கர்ப்பப்பை புற்றுநோய், கவனம்!
உடலில் உள்ள அபரிமிதமான செல்கள் தமக்குள் கட்டுப்பாடின்றி பிரிந்து, மீண்டும் வளர்ந்து அருகில் உள்ள திசுக்களில் பரவி, மீண்டும் பிரிந்து வளரும். இச் செயல் புற்று வளருவது போல இருப்பதால், இதை புற்றுநோய் என்பர். இதில் பல வகை உள்ளன. தோல் மற்றும் திசுக்களில் ஏற்படுவது “கார்சினோமா’ கேன்சர். எலும்பு, அதன் மஜ்ஜை, கொழுப்பு, தசை, ரத்தக் குழாய்களில் ஏற்படுவது, “சர்கோமா’. ரத்த அணுக்களை உற்பத்தி செய்து பரப்புவது “லூகேமியா’. நோய் எதிர்ப்பு சக்தி பகுதி செல்களில் ஏற்படுவது “லிம்போன் அன்ட் மையலோமா’ மூளை, முதுகு தண்டில் உள்ள திசுக்களில் ஏற்படும் செல் மாறுதல்கள் நடுநரம்பு மண்டலம், மத்திய நரம்பு மண்டலத்தில் ஏற்படுவது “மெலிக்னன்சி’ கேன்சர்.
புற்றுநோய் வராமல் தடுப்பது எப்படி என்ற ஆராய்ச்சியில் இன்னும் இறுதி முடிவு எட்டப்படவில்லை. வந்தபின் வளரவிடாமல் தடுப்பது அல்லது வருமுன் காப்பதில் ஓரளவு வெற்றி கிடைத்துள்ளது. மார்பக புற்றுநோய், கர்ப்பப்பை புற்றுநோய் என்பவை பெண்களுக்கு ஏற்படுபவை. இதில் செர்விக்கல் கேன்சர் எனப்படும் கர்ப்பப்பாதை புற்றுநோயை இங்கு காணலாம்.
செர்விக்ஸ் (Cervix) என்பது, பெண்ணின் கர்ப்பப்பையின் கீழ்ப்பாகத்தையும், பிறப்புறுப்பின் மேல் பாகத்தையும் இணைக்கும் குறுகிய பகுதி. இதன் உள்பகுதியில் உள்ள வழிப்பாதை “எண்டோசெர்விக்கல் கேனல்’ எனப்படும். இப்பாதை வழியாகவே மாதவிடாய் காலத்தில் உதிரப்போக்கு ஏற்படும். குழந்தையும் இவ்வழியாகவே பூமிக்கு வருகிறது.
பாக்டீரியா, வைரஸ் அல்லது ஈஸ்ட்களால் ஏற்படும் தொற்றுநோய், புற்றுநோய் அல்லாத வளர்ச்சியடைந்த பாலிப்ஸ் அல்லது சிஸ்ட் எனப்படும் கட்டிகள், கர்ப்பகாலத்தில் அல்லது மாதவிடாய் நிற்கும் காலத்தில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களால் செர்விக்கல் செல்களில் புற்றுநோய் ஏற்படுகிறது. எச்.பி.வி என்ற வைரஸ்கள் மூலம் வரும் தொற்றுநோய், உடலின் எதிர்ப்பு சக்தியால் தானாகவே சரியாகிவிடும். அவ்வாறு சரியாகாத செல்கள் பாதிக்கப்பட்டவையாக மாறி, புற்றுநோய் உண்டாக முதல்நிலை ஆகிறது. இதை துவக்க நிலையில் கண்டு பிடிக்காவிட்டால், செர்விக்ஸ் கேன்சர் செல்களின் அமைப்பை சிதைக்கும் நிலைக்கு மாறுகிறது. எச்.பி.வி., வைரஸ் மிகச்சாதாரணமாக காணப்படுபவை. இதில் 100 வகை உள்ளன. இதில் 30 வகை தவறான உடலுறவு மூலம் பரவுகின்றன. இதில் 15 வகை மிக அபாயகரமானதாகும்.
எச்.பி.வி., தொற்று நோய் உள்ளது என்பதை பெரும்பாலான பெண்கள் அறிவதில்லை. ஏனெனில், கர்ப்பப்பை பாதையில் ஏற்படும் உடலின் எதிர்ப்பு சக்தியால் தானே, இந்த நோய்த் தொற்று அழிந்துவிடுகின்றன. ஆயினும் மிகச்சிறிய அளவிலேனும் இந்த தொற்று, செல்களில் மாறுதல்களை ஏற்படுத்துகிறது. இம்மாறுதலை உணர்ந்து தகுந்த மருத்துவ ஆலோசனை பெறவேண்டியது அவசியம். கஅக கூஞுண்t எனப்படும் செல் பரிசோதனை மூலம், செல்களில் ஏற்படும் மாறுதல்களை அறிய முடியும். இந்த பரிசோதனையை குறிப்பிட்ட இடைவெளியில் செய்வது நல்லது.
கேன்சர் வளர்ந்த நிலையில் காணப்படும் சில அறிகுறிகள்: மாதவிடாய், உடலுறவுக்குப் பின் மருத்துவ பரிசோதனை நேரத்தில் பிறப்புறுப்பில் அதிக உதிரப்போக்கு, மாதவிடாய் காலத்தில் அதிகளவில் கட்டி, கட்டியாக மாறுபட்ட உதிரப் போக்கு, மாதவிடாய் ஒட்டுமொத்தமாக நின்ற பின்னும் உதிரப்போக்கு, இடுப்பில் வலி, உடலுறவின்போது வலியுடன் அதிகளவு பிறப்புறுப்பில் இருந்து வெளியேறும் திரவப்பசை போன்றவை அறிகுறிகள். இதனால் பெண்கள் ஆண்டுக் கொருமுறை, பாப் ஸ்மியர் டெஸ்ட் மற்றும் 3 ஆண்டுக்கு ஒருமுறை எச்.பி.வி., சோதனை செய்தால், செர்விக்ஸ் கேன்சர் வரும் அபாயத்தில் இருந்து தப்பிக்க வாய்ப்பு அதிகம் உள்ளது.
டாக்டர் என்.விஜயலட்சுமி ராம்சங்கர்,
கேன்சர் இன்ஸ்டிடியூட், அடையாறு
Engr.Sulthan
No comments:
Post a Comment