Monday, August 16, 2010

ரஷ்யாவில் நடைபெற்ற உலக அறிவியலார் மாநாட்டில் பேராசிரியர் ஆபிதீன் பங்கேற்பு – ஆராய்ச்சிக்கு உலக அளவில் அங்கீகாரம்- சாகீர் உசேன் கல்லூரி பெருமிதம்.


சமீபகாலங்களில்; மருத்துவ தாவரங்கள் “Phytopharm” பற்றிய ஆராய்ச்சியும் விழிப்புணர்வும் உலகஅளவில் அதிகமாக கவனத்தில் கொள்ளப்பட்டு வருகிறது. வேதிஉரங்களுக்குப் பதிலாக உயிர்உரங்களை(டீழைகுநசவடைணைநச ) கண்டறிந்து பயன்படுத்துவதிலும். தாவரங்களைக் கொண்டு நோய்களைக் குணபடுத்தும் மருந்துப்பொருள்களை கண்டறிவதிலும் உலக நாடுகள் ஒன்றை ஒன்று போட்டிபோட்டு வரும் காலசூழல் இது.

அந்த வகையில் ஒவ்வொரு வருடமும் மருத்துவ தாவரங்கள் குறித்து ஆராய்ச்சி செய்யும் உலகஅளவிலான ஆராய்ச்சியாளர்களைக் கொண்ட அமைப்பு ஓன்று அந்தந்த வருடங்களில் கண்டறியப்படும் புதிய தாவரமருந்து கண்டுபிடிப்புகள் பற்றிய போட்டி நடத்துவது வழக்கம். உலக அளவில் பல்வேறு பல்கலைக்கழகப் பேராசிரியர்கள். ஆராய்ச்சியாளர்கள் மற்றும் மருந்து கம்பெனி நிறுவனங்களிடமிருந்து ஒவ்வொரு வருடமும் அந்த வருடத்திற்கான கண்டுபிடிப்புகள் பற்றிய ஆராய்ச்சி கட்டுரைகள் பெறப்பட்டு அதில் தகுதியுள்ள கட்டுரைகள் தேர்ந்தெடுக்கப்படும், மேலும் தேர்ந்தெடுக்கப்படும் ஆராய்ச்சி கட்டுரையாளர்கள் உலகஅளவிலான ஆராயச்சியாளர்கள் கலந்து கொள்ளும் மாநாட்டிற்கு அழைக்கப்பட்டு அங்கே புதிய கண்டுபிடிப்புகள் பற்றி விவாதிக்கப்படும். இதன் வரிசையில் , மருத்துவ தாவரங்கள் பற்றிய PHYTOPHARM 2010 எனும் 14th International Conference ஜலை மாதம் 1 முதல் 4 தேதிகளில் ரஷ்ய நாட்டில் உள்ள St.Petersburg நகரத்தின் St.PETERSBURG State University ல் நடைபெற்றது.


இளையான்குடி டாக்டர் சாகீர் உசேன் கல்லூரியின் விலங்கியல் துறை பேராசிரியர் டாக்டர்.ஆபிதீன் தனது சமீபத்திய ஆராய்ச்சிக் கட்டுரையை கடந்த சில மாதங்களுக்கு முன் சமர்பித்திருந்தார்;. முடிவில், உலக அளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட 45 ஆராய்ச்சி கட்டுரைகளில் டாக்டர் ஆபிதீன் அவர்களின் கட்டுரையும் தேர்ந்தெடுக்கப்பட்டு ரஷ்ய நாட்டில் உள்ள St.Petersburg நகரத்தில் நடைபெறும் மாநாட்டிற்கு நேரடியாக அழைக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து கல்லூரி நிர்வாகம் , பல்கலைக்கழகம் , தமிழகஅரசு மற்றும் பல்கலைகழக மானிய குழுவின் முறையான அனுமதியுடன் டாக்டர் ஆபிதீன் கடந்த 27-06-2010 முதல் 07-07-2010 வரையிலான நாட்களில் விடுமுறை பெற்று அரசு செலவில் ரஷ்யாவின் St.PETERSBURG State University ல் நடைபெற்ற மருத்துவ தாவரங்கள் குறித்த ஆராய்ச்சி மாநாட்டில் தனது ஆராய்ச்சி கட்டுரையை மிகவும் சிறப்பான முறையில் சமர்ப்பித்து விட்டு 07-07-2010 அன்று தாயகம் திரும்பியிருக்கிறார்.

இது குறித்து டாக்டர் ஆபிதீன் அவர்களிடம் கேட்ட போது , இந்த மாநாட்டில் அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி, ஜப்பான், ஆஸ்திரேலியா, ரஷ்யா, கனடா , பின்லான்ட், ஆஸ்ட்ரியா உட்பட சுமார் 60 க்கும் மேற்பட்ட முன்னனி நாடுகளிலிருந்து 150 க்கும் மேற்பட்ட ஆராய்சியாளர்கள் கலந்து கொண்டனர். இதில் ,இதுவரை உலக சந்தையில் இல்லாத ஆண்கள் உபயோகிக்கக் கூடிய தற்காலிக கருத்தடை மாத்திரைகளை உருவாக்க சாத்யமுள்ள மருத்துவ தாவரங்கள் குறித்த எனது ஆராய்ச்சி கட்டுரை அதிக வரவேற்ப்பைப் பெற்றது. மேலும்,75 சதவீதம் முழுமை பெற்ற இந்த ஆராய்சி இந்த மாநாட்டில் கலந்து கொண்ட பின்பு விரைவில் முழுமையுடன் வெற்றி பெற அதிக சாத்திய கூறு உறுவாகி இருப்பதாகவும், அத்துடன் இந்த ஆராய்ச்சியைத் தொடர இந்தியஅரசின் நிதிஉதவி கிடைக்கவும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாகவும் கூறுகிறார். இன்ஷ அல்லாஹ்...

மேலும் , மிகப் பெரிய ஆய்வுக்கூட வசதியுள்ள பல்கலைகழகங்களில் தான் இது போன்ற ஆராய்ச்சிகளுக்கான சாத்தியக்கூறு உள்ளது. அதே வேளையில் மிகப் பின்தங்கிய பகுதியில் உள்ள போதுமான ஆய்வக வசதியில்லாத நமது கல்லூரியிலும் இது போன்ற ஆராய்ச்சிகள் நடைபெறுவதற்கு காரணம் கல்லூரி நிர்வாகத்தினருடைய ஒத்துழைப்பும் சக பேராசிரியர்களின் ஊக்குவிப்பும் தான். அதற்காக தனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கதாகவும் கூறுகிறார்.

அத்துடன் , ரஷ்ய நாட்டில் பல முன்னனி நாடுகளிலிருந்து ஆராய்சியாளர்கள் கலந்து கொண்ட ஒரு மிகப்பெரிய மாநாட்டில் ILAYANGUDI Dr.ZAKIR HUSIAN COLLEGE என்று ஒலித்த தருனம் , தனக்கு மிகப்பெரிய பெருமிதத்தைத் தந்தது என்கிறார் டாக்டர் ஆபிதீன்.( அல்ஹம்துலில்லாஹ்....)

பேராசிரியர் ஆபிதீன் அவர்களின் “கரையான்களை அழிக்கும் கடல் தாவரங்கள்” என்ற ஆராய்ச்சி கட்டுரை மலேசிய நாட்டின் பல்கலைகழகத்தில் தேர்வு பெற்று 2006 ம் ஆண்டு மலேசிய நாட்டின் பல்கலைகழகத்தின் அழைப்பின் பேரில் மலேசியா சென்று வந்ததும் இந்த ஆராய்ச்சிக்காக பல்கலைகழக மானியக்குழு ரூபாய் ஓரு இலட்சம் நிதியுதவி செய்ததும் குறிப்பிடத்தக்கது.


































Thanks: ilayangudi.com

Rajaghiri Gazzali

No comments: