு இந்த திறமையின் பின்னே அறிவுடன் ஆபத்தும் கலந்திருக்கிறது என்பது ரொம்பவும் லேட்டாகத்தான் தெரிய வருகிறது.
சீட் வாங்குவதே குதிரைக்கொம்பு என்று சொல்லக்கூடிய சென்னை யின் பிரபல மூன்றெழுத்துப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு மாணவி ஒருத்தியும் இப்படித்தான் தகவல் -தொழில்நுட்பத்தில் எக்ஸ்பர்ட் என்று பெயரெடுத்திருந்தாள். சுறுசுறு துறுதுறு மாணவியான அவள் சில நாட்களாக ரொம்பவும் டல்லடிப்பதைப் பார்த்து, டாக்டரிடம் கூட்டிச் சென்றார்கள். செக்கப் செய்த லேடி டாக்டரிடமிருந்து வெளிப்பட்ட ரிசல்ட் அதிர்ச்சியடைய வைத்தது. காரணம், அந்த மாணவி கருவுற்றிருந்தாள்.
எந்தெந்த திறமைகளுக்காக அவளைப் பெற்றோரும் ஆசிரியைகளும் பாராட்டினார்களோ, அதே விஷ யங்களுக்காக அவளைக் கண்டபடி திட்ட ஆரம்பித்தார்கள். அவளுடைய இ-மெயில் இன்பாக்ஸிலும், ஃபேஸ் புக் மெசேஜ் பாக்ஸிலும் குவிந்திருந்த பாய் ஃப்ரென்ட்ஸின் ரொமான்ட்டிக் சாட்டிங்குகளும், செல்போனில் வந்த எஸ்.எம்.எஸ்.களும், இந்தத் தகவல் -தொழில்நுட்பம்தான் அவள் சம்பந்தப்பட்ட அதிர்ச்சி ரிசல்ட்டுக்குக் காரணம் என்பது தெரியவந்தது.
சென்னை உள்ளிட்ட இந்தியாவின் மெட்ரோபாலிட்டன் சிட்டிகளில் இன்ஃபர்மேஷன் டெக்னா லஜியின் வளர்ச்சி எந்தளவுக்கு குழந்தைகள்-மாணவர்கள்-இளைஞர்களின் அறிவைப் பெருக்குகிறதோ, அதே அளவுக்கு சற்றும் குறைவில்லாமல் அழிவுப்பாதைக்கும் திசை திருப்புகிறது என்பதை சமூக ஆர்வலர்களும் கல்வியாளர்களும் ஒப்புக்கொள்கிறார் கள்.
அறிவியலின் அதிவேக வளர்ச்சி- உலகமயமாக்கல் கோட்பாடு-புதிய பொருளாதாரக் கொள்கை- நுகர்வுக் கலாச்சாரம் இவையெல்லாம் நம் வீட்டுக்குள் தகவல்-தொழில்நுட்ப சாதனங்களைக் கொண்டு வந்து குவித்து வைக்கின்றன. இந்தியாவில் 55% மக்கள் கழிப்பிட வசதியில்லாமல் இருக்கிறார்கள். ஆனால், 65%க்கும் அதிகமான மக்களிடம் செல்போன் இருக்கிறது. இது அண்மையில் கிடைத்த புள்ளி விவரம். செல்போனைத் தாண்டி, கம்ப்யூட்டர், லேப்டாப், இன்டர்நெட், ஐ-பேட் என்று புதுசு புதுசாக தகவல்-தொழில் நுட்ப சாதனங்கள் தாராளப் புழக்கத்தில் உள்ளன. வீட்டில் உள்ள பெரியவர்களைவிட இளைஞர்களும் மாணவர்களும் குழந்தைகளுமே இவற்றை அதிகமாகக் கையாள்கிறார்கள். அரசாங்கமே மாணவர்களுக்கு லேப்டாப்பை விலையில்லாமல் வழங்கி வரும் காலம் இது.
“”நான் படிக்கும்போதெல்லாம் ஸ்கூலில் ஏதாவது அசைன்மென்ட் கொடுத்தால் எங்கப்பாவையும் அண்ணனையும் ஹெல்ப் பண்ணச் சொல்லி தொந்தரவு செய்வேன். இப்ப என் பிள்ளைகள் அவங்களே இன்டர்நெட் மூலமா எல்லாத்தையும் டவுன்லோட் பண்ணிடுறாங்க. ப்ராட்பேண்டுக்கு ஒழுங்கா பில் கட்டுறது மட்டும்தான் என்னோட வேலை. என்னைவிட என் பிள்ளைகள் அறிவாளிகளாக இருக்கிறார்கள்” என்கிறார் இரண்டு குழந்தைகளின் தந்தையான முரளி.
குழந்தைகள் உரிமை அமைப்பின் செயல்பாட்டாளரான தேவநேயன் நம்மிடம் விரிவாகப் பேசினார். “”தகவல்-தொழில் நுட்ப வசதிகளை எந்தெந்த வயதில் எந்தெந்த அளவுக்குப் பயன்படுத்துவது என்ற விழிப்புணர்வும் கண்காணிப்பும் மிகவும் அவசியம். இவையிரண்டும் இல்லாவிட்டால் பாதிப்புகள் அதிகமாகிவிடும். அதிலும், நுகர்வுவெறியோடு இருக்கும் நடுத்தரக் குடும்பங்களில் இதன் பாதிப்பு மிக அதிகமாக இருக்கும். ஒரு குழந்தை, இரு குழந்தை உள்ள வீடுகளில், பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவதே பெற்றோரின் கடமை என்ற மனநிலை இருப்பதால், ஐ-பேட் உள்பட எல்லாவற்றையும் வாங்கிக் கொடுத்துவிடுகிறார்கள். இதுபோன்ற கருவிகளுடன் தான் குழந்தைகள் அதிக நேரத்தைச் செலவழிக்கின்றன. போதாக்குறைக்கு, டி.வி. சேனல்களின் நிகழ்ச்சிகளும் நேரத்தை ஆக்கிரமித்துக்கொள்கின்றன. வீட்டில் குழந்தைகளும் பெற்றோரும் ஒன்றாகச் செலவிடும் நேரம் மிகவும் குறைவாக இருக்கிறது.
இதன் காரணமாக, குழந்தைகளின் மனநிலையில் மாற்றங்கள் ஏற்படுகின்றன. உடல்ரீதியான தவறிழைத்தல் களுக்கும் வழிவகுக்கின்றன. பழக்கவழக்கங்கள் பேச்சு வார்த்தைகள் இவை மோசமானதாக மாறுகின்றன. “பெரிய பருப்பா’ என்ற வார்த்தை சர்வசாதாரணமாக குழந்தைகளின் வாயிலிருந்து வெளிப்படுகிறது. அதுபோல இளம்பெண்கள் பலரும் “டுபுக்கு’ என்கிறார்கள். இந்தச் சொற்கள் எதைக் குறிக் கின்றன என்பதைக்கூட அவர்கள் அறிந்திருப்பதில்லை. பிள்ளைகள் கேட்பதையெல்லாம் வாங்கித்தருவது என்பதற்குப் பதில், “இது உனக்கு இப்போது தேவையில்லை. இது வேண்டாம்’ என்று சொல்லி அதை அவர்கள் ஏற்றுக்கொள்ளும் மனநிலையை உருவாக்குவதே பெற்றோர்களின் கடமையாக இருக்கவேண்டும். அதற்கு, குழந்தைகளுடன் பெற்றோர் செலவிடும் நேரம் அதிகரிக்கவேண்டும்.

பள்ளியிலும் அணுகுமுறைகள் மாறவேண்டும். ஊடகங் களை முறைப் படுத்தும் செயல் பாடுகள் வர வேண்டும். -அப் போதுதான் தகவல்-தொழில் நுட்ப ஆபத்து களிலிருந்து இளைய சமு தாயத்தை மீட்டு, அறிவுப்பாதைக்குத் திருப்ப முடியும்” என்றார் தேவநேயன்.
இப்போதெல்லாம் பள்ளியில் முதல் வகுப்பிலிருந்தே கம்ப்யூட்டரைக் கை யாளக் கற்றுக்கொடுக்கிறோம் என்று சொல்லும் ஆசிரியை ஜெயந்தி நிர்மலா, “”கம்ப்யூட்டரின் அடிப்படைச் செயல் பாடுகள், அதில் பெயிண்டிங் செய்வது, டிராயிங் முறைகள் பற்றியெல்லாம் சொல்லித் தரப்படுகிறது. உயர் வகுப்புகளில் கம்ப்யூட்டர் லேங்வேஜ்கள் கற்றுத் தரப்படு கின்றன.
செயல்வழிக் கற்றல் முறை வளர்ந்து வருவதால், மாணவ-மாணவிகளே தங்க ளுக்குத் தேவையானதைத் தேடிப்பிடித்து படிக்கும் பழக்கம் வளர்ந்து வருகிறது. அதனால் இன்டர்நெட்டை எப்படிப் பயன்படுத்துவது, கூகுளில் எப்படி சர்ச் செய்வது என்பதையெல்லாம் சொல்லித் தர வேண்டியுள்ளது. இதன் மூலமாக, அவர்கள் தங்களின் பாடம் சம்பந்தமான தகவல்களையும் படங்களையும் தேடிப் பெறமுடி கிறது” என்கிறார்.
மாணவர்களின் இந்தத் தேடலும் ஆர்வமும், அதன் எல்லைகளைக் கடக்கும்போதுதான் திசைமாற்றம் ஏற்படுகிறது. 18 வயதுக்கு மேற் பட்டவர்கள்தான் ஃபேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் உறுப்பின ராக முடியும். ஆனால், பள்ளி மாணவ-மாணவிகள் தங்களின் ஃபாய் ஃப்ரெண்ட்ஸ், கேர்ள் ஃப்ரெண்ட்ஸ் தேடலுக்காக பிறந்த தேதியை மாற்றிப் பதிவு செய்து உறுப்பினர்களாகிவிடுகிறார்கள்.
சாட்டிங் வசதிகள் மூலமாக டேட்டிங், ஃப்ரீசெக்ஸ் பற்றியெல்லாம் பேசத்தொடங்கி, பின்னர் நேரில் அறிமுகமாகி, தீம்பார்க்-ஷாப்பிங் மால்-ரிசார்ட்ஸ் எனத் தனிமை நாடி செல்கின்ற அளவுக்கு நிலைமை முற்றிவிடுகிறது. இந்தப் போக்கு சென்னை போன்ற நகரங்களில் அதிகரித்து வருவதால் தகவல்-தொழில் நுட்ப வளர்ச்சி என்பது வரமா, சாபமா என்ற கேள்வி எழுகிறது.
“”வளர்ச்சியை நாம் தடுக்க முடியாது. இத்தகைய சாதனங்கள் நம் வீட்டு வரவேற்பறையைத் தாண்டி, படுக்கையறை வரைக்கும் வந்துவிட்டன. அவற்றை நம் பிள்ளைகள் எப்படி பயன்படுத்துகிறார்கள் என்பதைப் பொறுத்துதான் இது வரமா, சாபமா என்று சொல்ல முடியும் என்கிற இல்லத்தரசியும் சுற்றுச்சூழல் இலக்கிய ஆய்வாளருமான சித்ராபாலசுப்ரமணியன், “”பொறுப் புணர்ச்சியுடன் கூடிய சுதந்திரத்தை நம் பிள்ளைகளுக்கு அளித்து, அதற்கேற்றபடி அவர்களைப் பழக்கினால் இத்தகையத் தொழில்நுட்பங்களினால் ஏற்படும் பாதிப்புகளைக் கட்டுப்படுத்தலாம். ஆனால், பெற்றோர்கள் பலரும் இதனை எப்படிக் கையாள்வது என்பது தெரியாமல் திரிசங்கு நிலையில் இருந்தால், பிள்ளைகளைக் கண்காணிக்க முடியாது.
நான் வளர்ந்த காலத்திற்கும் இன்று என் பிள்ளைகள் வளர்கிற காலத்திற்கும் நிறைய மாற்றங்கள் இருக்கின்றன. சகமாணவர்களுடன் பேசுவதும் பழகுவதும் இன்று இயல்பானதாகிவிட்டது.
இப்படிப்பட்ட நிலையில், நாம்தான் நம் பிள்ளை களுக்கு நல்லது எது, கெட்டது எது என்பதைச் சொல்லித்தரவேண்டும்.
கவுன்சிலிங் என்பது குழந்தைகளுக்கு மட்டுமல்ல, பெற்றோருக்கும் தேவைப்படுகிறது. நம் பிள்ளைகளுடன் நாம் எந்தளவுக்கு நேரத்தைச் செலவிடுகிறோம், அவர்களின் செயல்பாடுகளில் அக்கறை செலுத்துகிறோம் என்பதைப் பொறுத்தே இதுபோன்ற பிரச்சினைகளை எதிர்கொள்ள முடியும். அறிவியல் வளர்ச்சியை நல்லமுறையில் பிள்ளைகள் பயன்படுத்தச் செய்யும் பொறுப்பு பெற்றோருக்குரியது” என்கிறார் அழுத்தமாக.
ஒரே வீட்டில் உட்கார்ந்துகொண்டு “சாப்பிட வருகிறீர்களா’ என்று மனைவி எஸ்.எம்.எஸ். அனுப்புவதும், அதற்கு கணவனும் பிள்ளைகளும் பதில் எஸ்.எம்.எஸ் அனுப்புவதும் வளர்ந்துகொண்டிருந்தால் தகவல்- தொழில்நுட்ப வளர்ச்சி என்பது தறிகெட்ட நிலைமை யைத்தான் உருவாக்கும். “அளவுக்கு மிஞ்சினால்’ என்ற பழமொழி, இந்தத் தகவல்தொழில்நுட்பக் காலத்திலும் அர்த்தமுடையதாகவே இருக்கிறது.

Sunday, June 24, 2012

ஆயில் மில்!





வறுவல், பொரியல் என எண்ணெய்யில் செய்யும் உணவு அயிட்டங்கள் அனைத்திற்கும் நம்மவர்கள் அடிமை. நம்முடைய தினசரி சமையலில் எண்ணெய் கலக்காத உணவு என்று எதுவுமில்லை. தோசையில் ஆரம்பித்து பூரி, சப்பாத்தி வரை அனைத்தையும் ஏதாவது ஒரு எண்ணெய்யில் செய்து சாப்பிட்டால் மட்டுமே நம்மவர்களுக்கு திருப்தி. தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெய், நல்லெண்ணெய், பாமாயில் என பலவகையான எண்ணெய் அயிட்டங்கள் நம்மூரில் இருக்கிறது. நிலக் கடலை, சோயா பீன்ஸ், தேங்காய், எள் போன்ற மூலப் பொருட்களிலிருந்து எண்ணெய் எடுக்கப்படுகிறது.

சந்தை வாய்ப்பு!

உணவுப் பொருட்களுக்கான தேவை இருக்கும் வரை எண்ணெய்க்கான தேவையும் இருக்கும். வீடுகள், ஓட்டல்கள், சாலையோர உணவகங்களில் எண்ணெய் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. பிரியாணி, பஜ்ஜி, வடைகள், நான்-வெஜ் அயிட்டங்கள் தயார் செய்வதற்கு அதிக அளவில் எண்ணெய் பயன்படுத்தப்படுகிறது. தவிர, ஒரு குடும்பத்திற்கு ஒரு மாதத்திற்கு குறைந்தது மூன்று லிட்டர் எண்ணெய் தேவைப்படுகிறது. தேசிய அளவில் தேங்காய் எண்ணெய் உற்பத்தி என்பது எந்த சூழ்நிலையிலும் சரிந்து போகாத தொழில். தமிழகம் தவிர்த்து பிற மாநிலங்களில் தேங்காய் எண்ணெய் தேவை பெரிய அளவில் உள்ளதால், என்றுமே இதன் மார்க்கெட் களைகட்டியிருக்கும்.

முதலீடு!

எண்ணெய் உற்பத்தி செய்யத் தேவைப்படும் முக்கியமான முதலீடு என்றால் கட்டடமும், இயந்திரமும்தான். ஆண்டுக்கு 12,000 லிட்டர் எண்ணெய் உற்பத்தி செய்யும் மில் ஒன்றைத் தொடங்க சுமார் 15 லட்ச ரூபாய் தேவைப்படும். இந்த தொழிலைத் தொடங்கும் நிறுவனர் 15%, மீதமுள்ள 85% கடன் மற்றும் மானியம் மூலம் பெற்றுக் கொண்டு தொழிலைத் தொடங்கலாம்.

கட்டடம்!

ஆயில் மில் தொடங்க குறைந்தபட்சம் 30 சென்ட், அதிகபட்சமாக ஒரு ஏக்கர் வரை இடம் தேவைப்படும். தேவையான இடம் சொந்தமாகவோ அல்லது வாடகைக்கோ எடுத்துக் கொள்ளலாம். எண்ணெய் உற்பத்திக்குத் தகுந்தாற்போல் கட்டடங்களை அமைப்பது அவசியம்.

வேலையாட்கள்!

இத்தொழிலில் வேலையாட் களின் பங்கு மிகவும் அவசியம். ஒரு நாளைக்கு 32 லிட்டர் உற்பத்தி செய்வதற்கு திறமையான வேலையாள் ஒருவர், ஒரு சூப்பர்வைஸர் என இரண்டு நபர்கள் தேவை.

மூலப் பொருட்கள்!

நிலக் கடலை, எள், தேங்காய், சோயா பீன்ஸ் போன்ற பொருட்கள்தான் முக்கிய மூலப் பொருட்கள். இதில் எது உங்களுக்கு சுலபமாகக் கிடைக்குமோ அதைக் கொண்டு எண்ணெய் உற்பத்தி செய்யலாம். சில இடங்களில் மேற்சொன்ன எல்லா மூலப் பொருட்களும் எளிதாகக் கிடைக்கும்பட்சத்தில், எல்லாவிதமான எண்ணெய்களையும் உற்பத்தி செய்யலாம். ஆனால், ஒவ்வொன்றுக்கும் தனித் தனி இயந்திரங்கள் தேவைப்படும். காரணம், ஒரு இயந்திரத்தில் ஒரு வகையான எண்ணெய் மட்டுமே தயார் செய்ய முடியும். தேங்காய் கிடைக்கும்போது தேங்காய் எண்ணெய், எள் கிடைக்கும் போது நல்லெண்ணெய் என மாதத்திற்கு ஒரு எண்ணெய்யை நம்மால் தயார் செய்ய முடியாது. இங்கு நாம் தேங்காய் எண்ணெய் தயாரிப்பு மட்டுமே பார்க்க இருக்கிறோம்.தேங்காய் எண்ணெய் தயார் செய்ய தேங்காய்தான் முக்கிய மூலப் பொருள். நூறு கிலோ தேங்காய் பருப்பிலிருந்து 63 கிலோ எண்ணெய் உற்பத்தி செய்ய முடியும்.

இயந்திரம்!

எக்ஸ்பெல்லர் (ணிஜ்ஜீமீறீறீமீக்ஷீ), வடிகட்டும் இயந்திரம், பாய்லர், அளவிடும் இயந்திரங்கள் என மொத்தம் 90,000 ரூபாய் வரை இயந்திரத்திற்குச் செலவாகும். பெரும்பாலும் இந்த இயந்திரங்கள் அனைத்தும் தமிழகத்திலேயே கிடைக்கிறது.

தயாரிப்பு முறை!

தேங்காய் பருப்பு தனியாகவும் கிடைக்கும், அல்லது தேங்காயிலிருந்தும் பருப்பை நாமே எடுத்து கொள்ளலாம். இப்படி தனியே எடுத்த தேங்காய் பருப்பில் ஈரப்பதம் அதிகம் இருக்கும் என்பதால் எண்ணெய் எடுப்பது கடினம். எனவே அதை பாய்லர் வெப்பத்தின் மூலம் ஈரத்தை உறிஞ்சி, உலர வைக்கிறார்கள். பின்னர் கட்டர் இயந்திரத்தின் மூலம் தேங்காயைத் துண்டு துண்டாக்கி கிரஷிங் மெஷினில் போட்டு அரைக்கிறார்கள். இதிலிருந்து எண்ணெய் பிழிந்தெடுக்கப்பட்டவுடன் அதன் சக்கைகள் வெளியே தள்ளப்படுகிறது. இந்த தேங்காய் எண்ணெய் இதன்பிறகு ஃபில்டர் இயந்திரத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு கசடுகள் வடிகட்டப்பட்டு சுத்திகரிக்கப்படுகிறது. சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய், ஆயில் ஃபில்லிங்’ இயந்திரம் மூலம் பாக்கெட்டுகளிலும், சிறிய டின்களிலும் அடைக்கப்பட்டு விற்பனைக்கு செல்கிறது.

பிளஸ்!

தேங்காய் எண்ணெய் முக்கியமான சமையல் எண்ணெய் என்பதால், எளிதில் சந்தைப்படுத்த முடியும். தலை முடியில் தேய்த்துக் கொள்வதற்கு பெரும்பாலும் தேங்காய் எண்ணெய்யையே பலரும் பயன்படுத்துவதால் கூடுதல் வாய்ப்பு கிடைக்கிறது.

மைனஸ்!

மூலப் பொருளான தேங்காய் விலையைப் பொறுத்தே இதன் விலை நிர்ணயிக்கப்படுகிறது. தேங்காய் விலை அதிகரிக்கும்போது, மூலப் பொருள் கொள்முதல் விலையும் அதிகரிக்கும். இதனால் தேங்காய் எண்ணெய் விலை உயரும்போது விற்பனை பாதிப்படையும்.இந்த தொழிலின் சூட்சுமங்களை அனுபவ ரீதியாகப் பெற்ற பிறகு தனியாகத் தொடங்கி நடத்தினால் நிச்சயம் வெற்றிதான்!


Engr.Sulthan

Saturday, June 23, 2012

[இரண்டாண்டுகட்கு முன் இஸ்லாத்தைத் தழுவிய பெரியார்தாசன் என அறியப்பட்ட பேராசிரியர் டாக்டர் அப்துல்லாஹ் அவர்களின் சமீபத்திய நூலொன்றுக்கு எழுதப்பட்ட முன்னுரை இது. முன்னதாக நான் பெரியாரும் இஸ்லாமும் குறித்து எழுதிய கட்டுரைகள் எனது "பெரியார் தலித்கள் முஸ்லிம்கள் " நூலில் உள்ளன. முன்னதாக ச் சில கட்டுரைகள் இதே தலைப்பில் உள்ளதை நினைவூட்டவே இதற்கு 3 என எண்ணிடப்பட்டுள்ளது.]



பேராசிரியர் பெரியார்தாசன் என அறியப்பட்ட முனைவர் அப்துல்லாஹ் அவர்கள் பல்துறை வித்தகர். நாடறிந்த பேச்சாளர், பெரியாரியல், பவுத்தவியல், உளவியல் முதலான துறைகளில் தடம்பதித்தவர், அண்ணல் அம்பேத்கரின் ‘புத்தமும் தம்மமும்’ நூலை அழகு தமிழில் பெயர்த்தவர், திரைப்படங்களிலும் முகம் காட்டியவர் என அவருக்குப் பல பரிமாணங்கள் உண்டு. சிரிக்கச் சிரிக்கப் பேசி அச் சிரிப்புகளினூடே சீரிய கருத்துக்களைச் சொல்வதில் வல்லவர் அவர். தான் இஸ்லாமைத் தழுவியதையொட்டித் தனது பழைய பெரியார் இயக்க நண்பர்கள் கடும் பகையுடன் தம்மை நோக்கி எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளித்து அவர் ஆற்றிய உரையொன்று இப்போது எழுத்து வடிவில் உங்கள் கைக்கு வந்துள்ளது.



“பெரியார்தாஸன் இஸ்லாத்துக்கு வந்துட்டேன்னு அப்படியே வேகாத கல்லெடுத்து நோகாது இடிச்சுக்கிறாங்க. பாக்க மாட்டேங்கிறாங்க. வணக்கம்னு சொன்னா திருப்பி வணக்கம் கூட சொல்ல மாட்டேங்கிறாங்க. பழைய தோழர்களெல்லாம் என்னை ஏதோ தீண்டாதவன் மாதிரி ஒதுக்கி வச்சுட்டாங்க”



என வேதனையோடு சொல்லும் பெரியார்தாசான் எனப்பட்ட பேராசிரியர் அப்துல்லாஹ், “ஆனால் உங்க பெரியார்தான்யா சொல்லியிருக்கார் உண்மையான மார்க்கம் இஸ்லாம்தான்னு” என ஆவேசமாகச் சொல்கிறார். பெரியார் இஸ்லாம் குறித்துப் பேசிய பல கருத்துக்களையும் செயல்பாடுகளையும் மேற்கோள் காட்டி 1920கள் தொடங்கித் தொடர்ச்சியாகத் தன் இறுதிக் காலம் வரை இன இழிவு நீங்க இஸ்லாம் ஒன்றே நன்மருந்து என அவர் சொல்லி வந்ததாகக் கூறும் அப்துல்லாஹ் அவர்கள் முத்தாய்ப்பாக, ”அழைப்புப் பணியாளர்களிலேயே சிறந்த இஸ்லாமிய அழைப்புப் பணியாளராகப்” பெரியாரை அடையாளம் காண்கிறார்.



சூத்திரர்களும் தாழ்த்தப்பட்டவர்களும் இருந்த இழிநிலை குறித்துப் பெரியார் இறுதிவரை கவலைப்பட்டுக் கொண்டிருநதது, அந்த இழி நிலையைப் போக்கும் ஒரே வழியாக அவர் இஸ்லாத்தையே அடையாளம் கண்டது, வேறு வழி இருந்தால் சொல்லுங்கள் என அவர் எல்லோரையும் நோக்கிச் சவாலாகக் கேட்டது என எல்லாவற்றையும் சுட்டிக்காட்டும் அப்துல்லாஹ், பெரியாரின் பகுத்தறிவுவாதத்திற்கும் இஸ்லாம் குறித்த அவரது இந்த நிலைப்பாட்டிற்கும் முரணேதுமில்லை என்கிறார். நபிகளை மகான் என்றோ, அமானுஷ்ய சக்தி கொண்டவரென்றோ பெரியார் கருதவில்லை, மனிதத் தன்மை மிக்க மிகச் சிறந்த மனிதராக மட்டுமே கருதினார் என்பதையும் சொல்கிறார்.



நாத்திகரான பெரியார் இஸ்லாத்தின் ஓரிறைக் கொள்கையை எப்படி ஏற்றுக்கொண்டார் என்கிற கேள்வியை எழுப்பி, “ஆயிரக்கணக்கான கடவுள்களைக் கட்டி அழுகிறவர்களைவிட, இணை வைப்பவர்களைவிட நபி அவர்கள் மேலானவர்” எனப் பெரியார் கூறியதைச் சொல்லி அந்தக் கேள்விக்கும் பதிலளிக்கிறார். மோட்சத்திற்காகவோ, கடவுளின் சன்மானத்தைப் பெறுவதற்காகவோ பெரியார் இஸ்லாத்தைப் பரிந்துரைக்கவில்லை. மதங்கள் என்ன சொல்கின்றன என்பதைக்காட்டிலும் அவை என்னவாக இருக்கின்றன என்பதே பெரியாரின் கவனத்திற்குரியதாக இருந்தது. அவரது எழுத்துக்களைக் கூர்ந்து கவனித்தால் மதவிஷயங்களில் ‘பிரத்தியட்சம்’ என்கிற வார்த்தையை அவர் அதிகம் பயன்படுத்துவது தெரியும். இஸ்லாத்தில் சமத்துவம் இருக்கிறது, அங்கே சாதி பேதம் இல்லை. தீண்டாமை இல்லை. ஆக உனக்கு இந்தப் பிறவியிலேயே விடுதலை கிடைக்கிறது என்று சொல்லித்தான் அவர் ஒடுக்கப்பட்ட மக்களை நோக்கி இஸ்லாத்திற்கு அழைப்பு விடுத்தார்.



இந்த ஏற்றத் தாழ்வுகள் இல்லாமைதான் முஸ்லிம்கள் மத்தியிலுள்ள அபாரமான ஒற்றுமைக்குக் காரணமாக உள்ளது. மக்களை இணைக்கும் மார்க்கமாக இஸ்லாம் இருக்கிறது. ஒரு முஸ்லிமை யாராவது தாக்கினால் இன்னொரு முஸ்லிம் அவருக்கு ஆதாரவாக வருவார். ஆனால் ஒரு இந்துவை இன்னொருவர் அடித்தால் அடிப்பவன் என்ன சாதி, அடிபடுபவன் என்ன சாதி என்கிற கேள்விகள்தான் முன்னுக்கு வரும். இந்துக்களிடம் இல்லாத இப்பண்பு இஸ்லாமியர்களிடம் இருப்பதால்தான் அவர்கள் முரட்டுத்தனமானவர்கள். தீவிர மதப் பற்று உடையவர்கள் எனச் சொல்வதற்குக் காரணமாகிறது எனப் பெரியார் விளக்குவார். இதை எல்லாம் எடுத்துச் சொல்லும் அப்துல்லாஹ், கிறிஸ்தவத்திற்கு மாறுவதன் மூலம் சாதி ஒழிப்பு சாத்தியமில்லை எனப் பெரியார் கூறியதையும் அம்பேத்ருக்கும்கூட அவர் இஸ்லாத்தையேப் பரிந்துரைத்ததையும் சுட்டிக்காட்டுகிறார். பெரியாருக்கு எந்த மதத்திலும் நம்பிக்கை இல்லை எனச் சொல்வது தவறு. அவருக்கு இஸ்லாத்தில் நம்பிக்கை இருந்தது என அடித்துச் சொல்கிறார். இஸ்லாத்தில் கலந்து போயுள்ள தர்ஹா வணக்கம் முதலான மூட நம்பிக்கைகளை மட்டுமே பெரியார் எதிர்த்தார் எனச் சொல்லும் அப்துல்லாஹ் இதிலென்ன தவறு எனக் கேட்கிறார். ஆக மொத்தத்தில் தான் பெரியார்தாசன் என்பதிலிருந்து “மிகப் பெரியோனின் தாசனாக” மாறியதில் எந்த முரண்பாடுமில்லை எனத் தன் வாதங்களை அவருக்கே உரிய எளிய மொழியில் சுவைபட முன்வைக்கிறார்.



பெரியார் இஸ்லாம் குறித்துப் பேசியுள்ளவை பற்றி நானும் விரிவாக எழுதியுள்ளேன் (“பெரியார், தலித்கள், முஸ்லிம்கள்’, கருப்புப் பிரதிகள், சென்னை). ஒன்றை மட்டும் இங்கே குறிப்பிட விரும்புகிறேன். பெரியார் நபிகள் நாயகத்தின் மீது மிகுந்த மரியாதையையும், இஸ்லாத்தின் மீது மிக்க நம்பிக்கையையும் கொண்டிருந்தது, பெரியார் வார்த்தைகளிலேயே சொல்வதானால் “கல்லுப் போன்ற ஒரு உண்மை”. தமிழகமெங்கும் நடைபெற்ற ஏராளமான நபிகளின் பிறந்த நாள் விழாக்களிலும் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு அவர் பேசிய பேச்சுக்களை எல்லாம் சமீபத்தில் தொகுத்துப் படிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. ”உலகில் தோன்றிய பெரியார்களிலேயே மிக ஒப்பற்ற சிறந்தவர்”, என்றும் “இஸ்லாம் மதம் அநேகமாக உலக மக்கள் அனைவருக்குமே பொருத்தமானது” (சத்திய மங்கலம், ஆக, 08, 1930) என்றும் அவர் திரும்பத் திரும்பக் கூறியுள்ளது உண்மை. “தமிழர்களுக்கு இஸ்லாம் மதமே பொருத்தமானது” எனவும் (குடியரசு, தலையங்கம், ஃபிப், 24, 1935) இன்னும் பலவாறும் அவர் இவ்வாறு பேசியுள்ளவற்றைச் சுருக்கம் கருதித் தவிர்ப்போம்.



எனினும் பெரியார் இப்படிப் பேசியதோடு நிற்கவில்லை. மனதில் பட்டவற்றைடறூடனடிப் பலாபலன்களைக் கருதி மறைத்துக் கொள்வதில் என்றைக்குமே அக்கறை காட்டியிராத பெரியார், இத்தகைய விழாக்களிலும் பிற வாய்ப்புகளினூடாகவும் முஸ்லிம்களுடன் அவர் உரையாட நேர்ந்தபோதெல்லம் தொடர்ந்து அவர் சில விமர்சனங்களையும் முன்வைத்துக் கொண்டே இருந்தார். அவற்றில் சில முஸ்லிம்களுக்கு உவப்பானதாக இல்லாத போதிலும் அவர் அவற்றைச் சொல்லிக் கொண்டுதான் இருந்தார். இஸ்லாத்தில் கலந்து போயுள்ள சில சடங்குகள், மூட நம்பிக்கைகள், தர்ஹா வணக்கம் முதலானவற்றைப் பெரியார் வன்மையாகக் கண்டித்துள்ளதைப் பெரியார்தாசன் இன்நூலில் பல இடங்களில் குறிப்பிடுகிறார். இதை முஸ்லிம் மத நெறிகளை இறுக்கமாகப் பின்பற்றும் யாரும் மறுக்க மாட்டார்கள். உலமாக்கள், ஆலிம்கள் எல்லோரும் ஏற்றுக் கொள்ளவே செய்வர்.



ஆனால் பெரியாரின் விமர்சனங்கள் இத்தோடு நிற்கவில்லை. குறிப்பாக் மேலும் இரு கருத்துக்களை முஸ்லிம்களின் சிந்தனைக்கு அவர் முன்வைத்துக் கொண்டே இருந்தார். உலகிலுள்ள மதங்களிலேயே முற்போக்கான மதம் என அவர் இஸ்லாத்தைச் சுட்டிக்காட்டும் போதெல்லாம் அதற்கு அவர் சொல்லும் விளக்கம், “ஏனெனில் அது சமீபத்தில் ஏற்பட்ட மதமானதினால் மிகவும் திருந்திய மதமென்றே சொல்லுதல் வேண்டும்” என்பதுதான் (முன் குறிப்பிட்ட சத்தியமங்களம் சொற்பொழிவு). பிறிதோரிடத்தில், “இவ்வித உயரிய கொள்கைகள் அவருக்கு (நபிகளிக்கு) மாத்திரம் எப்படித் தோன்றியது என்போமானால் அவர் மற்ற மதங்களின் குணதோஷங்களை எல்லாம் நன்கு அறிந்து கடைசியில் பிந்திய காலத்தில் ஏற்படுத்தின மதமாதலால் அது கூடுமானவரை திருத்தத்துடன் செய்ய முடிந்தது” (குடி அரசு ஆக, 25, 1929).



‘இஸ்லாம்’ என்பது ஏக இறைவன் அல்லாஹ்வால் படைக்கப்பட்ட நெறி, முஹம்மது நபிகள் இறைவனால் அனுப்பிவைக்கப்பட்ட தூதர் மட்டுமே என்பது இஸ்லாமியர்களின் நம்பிக்கை.. எனவே இஸ்லாம் என்பது நபிகளால் உருவக்கப்பட்ட சமீபத்திய மதம் எனப் பெரியார் வரலாற்றடிப்படையில் கூறுவதை இஸ்லாமியர்கள் ஏற்கமாட்டார்கள் என்பது ஒரு பக்கம். இன்னொரு பக்கம் பெரியார் இஸ்லாம் மீது முன்வைக்கும் மெல்லிய விமர்சனமும் இதிலிருந்துதான் தொடங்குகிறது.

பெரியார் சொல்வது இதுதான். “கால தேச வர்த்தமானங்களைக்” கணக்கில் எடுத்துக் கொண்டு மாறியுள்ள வரலாற்றுச் சூழலுகேற்ப பழைய மதங்களின் நல்லது கெட்டதுகளைப் பரிசீலித்து இன்றைக்கு 1400 ஆண்டுகட்கு முன்னதாக ஒப்பீட்டளவில் மிகவும் முற்போக்கான மதமாக இஸ்லாம் உருவாகியது. ஆனால் அதற்குப் பின் இன்று சுமார் 1400 ஆண்டுகள் ஓடிவிட்டன. இந்த இடைப்பட்ட நூற்றாண்டுகளில் உலக மக்கள் அனைவரையும் அது தன் வயப்படுத்தியிருக்க வேண்டும். ஆனால் அது நடக்கவில்லை. ஏன்?



“இயற்கைக்கும் பகுத்தறிவுக்கும் பொருந்தாத ஒரு அபிப்ராயத்தைப் புகுத்தி அதைக் கட்டுப்படுத்திவிட்டதால் போதிய வளர்ச்சியில்லாமல் போய்விட்டது. அதாவது 1500 வருஷங்களுக்கு முன் சொன்னது எதுவோ அதுதான் இன்னமும், லஷத்து அய்ம்பதினாயிரம் வருஷம் பொறுத்தும் இருக்க வேண்டியதாகுமே ஒழிய அதில் ஒரு சிறு மாறுதல் கூட செய்ய முடியாது என்பதோடு செய்ய இடம் கொடுக்கப்படக்கூடாது என்றும் சொல்லி வருகின்ற முரட்டுப் பிடிவாதமே மக்களை அதன் பெருமையை உணர முடியாமல் செய்துவிட்டது.”

என்று சொன்னதோடு பெரியார் நிற்கவில்லை. தொட்ர்ந்து,

“கால தேச வர்த்தமானங்களுக்கு ஏற்றபடி ஒத்துப் போவதற்கு இஸ்லாம் மார்க்கத்தில் இடமில்லை என்றால் அப்படிச் சொல்கின்றவர்கள் எவ்வளவு பக்திவான்கள் ஆனாலும் முகமது நபிக்கு நீதி செய்தவர்களோ அவருக்குப் பெருமை அளித்தவர்களோ ஆகமாட்டார்கள் என்றே சொல்லுவோம்”



எனவும் கருத்துரைத்தார் (முன் குறிப்பிட்ட 1935 தலையங்கம்). பிறிதொரு கூட்டத்தில்,



“மனிதன் காலதேசவர்த்தமானத்திற்குக் கட்டுப்பட்டவனாவான். மனிதனது மார்க்கமோ கொள்கையோகூட அதில் பட்டதேயாகும். ஏனென்றால் மார்க்கம் என்பது மனிதன் வாழ்க்கைக்கு வழிகாட்டி என்பதை கொண்டு சொல்கிறேன்.. வழி என்பது அடிக்கடி மாறக் கூடியதேயாகும். கால்நடை வழி, ஆடு,கழுதை,குதிரை, மூலம் செல்லும் வழி, கட்டை வண்டி வழி, மோட்டார் வழி, ரயில் வழி, ஓடம் கப்பல் வழி, கடைசியாக ஆகாய விமான வழி ஆகிய ஒவ்வொரு காலத்திற்குத் தகுந்தது போல் வழி திருத்தப்பட வேண்டும். அது போலவே மனித வாழ்க்கை வழியும் காலத்தின் கோலமாய், தேசத்தின் தன்மையாய், சந்தர்ப்பத்தின் அவசியமாய் மாறியே ஆக வேண்டும் என்பதை ஒப்புக் கொள்ள வேண்டும். மாறுதலுக்கு இடம் கொடுக்கும் என்கின்ற மார்க்கமே சரியான மார்க்கம்.” (சாத்தான்குளம், ஜூலை 28, 1931).



சுருக்கம் கருதி அவர் வேறு இடங்களில் இக்கருத்தை வலியுறுத்தியுள்ளதை இங்கே தவிர்ப்போம்.

கால, இட மாற்றங்களுக்கு ஏற்ப மாறாதுள்ள ஆனால் மாற்றம் பெற வேண்டிய ஒரு வழமையாகப் பெரியார் முஸ்லிம் பெண்களுக்கு அணிவிக்கப்படும் ‘கோஷா’, அதாவது பர்�
தொல்லை தரும் வைரஸ் கிருமிகள்-இயற்கை வைத்தியம்

நமது உடலின் மென்மையான பகுதிகளே பெரும்பாலும் வைரஸ் கிருமிகளின் தாக்குதலுக்கு உள்ளாகின்றன. பூஞ்சை, பாக்டீரியா, காளான் போன்ற பலவகையான நுண்கிருமிகளுக்கு அதற்கென சிறப்பாக வழங்கப்படும் நுண்கிருமி நாசினி பலனளித்தாலும், வைரஸ் கிருமியினால் ஏற்படும் தாக்குதலுக்கு மட்டும் சிறப்பான நுண்கிருமி நாசினிகள் இல்லை. ஏனெனில் வீரியமற்ற நிலையில் காணப்படும் வைரஸ் கிருமிகள் உயிருள்ள செல்களின் உள்ளே நுழைந்ததும், மிகவும் வீரியமடைந்து தன் தோற்றத்தையும் தாக்குதலையும் மாற்றிக்கொண்டே இருக்கின்றன. ஆகையால்தான் வைரஸ் கிருமிகளை எதிர்க்கும் அல்லது தடுக்கும் மருந்துகள் சிறப்பாக செயல்
படுவதில்லை.
சளி, குருதி, குருதி படிந்த கருவிகள், உடல் திரவங்கள், இனப்பெருக்க திரவங்கள் ஆகியவற்றின் மூலம் வேகமாக பரவும் வைரஸ் கிருமிகள், குறிப்பிட்ட காலம் வரை காத்திருந்து வீரியம் பெற்றதும், அத்தியாவசிய உறுப்புகளை தாக்கி, பலவித நோய்களை ஏற்படுத்துகின்றன. ஒரு வைரஸ் கிருமி உடல் செல்லை தாக்கி, அதற்கான நோய் குறிகுணங்களை முதன்முதலில் காட்டத் தொடங்கும் காலத்தில் சரியான முறையில் சிகிச்சை எடுத்துக்கொண்டால் வைரஸ் கிருமிகளை சரியாக எதிர்கொள்ள முடியும். இல்லையெனில் நோயின் தீவிரம் அதிகரித்து பல உடல்நல கோளாறுகளை ஏற்படுத்திவிடும். வைரஸ் நுண்கிருமிகளை அழிக்கக்கூடிய நோய் எதிர்ப்பு செல்கள் நம் உடலிலேயே போதுமான அளவு அமைந்துள்ளன. இவை வைரஸ் கிருமிகள் உள்ளே நுழைந்ததும் இம்யுனோ குளோபின்களை அதிகரித்து நோயை கட்டுப்படுத்துகின்றன. இந்த இம்யுனோ குளோபின்களின் அளவைக்கொண்டே நோயின் தீவிரம் கணக்கிடப்படுகிறது. ஏனெனில் டி.என்.ஏ. வரை தாக்குதலை ஏற்படுத்தும் மிக நுண்ணிய ஆற்றலுடையவை வைரஸ் கிருமிகள். உயிரற்ற செல்களில் இவை அழிந்துவிடுவதாலும், வீரியம் குறைவதாலும் பாக்டீரியா, பூஞ்சை போன்ற கிருமிகளைப் போல் மின் நுண்ணோக்கியில் பார்க்க இயலுவதில்லை.
வாய், உதடு, நாக்கு, தொண்டை, ஆண், பெண் இனப்பெருக்க உறுப்புகள், மென்மையான தோல் பகுதிகள் ஆகியவையே வைரஸ் கிருமிகளின் இலக்காகும். இவற்றில் ஏற்படும் தாக்குதலே தொண்டை வலி, அம்மை, அக்கி, மரு, பாப்பிலோமா, நாய்முள், நாக்கு, வாய் மற்றும் பிறப்புறுப்பில் கடுமையான குழிப்புண்கள் ஆகியவற்றில் கொப்புளங்களாகவும், புண்களாகவும் வைரஸ் கிருமியின் தாக்குதலின் அடையாளமாக நாம் உணருகிறோம். இதனால் தோன்றும் சிறு சுரம், வலி ஆகியன நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்வதற்கான இயற்கையின வழிமுறைகளாம். ஹெர்பஸ் வைரஸ், அடினோ வைரஸ், புளூ வைரஸ் போன்றவற்றால் ஏற்படும் கிருமி தாக்குதலை நீக்கி, நம்மை காக்கும் எளிய மூலிகை மயிற்கொன்றை.
செசல்பினியா பல்செரிமா என்ற தாவரவியல் பெயர் கொண்ட செசல்பினேசியே குடும்பத்தைச் சார்ந்த இந்த பெருஞ்செடிகள் தோட்டங்களில் அழகுக்காக வளர்க்கப்படுகின்றன. இதன் இலை மற்றும் பூக்களிலுள்ள பிளேவனாய்டு குர்சிட்டின் வைரஸ் கிருமிகளை எதிர்க்கும் ஆற்றல் உடையவை.
வைரஸ் கிருமித் தொற்றினால் தோன்றும் சுரம் மற்றும் தொண்டைவலி நீங்க மயிற்கொன்றை இலைகளை இடித்து, சாறெடுத்து 15 முதல் 30 மில்லியளவு வெந்நீருடன் கலந்து சாப்பிட வேண்டும். இதன் விதைகளை அரைத்த தடவ, இருமலினால் தோன்றும் மார்பு வலி நீங்கும். இலைச்சாற்றை தடவ, அக்கி தீவிரம் குறைந்து, தழும்பு மற்றும் அதனால் உண்டாகும் வலி மறையும்.
மயிற்கொன்றை இலை மற்றும் பூக்களை நிழலில் உலர்த்தி, ஒன்றிரண்டாக இடித்து வைத்துக்கொள்ள வேண்டும். 15 கிராம் இலைப்பொடியை 500 மிலி நீரில் போட்டு கொதிக்கவைத்து 125 மிலியாக சுண்டிய பின் வடிகட்டி குடிக்க சுரம் நீங்கும்.
- டாக்டர் ஜெ.ஜெயவெங்கடேஷ்

Engr.Sulthan
__._,_.___
rinary Tract Infection (UTI)



Cranberry Juice for UTI Cure
Urinary tract infection (UTI) or bladder infection is caused by bacteria that affect the urinary tract or the urinary bladder- a sack-like organ situated in the lower abdomen. Ureters- the narrow tubes carry urine from kidneys to the bladder. Urine is stored in the bladder and emptied through urethra. An average human adult passes about a quart and a half of urine each day (on the basis of consumption of fluids and foods.) Urinary tract naturally prevents any kind of infection as the ureters and bladder, in normal conditions, prevent urine from backing up toward the kidneys. The flow of urine from the bladder helps wash bacteria out of the body. However, urinary tract infection can still occur due to many reasons.

Symptoms of Urinary Tract Infection

As soon as you feel one or see signs of UTI, you must start your home treatment for UTI. This is the list of symptoms of urinary tract infection.
• Frequent urge to urinate.
• Pain or a burning sensation during urination.
• Passing of milky cloudy urine due to pus present in the urine. Sometimes, urine might contain traces of blood.
• Men having urinary tract infection can feel pain or pressure in the rectum.
• Women having urinary tract infection can feel pain or pressure within the area of pubic bone.
• Weakness and tiredness.
• Sometimes pain in the back or below the ribs is there. Nausea and even vomiting can occur.
• Fever, only when the urinary tract infection has gone up to the kidneys and blood too.
• Bleeding, only when the kidney are also infected.

Remedies for Urinary Tract Infection

There are many natural remedies for bladder infection but the foremost UTI cure is the prevention of factors that might cause urinary tract infection. Drink lots of water to help flush out bacteria and other toxins from body, avoid unhygienic conditions like public toilets, keep your genitals clean, avoid having multiple sexual partners and exercise all cautions during sexual activities. Apart from taking these preventive measures for UTI, adopt the following home treatment for UTI in the form of easy and simple remedies if you catch the infection.
• Drink lots of water and other liquids to help flush out the waste substances from body.
• Add 1/2 tsp baking soda in a glass of water as soon as you see the first symptoms of urinary tract infection.
• Have cranberry juice that inhibits growth of bacteria and prevent them from clinging to the cells of urinary tract. You can even add apple juice to it.
• Take equal parts of sandalwood, bergamot, tea tree, frankincense and juniper. Mix them to make herbal oil and rub this over your bladder area. Do massage with this oil for 2-3 days till the symptoms of UTI begin subsiding.
• Increase intake of vitamin C. Amla (Emblica Officinalis or Gooseberry), lime juice, citrus fruits etc. are rich sources of Vitamin C.
• Avoid tea, coffee and other drinks with caffeine. Also avoid spicy food as well as processed food like cheese, chocolate, and dairy products. Avoid artificial sweeteners.
• Avoid alcohol and cigarettes, carbonated drinks like beer, soda or any other drink with fizz. All these foods and drinks promote growth of bacteria.
• Include antibacterial herbs in your daily food. Many Indian herbs, spices and condiments like garlic, clove, basil, turmeric etc. have effective antibacterial properties. Use them while cooking your food.
web sources

Engr.Sulthan

Thursday, June 21, 2012

Q.How can you drop a raw egg onto a concrete floor without cracking it?
A.Concrete floors are very hard to crack!

Q.If it took eight men ten hours to build a wall, how long would it take four men to build it?
A. No time at all it is already built.


Q.If you had three apples and four oranges in one hand and four apples and three oranges in the other hand, what would you have?
A. Very large hands.

Q.. How can you lift an elephant with one hand?
A. It is not a problem, since you will never find! an elephant with one hand.

Q. How can a man go eight days without sleep?
A. No Probs , He sleeps at night.


Q. If you throw a red stone into the blue sea what it will become?
A.. It will Wet or Sink as simple as that.

Q. What looks like half apple ?
A : The other half.


Q. What can you never eat for breakfast ?
A : Dinner.

Q. What happened when wheel was invented ?
A : It caused a revolution.

Q. Bay of Bengal is in which state?
A : Liquid


Q. How many buckets of water does Pacific Ocean contains?
A : It depends on the size of the bucket.


Interviewer said 'I shall either ask you ten easy questions or one really difficult question. Think well before you make up your mind!' The boy thought for a while and said, 'my choice is one really difficult question.'
'Well, good luck to you, you have made your own choice! Now tell me this. 'What comes first, Day or Night?'
The boy was jolted into reality as his admission depends on his answer, but he thought for a while and said, 'It's the DAY sir!'
'How' the interviewer asked,
'Sorry sir, you promised me that you will not ask me a SECOND difficult question!'


Engr.Sulthan
மூட்டு வலிகளைக் குணமாக்க பத்தியங்கள் உதவுமா?



மூட்டு நோய்களைக் குணமாக்க உணவுமுறையில் மாற்றங்கள் செய்வது உதவுமா?

வலிகளுக்கும் மூட்டுகளுக்குமான உறவு அண்ணன் தம்பி போல மிக நெருக்கமானவை. விட்டுப்பிரியாதவை.



இதன் காரணமாக மூட்டுவலிகளினால் துன்பப்படுவோர் அவற்றிலிருந்து விடுபடுவதற்கான மார்க்கங்கள் எதைப் பற்றிக் கேள்விப்படாலும் அதனைப் பரீட்சித்துப் பார்க்காது விடமாட்டார்கள். வேறும் ஏதாவது இருக்கிறதா எனத் தேடியலைவார்கள்.

மூட்டுகளுக்கான எளிமையான பயிற்சிகள் மூட்டு நோய்கள் உள்ளவர்களுக்கும் மிக மிக அவசியமானதாகும்.

மூட்டு வலிகளா? பயிற்சிகள் உதவும்

மூட்டு நோய்கள் என நாம் பொதுவாகச் சொன்னாலும் அது தனி ஒரு நேயால்ல. மூட்டுகளில் வலி, வீக்கம், அழற்சி ஆகியவற்றை ஏற்படுத்தக் கூடிய பல நோய்கள் யாவற்றையும் (Arthritis) என்றுதான் சொல்லுவார்கள். சுமார் 100க்கு மேற்பட்ட அத்தகைய நோய்கள் இருக்கின்றன.

அத்தகைய நோய்களைக் குணப்படுத்த உணவுப் பத்தியம் உதவுமா என்று கேட்டால்
நிச்சயமாக இல்லை.
ஆயினும் மூட்டு நோயுள்ளவர்களது பொதுவான உடல்நலத்தைப் பேணுவதற்கு சமச்சீர் வலுவுள்ள ஆரோக்கிய உணவுமுறை உதவும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.

சமச்சீரான உணவு உதவும்

எவ்வாறான உணவுமுறை உதவும்

சமச்சீரான உணவு. உங்கள் பொதுவான உடல் ஆரோக்கியத்தைப் பேணவும், உடலுக்கு ஏற்ப எடையை சரியான அளவில் பேணவும் உதவும். பொதுவான உடல் நிலை நல்ல நிலையில் இருந்து எடையும் சரியான அளவில் பேணப்பட்டால் மூட்டு நோய்களின் தாக்கம் குறைவடையும்.
எடையைச் சரியான அளவில் பேணுவது மிக முக்கியமாகும். எடை அதிகரித்தால் முழங்கால். இடுப்பு போன்ற எடை தாங்கும் மூட்டுகளுக்கு சுமை அதிகமாகி நோய் தீவிரமடையும்.
எடையைக் குறைக்க வேண்டும் என்பதற்காகத் திடீரென கடுமையாக உணவுகளைக் குறைப்பதும் பட்டினி கிடப்பதும் நோயின் தீவிரத்தை அதிகரிக்குமே அன்றிக் குறைக்காது.
தாராளமாக நீராகாரம் எடுங்கள். ஆனால் மதுபானம் கூடாது. இனிப்பு அதிகமுள்ள மென்பானங்களையும் அதிகம் உட்கொள்ளக் கூடாது.
கல்சியம் செறிவுள்ள உணவுகள் அவசியம் தேவை. பால், யோகொட், தயிர், கீரை வகைகள், சிறுமீன்கள், பயறின உணவுகளில் கல்சியம் அதிகம் உண்டு.
தவிர்க்க வேண்டியவை உள்ளனவா?

'மூட்டு நோயெனற்றால் வாதம்தானே?

அப்படியென்றால் தயிர், வெண்டைக்காய், தக்காளி போன்ற குளிர்ச்சாப்பாடுகள் கூடாதுதானே' என்று பலர் கேட்பார்கள்.
வேறு சிலர் 'தேசிப்பழம், உருளைக்கிழங்கு கூடாது என்பர்.
இவை தவறான நம்பிக்கைகள். உண்மை கிடையாது. மாறாக இவற்றில் பல நல்ல போசாக்குப் பொருட்கள் உள்ளன. எனவே அவற்றை உணவில் சேர்க்க வேண்டும்.

ஒரு சில நோய்களில்

கவுட் (Gout)
ஆயினும் கவுட் (Gout) என ஒரு மூட்டு வருத்தம் உண்டு. இது இலங்கையில் காணப்படுவது குறைவு. இந்நோய்க்கும் குருதியில் யூரிக் அமிலம் (Uric Acid) அதிகரிப்பதற்கும் தொடர்புண்டு.

இந்நோயுள்ளவர்கள் இறைச்சியில் ஈரல், மூளை, சிறுநீரகம் போன்றவற்றையும், நண்டு போன்ற கடலுணவுகளையும், ஈஸ்ட் அதிகமுள்ள மாமைட், பியர் போன்றவற்றைத் தவிர்ப்பது நல்லது.

ஆனால் ஏனைய மூட்டுவலிக்காரருக்கு அவற்றைத் தவிர்ப்பதால் பயன் ஏதும் இல்லை.

ரூமரெடியிட் ஆத்திரைடிஸ்

ரூமரெடியிட் ஆத்திரைடிஸ் என்பது இங்கும் பரவலாக உள்ளது.

இவர்களுக்கு ஒமேகா 3 கொழுப்பு உதவலாம் எனத் தெரிகிறது. வலிநிவாரணிகள் போல நல்ல சுகத்தைக் கொடுக்காது என்ற போதிலும் பக்கவிளைவுகள் இல்லாதததால் உட்கொள்வதில் பயமில்லை.



ஒமேகா 3 கொழுப்பானது கொலஸ்டரோல் குறைப்பிற்கும், இருதய நோய் சிலவற்றைத் தடுப்பதற்கும் உதவும். சல்மன், சார்டீன் போன்ற மீன்களிலும் எள்ளிலும் இருக்கிறது. மாத்திரைகளாகவும் கிடைக்கிறது.

தவறான கருத்து

உங்களது நோயை ஏதாவது ஒரு உணவு அதிகரிக்கிறது என நீங்கள் கருதினால் உடனடியாக அதை நிறுத்திவிடாதீர்கள்.
தினமும் உண்ணும் உணவு பற்றிய நாட்குறிப்பை ஒரு மாதத்திற்கு குறித்து வாருங்கள்.
உங்கள் நோயின் நிலை, குறித்த உணவு ஆகியவை பற்றி உங்கள் மருத்துவருடன் கலந்துரையாடுங்கள்.
நீங்களாக நிறுத்த வேண்டாம்.

ஏனெனில் பொதுவாக மூட்டு வலிகள் காலத்திற்குக் காலம் காரணம் எதுவுமின்றி தீவிரமாவதும் தானாகவே மறைவதும் உண்டு. எனவே நீங்கள் அது திரும்ப வருதற்குக் காரணம் ஒரு உணவு அல்லது ஒரு உணவு வகை என நம்புவது காகம் இருக்கப் பனம்பழம் விழுந்த கதையாகவும் இருக்கலாம்.

ஏனெனில், எந்த ஒரு உணவையும் தவிர்ப்பதன் மூலம் எந்தவொரு மூட்டு நோயையும் தணிக்கலாம் என்பதற்கு விஞ்ஞான பூர்வமான ஆதாரம் இதுவரை கிடையாது. (ஏற்கனவே குறிப்பட்ட கவுட் தவிர).
குறிஞ்சா இலை,
முடக்கொத்தான்
எனப் பல பயன்படுகின்றனவே என்கிறீர்களா.

இவை பற்றி ஆய்வுகள் நடந்ததாக அறியவில்லை. அத்துடன் வேறெந்த மருந்தும் பயன்படுத்தாமல் இவற்றை மட்டும் பயன்படுத்தி குணமடைந்தவர்கள் இருக்கிறார்களா?


இருந்தால் அது பற்றி விஞ்ஞானபூர்வ ஆய்வுகள் தேவை.

வலிநிவாரணி வெளிப் பூச்சு மருந்துகள் உதவலாம்

பூச்சு (ஜெல்) மருந்துகளின் நன்மைகளும் பிரச்சனைகளும்

எனவே
குளிர், சூடு, பித்தம் எனச் சொல்லி எந்த ஒரு உணவையும் தள்ளி வைக்க வேண்டாம்.
சமசீர் வலுவுள்ள (Balanaced Diet) நல்ல உணவாக உண்டு உங்கள் உடல் நலத்தைப் பேணுங்கள்.
இவற்றைக் கடைப்பிடித்தால் மூட்டு நோய்களோடு வாழ்தல் சிரமமானது அல்ல


டொக்டர்.எம்.கே.முருகானந்தன்


Engr.Sulthan
__._,_.___
உணர்வாய் உன்னை !

சகோதரர் ஜலாலுத்தீன்.

உங்கள் கணக்குகள் கேட்கப்படுமுன் நீங்களே உங்கள் சரிபார்த்துக் கொள்ளுங்கள். உங்கள் செயல்கள் எடை போடப்படுமுன் நீங்களே எடை போட்டுப் பாருங்கள். உமர் இப்னு கத்தாப் (ரலி).

இது ஒரு சுய மதிப்பீட்டுப் படிவம். நிகழ்காலத்தில் உங்கள் வாழ்க்கையின் பல பகுதிகளையும் மதிப்பீடு செய்து, உங்கள் திசைகளை மாற்றிக்கொள்வதற்கும், இன்னும் மேன்மைப்படுத்திக் கொள்வதற்கும் உதவும். இன்ஷா அல்லாஹ்..

பகுதி ஒன்று:

அல்லாஹ்வுடன் உங்களுடைய தனிப்பட்ட உறவு:

1. சந்தோஷமான, மகிழ்ச்சியான நேரங்களில் எத்தனை முறை அல்லாஹ்வை நினைவு கூர்ந்து அவனுக்கு நன்றி செலுத்தினீர்கள்?

2. இவ்வாண்டு, நீங்கள் பெற்ற கல்வியினாலும், செயல்பாடுகளினாலும் அல்லாஹ்வைப் பற்றிய ஞானமும் அவனுடன் உங்களுக்குள்ள கடமையுணர்ச்சியும் ஆழமானதா?

3. அல்லாஹ்வுடன் உள்ள தொடர்புகளில் சோம்பேறித்தனமாக இருந்தீர்களா?

4. உங்களுக்கு ஏதாவது தேவை இருந்த சமயம் தவிர, எத்தனை முறை அல்லாஹ்வுடன் துவா மூலம் பேசினீர்கள்?

5. எத்தனை முறை அல்லாஹ்வுடைய வழிகாட்டலை கேட்டிருக்கிறீர்கள்?

6. கவலை, தேவை, சிரமம் போன்ற சமயங்களில் எத்தனை முறை அல்லாஹ்விடம் கையேந்தியிருக்கிறீர்கள்?

7. அல்லாஹ்வின் நினைவையும், அவனுடனுள்ள உங்களுடைய கடமையுணர்ச்சியையும் அதிகரிப்பதற்கு தினசரி, வாராந்திர அடிப்படையில் நீங்கள் என்ன செய்யலாம்?

8. அல்லாஹ்வை எந்நேரமும் நினைவில் நிறுத்த, குர்ஆன், நபிமொழிகளிலுள்ள துவாக்களை எப்படி மனப்பாடம் செய்யலாம்?

9. அல்லாஹ்வுடன் தொடர்பு கொள்ளும்படி சகமனிதர்களை அழைத்திருக்கிறீர்களா?

உங்களுடைய இஸ்லாமிய அறிவு:

1. உங்களுடைய வாழ்நாட்களில் தினமும் குர்ஆனின் ஒரு வசனங்களையாவது பொருளறிந்து படித்திருக்கிறீர்களா? இல்லையெனில் இன்றிலிருந்து முயற்சி எடுப்பீர்களா?

2. இஸ்லாமிய கல்வி வட்டம் அல்லது வகுப்புகளுக்குச் சென்றீர்களா? இல்லையென்றால், அங்கு செல்லத் தடையாக இருப்பது எது..? எப்படி அந்தத் தடையை நீக்கலாம்?

3. இஸ்லாமிய அறிவைப் பெறுவதற்காக, மாநாடுகளுக்கோ, கருத்தரங்குகளுக்கோ பயணம் செய்தீர்களா?

4. கடந்த வருடத்தில் நீங்கள் கற்ற இஸ்லாத்தைப்பற்றி நீங்கள் முன்பு அறிந்திராத 10 விஷயங்கள் எவை? அவற்றில் நீங்கள் நடைமுறையில் செயல்பாட்டிற்குக் கொண்டு வந்தவை எவை?

5. நீங்கள் அல்லாஹ்விற்காக மட்டுமே அறிவைத் தேடினீர்களா அல்லது வேறு எதாவது காரணத்திற்காகவா?

6. இஸ்லாத்தைப் பற்றி நீங்கள் அறிந்திராத எந்த 10 விஷயங்கள் பற்றி அடுத்த ரமளானுக்குள் அறிந்து கொள்ள விரும்புகிறீர்கள்?

7. கடந்த வருடத்தில் சுமாராக எத்தனை இஸ்லாமிய புத்தங்கள் படித்தீர்கள்?

8. கடந்த வருடத்தில் சுமாராக எத்தனை இஸ்லாமிய வீடியோக்களை பார்த்தீர்கள்?

9. சுமாராக எத்தனை இஸ்லாமிய ஆடியோ கேசட்டுகள் கேட்டீர்கள்?

10. அறிவு பெறுவதற்கு உங்களுக்கு எது மிகவும் பொருத்தமாக இருக்கிறது? (கேட்டல், பார்த்தல் அல்லது படித்தல்)

11. உங்களைச் சுற்றியுள்ள மக்களைப் பற்றியும் அவர்களிடம் உள்ள மார்க்க ஞானம் பற்றியும் அறிந்திருக்கிறீர்களா? அவர்கள் அறியாமையில் இருப்பின் அவைகளை களைய ஏதாவது முயற்சி எடுத்தீர்களா.?

உங்களுடைய தொழுகை:

1. ஒரு நாளுக்கு ஐந்து முறை தொழுகிறீர்களா?

2. ஒரு நாளில் எந்தெந்த தொழுகைகளை ஜமாஅத்துடன் தொழுதீர்கள்?

3. பள்ளியிலோ பணியிலோ இருக்கும் போது தொழுகை நேரத்தில் தொழுதீர்களா, இல்லயென்றால், வீட்டிற்கு வந்தபின் அதற்காக ஈடு செய்தீர்களா?

4. தொழுகையை சரியான முறையில் நிறைவேற்றுகிறீர்களா? அல்லது நீங்கள் தொழுவது தான் சரியான முறை என்று நினைத்துக் கொண்டிருக்கிறீர்களா?

5. உங்கள் தொழுகையில் மன ஓர்மையுடன் இருக்கிறீர்களா?

6. தொழுகையை ஆர்வத்துடனும், அன்புடனும், இறையச்சத்துடனும் எதிர்நோக்குகிறீர்களா அல்லது தயக்கத்துடனும், சோம்பேறித்தனத்துடனும், ஏதோ முடிந்தால் போதும் என்ற மனநிலையிலும் எதிர்நோக்குகிறீர்களா?

7. கடமையான (ஃபர்ள்) தொழுகையுடன், சுன்னத் தொழுகையையும் நிறைவேற்றுகிறீர்களா?

8. உங்கள் தொழுகையை எப்படி செம்மைப்படுத்தலாம்?

9. உங்கள் அடுத்த வீட்டுக்காரர்களுக்கும் உடன் வேலை செய்பவர்களுக்காவும் துவா செய்திருக்கிறீர்களா?

பகுதி இரண்டு:

உங்கள் குடும்பம்:

1. கடைசியாக எப்போது உங்கள் குடும்பத்திற்காக அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தினீர்கள்?

2. உங்கள் குடும்பத்துடன் உங்களுக்குள்ள உறவு அல்லாஹ்வின் சந்தோஷத்திற்காகவா?

3. ஒரு முஸ்லிமாக, உங்களுக்கு உங்கள் குடும்பத்தின் பால் உள்ள பொறுப்பை அறிந்திருக்கிறீhகளா?

4. ஒரு தாய்-தந்தை, கணவன்-மனைவி, சகோதரன்-சகோதரி, மகன்-மகள் என்ற முறையில் உங்கள் பொறுப்புக்களை அறிந்திருக்கிறீர்களா?

5. ஒரு தாய்-தந்தை, கணவன்-மனைவி, சகோதரன்-சகோதரி, மகன்-மகள் என்ற முறையில் உங்கள் உரிமைகளை அறிந்திருக்கிறீர்களா?

உங்கள் பெற்றோர்:

1. உங்கள் பெற்றோருடன் உங்கள் உறவு எப்படி இருக்கிறது?

2. அவர்களுடன் வசிக்கும் பட்சத்தில் தினமும் அர்த்தமள்ள உரையாடல் எதாவது உங்களுக்கிடையில் நடக்கிறதா?

3. களைய வேண்டிய வெறுப்புகள் எதையாவது வளர்த்துக் கொண்டிருக்கிறீர்களா?

4. அவர்களிடம் நீங்கள் மரியாதையுடன் நடந்து கொள்கிறீர்களா?

5. கடந்த ஆண்டு, அவர்களை அல்லாஹ்விடம் நெருங்கச் செய்வதற்காக நீங்கள் செய்த 5 காரியங்கள் எவை?

6. உங்கள் பெற்றோருக்கு பணிவிடை செய்திருக்கிறீர்களா?

7. அவர்கள் தொலைவில் வசிப்பவர்களாக இருந்தால், அவர்களை அடிக்கடி போய்ப் பார்ப்பதோ, பேசுவதோ உண்டா?

8. பெருநாள் தினங்களில் அவர்களுக்கு பரிசுப் பொருட்கள் கொடுத்து அவர்களுடன் நெருக்கத்தை ஏற்படுத்த முயன்றதுண்டா?

9. அவர்கள் உயிரோடு இல்லாவிட்டால், அவர்களுக்காக எப்போது பிரார்த்தனை செய்தீர்கள்?

10. அவர்களுக்காக சமீபத்தில் எப்போது தர்மம் செய்தீர்கள்?

உங்கள் வாழ்க்கைத் துணை:

1. உங்கள் வாழ்க்கைத் துணையுடன் உங்கள் உறவு எப்படி இருக்கிறது?

2. தினசரி அடிப்படையில் அவர்களுடன் அடிக்கடி அர்த்தமுள்ள உரையாடல்களில் ஈடுபடுகிறீர்களா?

3. இஸ்லாமிய வகுப்புகளுக்குத் தொடர்ச்சியாக இருவரும் சேர்ந்து செல்வதன் மூலம் இஸ்லாத்தைப் பற்றி அறிந்து கொண்டீர்களா?

4. நீங்கள் இருவராகவும், குடும்பமாகவும் இஸ்லாத்தை உங்கள் வாழ்க்கையின் ஒரு பகுதியாக ஆக்குவதற்கு எப்படி முயன்றீர்கள்?

5. பேசிக் தீர்த்துக் கொள்ள வேண்டிய மௌனமான வருத்தங்கள் ஏதாவது மனதளவில் இருக்கிறதா?

6. கடந்த வருடத்தில் எத்தனை முறை நீங்கள் இருவரும் சேர்ந்து மறுமை சிந்தனை குறித்து பேசியிருக்கிறீர்கள்?

7. உங்கள் உறவில் சொல், உணர்வு அல்லது உடல் ரீதியாக செய்யப்பட்ட கொடுமை அல்லது அநீதி ஏதாவது உள்ளதா? அப்படியிருந்தால், ஏன் அது நடந்தது? அதற்கு என்ன செய்யலாம்?

8. கடந்த வருடத்தில் உங்கள் உறவினால் அல்லாஹ்வின் மேலும், இஸ்லாத்தின் மேலும் உள்ள ஈமான் வளர்ந்திருக்கிறதா?

9. உங்கள் வாழ்க்கைத் துணையின் இடத்தில் நீங்கள் இருந்தால் எப்படி உணர்வீர்கள்?

உங்கள் பிள்ளைகள்:

1. உங்கள் பிள்ளைகளுடன் உங்கள் உறவு எப்படி இருக்கிறது?

2. அவர்களுடைய பள்ளி, பகுதி நேர, சமூக நடவடிக்கைகள், இவற்றில் என்ன நடக்கிறது என்று தெரியுமா?

3. அவர்களுடைய நண்பர்கள் யார் என்று தெரியுமா?

4. தினசரி அடிப்படையில் அவர்களுடன் அடிக்கடி அர்த்தமுள்ள உரையாடல்களில் ஈடுபடுகிறீர்களா?

5. அவர்களுடன் ஓய்வு நேரத்தைக் கழிக்கிறீர்களா?

6. அல்லாஹ்வுடன் பிள்ளைகளுக்கு நெருக்கத்தை ஏற்படுத்த நீங்கள் எடுத்த ஏதாவது 5 செயல்கள்.

7. உங்கள் உறவில் சொல், உணர்வு அல்லது உடல் ரீதியாக செய்யப்பட்ட கொடுமை அல்லது அநீதி ஏதாவது உள்ளதா? அப்படியிருந்தால், ஏன் அது நடந்தது? அதற்கு என்ன செய்யலாம்?

8. அவர்களுக்கு முன்னால் வாழும் இஸ்லாமிய எடுத்துக்காட்டாக நீங்கள் இருந்திருக்கிறீர்களா?

9. எதன் மூலம் அவர்களுடன் நீங்கள் அதிக நேரம் செலவழிக்கலாம்?

10. அவர்கள் எப்படிப்பட்ட சூழ்நிலைகளில் வளர்கிறார்கள் என்று உங்களுக்குத் தெரியுமா?

11. அவர்களுக்குப் பிடித்த தொலைக்காட்சி நிகழ்ச்சி, எழுத்தாளர்கள், வீடியோ விளையாட்டுகள், விளையாட்டுப்பொருட்கள் போன்றவை என்ன என்று தெரியுமா?

12. எத்தனை முறை பள்ளிவாயிலில் ஜும்மா தொழுதிருக்கிறார்கள்?

13. உங்களைப் பற்றிய மதிப்பீடு அவர்களிடம் எப்படி இருக்கிறது என்று நினைக்கிறீர்கள்?

14. அவர்கள் எதாவது சொல்ல நினைத்தால் உங்களிடம் பேசுவார்களா? அல்லது உங்கள் துணைவருடன் பேசுவார்களா?

15. உங்கள் உறவினர்களுடன் (உடன் பிறப்புகள், மற்றவர்கள்) உங்கள் உறவு எப்படி இருக்கிறது?

16. எத்தனை முறை அவர்களுடன் தொடர்பு கொள்கிறீர்கள்?

17. அவர்களுக்கு பெருநாள் வாழ்த்து-பரிசு ஏதாவது கொடுத்தீர்களா அல்லது பெருநாளுக்கு தொலைபேசியிலாவது பேசினீர்களா?

18. அவர்கள் அருகில் வசிக்கவில்லை என்றால் வருடத்திற்கு ஒருமுறையாவது அவர்களைப் போய்ப் பார்க்கிறீர்களா?

19. தீர்க்க வேண்டிய மனஸ்தாபங்கள் ஏதாவது இருக்கிறதா?

20. அவர்கள் அல்லாஹ்வை நெருங்க ஏதாவது முயற்சி செய்தீர்களா?

21. அவர்களுடைய ஹலாலான தேவைகளை (அதாவது பண உதவி) நிறைவேற்ற உதவியிருக்கிறீர்களா?

22. உங்களுடைய பிள்ளைகள் உங்கள் உடன்பிறப்புகளை அறிவார்களா?

பகுதி மூன்று:

உங்கள் செல்வம்:

1. கடந்த வருடத்தில் உங்கள் செல்வத்தைப் பெருக்கியிருக்கிறீர்களா?

2. அதற்காக அல்லாஹ்வுக்கு எப்படி நன்றி செலுத்தினீர்கள்?

3. உங்கள் வருவாய் (வேலை) ஹலாலானதா? உங்களுக்கு நிச்சயமாகத் தெரியாவிட்டால் யாரிடம் அதைப்பற்றி ஆலோசிக்கலாம்?

4. உங்களுடைய ஜகாத்தைக் கொடுத்துவிட்டீர்களா?

5. எத்தனை முறை, எவ்வளவு தர்மத்திற்காக செலவழித்திருக்கிறீர்கள்?

6. எவ்வகைப் பொருட்கள், மக்கள், காரணங்களுக்காக இவ்வருடம் செலவழித்திருக்கிறீர்கள்?

7. உங்கள் செலவுகளுக்கு கணக்கு வைத்திருக்கிறீர்களா?

8. செலவுத்திட்டம் வைத்திருக்கிறீர்களா?

9. உங்கள் கடன் அதிகரித்திருக்கிறதா? குறைந்திருக்கிறதா?

10. வட்டி வாங்குவது அல்லது கொடுப்பதிலிருந்து முற்றிலுமாக விலகி விட்டீர்களா?

11. அடுத்த வருடம் எந்த விஷயங்களுக்காக தர்மம் கொடுப்பதை முதன்மைப்படுத்தியிருக்கிறீர்கள்?


பகுதி நான்கு:

உங்கள் ஆரோக்கியம்:

1. உங்கள் ஆரோக்கியத்திற்காக அல்லாஹ்விற்கு நன்றி செலுத்தினீர்களா?

2. உடற்பயிற்சி ஒழுங்காக செய்கிறீர்களா? இல்லையென்றால் ஏன்?

3. ஒழுங்காக உண்ணுகிறீர்களா?

4. சமச்சீர் உணவு உண்ணுகிறீர்களா?

5. அல்லாஹ்வை வணங்குவதற்காக உபரித் தொழுகைகளை உடலும் உள்ளமும் ஒன்றுபட தொழுதிருக்கிறீர்களா?

6. உங்கள் உடல்நிலையை எப்படி கவனித்துக் கொள்வது என்று அறிந்திருக்கிறீர்களா?

7. உங்கள் குடும்பத்தினரையும், உறவினர்களiயும் அதே போல் உடலைக் கவனித்துக் கொள்ள உற்சாகப்படுத்தியுள்ளீர்களா?

8. எப்போது கடைசியாக பொது உடற்பரிசோதனை செய்து கொண்டீர்கள்?

பகுதி ஐந்து:

உங்கள் தொழில்:

1. உங்கள் வேலையில் திசையையும் கவனத்தையும் தவற விட்டு விட்டீர்களா?

2. உங்கள் வேலை உங்களுக்குப் பிடித்திருக்கிறதா?

3. உங்கள் வேலை இஸ்லாம் அனுமதிக்கக் கூடியதாக இருக்கிறதா?

4. இல்லையென்றால், எவ்வித வேலை மாற்றம் உங்களுக்கு ஹலாலான வருவாயைத்தருவதுடன், உங்கள் திறமைகளை அல்லாஹ்விற்காகப் பயன்படுத்த உதவும்?

5. இதைப் பற்றி ஒரு தகுதியான மனிதரிடம் கலந்தாலோசித்திருக்கிறீர்களா?

6. உங்கள் தொழில் ஹலாலானதாக இருந்தால், அதன் திறனையும், கவனத்தையும் முன்னேற்ற முயன்றிருக்கறீர்களா?

7. அல்லாஹ்விடம் உங்களுக்கு உள்ள உறவை முன்னேற்ற, உம்மத்திற்கும், சமுதாயத்திற்கும் நன்மை புரிய, என்னென்ன புது வழிகள் மூலம் உங்கள் தொழிலை உபயோகிக்கலாம்?

8. தொழில் அல்லாஹ்வின் பொருத்தத்தின் பிரகாரம் இருக்க வேண்டும் என்ற விஷயத்தை பிறருக்
அண்மையில் இந்தியப் பொருளாதாரத்தில் ஏற்பட்ட வீழ்ச்சியும், அதைத் தொடர்ந்து வரலாறு காணாத அளவுக்கு அந்நிய செலாவணி சந்தையில் இந்தியா ரூபாயின் நாணய மாற்று விகிதத்தில் ஏற்பட்ட சரிவும் பல வினாக்களை பலருக்கும் ஏற்படுத்தி இருக்கிறது. அதைப்பற்றிய ஒரு சிறு விளக்கக் குறிப்பைத்தரவே இந்தப் பதிவு அவசியமாகிறது.

தொடங்கும் முன்பு ஒரு வார்த்தை – குறிப்பாக வளைகுடா நாடுகளில் ஊதியம் ஈட்டுவோருக்கும் – NRI என்ற பட்டம் பெற்றோருக்கும் கூறிட விரும்புகிறேன். அமெரிக்க டாலரின் விலை ஏற்றத்தின் விளைவாக நாம் அயல்நாடுகளில் சம்பாதிக்கும் தொகைக்கு இந்தியப் பணத்தில் அதிக அளவு கிடைப்பதாக எண்ணி நாம் ஒரேயடியாக மகிழ முடியாது. காரணம் நம்முடைய பண வருமானத்தின் அளவு கூடி இருக்கலாம். ஆனால் உண்மை வருமானத்தின் அளவுகூடவில்லை. பொருளாதார கலைச் சொற்களில் பண வருமானத்துக்கும் , ( DIFFERENCE BETWEEN MONEY INCOME AND REAL INCOME ) உண்மை வருமானத்துக்கும் நிறைய வேற்றுமைகள் உண்டு. அதாவது நம்முடைய ஊதிய வருமானத்தில் செலவு போக நம் கையில் சேமிப்பாக மிஞ்சுவதன் அளவுதான் உண்மை வருமானமாகும். அதைவிட்டு அதிக பண அளவிலான வருமானம் சென்ற மாதத்தை விட இந்த மாதம் கிடைத்தாலும் நமது வழக்கமான செலவுபோக கையில் மிஞ்சாமல் பற்றாக்குறைதான் நிலைமை என்றால் அது நமக்கு பண வருமானமேயன்றி நமது உண்மை வருமானமல்ல. நமது நாட்டின் பணத்தின் மதிப்பு குறைகிறது என்றால் நாம் உபயோகப்படுத்தும் அல்லது நுகரும் பொருள்களின் விலையும் கூடுகிறது அலது கூடும் என்று பொருள். இதை முதலில் புரிந்துகொள்ள வேண்டும்.

அதே நேரம் நாம் அயல்நாட்டில் ஈட்டும் சம்பளத்தைக்கொண்டு , இப்போதைய செலாவணி விகிதத்தில் ஊருக்கு பணம் அனுப்பி நாம் ஏற்கனவே வாங்கி இருந்த கழுத்தை நெறிக்கும் கடன்கள் இருந்தால் அவைகளை உடனே தீர்க்க முயற்சிக்கலாம். பேசிமுடித்து முன் பணம் மட்டும் கொடுத்து வந்திருக்கும் சொத்துக்களை இப்போது கூடுதலாக பணம் அனுப்பி பத்திரப் பதிவு செய்து கொள்ளலாம். இந்த செயல்கள் ஓரளவுக்கு நமக்கு பயன்தரும் என்பதை சொல்லிக்கொண்டு இதைப்பற்றி சில குறிப்புகளை அலசலாம்.

கடந்த ஓராண்டாகவே அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு மெல்ல மெல்ல விழுந்துகொண்டிருந்தது; ஊசலாட்டம் ஆடிக்கொண்டிருந்தது என்பதை நாம் அறிவோம். 2011 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதத்திலிருந்து சற்றேறக்குறைய இப்போதைய வீழ்ச்சிவரை ரூபாயின் மதிப்பு 22% சரிந்து வந்திருக்கிறது. பொருளாதார வல்லுனர்கள் இந்த சரிவு இன்னும் தொடரும் என்றுதான் கணக்கிடுகிறார்கள். ஒரு அமெரிக்க டாலரின் மதிப்பு ரூ. 60 ௦ வரை வரக்கூடும் என்று ஜோசியம் சொல்கிறார்கள்.

இதற்கு நச் என்று ஒரு தலையாய காரணம் சொல்லவேண்டுமானால் அமெரிக்க டாலருக்கான நமது நாட்டின் தேவைகள் அதிகரித்துவிட்டன என்று சொல்லலாம். பொதுவாக பொருளாதார கோட்பாடுகளின் அரிச்சுவடி, எந்த ஒரு பொருள் அல்லது சேவைகளின் தேவை அதிகரித்து அதற்குத் தகுந்தபடி வரத்து இல்லையோ அந்தப்பொருள் அல்லது சேவைகளின் விலை உயரும் என்பதாகும். தக்காளி முதல் தங்கம் வரை இதே கோட்பாடுதான். அதன்படி பல்வேறு காரணங்களுக்காக நமது நாட்டின் அமெரிக்க டாலருக்கான தேவை அதிகரித்துக்கொண்டே போகிறது. இருக்கும் தேவைக்கு சம்பந்தமே இல்லாமல் அமெரிக்க டாலரின் வரத்து குறைந்துகொண்டே போகிறது. இது முக்கிய காரணம்.

இப்படி தேவைகள் அதிகரித்து இருப்பதும் வரத்து குறைவாக இருப்பதும் அரசுக்கு தெரியாமல் திடீரென்று நடந்ததல்ல. இப்படி நடக்கும் என்று பல பொருளாதார மேதைகள் எச்சரித்துக்கொண்டுதான் இருந்தார்கள். ஆனால் ஆறு பொருளாதார நிபுணர்களைக்கொண்ட நமது அரசின் அமைச்சர் பெருமக்களுக்கு அயல்நாட்டு சுற்றுப்பயணம் பெருகியது மட்டுமல்ல அதற்கான செலவுகளையும் அரசே கொடுத்ததால் அந்த வலி தெரியவில்லை.

இப்படி நமது நாட்டுக்கு அமெரிக்க டாலரின் பற்றாக்குறை ஏற்பட மூன்று முக்கியமான காரணங்களைச் சுட்டிக்காட்டலாம்.

முதலாவதாக அந்நிய முதலீடுகளின் வெளியேற்றமும், குறைவான ஏற்றுமதிகளும்.நமது நாட்டுக்கு அந்நிய செலாவணியைக் கொண்டுவரும் இரு வழிகள் நமது நாட்டில் செய்யப்படும் அந்நிய முதலீடுகளும், நாம் செய்யும் ஏற்றுமதி மூலம் வரும் பட்டியல் தொகைகளுமே ஆகும். 2000 – ஆம் ஆண்டு நம்மை நோக்கி அந்நிய முதலீடுகள் அதிக அளவில் வரத்தொடங்கின. இவைகள் பெரும்பாலும் அந்நிய நாட்டினர் நம் நாட்டில் செய்த முதலீடுகள் மட்டுமல்லாமல் நமது அரசியல்வாதிகள் செய்த மாயஜாலங்களின் மூலமும் கருப்பை வெள்ளையாக்கும் அகடம் பகடம் மூலமும் வந்தவை. ( படிக்க: எனது முந்தைய பதிவு அந்நிய முதலீடும் அன்னியர் முதலீடும் என்ற தலைப்பில் ) ஆனால் எப்படியானாலும் அவை அமெரிக்க டாலர்களாக வந்தன. ஆனால் சமீக காலத்தில் இந்த முதலீடுகளும் அதன் மூலமாக கிடைத்த இலாபங்களும்( REPATRIATION) வெளியேறத்தொடங்கியுள்ளன என்று புள்ளி விபரங்கள் கூறுகின்றன. 2000 ஆம் ஆண்டிலிருந்து 2008 ஆம் ஆண்டுவரை நமது நாட்டிலிருந்து அந்நிய முதலீடுகள் பெரும்பாலும் வாபஸ் பெறப்படவில்லை. ஆனால்

2009 ல் 3.1 பில்லியன் டாலரும்

2011 ல் 10.7 பில்லியன் டாலரும் நமது நாட்டின் அந்நிய மூலதனத்திலிருந்து வெளியேறிவிட்டன.

2012 ல் 19 பில்லியன் பிளஸ் டாலர்வரை வெளியேறும் என்று கணக்கிட்டு இருககிறார்கள்.

(கிளிக்கு ரெக்கை முளைச்சுடிச்சு. ஆத்தைவிட்டு பறந்து போயிடுச்சு.) இப்படி அந்நிய முதலீட்டாளர்கள் தங்கள் முதலீடு செய்த பணத்தை உருவிக்கொண்டு துண்டைக்காணோம், துணியைக்காணோம் என்று ஓடுவதற்குக் காரணங்கள்? ஆதாயம் இல்லாமல் ஆற்றைக் கட்டி யார் இறைப்பார்கள்? நாட்டின் மந்தமான பொருளாதார வளர்ச்சி, கூட்டணி அரசின் நிலையற்ற கொள்கைகள், வணிக கோட்பாடுகளுக்குட்படாத திட்டமிடமுடியாத செலவினங்கள் என்று காரணங்கள் சொல்லப்படுகின்றன. வணிக கோட்பாடுகளுக்குட்படாத செலவினங்கள் என்பது அரசியல்வாதிகளுக்கு காரியம் நடத்திகொள்வதற்காகக் கொடுக்கப்படும் இலஞ்சம் ஆகும். இவைகளுக்கு பயந்து அந்நிய முதலீடுகள் வாபஸ் பெறப்படுகின்றன.

இரண்டாவதாக கச்சா எண்ணெய் விலை உயர்வு. கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து கூடுவது ஒருபுறம் அதற்காக அமெரிக்க டாலரில் செலுத்தவேண்டிய பணம் கைவசம் இல்லாவிட்டால் சந்தையில் அதிக விலை கொடுத்தேனும் டாலரை வாங்கி செலுத்தவேண்டிய கட்டாயம். இதனால் எண்ணெய் நிறுவனங்களின் டாலர் தேவை, சந்தையில் டாலருக்கான விலையை ஏற்றிவிடுகிறது.

மூன்றாவதாக யூரோவுக்கு வந்துள்ள சோதனை. உலகின் அந்நிய செலாவணி சந்தைகளில் அமெரிக்க டாலருக்கு அடுத்தபடியாக கருதப்படுவது யூரோ எனப்படும் ஐரோப்பிய யூனியனின் செலாவணியாகும். இந்த யூரோ ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகளின் பொது செல்வாணியாகும். ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகளில் கிரீஸ் – கிரேக்கம்- நாடு ஒரு அங்கமாகும். கிரீஸ் நாட்டில் பலவித காரணங்களால் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டுவிட்டது. ஒரு அங்கத்தினர் நாட்டின் பொருளாதார வீழ்ச்சி மற்ற அங்கத்தினர் நாடுகளை பாதிக்கும் என்று அஞ்சும் நாடுகள் கிரீஸை ஐரோப்பிய யூனியனிலிருந்து ஒதுங்கிவிடும்படி வற்புறுத்துகின்றன. அப்படி கிரீஸ் வெளியேறும் சூழ்நிலையில் யூரோவின்மேல் உள்ள அழுத்தம் அதிகமாகி மதிப்புகுறையும். இதைக் கண்ட உலகின் மற்ற நாடுகள் யூரோவை வைத்து முதலீடு செய்வதை தவிர்த்து அமெரிக்க டாலரில் முதலீடு செய்யத் தொடங்கி இருககிறார்கள். இதனாலும் உலக அளவில் அமெரிக்க டாலரின் விலை உயர்ந்து வருகிறது. குற்றாலத்தில் இடி இடித்து கோயம்புத்தூரில் மழை பெய்வதுபோல்தான் இந்தக் கதை . இதற்குக் காரணம் உலகமயமாக்கல் என்ற பொருளாதரத்தில் புதிதாய்ப் புறப்பட்டிருக்கும் அசுரனும் அவனை ஊட்டி வளர்க்கும் வல்லரசுகளுமாகும். இந்நிலை இல்லாவிட்டால் கிரீஸ் நாட்டில் ஏற்பட்ட அரிப்புக்கு இந்தியா மற்றும் ஏனைய நாடுகள் சொரிந்து கொள்ள வேண்டியதிருக்காது.

இந்த மாற்றங்களினால் நாம் எழுவோமா? அழுவோமா? பதில் என்ன வென்றால் நாம் இப்போது அழலாம் ஆனால் சில மாற்றங்களைக் கொண்டு வந்தால் நம்மால் எழவும் முடியும் . இப்போது எப்படியெல்லாம் நாம் அழவேண்டி இருக்கும்?

1. பெட்ரோலுக்கு இன்னும் அதிக விலை கொடுக்க நேரிடும். இதனால் எண்ணெய் நிறுவனங்களுக்கு அரசு தரும் மானியம் அதிகரிக்கப்படவேண்டிவரும். அரசுமானியம் என்பது மன்மோகன்சிங் அல்லது மண்டேசிங் அலுவாலியா வீட்டுப் பத்தாயத்தில் உள்ள கோதுமையை விற்று வருவதல்ல. அரசின் மானியம் கூடினால் வரிச்சுமை கூடும் இதனால் விலைவாசி உயரும்.

2. நாம் இறக்குமதி செய்யும் பொருள்களுக்கு அதிக விலை கொடுக்க நேரிடும். ஒரு விவசாய நாட்டில் இன்றும் நிறைய உணவுப் பொருள்களை இறக்குமதி செய்ய வேண்டிய கேவலமான நிலைமையில் இருக்கிறோம்.

3. வெளிநாடுகளில் இருந்து வரும் பணத்தை மட்டும் பெரிதாக பேசுகிறோம். . வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் படிக்கும் நமது மாணவர்களுக்கு அதிக கட்டணம் செலுத்த நேரிடும். விமானப் பயணத்தின் கட்டணங்கள் விமானம் பறக்கும் உயரத்துக்கு எகிறி விடும்.

4. விலை உயர்வால் நடுத்தரவர்க்கத்தின் நுகர்வு குறைவால் உற்பத்தியான பொருள்கள் தேக்கமடையும். உற்பத்திப் பொருள்களின் தேக்கத்தால் உற்பத்தி குறையும். முதலீடு செய்வோருக்கு முனைப்பு வராது. இலாபம் குறைவதால் சேமிப்பும் அதன்மூலம் வரும் முதலீடுகளும் குறையும். பொருளாதார மந்த நிலை ஏற்படும்.

எப்படி எல்லாம் செய்தால் நாம் எழலாம்?

1. ரிசர்வ் வங்கி தன்னிடம் இருக்கும் அமெரிக்க டாலரை வங்கிகளுக்கு திறந்த சந்தையில் விற்று பற்றாகுறையை சற்று சரிக்கட்ட உதவலாம். இது ஒரு தற்காலிக முதலுதவியாகும். நீண்ட நாட்களுக்கு குணமாக்கும் மருந்தை அரசுதான் தரவேண்டும்.

2. தொழில் நிறுவனங்கள் வெளிநாடுகளில் இருந்து முதலீடுமட்டுமல்ல தொழில் வளர்ச்சிக்கான நீண்டகால கடன்களும் அமெரிக்க டாலரில் வாங்கிக்கொள்வதற்கு வகை செய்யலாம்.

3. எண்ணை நிறுவனங்களுக்கும், இன்றியமையாத பொருள்களை இறக்குமதி செய்யும் நிறுவனங்களுக்கும் நிர்ணய விலையில் ரிசர்வ் வங்கி குறிப்பிட்ட அளவு அமெரிக்க டாலர்களை விற்பனை செய்யலாம். சந்தை நிலவரத்தில் வாங்கும் டாலரின் விலையில் உள்ள ஸ்திரமற்ற நிலையும் விலையும் இதனால் தவிர்க்கப்படலாம்.

4. கூட்டணிக்கட்சிகள் இழுத்த இழுப்புக்கெல்லாம் பொருளாதாரக் கொள்கைகளை மாற்றும் போக்கை மத்திய அரசு கைவிடலாம். ஒரு நிலையான அந்நிய முதலீடு மற்றும் அந்நிய செலவாணி கொள்கைகளை அறிவித்து பின்பற்றலாம்.

5. நாட்டின் மூல கனிம வளங்களை தனியாருக்கு குறைந்த விலையில் தாரைவார்ப்பதை நிறுத்தலாம். முக்கிய வருமானம் வரும் சுரங்க கனிமங்களை வெட்டி வெளிநாடுகளுக்கு அனுப்பி பட்டியலில் குறைத்து விலைபோட்டு – வித்தியாசங்களை சுவிஸ் வங்கியில் சேர்க்கும் சில அரசியல்வாதிகளின் ஊழல வெளிப்பட்டுள்ளதை தீவிர குற்றமாக கருதி அப்படி ஒதுக்கப்பட்ட மூல வளங்களை பறிமுதல் செய்யலாம்.

6. வெளிநாட்டில் வாழும் இந்தியர்களின் டெபாசிட்கள் 100 பில்லியன் வரை இருந்து இப்போது 50 பில்லியனாக ஆகிவிட்டது. ஊக்கப்படுத்தி அதிக டெபாசிட்டுகளை கவரலாம்.

7. உலகிலேயே அதிகம் தங்கம் இறக்குமதி செய்யும் நாடு என்ற பெயர் இந்தியாவுக்கு உள்ளது. இதற்கு ஏதாவது ஒரு கட்டுப்பாடு விதித்து கணவன்மார்களது கண்ணீரைத் துடைக்கலாம். வரதட்சணையாக தங்க நகை போடுவதற்கு ஒரு கட்டுப்பாடு விதிக்கலாம். ( யார் யார் அடிக்க வரப்போகிறார்களோ?).

8. வெளிநாடுகளில் சுற்றுப்பயணம் செல்கிறேன் என்று சில குருவிக் கூட்டங்கள் அமெரிக்க டாலரை சலுகைவிலையில் வாங்கிக் கொண்டுபோய் வெ
அறியாத சில விசயங்களை
தெரிந்து கொள்வோம் வாங்க! பகுதி-22
இரத்த வகைகள்.....

மனித உடலில் ஓடும் இரத்தத்தின் நிறம் சிவப்பு மட்டுமே. ஆனால் அனைவரின் ரத்தமும் ஒரே வகை அல்ல. இரத்த வகைகள் பற்றிய விவரம் அறியப்படாத காலத்தில் இரத்தம் தேவைப்பட்ட நோயாளிகளைக் காப்பாற்ற இயலவில்லை. அவர்களுக்கு இரத்தம் செலுத்துவது மிகக் கடினமாக இருந்தது. ஏனெனில் பல எதிர்விளைவுகள் ஏற்பட்டன. உயிர்களைக் காக்க முடியவில்லை.

1900 ஆம் ஆண்டில் டாக்டர். லான்ஸ்டைனர் என்பவர் ரத்தத்திலுள்ள பிரிவுகளைக் கண்டு பிடித்தார். இரத்தமானது பொதுவாக 4 வகைகளாகப் பிரிக்கப்படுகிறது. அவை 1. “A” வகை ரத்தம், 2. “B” வகை ரத்தம், 3. “AB” வகை ரத்தம் 4. “O” வகை ரத்தம். இவற்றில் “A” வகை ரத்தத்தை A1, B2 என்ற துணை வகைகளாகப் பிரிக்கப்படுகிறது.

இரத்தப் பிரிவுகளில்... A வகையினர் 42%ம், ஆ வகையினர் 8%ம், AB வகையினர் 3%ம், O வகையினர் 47%ம் மனிதர்களில் அமைந்துள்ளனர். ‘O’ வகை ரத்தமானது பொது ரத்ததானத்திற்குத் தகுதியானது அதனை “Universal Donor” என்பார்கள். ஏனென்றால் ‘O’ வகை ரத்தமுள்ளவர்கள் A, B, AB போன்ற ரத்த வகையினருக்கும் ரத்தம் கொடுக்கலாம்.

அதுபோன்று AB ரத்த வகையினரை Universal Recipient என்று அழைப்பார்கள். இவ்வகை ரத்தமுள்ளவர்களுக்கு O, A, B வகை ரத்தங்களில் எதனையும் செலுத்தலாம் (ஆயினும் அந்தந்த வகை ரத்ததிற்கு அந்தந்த வகை ரத்தம் செலுத்தும் முறைதான் சிறந்தது)

புதிய இரத்த வகைகள் :

ரத்தப்பிரிவுகளைக் கண்டுபிடித்த பின்னர், ஒரே ரத்த வகையைத் தானம் செய்த போதிலும் பல எதிர்விளைவுகள் ஏற்பட்டன. அதன் காரணமாக மருத்துவ அறிஞர்கள் இரத்தம் சம்பந்தமான தொடர் ஆராய்ச்சிகளில் இறங்கினர். Rh ரத்த வகையைக் கண்டுபிடித்தனர் A, B, AB, O ரத்த வகைகள் 1900லும், Rh ரத்த வகைகள் 1940-லும் கண்டுபிடிக்கப்பட்டன.

இந்தப் புதிய ரத்த வகையானது Rhesus என்ற குரங்கிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டது. அதனால் Rh-group என்று பெயரிடப்பட்டது. இது Rh – positive group என்றும் Rh – negative group என்றும் பிரிக்கப்பட்டது.

இதன் பின்னர்... A வகை ரத்தம் உள்ள ஒருவருக்கு A வகை ரத்தம் செலுத்தும்போது Rh வகையும் ஒற்றுமையாக அமைய வேண்டும் என்ற புதிய அணுகுமுறை கடைப்பிடிக்கப்பட்டது. அதாவது A வகையினர் Rh+ ஆக இருந்தால் அவர்களுக்கு A வகை Rh+ ரத்தம் தான் கொடுக்க வேண்டும். Rh நெகடிவ் உள்ளவருக்கு Rh நெகடிவ் ரத்தமே சேரும்.

பாதுகாப்பான ரத்தம் செலுத்தும் முறைகள் :

இரத்தம் பெறுபவர், தருபவர் இருவரின் ரத்த வகையும், ஒன்றாக இருக்கவேண்டும். இரத்தம் வழங்குபவருக்கு எவ்வித தொற்றுநோய்களும் இருக்கக் கூடாது. (உம். மலேரியா, மஞ்சள் காமாலை, பால்வினை நோய், எய்ட்ஸ்.

இரத்ததானம் செய்பவருக்கு ரத்தம் போதுமானளவு இருக்கவேண்டும் (HB 8% க்கு மேல் தேவை). இளைஞர்கள், நடுத்தர வயதினர் ரத்தம் வழங்கலாம். 60 வயதிற்கு குறைந்தவராக இருத்தல் அவசியம். ஒரு முறை ரத்தம் கொடுத்தவர் குறைந்தது மூன்று மாதங்கள் கழித்து மீண்டும் ரத்தம் கொடுப்பது நல்லது. ரத்தம் செலுத்தும் முன்பு Cross matching செய்ய வேண்டும்.

இரத்த தானம் ஏன்?

இரத்த சோகை நோய்களில் மிகக் கொடுமையானது தலாசீமியா என்னும் நோய். இந்நோய் உள்ள குழந்தைகளுக்கு 15 நாட்களுக்கொருமுறை வீதம், ஆயுள் முழுவதுமே இரத்ததானம் தேவைப்படுகிறது. இது ஒரு பாரம்பரிய ரத்தசோகை நோய்.

கருவிலுள்ள குழந்தையின் ஹீமோகுளோபின் குழந்தையாகப் பிறந்தவுடனும் மாறாமல் இருப்பதால், உயிர்வாழ புது ரத்தம் தேவைப்படுகிறது. இந்நோய் தாக்கிய 3 -4 வயது குழந்தைகளுக்கு 6 வாரங்களுக்கு ஒரு தடவையாவது ரத்ததானம் கொடுக்க வேண்டும். வளர, வளர அடிக்கடி ரத்தம் தேவைப்படும்.

இதுபோன்ற ரத்தசோகை பீடித்த ஆயிரக்கணக்கானோர் மாற்று ரத்தம் பெற்றே உயிர் வாழ்கின்றனர். விபத்து ஏற்பட்டு இரத்தமிழந்தவர்கட்கு மட்டும்தான் ரத்ததானம் பயன்படுகிறது என எண்ண வேண்டாம். குறிப்பிட்ட காலங்களில் கோயில்களுக்குச் சென்று வழிபடுவதைப் போல, ரத்ததானம் செய்து பல உயிர்களை வாழச் செய்யலாம். மேலும் ரத்ததானம் செய்பவர்களுக்கு இருதய நோய் வருவது குறைவு என்று ஓர் மருத்துவ ஆராய்ச்சி தெரிவிக்கிறது.

ஹீமோபிலியா :

இரத்தம் தொடர்பான வியாதிகளில் ஒன்று ஹீமோபிலியா. இது பெரும்பாலும் ஆண்களையே தாக்குகிறது. இது மரபு அணு சார்ந்த பிறவிக் கோளாறு. இதனால் காயங்கள் ஏற்பட்டால் இரத்தம் எளிதில் உறையாமல் இரத்தம் தொடர்ந்து வெளியேறிக் கொண்டே இருக்கும். இரத்தம் உறையச் செய்யும் செயல் முறைகளில் 8வது காரணி இல்லாமல் இருப்பது அல்லது குறைவாக இருப்பதே இதற்கு காரணம். இரத்தத்தின் உறையும் தன்மையில் ஏற்படும் குறைபாடு நோயான ஹீமோபிலியாவை மாற்றுமுறை மருத்துவமான ஹோமியோபதி மூலம் பெருமளவு கட்டுப்படுத்த இயலும். இதற்கு பயன்படும் முக்கியமான ஹோமியோபதி மருந்து: பாஸ்பரஸ் இரத்தம் கசியும் வியாதிகள் அனைத்தும் ஹீமோபிலியா அல்ல. இரத்தம் உறைவதில் ஏற்படும் கோளாறுகள் பல காரணங்களால் ஏற்படுகின்றன. இணையத்திலிருந்து...

Engr.Sulthan
__._,_.___