Friday, September 7, 2012

இஞ்சீனியர் - டாக்டர் என குறி வைத்து கைது செய்யும் காவல் துறை : கலக்கத்தில் முஸ்லிம் சமூகம்!

2 செப்டம்பர், 2012

தீவிரவாத தொடர்பு என்ற பொய்யான குற்றச்சாட்டுக்களின் பெயரில், 11 முஸ்லிம் இளைஞர்களை கைது செய்து, மீண்டும் தனது முஸ்லிம் வேட்டையை துவக்கியுள்ளது கர்நாடகா பா.ஜ.க அரசு.





இதில் பிரபல பத்திரிகையான "டெக்கான் ஹெரால்டில்" பணியாற்றும் பத்திரிகையாளர் மற்றும் டி.ஆர்.டி.ஒ, விஞ்சானி, இஞ்சீனியர் மற்றும் டாக்டர் ஆகியோரும் அடங்குவர். இதுவரை பல்லாயிரம் முஸ்லிம் இளைஞர்களின் வாழ்க்கையை சீரழித்த (சில) காவல் துறை கயவர்களால் ஒருவர் மீது கூட குற்றத்தை நிரூபிக்க முடியவில்லை. ஆனால், அவ்வப்போது முஸ்லிம்களை அச்சத்தில் ஆழ்த்தி, இந்த சமுதாயம் எதிர்கொள்ளும் கடும் வேதனைகளை ரசிப்பதில் வெற்றிக்கண்டு வருகின்றனர்.

தற்போது, கைது செய்யப்பட்டுள்ள முஸ்லிம் வாலிபர்கள் குறித்த நிலையை பார்ப்போம்:

(1 ) Dr Zafar Iqbal (27) MBBS PGDC (Cardiology) திருமணமாகி 2 மாதங்கள் மட்டுமே ஆகின்றன. மனைவியும் MBBS டாக்டர் தான். மற்றொரு சகோததரரும் ஒரு சகோதரியும் மருத்துவம் படித்த டாக்டர்கள். தந்தை ஷேக் ரபீக் அஹ்மதும் டாக்டர் என்பதோடு கர்நாடக முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டரின் பக்கத்து வீட்டுக்காரர்களான மரியாதைக்குரிய இந்த குடும்பம், இன்று உளவுத்துறையின் முஸ்லிம் விரோத போக்கால் சொல்லொணா துயரத்துக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர்.

(2) Mutheevur Rahman Siddiqi (26) "டெக்கான் ஹெரால்டில்" பணியாற்றும் பத்திரிகையாளர். பகுதிநேரம் வேலை பார்த்துக்கொண்டே "இதழியல்" உள்ளிட்ட, பட்ட மேற்படிப்பை படித்து விட்டு 3 ஆண்டுகளாக "டெக்கான் ஹெரால்டில்" பணியாற்றும் பத்திரிகையாளர்.

(3) Wahid Hussain (26) சொந்த ஊரான ஹுப்ளியில் நேரு காலேஜில் BBA படித்த அவர், ஹுப்ளியின் மற்றொருக்கல்லூரியான IEMSல், MBA முடித்துவிட்டு கடந்த 8 மாதங்களாக தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகின்றார்.

(4) Ubaithullah Bahadur (24) NTTFல் "Tool Dye Making" கோர்ஸ் முடித்த அவர், 18 மாதங்கள் துபாயில் வேலை பார்த்தவர். தற்போது "சீனா"வில் வேலை பார்க்க முயற்சித்து, குறிப்பிட்ட கம்பெனியில் "இண்டர்வியூ" முடித்துள்ள நிலையில், போலீஸ் வீட்டுக்கு வந்த போது "பாஸ்போர்ட்" என்கொய்ரியாக இருக்கும் என்று நினைத்தேன் என்கிறார், BSNLல் கடந்த 36 வருடமாக வேலை பார்த்துவரும், அவரது தந்தை ஜாபர்.

இவர்கள் தவிர, சாதிக், ஏஜாஸ் அஹ்மத் (விஞ்சானி) ஷோயப் அஹ்மத் உள்ளிட்ட பலரும் கைது செய்யப்பட்டு 2 நாட்களாக கொடுஞ்சித்திரவதைக்கு ஆளாக்கப்பட்ட பின், தற்போது சட்ட பூர்வமாக நேற்று இரவு கோர்டில் ஆஜர்படுத்தப்பட்டு போலீஸ் காவலில் விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.

Source: http://ping.fm/Q3JSE & http://ping.fm/1BbrZ

No comments: