Monday, August 16, 2010

வ_அலைக்கும்_ஸலாம்
குழும நண்பர்கள் அனைவருக்கும் ரமலான் வாழ்த்துக்கள்
இந்த புனிதமிக்க திருக்குர்ஆன் இறங்கிய ரமலான் மாதத்தில் அல்லாஹ் அள்ளி வழங்கி இருக்கும் சலுகைகளையும்,பாவமன்னிப்புகளையும்,வாய்ப்புகளையும் நாம் ஒவ்வொருவரும் தவற விட்டு விடாமல் சரியான விதத்தில் பயன் படுத்திக் கொள்ளவேண்டும்.

இந்த வருசத்தில் பதினோரு மாதங்களை எப்படியோ வீணாக கழித்து விட்டோம்,அறிந்தும் சில அறியாமலும் சில பாவங்களை எல்லோருமே செய்து தான் இருக்கிறோம்.அடுத்த வருடம் நோன்பில் நம்மில் யாரெல்லாம் உயிரோடு இருப்போம் யாரெல்லாம் மண்ணோடு இருப்போம் என்று யாருக்குமே தெரியாது.ஆகவே மவுத் என்பது எப்ப வேண்ணாலும் வரலாம் ஆகவே மரணத்திற்கு முன்னால் நாம் செய்த பாவங்களுக்கும்,தவறுகளுக்கும் பிராயச்சித்தம் காணும் பொருட்டும்,மறுமையை நினைக்கும்போதே நம்மை அறியாமல் கண்ணில் நீர் கட்டுகிறதே அந்த மறுமையில் எந்த வித பயமும் இல்லாமல் நிற்பதற்கும் அல்லாஹ் தன் மாபெரும் கருணையினால் அள்ளி வழங்கியிருக்கும் ரமளானின் அருட்கொடைகள் அனைத்தையும் அடைந்தே தீர வேண்டும் என்ற லட்சிய வெறியோடு ரமலான் மாதத்திற்காக காத்திருப்போம்.ஆயிரம் மாதங்களை விட சிறந்ததான புனிதமிக்க லைலத்துல் கதிர் இரவினை அனைவரும் பெற்று அந்த இரவின் அனைத்து அருட்கொடைகளையும் பெற்று பாவமன்னிப்பு பெற்றவர்களாக அல்லாஹ் நம் அனைவரையும் ஆக்குவானாக.

யா அல்லாஹ் நாங்களெல்லாம் நோன்பையும்,அதன் நன்மைகளையும்,உன்னுடைய அருட்கொடைகளையும்,லைலத்துல் கதிர் இரவையும்,எதிர் நோக்கி தயார் நிலையில் காத்து இருக்கிறோம்.உன்னுடைய கருணையை எங்கள் மீதும் காட்டுவாயாக.நாங்கள் எங்களுக்குள்ளேயே செய்து வரும் சிறு சிறு பிழைகளை பொறுத்தருள்வாயாக.பெரிய பெரிய பாவங்களுக்கும் எங்களுக்கும் கிழக்கிற்கும் மேற்கிற்கும் உள்ள இடைவெளி போன்று இடைவெளியை ஏற்படுத்துவாயாக.எங்களுக்குள்ளே ஒற்றுமையை ஏற்படுத்துவாயாக.
எல்லாபுகழும் ஏக இறைவனுக்கே

No comments: