Monday, August 16, 2010

புனித ரமழான்

ஆக்கம் : செய்யது இபுராகிம்ஷா



அல்லாஹ் கூறுகிறான்:- 'இன்னும், ஜின்களையும், மனிதர்களையும் அவர்கள் என்னை வணங்குவதற்காகவேயன்றி நான் படைக்கவில்லை.' (அல்குர்ஆன் 51:56)

ஜின்களையும், மனிதர்களையும் என்னை வணங்குவதற்காகவே படைத்துள்ளேன் என்று அல்லாஹ் தனது திருமறையில் மனிதனைப் படைத்ததின் நோக்கத்தை மிகவும் சுருக்கமாக கூறிக்காட்டுகிறான். வணக்கம் என்பது அல்லாஹ் மனிதர்களுக்கு எதனையெல்லாம் அனுமதித்து, எதனையெல்லாம் விலக்கியிருக்கின்றானோ அதன் அடிப்படையில் நமது வாழ்க்கையை அமைத்துக் கொள்வதுதான் நாம் அல்லாஹ்வை வணங்குவதாகும்.

நோன்பின் சிறப்பு:- நோன்பு நோற்பது ஒரு வணக்கமாகும்.அதாவது அல்லாஹ்வின் கட்டளைக்கு அடிபணிவதாகும். ஒரு முஃமின் நோன்பு நோற்கும் போது உண்பது, குடிப்பது, உடலுறவு கொள்வது, தீய வார்த்தைகளைப் பேசுவது போன்றவற்றிலிருந்து அல்லாஹ்வுக்காகத் தன்னைத் தடுத்துக் கொள்கின்றான். இத்தகைய தன்னலமற்ற தியாகத்தின் மூலமாக ஒரு முஸ்லிம்; தனது விருப்பங்களை அல்லாஹ்வின் விருப்பத்தை ஏற்பதன் மூலம் அர்ப்பணம் செய்கின்றான்.இவ்வுலக வாழ்வை விட மறு உலக வாழ்வையே மேலாகக் கருதுகின்றான். இதனால் அவன் அல்லாஹ்வின் திருப்தியையும், சுவர்க்கத்தையும் பெறுகின்றான். இவ்வாறான சிறந்த நோக்கங்களை உடைய இந்நோன்பு மிக உன்னதமானது. நோன்பால் உடலுக்கு ஆரோக்கியம் கிடைக்கிறது. ஏழைகளின் பசியை உணர முடிகிறது என்றெல்லாம் பல காரணங்கள் கூறப்படுகிறது. இப்பயன்களெல்லாம் நோன்பின் மூலம் கிடைத்தாலும் அதன் உண்மையான நோக்கம் அல்லாஹ்வின் கட்டளைக்கு இணங்கி இறை அச்சமுடன் இருப்பவர்களாக வாழ நம்மைப் பக்குவப்படுத்திக் கொள்வதற்காகத்தான்.

பசியாலும் தாகத்தாலும் கஷ்டப்படும் நோன்பாளி, தன்னிடத்தில் உணவு வகைகள் இருந்தாலும் அதனை உண்பதில்லை. காரணம் தன்னை மனிதர்கள் பார்க்காவிட்டாலும் அல்லாஹ் பார்த்துக் கொண்டிருக்கின்றான் என்ற இறையச்சம் தான். இந்நிலை நோன்பிற்கும் ரமளான் மாதத்திற்கும் மட்டும் தான் என்றில்லாது, நம் வாழ்வின் அனைத்துத் துறைகளிலும் எல்லாக் காலங்களிலும் பிரதிபலிக்க வேண்டும். நம் வாழ்வின் எந்த ஒரு நொடியும் அல்லாஹ்வின் கண்காணிப்பில் இல்லாமலில்லை என்பதை ஒவ்வnhருவரும் புரிந்து எல்லாக் காலங்களிலும் அல்லாஹ்வை மட்டுமே வணங்கவேண்டும். இதனை நடைமுறையாக பயிற்றுவிப்பதே புனித ரமளான் நோன்பின் தலையாய நோக்கமாகும். இப்படி தலைசிறந்த கட்டாயக்கடமையாகிய அதிக நன்மைகளை அல்லாஹ்விடமிருந்து பெற்றுத்தறக்கூடிய புனித ரமளானில், தொழுகை-நோன்புகளை அதற்கான அனைத்து தகுதிகளிருந்தும் அவைகளை நிறைவேற்றாமல் சிலர் இருப்பதுதான் வேதனையிலும் வேதனை.

