Monday, August 9, 2010

துபாயில் ந‌கைச்சுவையாள‌ர் ம‌ன்ற‌ நிக‌ழ்ச்சி








துபாயில் ந‌கைச்சுவையாள‌ர் ம‌ன்ற‌ நிக‌ழ்ச்சி

துபாய் : துபாயில் அமீர‌க‌ ந‌கைச்சுவையாள‌ர் ம‌ன்ற‌த்தின் ஆக‌ஸ்ட் மாத‌ நிக‌ழ்ச்சி வெள்ளிக்கிழ‌மை மாலை ஆப்பிள் ச‌ர்வ‌தேச‌ப் ப‌ள்ளியில் ந‌டைபெற்ற‌து.

அமீர‌க‌ ந‌கைச்சுவையாள‌ர் ம‌ன்ற‌ நிறுவ‌ன‌ப் புர‌வ‌ல‌ர் குணா நிக‌ழ்வினை துவ‌க்கி வைத்தார். வாய் விட்டுச் சிரித்தால் நோய் விட்டுப் போகும் என்ற‌ ந‌கைச்சுவையாள‌ர் ம‌ன்ற‌த்தின் தார‌க‌ ம‌ந்திர‌த்தை விவ‌ரித்தார்.
ந‌கைச்சுவையாள‌ர் ம‌ன்ற‌ த‌லைவ‌ர் சுரேஷ் வ‌ர‌வேற்புரை நிக‌ழ்த்தினார். அவ‌ர் த‌ன‌து உரையில் ப‌ல்வேறு வேலைப்ப‌ளுவினிடையே ந‌கைச்சுவையாள‌ர் ம‌ன்ற‌ நிக‌ழ்வில் ப‌ங்கேற்க‌ ஆர்வ‌முட‌ன் வ‌ந்திருக்கும் அனைவரையும் வ‌ர‌வேற்றார். ம‌ன்ற‌த்தின் நிக‌ழ்வுக‌ளில் அனைவ‌ரும் ப‌ங்கேற்று ஒத்துழைப்பு ந‌ல்கிட‌ கேட்டுக் கொண்டார்.

சென்னையைச் சேர்ந்த‌ ம‌ன‌ந‌ல‌ ஆலோச‌க‌ர் நியாஸி பீர் முஹ‌ம்ம‌து ப‌ல்வேறு ந‌கைச்சுவை‌ நிக‌ழ்வுக‌ளை நினைவு கூர்ந்து அர‌ங்கை அதிர‌ச் செய்தார்.ம‌ஞ்சு, ச‌ர‌வ‌ண‌ன், சிவ‌குமார், உள்ளிட்ட‌ ப‌ல‌ர் ந‌கைச்சுவைக‌ளை ப‌கிர்ந்து கொண்ட‌ன‌ர். அஸ்வ‌தி ம‌ற்றும் வெங்க‌டேஷ் ஆகியோர் பாட‌ல் பாடின‌ர்.
நிக‌ழ்வில் ந‌கைச்சுவை ஆர்வ‌ல‌ர்க‌ள் ப‌ல‌ர் ஆர்வ‌முட‌ன் ப‌ங்கேற்றுச் சிற‌ப்பித்த‌ன‌ர்.

No comments: