Friday, September 7, 2012

குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்க வேண்டிய அதபுகள்
பகுதி - 1
அல் –ஆதாப்
நடைமுறை ஒழுக்கங்கள்

இஸ்லாம் என்பது ஒரு பூரண வாழ்க்கைத் திட்டம். குழந்தை பிறந்ததில் இருந்து அது மரணித்து கப்ரில் வைக்கப்படும் வரை உள்ள அனைத்து கருமங்களுக்கான ஒழுங்கு முறைகள் எவ்வாறு அமைய வேண்டும் என்பது அல்குர்ஆன் மூலமாகவும், நபிமொழிகள் மூலமாகவும் தெளிவாகக் கூறப்பட்டுள்ளன. அவற்றை நாம் பின்பற்றி முறையாக செயற்படும் போது அவை இபாதத்துக்களாக எமது பதிவேட்டில் பதியப்படுகின்றன.
உணவு உட்கொள்ளும் முறை

கவனிக்கவேண்டியவைகளும், சுன்னத்தான முறைகளும் ஹலாலான உணவையே உண்ணத் தேர்ந்தெடுத்தல்.

1. தலையை மூடிக்கொள்ளல்

2. வாயையும் இரு கைகளையும் களுவிக்கொள்ளல்

3. விரிப்பில் (சுப்ராவில்) வில் உணவைவைத்தல்

4. எமக்கு முன் உணவு வைக்கப்பட்டவுடன் ஓதவேண்டியவை:

அல்லாஹும்ம பாரிக் லனா fபீமா ரzஸக்தனா வகீனா அதாபன் நாரி.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ரிப்னுல் ஆஸ்
ஆதாரம்: இப்னு ஸனீ.
(யா அல்லாஹ் நீ எமக்களித்த இந்த உணவில் அபிவிருத்தி செய்வாயாக நரக வேதனையை விட்டும் எம்மைப் பாதுகாப்பாயாக)

5. மூன்று இருப்புக்களில் ஏதாவது ஒரு இருப்பில் உட்காருதல்.
* இடது காலின்மீது இருந்துகொண்டு வலது காலை நட்டிவைத்தல்.
* நடு அத்தஹிய்யாத் இருப்பு இருத்தல்.
* குந்தி இருத்தல்.

6. உணவருந்த முன் மிஸ்வாக் செய்தல்.

7. வலது கையால் உணவருந்துதல்.

8. பிஸ்மில் சொல்லி ஆரம்பித்தல்.

9. பிஸ்மில் சொல்ல மறந்து இடையில் ஞாபகம் வந்தால்.

பிஸ்மில்லாஹி அவ்வலஹு வாகிரஹு

இதன் ஆரம்பத்திலும், இறுதியிலும் அல்லாஹ்வின் திருநாமத்தைக் கூறிக்கொள்கிறேன்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலியல்லாஹு அன்ஹா)
ஆதாரம்: அபூதாவுத், திர்மிதி

10. சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போது இடைக்கிடை அல்லாஹ்வுக்கு நன்றி சொல்லுதல். அதாவது:

அல்ஹம்துலில்லாஹி வ ஷுக்ருலில்லாஹி அல்லாஹும்ம லகல்ஹம்து வலக ஷுக்ரு.

இறைவா உனக்கே புகழும் உனக்கே நன்றியும்
அறிவிப்பவர்: அனஸ் (ரலியல்லாஹு அன்ஹு)
ஆதாரம்: முஸ்லிம்

11. உணவு உட்கொள்ளும் வேலை உணவு கீழே விழுந்து விட்டால் அதனை ஷைத்தானுக்கு விட்டு விடாமல் எடுத்து உண்ண வேண்டும். ஏனெனில் சில வேளைவிழுந்த உணவு பரக்கத்துடைய உணவாக இருக்கலாம் அல்லவா?

