Wednesday, January 11, 2012

குளியலோ குளியல்! மண் குளியல் சிகிச்சை! வாறீகளா?

இயற்கை மருத்துவ முறையில, இன்னுமொரு விநோத சிகிச்சை முறைங்க அப்பு இந்த மண்குளியல் சிகிச்சை.



உடல்ல இருந்து அதிகமான உஷனத்தை நீக்கறதுக்கு இது பயன்படுதுங்க. குறிப்பா சரும நோய்கள் எதுவா இருந்தாலும் இந்த சிகிச்சை முறையை செய்யலாமுங்க!

மத்தியானம் உச்சி வெயில்ல, புத்து மண், இல்லன்னா, பசையுள்ள செம்மண்ணு, இல்லன்னா களி மண்ணை எடுத்து, நீரில நல்லா குழைச்சி, உடல் முழுக்க பூசிகொள்ளுவாங்க. இந்த சிகிச்சியின் போது, உள்ளாடை மட்டும் தான் போட்டிருப்பாங்க.



அரைமணி நேரம் வெய்யில்ல இருப்பாங்க. காத்து பட்டு ஆறும்போது சும்மா ஜிலுஜிலுன்னு இருக்கும் பாருங்க! (ஜில்லுன்னு ஒரு காதல் கணக்கா!) கொஞ்ச நேரம் ஆனபின்னாடி மண் காய காய, தோலை பிடிச்சி இழுக்கும் பாருங்க! அதுவும் கூட ஒரு அனுபவம் தான் பங்காளி!

பிற்பாடு நிழலில கொஞ்ச நேரம் இருந்துட்டு, பச்சை தண்ணியில போய் குளிப்பாங்க. நல்ல சுகமா இருக்குமுங்க! உடல்ல இருக்கிற கெட்ட நீர் எல்லாம் இந்த மண்குளியல் சிகிச்சையினால உறிஞ்சி வெளியேற்றப்படுதுங்க. அதனால மனசும் உடலும் லேசாயிடும்.

ஆஹா! அந்த குளிமை! அந்த ஆனந்தம்!! அதை அனுபவிச்சி பாத்தாதான் தெரியும்! வாய்ப்பு இருக்கிறவங்க செஞ்சி பாருங்க!

சரி என்ன கேட்டீங்க? மண்ணில வேற என்ன மாதிரி சிகிச்சை முறைகள் இருக்குன்னு தெரியனுமுங்களா, அப்பு?

அதையும் சொல்லிடறேன். கவனமா கேட்டுகோங்க ராசா! (பங்காளி பயலுகளுக்கு தான் என்ன ஒரு ஆர்வம்பா!!!)


ஈரமண் பட்டி (Wet Mud Pack), போடுவாங்க. அதாவது, மலச்சிக்கல், காய்ச்சல், தலைவலி ஏற்படும்போது, ஒரு வேட்டி துணியில ஈர மண்ணை வைச்சி ஒரு அகலமான பெல்ட் போல - பட்டியாக்கி, நெத்தி, அடிவயிறு, தொப்புள் மேலேயும் இடுவாங்க. நல்லா சில்லுன்னு இருக்கும். ஒரு அரை மணி கழிச்சி எடுத்திடலாம். நல்ல பலன் கொடுக்கும்.



இப்படி மண் இல்லாம கூட வெறும் துணியை, தண்ணியில நினைச்சி கூட போடுவாங்க. இதுக்கு பேரு ஈர துணிப் பட்டி (Wet Cloth Pack). மேல சொன்ன காரணங்களுக்காக இதை பயன்படுத்தலாமுங்க! அதே போல பலனும் கொடுக்குமுங்க!

நன்றி: "உங்க ...உறவுகாரன்பா" தளம்

No comments: