Monday, August 16, 2010

அமெரிக்காவில் இஸ்லாம்


Dr.A.P.முஹம்மது அலி IPS




அமெரிக்காவில் கலிபோர்னியா மாநிலத்தில் 14..7.2010 மாலை சி.என்.என் டி.வி சேனல் செய்தியினைப் பார்த்துக் கொணடிருந்த எனக்கு ஒரு பதினைந்து வயது மதிக்கத்தக்க ஹிஜாப் அணிந்த முஸ்லிம் சிறிமி மிகவும் வீராவேசமாக ஆங்கிலத்தில் பேசிக்கொண்டிருந்தாள். அது என்ன பேச்சு என்று கேட்க உங்களுக்கு ஆவலாக இருக்கும். 2001 செப்டம்பர் மாதம் 9ந்தேதி அமெரிக்காவின் வர்த்தக நகரமான நியூயார்க்கில் இரட்டைக் கோபுரத்தினை விமானகங்கள் மூலம் மோதி தகர்த்து அதன் மூலம் 2000 பேர்களுக்கு உயிர் சேதமிட்ட இடத்தின் அருகில் ஒரு பள்ளிவாசல் கட்ட அனுமதிக்கலாமா என்ற கருத்தாய்வுக் கூட்டத்தில் தான் அந்த சிறுமி ஆவேசமாக பேசினாள். அவளுக்கு முன்பு பேசிய அமெரிக்கர்கள் முஸ்லிம்கள் தீவிரவாத செயலில் ஈடுபட்டவர்கள், ஆகவே அந்த இடத்தில் மசூதி கட்ட அனுமதிக்கக்கூடாது என்று பேசினார்கள.

ஆனால் அவர்களுக்கு பதில் சொல்லும் விதத்தில் இந்த 15 வயது சிறிமி, ‘தன்னுடைய பெற்றோர்களும், உறவினர்களும் கூட அந்த சம்பவத்தில் இறந்து தான் அனாதை முஸ்லிம் சிறிமியாக இருப்பதாகவும் அதற்காக எல்லா முஸ்லிம்களையும் தீவிரவாதிகள் என்று கூறி முஸ்லிம் அமைதியாக வழிபடுவதிற்கு பள்ளிவாசல் கட்ட இடம் மறுப்பது என்ன நியாயம் என்று கேட்டது, சிலப்பதிகார இலக்கியத்தில் தன்னந்தனியாக கணவன் கோவலனை இழந்த கண்ணகி மதுரை பாண்டியமன்னர் தர்பாரில் நியாயம் கேட்டது போன்ற இலக்கிய உண்மை நிகழ்ச்சியாக இருந்தது. அந்தப் முஸ்லிம் சிறிமி பேசியதினைக் கேட்டு வாயடைத்த கருத்துக் கேட்க வந்த அமெரிக்க நடுவர்கள் கருத்துக் கேட்டும் நிகழ்ச்சியினை ஒத்தி வைத்து விட்டு சென்று விட்டார்கள்.
1) அந்த சிறிமி பேசிய பின்பு அமெரிக்காவில் வாழும் முஸ்லிம்கள் வழிபாடு தளங்கள,; அவர்களின் வாழ்க்கை முறைகள் பற்றி செய்திகளை சேகரித்து உங்களுக்கு வழங்கலாம் என் ஆசைப்பட்டு இந்தக் கட்டுரை எடுதுகிறேன்:

அமெரிக்காவில் இஸ்லாமிய கம்யூனிட்டிகள் 1920ல் தோன்றி வீடுகளில் கூட்டுத் தொழுகை நடத்தி தங்களுடைய சமூக பிரச்சனை பற்றி விவாதிக்க ஆரம்பித்துள்ளனர். ஆனால் 1950 ஆம் ஆண்டில் தான் ‘நேஷன் ஆப் இஸ்லாம’ என்ற அமைப்பினை அமெரிக்காவில் வாழும் கறுப்பின மக்கள் ஹார்லீன் நகரத்தில் ஆரம்பித்து ஒரு பள்ளிவாசலினை உருவாக்கியுள்ளனர்.

ஆனால் இன்று ஆயிரத்திற்கு மேலான பள்ளிகள் உள்ளன. அமெரிக்காவில் மிக பெரிய பள்ளிவாசல் அடிராய்டு நகரில் உள்ள இஸ்லாமிக் செண்டரில் 1962லிருந்து 1965வரை உருவாக்கப்பட்டுள்ளது. முதலில் அமெரிக்கா- ஆப்ரிக்க முஸ்லிம் மக்களின் உதவியால் உருவாக்கப்பட்ட பள்ளிவாசல்கள் பின்பு எகிப்து, சௌதி அரேபியா, ஈரான் மற்றும் லெபனீஸ் அரசுகளின் பண உதவியால் எழுப்பப்பட்ட பள்ளிவாசல்கள் அனைத்து இன முஸ்லிம் மக்களும் தொழும் பள்ளிகளாக மாற்றப்பட்டன. இஸ்லாமியர் மதசேவைக்காக ‘கவுன்சில் ஆப் மஸ்ஜித்’ அமைக்கப்பட்டு அவர்களின் தேவைகளை நிறைவேற்றப்படுகிறது. 2001 ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட சர்வேயின் படி 33 சதவீத தெற்கு ஆசிய மக்களும், 30 சதவீத அமெரிக்க-ஆப்ரிக்க இனத்தவரும், 25 சதவீத அரபிய மக்களும் தொழுகைக்காக பள்ளிக்கு வருகிறார்கள். பள்ளிவாசலில் தொழுகை நடத்துவதிற்காக இன்னமும் இமாம்கள் எகிப்து, துருக்கி, பாலஸ்த்தீனம் ஆகிய நாடுகளிலிருந்து தருவிக்கப்படுகிறார்கள். அத்துடன் ‘இமாம்கள் கவுன்சில்’ 1972 ஆம்; ஆண்டு நிறுவப்பட்டு இமாம்களுக்கான பயிற்சி கொடுத்து அமெரிக்காவில் வசிக்கும் மார்க்க அறிவாளிகளே தொழுகை நடுத்தும் முறை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பள்ளிவாசலும் மற்றும் அதனை ஒட்டியுள்ள கம்யூனிட்டி சபை கட்டிடங்களும் மார்க்க மற்றும் பொது கல்விக்காக பயன்படுத்தப்படுகிறது. வாரந்தோறும் சிறுவர் மார்க்கக் கல்வி கற்க ஏற்பாடும், முதியோர் மார்க்க கல்விக்கும், இஸ்லாமியர் அல்லாதவர் இஸ்லாத்தினைப் பற்றி தெரிந்து கொள்வதிற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சர்வே படி அமெரிக்கா முஸ்லிம்களில் 10 சதவீதத்திலிருந்து 20 சதவீதம் வரை ஐந்து வேளை தொழுகின்றனர். ஆனால் அமெரிக்கா கிறித்துவர்கள் 40 சதவீதம் கிறத்துவ சர்ச்சுகளுக்குச் செல்கின்றனர்.

தற்போது கிட்டத்தட்ட 2000 பள்ளிவாசல்கள் உள்ளன. அதனில் 200க்கு மேற்பட்ட பள்ளிவாசல்கள் கலிபோர்னியா, நிய+யார்க் மாநிலங்களில் உள்ளன. 100லிருந்து 200 வரை பள்ளிவாசல்கள் டெக்ஸாஸ,; புளோரிடா, இல்லினோஸ், ஓகியோ, மிக்சிகான், பென்சில்வேனியா, நியூஜெர்சி போன்ற மாநிலங்களில் உள்ளன, 50திலிருந்து 100வரை பள்ளிவாசல்கள் வாசிங்டன், டென்னசி, அரிசோனா, ஓக்லாமா போன்ற மாநிலங்களில் உள்ளன.

2) அமெரிக்காவில் இஸ்லிமிய சமூதாய ஆரம்பமும் வளர்ச்சியும்:
முதன் முதலில் 16 ஆம் நூற்றாண்டில் ஸ்பெயின் நாட்டினவர் அமெரிக்க மண்ணில் காலடி வைக்கும் போது இஸ்லாமியர் வந்தனர் எனக் கூறப்பட்டாலும் 1860ஆம் ஆண்டில் குடியேறிய சிரியா மட்டும் லெபனான் முஸ்லிம் மக்கள் பெருவாரியாக இருந்தனர். இரண்டாம் உலக யுத்தத்திற்கு பின்பு ஐரோப்பா, ஆசியா, கிழக்கு ஆப்ரிக்கா, இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளிலிருந்து முஸ்லிம்கள் குடியேறினர். முதன் முதல் அமெரிக்க முஸ்லிம்கள் ஆப்பிரிக்க நாடுகளைச்சார்ந்த அடிமைகள் தான் என்றால் மினையாகாது. அவர்கள் பெரும்பாலோனோர் படித்தவர்கள். மார்ட்டின் லூதர் கிங் அமெரிக்கா வெள்ளையினத்தினவரிடமிருந்து கறுபு;பின மக்களை விடுதலைக்காகவும் அவர்கள் உரினைமக்காகவும் குரல் கொடுத்தார். ஆனால் அமெரிக்கா-ஆப்பிரிக்கா முஸ்லிம் தலைவர் எலிஜா முகம்மது ‘நேஷன் ஆப் இஸ்லாம’; இயக்கத்தினை ஆரம்பித்து வெள்ளை நிற அமெரிக்க மக்களுடன் கறுப்பின மக்களுக்காக சமாதானத்தில் இஸ்லாம் மதத்தினை பரப்ப வழிவகுத்தார். எலிஜா முகம்மது கறுப்பின அமெரிக்கருக்கு தனி கறுப்பின இஸ்லாமிய மாநிலம் கேட்டார். அந்த இயக்கத்தினைச் சார்ந்தவர்கள் பல் வேறு குற்ற பின்னணியில் சிறையில் வாடும் கறுப்பினத்தவரை திருத்தி இஸ்லாத்தினைத் தழுவ தனி அமைப்பான ‘ரிகேபிளிட்டேஷன் ஆப் அமெரிக்கா பிளாக்’ ஏற்படுத்தினர். ஜெயிலில் வாடும் கறுப்பின மக்களை சந்தித்து கீழ்கண்ட உபதேசங்கள் செய்கின்றனர்:

1) கறுப்பராக பிறந்திருப்பது ஒரு வரப்பிரசாதம் அது இழிவல்ல. ஆகவே தாழ்வு மனப்பான்மையினை விட்டொழிக்க வேண்டும்.

2) நீங்கள் எந்த முஸ்லிமையினையும் அழுக்கான உடையிடனோ அல்லது முகச்சவரம் செய்யாத நபரையோ உடல் சுத்தமில்லாத நபரைவேயா பார்க்க முடியாது.

3) எந்த் முஸ்லிமையும் குடிபோதைக்கு ஆளாவதினைப் பார்க்க முடியாது.

4) எந்த முஸ்;லிமும் போதை தரும் புகைப்பான்களை உபயோகிப்பதினைக் காண முடியாது.

5) எந்த முஸ்லிமும் அநாகரிக ஆடல்களில் ஈடுபட்டதினை பார்க்க முடியாது.

6) எந்த முஸ்லிமும் தன் மனவியினைத் தவிர வேற்றுப் பெண்களில் உடல் ரீதியான தொடர்பு கொள்வதினைக் காண முடியாது.