12. உணவு உட்கொள்ளும்போது எமக்கண்மையி உள்ள உணவை முதலில் நடுவிலுள்ளவைகளைப் பின்னரும் உண்ணவேண்டும்.

13. கூட்டாகச் சாப்பிடும்போது மற்றவர்களையும் கவனித்துக் கொள்ளவேண்டும்.

14. தீவிரமாகச் சாப்பிடாமல் மற்றவர்களின் உரிமைகளையும் பேணிச் சாப்பிடுதல்.

15. மற்றவர்களுக்கு அருவருப்பு ஏற்படாதவாறு சாப்பிடுதல் வேண்டும்.

16. இடையில் உணவை முடித்து எழும்பினால் இருக்கக் கூடிய அனைவரிடமும் அனுமதி கேட்டுக்கொள்ள வேண்டும். ஏனெனில் நபியவர்கள் உணவு உட்கொள்ள அமர்ந்தால் கடைசிவரை இருப்பார்கள்.

17. இடையில் ஒருவரைச் சேர்ப்பதாயினும் கூட மற்றவர்களிடம் அனுமதி கேட்கவேண்டும்.

18. உணவு உட்கோண்ட பின்னர் பாத்திரத்தை நன்றாக வழித்துச் சாப்பிடுதல் வேண்டும்.

19. இறுதியாக விரல்களை நன்றாக உறுஞ்சுதல் (சூப்புதல்)

20. தங்கம் வெள்ளி போன்ற பாத்திரங்களில் உணவு உட்கொள்வது கூடாது ஹராமாகும்.

21. சாப்பிட்டு முடிந்ததும் பின்வரும் துஆவை ஓதிக் கொள்ளுதல்

அல்ஹம்துலில்லாஹி இல்லத்தி அத்அமணா வசகானா வஜஅலனா மினல் முஸ்லிமீன்.

அறிவிப்பவர்: அபூ சயீதுள் குத்ரி (ரலியல்லாஹு அன்ஹு)
ஆதாரம்: திர்மிதி

தண்ணீர் குடிக்கும் முறைகள்

1. தலையை மறைத்தல்.

2. உட்கார்ந்து குடித்தல்.

3. வலது கையில் எடுத்தல்.

4. பிஸ்மி சொல்லுதல்.

5. தண்ணீர் குடிக்கும் முன் தண்ணீரை அவதானித்தல்.

6. ஒரேயடியாகக் குடிக்காமல் சிறிது சிறிதாகவும், கிடராகவும் குடித்தல்.

7. தண்ணீரில் மூச்சுவிடுவதோ, ஊதுவதோ கூடாது.

8. உடைந்த பாத்திரத்தில் நீர் அருந்துவது கூடாது.

9. தங்கம், வெள்ளிப் பாத்திரங்களில் நீர் அருந்துவது கூடாது.

10. அருந்தி முடிந்ததும் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துவதற்காக ‘அல்ஹம்துலில்லாஹ்’ என்று கூறுதல்.
பகுதி - 2
இஸ்லாம் என்பது ஒரு பூரண வாழ்க்கைத் திட்டம். குழந்தை பிறந்ததில் இருந்து அது மரணித்து கப்ரில் வைக்கப்படும் வரை உள்ள அனைத்து கருமங்களுக்கான ஒழுங்கு முறைகள் எவ்வாறு அமைய வேண்டும் என்பது அல்குர்ஆன் மூலமாகவும், நபிமொழிகள் மூலமாகவும் தெளிவாகக் கூறப்பட்டுள்ளன. அவற்றை நாம் பின்பற்றி முறையாக செயற்படும் போது அவை இபாதத்துக்களாக எமது பதிவேட்டில் பதியப்படுகின்றன.

பிறர் வீட்டில் உணவருந்தச் செல்லும்போது கவனிக்க வேண்டியவை

1. உத்தரவு கேட்டு ஸலாம் கூறி நுழையவேண்டும்.

2. அழைக்கப்பட்டவர்கள் மாத்திரம் செல்லவேண்டும்.

3. ஏற்கனவே கூறப்பட்ட ஒழுங்கு முறைகளைப் பேணி உண்ணவேண்டும்.

4. குறையேதும் கூறக்கூடாது உதாரணமாக உப்பைக்கூடக்கேட்கக் கூடாது.

5. உணவைப் பாத்திரங்களில் சிறிதளவு மீதம் வைப்பது ஏற்றமானது.

6. விருந்துண்டபின் ஓதும் துஆக்கள்:

அல்லாஹும்ம பாரிக் லனா fபீஹி வ அத்இம்னா கைரன் மின்ஹு.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலியல்லாஹு அன்ஹு)
ஆதாரம்: அபூதாவுத்

அடுத்தவர்களின் வீட்டில் நோன்பு திறந்தபின்

அfப்தர இந்தகுமுஸ் ஸாஹிமூன வ அகல தொஆமகுமுல் அப்ராறு வஸல்லத் அலைகுமுல் மலாஇகது

அறிவிப்பவர்: அனஸ் (ரலியல்லாஹு அன்ஹு)
ஆதாரம்: அபூதாவுத்

விருந்து முடிந்த பின்னர் தாமதிக்காமல் அவ்விடத்தை விட்டுச் செல்லுதல் நல்லது.


விருந்து வீட்டார் பிறரை வரவேற்கும் முறைகள்

1. விருந்தாளிகளை புன்னகையோடு வரவேற்றல்.

2. அவர்களைத் திருப்தியாக உபசரித்தல்.

3. இறுதியாக வாசல் வரை சென்று வழியனுப்புதல்.

பகுதி - 3
இஸ்லாம் என்பது ஒரு பூரண வாழ்க்கைத் திட்டம். குழந்தை பிறந்ததில் இருந்து அது மரணித்து கப்ரில் வைக்கப்படும் வரை உள்ள அனைத்து கருமங்களுக்கான ஒழுங்கு முறைகள் எவ்வாறு அமைய வேண்டும் என்பது அல்குர்ஆன் மூலமாகவும், நபிமொழிகள் மூலமாகவும் தெளிவாகக் கூறப்பட்டுள்ளன. அவற்றை நாம் பின்பற்றி முறையாக செயற்படும் போது அவை இபாதத்துக்களாக எமது பதிவேட்டில் பதியப்படுகின்றன.

நித்திரைக்குச் செல்லும் போது கவனிக்க வேண்டிய சுன்னத்தான முறைகள்

1. நித்திரைக்குச் செல்லும்முன் முதலில் வுழுச்செய்ய வேண்டும். முடியுமானால் வுழுவுடைய காணிக்கை இரண்டு ரகஅத்துக்கள் தொழுது கொள்ளவேண்டும்.

2. தூங்கும் விரிப்பை வெளியில் நின்று நன்றாக உதறிக் கொள்ள வேண்டும்.

3. சுவரின் ஓரம் அல்லாமலும், கிப்லாவின் பக்கம் காலை நீட்ட்டாமலும் விரிப்பை விரிக்க வேண்டும்.

4. விரிப்பின் மேலே அமர்ந்து அன்றாடம் செய்த அமல்களைச் செய்தோமா என்று சிந்தித்து விடுப்பட்டதில் தற்போது செய்ய முடிந்ததை செய்தல் வேண்டும்.

5. பின்னர்:
‘ஸுப்ஹானல்லாஹ்’ 33 தடவையும்
‘அல்ஹம்துலில்லாஹ்’ 33 தடவையும்
‘அல்லாஹு அக்பர்’ 34 தடவையும்
ஓதி இரு கைகளையும் துஆக் கேட்பது போல் ஒன்று சேர்த்து
குல் யா அய்யுஹல் காfபிரூன், குல் உவல்லாஹு அஹத், குல் அஹூது பிரப்பின் நாஸ், குல் அஹூது பிரப்பில் fபலக்

ஆகிய நான்கு சூராக்களையும் ஓதி இரு உள்ளங்கைகளிலும் ஊத்தி உடம்பில் தலை தொடக்கம் கால்வரை முடியுமான அளவு தடவிக் கொள்ளல் வேண்டும்.
(அபத்தையும், உள்ளங்கால்களையும் தவிர்த்துக் கொள்ளல் வேண்டும்)

6. தூங்கும் போது வலது கையை வலது கன்னத்தில் வைத்து இடது கையை இடது தொடையின்மீது வைத்து கீழ்வரும் துஆவை ஓதவேண்டும்.

அல்லாஹும்ம கினி அzஸாபக யவ்ம துப்அzஸு இபாதக

அறிவிப்பவர்: ஹப்ஸா (ரலியல்லாஹு அன்ஹு)
ஆதாரம்: அபூதாவுத்

7. நித்திரையின் போது நல்ல கனவுகளைக் கண்டுவிட்டால் அது அல்லாஹ்வின் புறத்தில் நின்றும் உள்ளதென்பதால் அல்லாஹ்வைப் புகழ்ந்துகொள்ளல். நித்திரை விட்டெழுந்தபின் அந்தக் கனவை உங்கள் நெருங்கிய நண்பர்களிடம் கூறுவதில் தவறில்லை. ஆனால் கேட்ட கனவுகளைக் கண்டுவிட்டால் அது ஷைத்தானின் புறத்தில் நின்றுமுள்ளது என்பதால் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடல் வேண்டும். அதனை யாரிடமும் சொல்லுவது கூடாது. அத்தோடு தனது இடப்பக்கம் துப்புவது போன்று மூன்று தடவைகள் சைகைசெய்து கொள்ளவேண்டும். மேலும் தனது விலாப் பக்கத்தி மருபுறம்திருப்பி தூங்கவேண்டும். முடியுமானால் எழுந்து இரண்டு ரகஅத்துக்கள் தொழுதுவிட்டு கீழேவரும் துஆவை ஓதிக் கொள்ளுங்கள்.

அல்லாஹும்ம இன்னி அஹூது பிக மின் அமலி ஷைத்தானி வஸையிஹதில் அஹ்லமி
அறிவிப்பவர்: இப்னு ஸபர்

8. யாராவது நம்மிடம் வந்து கனவு கண்டேன் என்று கூறினால் பின்வரும் துஆவை ஓதிக் கொள்ளுங்கள்.

கைரன் ரஅய்த்த வகைரன் யகூனு கைரன் தலகஹூ வஷர்ரன் தவக்காஹூ கைரன் லனா வஷர்ரன் அலா அஃதாயினா வல்ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன்

ஆதாரம்: இப்னு ஸனீ

9. தூக்கத்தை விட்டு எழுந்தவுடன் ஓத வேண்டிய துஆ

அல்ஹம்துலில்லாஹி இல்லத்தீ அஹ்யானா பஹ்த மா அமாதனா வ இலைஹி நுஷூர்.

ஆதாரம்: புஹாரி, முஸ்லிம்


இந்த தஸ்பீஹ்களை ஓதிக்கொள்ள வேண்டும்.

அல்லாஹு அக்பர் – 10 தடவைகள்

அல்ஹம்துலில்லாஹ் - 10 தடவைகள்

ஸுப்ஹானல்லாஹி வபிஹம்திஹி - 10 தடவைகள்

ஸுப்ஹானல் மலிகுல் குத்தூஸ் - 10 தடவைகள்

அஸ்தக்பிருல்லாஹ் - 10 தடவைகள்

லா இலாஹா இல்லல்லாஹ் - 10 தடவைகள்

அல்லாஹும்ம இன்னீ அவூது பிக மின் லயகி துன்யா வல யகி யவ்மில் கியாமதி - 10 தடவைகள்
பகுதி - 4
இஸ்லாம் என்பது ஒரு பூரண வாழ்க்கைத் திட்டம். குழந்தை பிறந்ததில் இருந்து அது மரணித்து கப்ரில் வைக்கப்படும் வரை உள்ள அனைத்து கருமங்களுக்கான ஒழுங்கு முறைகள் எவ்வாறு அமைய வேண்டும் என்பது அல்குர்ஆன் மூலமாகவும், நபிமொழிகள் மூலமாகவும் தெளிவாகக் கூறப்பட்டுள்ளன. அவற்றை நாம் பின்பற்றி முறையாக செயற்படும் போது அவை இபாதத்துக்களாக எமது பதிவேட்டில் பதியப்படுகின்றன.

மலசல கூடத்துக்கு செல்லும் போது
கவனிக்கப்படவேண்டியவைகளும் ஸுன்னத்தான ஒழுங்கு முறைகளும்
1. தலையை மூடிக்கொள்ள வேண்டும்.

2. காலில் பாதணி அணிந்து கொள்ள வேண்டும்.

3. அல்லாஹ் மலக்குகள் நபிமார்களின் திருநாமங்கள் எழுதப்பட்டவைகள் மேலும் குர்ஆன் ஹதீஸ்கள் போன்றவற்றை தூரமாக்கிக் கொள்ளல். மோதிரத்தில் எழுதப்பட்டிருந்தால் உட்பக்கமாக்கி அதனை கையால் பொத்திக் கொள்ள வேண்டும்.

4. நுழைய முன் பின்வரும் துஆவை ஓதிக்கொள்ளவேண்டும்.

பிஸ்மில்லாஹி அல்லாஹும்ம இன்னீ அஹூது பிக மினல் குப்ஸி வல் கபாஇஸி

அறிவிப்பவர்: அனஸ் (ரலியல்லாஹு அன்ஹு)
ஆதாரம்: புஹாரி, முஸ்லிம்

5. இடது காலை முதலில் உள்ளே வைத்து நுழைதல்.

6. உட்கார்வதற்கு நெருங்கிய பின் துணியை உயர்த்துவதும் எழுந்து நிற்கும் முன்பே துணியை விட்டுவிடுவதும் ஏற்றமாகும்.

7. உட்காரும்போது வலது காலை நிறுத்தி இடதுபக்கம் சாய்ந்து உட்காரவேண்டும்.

8. சுத்தம் செய்வதற்கு முன் இடது கையை நீரில் நனைத்துக் கொண்டு அதேகரத்தால் நன்றாக சுத்தமாகும் வரை சுத்தம் செய்ய வேண்டும்.

9. வெளியே வரும்போது வலது காலை வெளியே வைத்து வந்தபின் பின்வரும் துஆவை ஓதவேண்டும்.

குப்ரானகல்ஹம்துலில்லாஹி இல்லத்தி அத்ஹப அணியல் அதா வஆபனி

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலியல்லாஹு அன்ஹு)
ஆதாரம்: தபராணி, இப்னு ஸனீ

சுத்தம் செய்து வெளியே வந்தபின் கையை மண்ணுடன் சேர்த்துக் கழுவவேண்டும்.

தவிர்த்துக் கொள்ளவேண்டிய விடயங்கள்

1. புற்றுகள், கடினமான இடங்கள், மக்களின் உள்ளாசத்துக்காக ஒதுக்கப்பட்ட இடங்கள், நடைபாதை, பழம்தரும் மரங்களுக்குக் கீழ், மையவாடி, நீர் தேங்கிநிற்கும் இடங்கள் சிறிய அளவில் ஓடும் நீர் இவைப்போன்ற இடங்களில் மலசலம் கழிப்பது கூடாது.

2. காற்றடிக்கும் திசையை நோக்கி கழித்தல் கூடாது.

3. அல்லாஹ்வின் திருநாமங்கள் போன்று சங்கையானவைகள், உணவுப்பொருட்கள், எலும்�

No comments: