மோடியின் கரங்களில் விலங்கிடும் துணிச்சல் யாருக்கு?
4 Sep 2012
கருப்பையில் இருந்து பாதுகாப்பாக சிசுவை வெளியே எடுக்கவேண்டிய ஒரு கைனோகாலஜிஸ்ட், கர்ப்பிணியின் வயிற்றைக் கீறி சிசுவை திரிசூலத்தில் குத்தியெடுத்து ஆனந்த நடனம் ஆடும் இரத்த வெறிப்பிடித்த கும்பலுக்கு தலைமை வகிக்கிறார். அந்த கொலைக்கார பெண்மணிக்கு மாநில மகளிர் மற்றும் சிசு நலத்துறை அமைச்சர் பதவி பரிசாக வழங்கப்படுகிறது. மாநில முதல்வரும், அமைச்சர் பரிவாரங்களும், மத வெறிப்பிடித்த அதிகாரிகளும் இணைந்து கூட்டுப் படுகொலைகளுக்கு தலைமையேற்கின்றனர். கூட்டாக நடக்கும் பாலியல் வன்புணர்வுகளை போலீசார் கண்டு ரசிக்கின்றனர். ஆதாரங்களை எல்லாம் அழிக்கின்றனர். ஆவணங்களை மறைக்கின்றனர். சாட்சிகளை கொலைச் செய்கின்றனர். பணத்தை வாரியிறைத்து தங்களுக்கு சாதகமான சூழலை உருவாக்குகின்றனர். தங்களது கரங்களால் புரிந்த கர்ண கொடூரங்களை வாய் கூசாமல் பெருமையாக பகிரங்கமாக கூறுகின்றனர்.
சிலருக்கு மேலும் 500 முஸ்லிம்களை கொலைச் செய்வது பொழுதுபோக்கு. வேறு சிலருக்கோ முஸ்லிம் இளம் பெண்கள் வேண்டுமாம். இவர்கள் அனைவரும் நரேந்திர மோடி என்ற நரமாமிச உண்ணியின் சீடர்கள். குற்றங்களை புரிந்தது மட்டுமல்ல, கொடூரங்களின் ஆதாரங்களையெல்லாம் குழி தோண்டி புதைக்கவும் தங்களது கரங்களை பரிசுத்தமாக காட்டவும் இவர்கள் தயங்கவில்லை.
நான் குஜராத்தின் சர்வாதிகாரி மட்டுமல்ல, மத்திய அரசையும் ஆட்டிவைக்கும் மோசடி வித்தைக்காரன் என கூறி என்ன பலன்?சத்தியத்திற்கும், நீதிக்கும் சில அடிப்படைகள் உள்ளன. இறைவனின் நீதியை எவராலும் தடுக்க முடியாது. தர்மம் எப்பொழுதெல்லாம் தோல்வியை சந்திக்கும் சூழல் உருவாகிறதோ அப்பொழுதெல்லாம் மரண வியாபாரிகளுக்கு விலங்கிட சிலர் இவ்வுலகில் பிறக்கத்தான் செய்வார்கள்.
பாசிசத்தின் காரிருள் இந்நாட்டின் ஆட்சி, அதிகார, நீதி, ஊடக துறைகளையெல்லாம் சூறையாடி வரும் வேளையிலும் நீதியை நிலைநாட்டும் உறுதியுடன் சிலர் இருக்கத்தான் செய்கின்றார்கள். அவர்களில் ஒருவர் தாம் குஜராத் கூடுதல் முதன்மை நீதிபதி ஜோல்ஸ்னா யக்னிக். மற்றொருவர், முன்னாள் குஜராத் மாநில டி.ஜி.பி ஸ்ரீகுமார்.
அமைச்சர்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகளின் தொலைபேசி உரையாடல்களை பதிவுச் செய்து பாதுகாத்த நேர்மையான ஐ.பி.எஸ் அதிகாரி ராகுல்சர்மா கூட நினைத்துப் பார்த்திருக்கமாட்டார், 10 வருடங்கள் கழித்து நீதி நிலைநாட்டப்படும் என்று.
தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை அம்பலப்படுத்த டெஹல்கா இதழ் ஆபத்பாந்தவனாக வரும் என்று எல்லாவற்றையும் இழந்து நிற்கும் குஜராத் முஸ்லிம்களோ, பாதுகாப்பற்ற சூழலில் வாழும் இந்திய முஸ்லிம்களோ கற்பனையில் கூட எண்ணியிருக்கமாட்டார்கள்.
மும்பையில் முஸ்லிம்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட கலவரத்தால் விழிப்புணர்வு பெற்ற பத்திரிகையாளரும், சமூக ஆர்வலருமான தீஸ்டா ஸெடல்வாட் போன்றவர்கள் எவருக்கும் அஞ்சாமல் ஆற்றிய பணிகளை யாரும் விலைக்கொடுத்து வாங்கவில்லை. எந்தவொரு முஸ்லிம் அமைப்புகளும் செய்ய இயலாத அர்ப்பணிப்புமிக்க காரியங்களை இவர்கள் செய்து முடித்தார்கள். உயிரை பணயம் வைத்து 6 மாத காலம் டெஹல்காவுக்காக ஹிந்துத்துவா பயங்கரவாதிகளை நேரடியாக சந்தித்து பேட்டியெடுத்து உலகிற்கு அவர்களின் கோர முகத்தை அம்பலப்படுத்திய ஆஷிஷ் கேதான் என்ற பத்திரிகையாளரை இந்திய முஸ்லிம்கள் ஒருபோதும் மறக்கமாட்டார்கள்.
போலீஸ், அரசு, அதிகார, நீதித்துறை, பத்திரிகைத் துறைகளிலும், குடிமக்களிலும் நேர்மையை இழக்காத காவியின் காரிருளில் சிக்காதவர்கள் இருக்கின்றார்கள் என்பது ஆச்சரியமான விஷயம் தான்.
தனது அமைச்சரவையில் பணியாற்றிய கில்லர் டாக்டரும், இதர அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளின் பங்கு குஜராத் முஸ்லிம் இனப்படுகொலையில் உள்ளங்கை நெல்லிக்கனியாக தெள்ளந்தெளிவாக வெளியான பிறகும் மோடி ராஜினாமாச் செய்வார் என கருதுவது முட்டாள்தனமாகும். இந்த கொலையாளியின் ஆட்சியை தொடர அனுமதிப்பதா ராஜதர்மம்? என்பதே மனிதநேயம் கொண்ட இந்திய குடிமக்களின் கேள்வியாகும்.
இரத்தவெறிப் பிடித்த கொலைக்காரக் கும்பல்களின் தலைவன் என்று வெட்ட வெளிச்சமான பிறகும் பயங்கரவாதி என்ன தீவிரவாதியாக கூட மோடி கருதப்படவில்லை என்பது இந்த தேசத்திற்கே வெட்க கேடாகும். மன்னர்களின் ஆட்சியில் அவர்கள் புரிந்த கொலை, கொள்ளைகளுக்கு ஆதரவாக புகழ் பாடிய அரசவை கவிஞர்களை விட கேவலமாக மோடிக்கு புகழாரம் சூட்டும் ஊடகங்கள் இருக்கும் தேசத்தில் தாம் நாம் வாழ்ந்து வருகிறோம்.
தற்போதைய நரோடா பாட்டியா கூட்டுப் படுகொலை வழக்கின் தீர்ப்பும், இதற்கு முன்பு வெளியான நீதிமன்ற தீர்ப்புகளும் மோடி பதவி விலக தாராளம் போதுமானவையாகும். ஆனால், யாரும் இத்தகையதொரு கோரிக்கையை எழுப்பவில்லை. குஜராத் மாநில மக்களோ, ஹிட்லரின் ஜெர்மனிக்கு சமமாக மோடியின் கொடூரங்களை கண்ணால் கண்டும் கூட மெளனம் சாதித்து வருகின்றனர். அவ்வளவு தூரம் பாசிசம் பலரது உள்ளங்களிலும் ஆழமாக வேரூன்றியுள்ளது. ஆகையால் மோடிக்கு எதிரான குரல் குஜராத்தில் இருந்து எழும் என கருதவேண்டாம். கேசுபாய் பட்டேலும் ஸதாஃபியாவும் மோடிக்கு எதிராக குரல் கொடுப்பதன் பின்னணி அதிகாரப் போட்டியே தவிர முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட அநியாயங்களுக்கு எதிரானது அல்ல.
விசாரணை கமிஷன்களின் கண்டுபிடிப்புகளும், நீதிமன்ற தீர்ப்புகளும் மத்திய அரசுக்கு நாட்டில் சட்டம்-ஒழுங்கை சீராக்கவும், கொலையாளிகளுக்கு தண்டனை வழங்கவும் போதிய காரணம் இல்லையா?
குடிமக்களின் உயிர் மற்றும் சொத்துக்களுக்கு பாதுகாப்புக் கொடுக்க வேண்டிய மத்திய அரசுக்கு தலைமை தாங்கும் காங்கிரஸ் மெளனம் சாதிப்பது ஏன்?
மிதவாத ஹிந்துத்துவா என்ற பாராட்டைப் பெறவும், ஹிந்துத்துவா வாதிகளின் வாக்குகளைப் பெறவும் தான் மன்மோகன்சிங்கும், சோனியாவும் மெளனம் சாதிக்கின்றார்கள் போலும்!
பாராளுமன்றத்தை முடக்கி பிரதமர் மன்மோகன்சிங்கின் ராஜினாமாவைக் கோரும் பா.ஜ.கவுக்கு எவ்வளவு தூரம் காங்கிரசு கட்சி அஞ்சுகிறது என்பதற்கு இதைவிட உதாரணம் தேவையா?
பாப்ரி மஸ்ஜித் இடித்துத் தள்ளப்பட்ட போது காட்டிய அதே மெளனத்தை குஜராத் இனப்படுகொலை வழக்குகளின் தீர்ப்பின் போதும் காங்கிரஸ் கடைப்பிடித்து வருகிறது. பாப்ரி மஸ்ஜித் இடிக்கப்பட்ட பிறகு அடுத்து வந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு மக்கள் அளித்த தண்டனையில் பாடம் பெறாவிட்டால், வருகிற தேர்தலிலும் பழைய நிலைமையே உருவாகும்.
நரேந்திர மோடி மற்றும் பா.ஜ.கவின் முகம் அகோரமாக மாறும் வேளையில் அதனை மூடி மறைத்து நாட்டு மக்களின் கவனத்தை திசைத்திருப்ப பெங்களூர், ஹைதராபாத், நந்தத் ஆகிய இடங்களில் முற்றிலும் அப்பாவியான உயர்கல்விப் பின்னணிக் கொண்ட முஸ்லிம் இளைஞர்கள் அநியாயமாக கைது செய்யப்பட்டுள்ளனர். இக்கைது படலங்கள் முஸ்லிம் இனப்படுகொலையை நியாயப்படுத்த நடந்த முயற்சியே அன்றி வேறொன்றும் இல்லை.
இரண்டு செய்திகளையும் ஒரே நேரத்தில் மக்களை வாசிக்கச் செய்வதே சங்க்பரிவார்களின் நோக்கமாகும். இதனை ஆறுதலாக கொலைக்கார கும்பல்களை தாலாட்டி, சீராட்டி வளர்த்தும் பா.ஜ.க கருதுமானால் வரலாற்றில் மேலும் பின்னடைவை அவர்கள் எதிர்பார்க்கலாம்.
எஸ்.எம்.எஸ் வதந்தி உள்பட இந்தியாவில் நிகழும் அசம்பாவிதங்களுக்கு எல்லாம் அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் மீது பழிசுமத்தி கைது செய்து அப்துல் நாஸர் மஃதனியைப் போல சிறைக் கொட்டகைகளில் அடைக்கும் மோடிக்கும், கர்நாடகாவின் பாசிச பாரதீய ஜனதா அரசுக்கும் காங்கிரஸ் கட்சியின் மெளன அனுமதி உண்டு என்பதில் சந்தேகம் இல்லை.
முஸ்லிம்கள் மீது சுமத்தப்படும் ஒவ்வொரு குற்றமும், பொய்யென நிரூபணமாகும் வேளையிலும், முஸ்லிம் இளைஞர்கள் நிரபராதிகள் என நீதிமன்ற தீர்ப்புகள் வெளியாகும் வேளையிலும் இந்தியாவில் நிகழ்ந்த நாசவேலைகளில் சங்க்பரிவார பாசிஸ்டுகளின் பங்கு வெட்ட வெளிச்சமாகிறது. ஆனாலும் காங்கிரஸ் கட்சியால் தனது ஆண்மைத் தன்மையை நிரூபிக்க முடியவில்லை.
தீஸ்டா ஸெடல்வாட் உள்ளிட்ட மனித உரிமைப் போராளிகளின் நீண்டகால போராட்டத்தின் இறுதியில் கிடைத்த வெற்றியே அஹ்மதாபாத் கூடுதல் முதன்மை நீதிமன்றத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு. அதுமட்டுமல்ல கொடும் பயங்கரவாதியான பாபு பஜ்ரங்கி, தானே நூற்றுக்கும் மேற்பட்டவர்களை கொன்றொழித்து, கர்ப்பிணி தாயின் வயிற்றைக் கிழித்து சிசுவை திரிசூலத்தால் குத்தி எடுத்து தீயில் பொசுக்கியதை விவரித்த பிறகும், புலனாய்வு குழுக்களின் மேலிட கனவான்கள் சிலரின் தயவால் மோடிக்கு சிறைக்கு வெளியே சுதந்திரமாக நடமாடும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
கோத்ராவுக்கு வந்த சபர்மதி எக்ஸ்பிரஸ் பெட்டியில் கரசேவகர்களை திட்டமிட்டு தீயில் பொசுக்கிவிட்டு முஸ்லிம்கள் மீது பழியை சுமத்தினர் ஹிந்துத்துவா பயங்கரவாதிகள். பின்னர் 2002 பிப்ருவரி 27-ஆம் தேதி நள்ளிரவு கூட்டப்பட்ட உயர் அதிகாரிகளின் கூட்டத்தில் மதவெறி தலைக்கு ஏறியதாl மதம் பிடித்த யானையாக மாறிய நரேந்திர மோடி அடுத்து வரும் தினங்களில் ஹிந்துக்கள் தங்களின் கோபத்தை வெளிப்படுத்த அவகாசம் வழங்கி முஸ்லிம்களுக்கு பாடம் கற்பிக்கவேண்டும் என்று உத்தரவிட்டார். இந்த உண்மையை அம்பலப்படுத்தி உச்சநீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரத்தை மூத்த ஐ.பி.எஸ் அதிகாரி சஞ்சீவ் பட் தாக்கல் செய்தார். பட்டின் உயிருக்கு மிரட்டல் விடுக்கப்பட்டது. சஞ்சிவ் பட்டைப் போலவே காலம் கடந்தேனும் விவேக் ஸ்ரீவஸ்தவா, சதீஷ் சர்மா, ஹிமான்ஷு பட் உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள் குஜராத்தில் யதார்த்தத்தில் என்ன நிகழ்ந்தது என்ற உண்மையை உலகுக்கு அறிவித்தனர்.
இஹ்ஸான் ஜாஃப்ரி என்ற முன்னாள் காங்கிரஸ் எம்.பி உள்பட 69 முஸ்லிம்கள் தீயிலிட்டு பொசுக்கி கொலைச் செய்யப்பட்ட குல்பர்கா சொஸைட்டி கூட்டுப் படுகொலை வழக்கிலும் மோடியின் பங்கினைக் குறித்து மேற்கூறிய போலீஸ் அதிகாரிகள் தங்களது பிரமாணப் பத்திரத்தில் சுட்டிக்காட்டியிருந்தனர்.
நரோடா பாட்டியாவில் 97 முஸ்லிம்களை (200 பேர் கொலைச் செய்யப்பட்டதாக ஊர்மக்கள் கூறுகின்றனர்) கசாப்புச் செய்த காட்சியை மோடி நேரடியாக வந்து பார்த்து கொலையாளிகளை பாராட்டியதாக சம்பவத்தை நேரில் கண்ட சுரேஷ் என்பவர் கூறுகிறார்.
பாலியல் வன்புணர்வுக்கு பிறகு இளம் பெண்களின் பிறப்பு உறுப்புகளில் மரக்கட்டைகளை செருகியதும், கர்ப்பிணியின் வயிற்றை கிழித்ததும் நரோடா பாட்டியாவில்தான் அரங்கேறியது. மூன்று தினங்கள் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள் என்று மோடியும், பாபு பஜ்ரங்கியும் நேரடியாகவே அனுமதி அளித்ததாக நேரில் கண்டவர்கள் டெஹல்காவிடம் தெரிவித்தனர்.
மோடியிடம் விசாரணை என்ற பெயரில் நாடகம் நடத்திய சிறப்பு புலனாய்வுக் குழுவின் தலைவரான முன்னாள் சி.பி.ஐ இயக்குநர் ஆர்.கே.ராகவன் மோடிக்கு நற்சான்றிதழை வழங்கினார். சிறப்பு புலனாய்வுக் குழுவில் இடம் பெற்றிருந்த குஜராத்தைச் சார்ந்த கீதா ஜோஹ்ரி, சிவானந்த் ஜா, ஆஷிஷ் பாட்டியா ஆகியோர் மோடியின் ஆதரவாளர்கள் ஆவர். இவர்கள் சிறப்பு புலனாய்வுக் குழுவில் இடம்பெற்றதே மிகப்பெரிய அநீதமாகும். இந்த மோடியின் பக்தர்கள்தாம் அவரிடம் விசாரணையை நடத்தினார்கள்.
மோடியை குற்றவாளியாக அறிவிப்பதற்கு காங்கிரஸ் கட்சி அஞ்சுகிறது. மோடி குஜராத்தில் முதல்வராக தொடர்வதையே அவர்கள் விரும்புகின்றார்கள். கடந்த 10 ஆண்டுகளாக மோடியிடம் விசா
No comments:
Post a Comment