7) எந்த முஸ்லிமும் சிறிய வருமானம் தரும் வேலை செய்யாமல் கூட வாழ பிச்கையெடுப்பதினைக் காணமுடியாது.

8) ஏந்த முஸ்லிமும் குற்ற நடவடிக்கையில் ஈடுபட்டதினைக்காண முடியாது.

மேற்கொண்ட போதனைகள் மூலமே பல்லாயிரக்கணக்கான அமெரிக்க-ஆப்ரிக்க இனத்தவர் முஸ்லிம் மதத்திற்கு மாறினர். அதில் ஒருவர்தான் உலகக் குத்துச்சண்டை பதவியிலிருந்து பாலியில் குற்றச்சாட்டில் ஜெயிலில் வாடிய மைச் டைசன.; இன்று இஸ்லாத்திற்கு மாறி மாலிக்காக வெளி வந்துள்hர்.

எலிஜா முகம்மது 1965 ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்ட பின்பு அவருடைய மகனார் வாலாஸ் கறுப்பின முஸ்லிம்களுக்கு தனி மாநில கொள்கையினை கைவிட்டு கறுப்பினர் அல்லாத மக்களையும் நேஷன் ஆப் இஸ்லாம் இயக்கத்தில் சேர்த்துக் கொண்டார். அந்த அபை;பிற்கு மேற்கத்திய ‘வேர்ல்டு கமிட்டி ஆப் இஸ்லாம’ என்று பெயர் சூட்டினார். அதன் பின்பு அந்த அமைப்பிற்கு ‘அமெரிக்கன் முஸ்லிம் மிஷன்’ என்று மாற்றப்பட்டது.

3) குடிபெயர்ந்த அமெரிக்க முஸ்லிம்களின் பழக்க வழக்கங்கள்:

1) ஒவ்வொரு முஸ்லிம் குடும்பத்தாரும் 100 டாலரிடமிருந்து 250 டாலர் வரை வருடத்திற்கு செலுத்தி ஒவ்வொரு கம்யூனிட்டி அமைப்பிலும் உறுப்பினராகி உள்ளனர்.

2) தங்கள் குழந்தைகளை இஸ்லாமிய மார்க்க போதனைகளை வாரத்தில் இருமுறை கற்க வழிவகை செய்கின்றனர்.

3) பள்ளிவாசல் நிதிக்காக விருந்துடன் கூடிய சிறப்பு முகாம் நடத்தி வசூல் செய்கின்றனர். ஒரு தடவை நான் அது போன்ற முகாமில் கலிபோர்னியா மாநிலம் பிரிமாண்ட் பள்ளிவாசலில் பங்கேற்றேன்.
அப்போது நான், நீ என்று ஆண்கள், பெண்கள,; சிறார்கள் போட்டிபோட்டு நன்கொடை செலுத்தியதில் ஒரு லட்சத்து பத்தாயிரம் டாலர் நன்கொடையாக கிடைத்தது.

4) வெள்ளிதோறும் பெண்கள் தங்கள் வீட்டில் தயார்செய்த பண்டங்கள், உணவுப் பொருட்கள், கைவினைப் பொருட்கள் விற்று அந்தக் பணத்தினை பள்ளிவாசலுக்காக நன்கொடையாக தருகின்றனர்.

5) சிறப்பு பேச்சாளர்களின் பேச்சினை ஏற்பாடு செய்து அதற்கு கட்டணமும் வசூலிக்கப்படுகிறது. அது போன்ற மக்கா பல்கலைக் கழகத்தில் பயிற்சி பெற்று முதலிடத்தில் தேறிய ஒருவருடைய கம்யூட்டர் விளக்கத்துடன் கூடிய சொற்பொலிவினை நான் சானோஸ் கம்யூனிட்டி பள்ளியில் கேட்டேன்.

6) முஸ்லிம்கள் ஹலாலான உணவினையே சாப்பிடுகின்றனர். பெரும்பாலான கறிக்கடைகள் பாகிஸ்தானியர் மற்றும் ஆப்கானிஸ்தியர் தான் நடத்துகின்றனர். கலிபோர்னியாவிலுள்ள சாப்ட்வேர் தலைமையிடமான சானோசில் ஒரு சைனீஸ் முஸ்லிமின் ஹலால் ஹோட்டலில் அத்தனைக் கூட்டம் என்றால் பாருங்களேன்.

7) கம்யூனிட்டியில் இரண்டு மாதத்திற்கு ஒரு முறை ‘பாட்லாக்’, ‘பார்க்யூ’ என்ற முஸ்லிம் குடும்பங்கள் கூடி பொது பார்க்கில் விருந்துண்கின்றனர். அப்போது குடும்ப உறுப்பினரிடையே கலந்துரையாட ஏதுவாக உள்ளது. ஆனால் அப்படி நடக்கும் விருந்தோம்பல் நிகழ்வுகளில் கூட ஒவ்வொரு நாட்டிலும் அல்லது மாநிலத்தில் வந்தவர்களுக்கிடையே மட்டும் பழகும் பழக்கமாக இருந்து வருகிறது. எல்லை தாண்டி குடும்பப் பழக்கங்கள் வேரூன்றவில்லை.

8) வெள்ளிக்கிழமையில் ஜூம்மா குத்துபா முடிந்த பின்பு நோயுற்றவர்களுக்கு, இறந்தவர்களுக்கு துவா செய்யவும், மருத்துவச் செலவு, ரத்தம் தேவைப்படும் நோயாளிக்கு உதவவும் வேண்டுகோள் விடப்படுகிறது. அங்கு இறந்தவர்களை அடக்ம் செய்யும் இடம் மிகவும் விலை அதிகமாக இருக்கிறது. வசதியில்லாது இறந்தவரகளுக்கு அடக்கம் செய்ய கம்யூனிட்டிகள் வசூல் செய்து அடக்கம் செய்கிறார்கள்.
9) பெண்கள் நீண்ட கையுள்ள சட்டையினை அணிந்தும் மேலங்கி, தலை முக்காடும் அணிந்தும் காணப்படுகின்றனர். ஆனால் சில ஆண்கள் தான் சமூதாயம் கூடும் இடங்களுக்கு முனங்காலுக்கு மேலுள்ள அரைக்கால் சட்டையணிந்து வருகின்றனர். அதுவும் பெண்கள் கூடும் இடங்களுக்கு வருவது அந்த இளைஞர்களுக்கு மேலை நாகரிகமாக இருக்கலாம் ஆனால் என்னால் முகம் சுழிக்காமல் இருக்க முடியவில்லை. தமிழக முஸ்லிம் ஊர்களிலிருந்த முஸ்லிம் பட்டதாரிகள் ஊரில் கைலியும் தொப்பியும் அணிந்து விட்டு, அமெரிக்காவின் நகரங்களில் நாகரீகமென்று அரைக்கால் சட்டையினை அணிந்து வருவது அவ்வளவு இஸ்லாமிய பண்பாடுக்கு உகந்ததாக கருத முடியவில்லை.

10) சிறார்கள் அமெரிக்காவின் மேதாவி கலாச்சாரத்தில் ஈடுபடாமல் தங்கள் மதக்கோட்பாடோடு வாழ பெண்கள் பார்த்துக் கொள்கிறார்கள்.

11) இஸ்லாமியர் கருத்துச்சுதந்திரத்துடன் வழிபாடு நடத்த பல இஸ்லாமிய நாடுகளில் கூட இல்லாதிருந்தும் அமெரிக்காவில் இருக்கிறது பாராட்டத்தக்கது.

12) இந்திய முஸ்லிம் கூட்டமைப்பு, தமிழ் முஸ்லிம் கூட்டமைப்பு போன்ற அமைப்புகள் சமூதாய தொண்டுகளும் மற்றும்

No comments: