அமெரிக்க தூதரகத்தை முற்றுகையிடப்போவதாக பாப்புலர் ஃப்ரண்ட் அறிவிப்பு!
13 செப்டம்பர், 2012
சென்னை: முஸ்லிம்கள் தங்கள் உயிரையும் விட புனிதமாக மதிக்கும் முஹம்மது நபியவர்களை இழிவுபடுத்தும் விதமாக அமெரிக்காவிலுள்ள கலிஃபோர்னியா மாகானத்தில் வசித்து வரும் யூத இனத்தைச்சேர்ந்த ஷாம் பேசிலி என்ற திரைப்பட இயக்குனர் மற்றும் அமெரிக்காவைச்சேர்ந்த டெர்ரி ஜோன்ஸ் என்ற கிறிஸ்தவ போதகர் ஆகிய இருவரும் ஒன்றினைந்து திரைப்படம் ஒன்றை தயாரித்துள்ளனர். அதில் உண்மைக்கு புறம்பாகவும், பொய்யான விஷயங்களை பரப்பியும் ஒட்டு மொத்த முஸ்லிம் சமூகத்தினரையும் புண்படுத்தும் விதமாக அதனை தயாரித்துள்ளனர்.
இதனால் உலகம் முழுவதும் முஸ்லிம் சமூக மக்களிடையே பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டு பல்வேறு நாடுகளில் அமெரிக்காவை கண்டித்து பலவகையான போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. முஸ்லிம் சமூகத்தின் உயிர் மூச்சான முஹம்மது நபியவர்களை இழிவுபடுத்தும் செயல்கள் தொடர்ந்து மேற்கத்திய நாடுகளில் உள்ளவர்கள் செய்துவருகிறார்கள். இவ்வாறு செய்பவர்களை அந்நாட்டு அரசாங்கங்கள் தண்டிப்பதாக தெரியவில்லை. இத்தகைய செயலை கண்டித்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக சென்னை அண்ணாசாலையிலுள்ள அமெரிக்க தூதரகத்தை இன்று (13.09.2012) மாலை 4 மணியளவில் முற்றுகையிடப்போவதாக அறிவித்துள்ளது. பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தமிழ்மாநில துணைத்தலைவர் முஹம்மது இஸ்மாயில் தலைமையில் நடைபெறும் இப்போராட்டத்தில் மாநில செயலாளர் ஷேக் முஹம்மது அன்சாரி, எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில தலைவர் தெஹ்லான் பாகவி மற்றும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சென்னை மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொள்கின்றனர்.
அமெரிக்க தூதர் பலி; பிரிட்டனுக்கு கிலி! : ISLAM -THE UNTOLD STORY ஒலிபரப்பு திடீர் நிறுத்தம்!
SEP 13, அமெரிக்க ஆதரவு பயங்கரவாதிகள், டெர்ரி ஜோன்ஸ் மற்றும் சாம் பேசிலி ஆகியோர் இணைந்து "INNOCENCE OF MUSLIMS" என்ற பெயரில், இஸ்லாத்தையும், முஹம்மது நபி அவர்களையும் கேவலமாக சித்தரித்த திரைப்படத்தை தயாரித்தனர்.
இதை தொடர்ந்து, லிபியா உள்ளிட்ட நாடுகளில் கொந்தளித்த முஸ்லிம்கள் அமெரிக்க தூதரகங்களை அடித்து நொறுக்கியும், தீ வைத்து கொளுத்தியும் வருகின்றனர். இதில் மூச்சு திணறல் ஏற்பட்டு லிபியாவுக்கான அமெரிக்க தூதர் "கிறிஸ்டோஃபர் ஸ்டீஃபன்" மற்றும் 3 தூதரக அதிகாரிகள் பலியாயினர்.
இதற்கிடையில், இங்கிலாந்திலும் முஸ்லிம்களை கோபமூட்டும் வகையில் தயாரிக்கப்பட்ட "ISLAM -THE UNTOLD STORY" என்ற பெயரில், இங்கிலாந்தின் "சேனல் 4" என்ற தொலைகாட்சி இன்று முதல் (13/09) ஒளிபரப்ப முடிவு செய்திருந்த "டாக்குமெண்டரி" தொடர், நிறுத்தப்பட்டது. இதன் இயக்குனர் "Taam Holend " இஸ்லாத்தை பற்றி அடிப்படை ஆதாரங்களற்ற - முஸ்லிம்களை புண்படுத்தும் வகையில், காட்சிகளை அமைத்துள்ளார். இதை கண்டித்து, ஆயிரத்துக்கும் மேற்பட்ட இங்கிலாந்து முஸ்லிம்கள் "சேனல் 4" அலுவலகத்தை முற்றுகையிட்டதுடன் "இங்கிலாந்து பிராட்காஸ்ட் ரேகுலடரியிலும்" புகார் அளித்தனர்.
நேற்று வரை முரண்டு பிடித்து வந்த சேனல் 4, திட்டமிட்டபடி வியாழக்கிழமை (13 /09)முதல் ISLAM - THE UNTOLD STORY ஒளிபரப்பப்படும், என்று உறுதியுடன் கூறி வந்தது. இந்நிலையில், ‘Innocence of Muslims’ திரைப்படத்தை கண்டித்து, நேற்று உலகளவில் பெரும் கலவரம் வெடித்ததை தொடர்ந்து, சேனல் 4 நிறுவனம் "ISLAM -THE UNTOLD STORY" தொடர் நிறுத்தப்படும், என்று அதிரடியாக அறிவித்துள்ளது
__._,_.___
No comments:
Post a Comment