அல்லாஹ் கூறியதாக நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'ஒவ்வொரு நன்மையான காரியத்திற்கும் பத்து முதல் எழுநூறு மடங்கு வரை கூலி கொடுக்கப் படுகின்றது. நோன்பு எனக்குரியது. அதற்கு நானே கூலி கொடுப்பேன். நோன்பு நரகத்திலிருந்து பாதுகாக்கும் கேடயமாகும். நோன்பாளியின் வாயிலிருந்து வரும் வாடை அல்லாஹ்விடம் கஸ்;தூரியின் நறுமணத்தைவிட சிறந்ததாகும்.' (அறிவிப்பவர்: அபுஹுரைரா (ரர்p) - ஆதாரம்: திர்மிதி)

மேலும் நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்' 'நோன்பாளிக்கு இரு சந்தோஷங்கள் உள்ளன. ஒன்று நோன்பு திறக்கும்போது. மற்றது தனது நாயனை (மறுமையில்) சந்திக்கும்போது ஏற்படுகின்ற சந்தோரூமாகும்.' (அறிவிப்பவர்: அபுஹஹரைரா (ரழி) - ஆதாரம்: திர்மிதி)

இன்னும் நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள் 'சுவர்க்கத்தில் 'ரய்யான்' என்றொரு வாசல் உள்ளது. அவ்வழியாக நோன்பாளிகள் மாத்திரம் அழைக்கப்படுவார்கள். நோன்பு நோற்றவர்கள் அவ்வழியாக நுழைவார்கள். எவர் அதில் நுழைகின்றாரோ ஒருபோதும் அவருக்கு தாகம் ஏற்படாது.'
(அறிவிப்பவர்: ஸஹ்ல் இப்னு ஸஃத் (ரழி) - ஆதாரம்: புகாரி, முஸ்லிம், திர்மிதி)

மேலும் நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள் 'ரமழான் மாதம் நுழைந்ததும் சுவர்க்கத்தின் வாசல்கள் திறக்கப்படுகின்றன. நரகத்தின் வாசல்கள் மூடப்படுகின்றன. ஷைத்தான்களுக்கு விலங்கிடப்படுகின்றன.' (ஆதாரம்: முஸ்லிம்;)

நோன்பு இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் நான்காம் இடத்தை வகிக்கின்றது. இதற்கு ஆதாரமாக அல்குர்ஆனும், ஹதீஸும் தெளிவான சான்றுகளை முன் வைக்கின்றன.
அல்லாஹ் கூறுகின்றான் 'இறை நம்பிக்கையாளர்களே! நீங்கள் இறையச்சமுள்ளவர்களாக - தூய்மையுள்ளவர்களாக ஆகுவதற்காக உங்களுக்கு முன்னிருந்த (நபிமார்களைப் பின்பற்றிய)வர்கள் மீது நோன்பு கடமையாக்கப்பட்டதுபோல் உங்கள் மீதும் (நோன்பு நோற்பது) கடமையாக்கப்பட்டுள்ளது. அதனால் நீங்கள் தூய்மையுடையவராகலாம் (பயபக்தி-இறையச்சம்-தக்வா)' (அல்பகறா - 2:183)

மேலும் அல்லாஹ் கூறுகின்றான் 'ரமழான் மாதம் எத்தகையதென்றால் அதில்தான் மனிதர்களுக்கு (முழுமையான) வழிகாட்டியாகவும், தெளிவான சான்றுகளைக் கொண்டதாகவும் (நன்மை, தீமைகளை, சத்தியம், அசத்தியங்களை) பிரித்துக் காட்டக் கூடியதுமான அல்குர்ஆன் அருளப்பட்டது. எனவே உங்களில் எவர் அம்மாதத்தை அடைகின்றாரோ அவர் அம்மாதம் (முழுவதும்) நோன்பு நோற்க வேண்டும்.' (அல்பகறா - 2:185)

ஸஹர் செய்தல்:- நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள், 'நீங்கள் ஸஹர் செய்யுங்கள். ஏனெனில் 'ஸஹர் உணவில் பரக்கத் உள்ளது.' (அறிவிப்பவர்: அனஸ் இப்னு மாலிக்(ரழி) (ஆதாரம்: புஹாரி, முஸ்லிம்;, திர்மிதி, நஸாயி)

நிய்யத் - நோன்பு நோற்பதாக 'மனதால் நினைத்தல்:- 'நவய்த்து ஸவ்ம கதின் அன்அதாயி பர்ழி ரமழான ஹாதிஹிஸ்ஸனதி லில்லாஹிதஆலா' என்ற இவ்வார்த்தைகளை மொழிவதுதான் நிய்யத் என எண்ணிப் பலர் செயல்பட்டு வருகின்றனர். இது நபிகளார் (ஸல்) அவர்கள் கற்றுத் தராத வார்த்தைகளாகும்.

நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள், 'எவர் நமது மார்க்கத்தில் இல்லாத ஒன்றை உருவாக்கினால் அது நிராகரிக்கப்படும்.' (ஆதாரம்: புஹாரி, முஸ்லிம்;)

பிரார்த்தனையில் ஈடுபடுதல்:- நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள், 'நோன்பாளி நோன்பு திறக்கும்போது கேட்கும் பிரார்த்தனை மறுக்கப்பட மாட்டாது.'
(அறிவிப்பவர்: அம்ர் இப்னு ஆஸ் (ரழி) - ஆதாரம்: இப்னு மாஜா)

நோன்பு திறந்த பின் :- 'தஹபழ் ழமஉ வப்தல்லதில் உரூகு வதபதல் அஜ்ரு இன்ஷா அல்லாஹ்'

பொருள்:- தாகம் தணிந்தது, நரம்புகள் நனைந்தன. அல்லாஹ் நாடினால் கூலியும் கிடைத்துவிடும்.(அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னுஉமர் (ரழி) - ஆதாரம்: அபுதாவுத்)

நோன்பு திறப்பதற்கு முன்பாக இன்று பரவலாக ஓதிவரும் 'அல்லாஹூம்ம லக்கஸூம்த்து...' என்று தொடங்குகின்ற துஆ பலவீனமானவை என்பதால் இதனை நோன்பு திறப்பதற்கு முன்பு ஓதுவதை தவிர்க்க வேண்டும்.

நோன்பு நோற்கக் கடமையானவர்கள்:- புத்தி சுவாதீனமுள்ள, முஸ்லிமான ஆண், பெண் அனைவர் மீதும் நோன்பு நோற்பது கடமையாக்கப் பட்டுள்ளது. சிறுவர்கள் பருவ வயதை அடையும ;வரை அவர்கள் நோன்பு நோற்பது கடமையில்லை. எனினும், நோன்பு நோற்க ஊக்குவிப்பது சிறந்தது. இதே போன்று புத்தி சுவாதீனமற்ற பைத்தியக் காரர்கள் மீதும் நினைவிழந்து எதையும் தெளிவாக விளங்கிக்கொள்ள முடியாதவர்கள் மீதும் கடமை இல்லை. இவர்கள் பிராயச்சித்தம் தேடி ஏழைகளுக்கு அன்னதானம் வழங்குவதும் அவசியமில்லை.

தொடர்ந்து படிக்க கீழுள்ள தொடுப்பை கிளிக் செய்க

http://ping.fm/lV8O9

இப்படிக்கு
ஒற்றுமை இணையக்குழு
www.ottrumai. net

No comments: