இதயநோய், புற்றுநோயை குணமாக்கும் அகத்திப்பூக்கள்
அகத்திக்கீரையைப் போல அகத்திப்பூக்களும் எண்ணற்ற மருத்துவ குணங்களை கொண்டுள்ளன. அகத்திப்பூவில் சுண்ணாம்புச் சத்து அதிகம் காணப்படுகிறது. இது எலும்புகளுக்கும், பற்களுக்கும் அதிக பலத்தை தருகிறது. அகத்திக்பூக்கள் சற்றுப் பெரியதாக இருக்கும். இவற்றை யாரும் சரியாக உணவாக உட்கொள்வதில்லை. இவற்றை கீரையுடனும் சமைத்து சாப்பிடலாம். தனியாக கூட்டு
வைத்தும் சாப்பிடலாம். வெயிலில் அதிகமாக உழைப்பவர்களுக்கும், கண் எரிச்சல், தலைச்சுற்றல், சிறுநீரில் மஞ்சள் நிறமாக போவது போன்ற பாதிப்புகளுக்கு அகத்திப்பூக்கள் மிகப்பெரிய வரப்பிரசாதமாகும்.
புகை பாதிப்பை போக்கும்
அகத்திப்பூக்களை சிறு துண்டுகளாக நறுக்கி சமைத்து உணவோடு உண்டு வர அந்த ஏழு நாட்களில் புகைத்த விசம் மலம் மூலம் வெளியேறிவிடும். பீடி, சிகரெட் பிடிப்பவர்களுக்கு அவற்றில் நாட்டத்தை குறைக்கச் செய்யும்.
சளித்தொல்லை, தும்மல், பித்தம் ஆகியவற்றை நீக்கும் சக்தி
அகத்திப்பூக்களுக்கு உண்டு. உடல்சூடு, மூலநோய், வாதம், கீழ்வாதம், மார்புச்சளி ஆகிய நோய்களை அகத்திப்பூக்கள் குணமாக்கும்.
பித்தம் குறையும்
அகத்திப்பூக்களை சேகரித்து வெயிலில் உலர்த்தி இடித்து தூளாக்கி சலித்து வைத்துக்கொண்டு இரவு உறங்கும் முன் காய்ச்சிய பசும்பாலுடன் அரை தேக்கரண்டி அகத்திப்பூ பொடி கலந்து பருகி வந்தால் பித்தம் குறையும். மலச்சிக்கல் நீங்கும்.
புற்றுநோய்க்கு மருந்து
அகத்திப்பூக்களுடன் மிளகு, சீரகம்,ஓமம்,பூண்டு வெங்காயம் சேர்த்து
நெய்யில் பொரித்து மதிய உணவுடன் சேர்த்து சாப்பிட்டு வர இதயப்படபடப்பு, இருதய வீக்கம், சிறுநீரகநோய், புற்றுநோய் கட்டுப்படும்.
கண்பார்வை தெளிவடையும்
இரண்டுவாரத்திற்கு ஒருமுறை அகத்திக்கீரையும், வாரம் ஒருமுறை
அகத்திப்பூக்களையும் சமைத்து உண்பவர்களுக்கு கண்பார்வை தெளிவடையும். அகத்திப்பூவின் சாறை பிழிந்து கண்ணில் விட இடக்கண்நோய் நீங்கும்.
இரத்த சோகை குணமடையும் செந்நிற அகத்திப்பூவானது ரத்த
ஒழுக்கு, இரத்தசோகை, கழலை, காய்ச்சல், உடல்வலி, ஆகியவற்றைப் போக்கும் மருந்தாக செந்நிற அகத்திப்பூ பயன்படுகிறது.
புற்று நோய், இதய நோய் தடுக்கும் கருஞ்சிவப்பு தக்காளி
புற்றுநோய் மற்றும் இதய நோயில் இருந்து பாதுகாப்பு அளித்து, வாழ் நாளை அதிகரிக்கும் கருஞ் சிவப்பு தக்காளியை விஞ் ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர். தாவரங்கள், அவற்றில் உள்ள ரசாயனங்கள், நோய் எதிர்ப்பு குணங்கள் குறித்து ஆராய, புளோரா என்ற அமைப்பு துவக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பிய கமிஷன் துவக்கியுள்ள இந்த புளோரா திட்டத்தின் கீழ், ஐரோப்பிய மையங்கள் மற்றும் பிரிட்டனர், நார் விச்சில் உள்ள ஜான் இன் னஸ் மையம் இணைந்து, கருஞ்சிவப்பு தக்காளியை உருவாக்கி உள்ளனர். தோட்டத்தில் வளர்க்கப்படும் செடியின் இரண்டு வகை ஜீன்களை பிரித்தெடுத்து, கருஞ்சிவப்பு தக் காளி உருவாக்கப்பட்டுள்ளது.
"பி53' என்ற ஜீனில் குறைபாடுகள் இருந்தால், புற்று நோய் மற்றும் இதய நோய் ஏற்படும். இந்த குறைபாடு உள்ள எலிகளிடம் பரிசோதித்ததில், கருஞ்சிவப்பு தக்காளி புற்று நோய் மற்றும் இதய நோய்களை எதிர்க்கிறது என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த குறைபாடுகள் உள்ள எலிகள் மூன்று விதமாக பிரிக்கப்பட்டன. ஒரு பிரிவு எலிகளுக்கு சாதாரண உணவு அளிக்கப்பட்டது. இன்னொரு பிரிவு எலிகளுக்கு 10 சதவீதம் சிவப்பு நிற தக்காளி பவுடர் உணவாக அளிக்கப்பட்டது. மூன்றாவது பிரிவு எலிகளுக்கு 10 சதவீதம் கருஞ்சிவப்பு தக்காளி பவுடர் அளிக்கப்பட்டது.
சாதாரண மற்றும் சிவப்பு தக்காளி உணவு உட்கொண்டு வந்த எலிகளின் வாழ்நாள் 142 நாட் களில் முடிந்தது. ஆனால், கருஞ்சிவப்பு தக்காளியை உணவாக சாப்பிட்டு வந்த எலிகளின் வாழ்நாள் 182 நாட்களாக நீடித்தது. புற்று நோய் மற்றும் இதய நோய் தாக்கினாலும், கருஞ்சிவப்பு நிற தக் காளிகள் வாழ்நாளை அதிகரிக்கும் என்பது இதன் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், எந்த விதமான காரணிகள், புற்று நோய் அல்லது இதய நோயை தடுக்கின்றன என்பது துல்லியமாக கண்டறியப் படவில்லை. கருஞ்சிவப்பு தக்காளியின் மருத்துவ, ரசாயன குணம் குறித்த அடுத்த கட்ட சோதனைக்கு விஞ் ஞானிகள் தயாராகி வருகின்றனர். மனிதர்களிடம் இதை பரிசோதிக்க நீண்ட காலம் பிடிக்கும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இணையங்களிலிருந்து....
Engr.Sulthan
No comments:
Post a Comment