ி தயாராகிவிடுகின்றன. ஆனால், சிற்றூர்களில் வாழும் குழந்தைக்கு வாய்ப்பு இருந்தும்... படிப்பு, பாதுகாப்பு போன்ற காரணங்களால் விளையாட அனுமதி கிடைப்பதில்லை. விளையாடும் குழந்தைக்குத்தான் உடல், மனம் வலிமையாக இருக்கும்; விளையாட்டு புத்திசாலித்தனத்தையும் வளர்க்கும் என்பதை பெற்றோர் புரிந்துகொள்ள வேண்டும்'' என்கிறார் ஜெயந்தினி.
டீச்சர்கள் நட்புடன் இருப்பதையும், தாங்கள் விரும்பும் வகையில் பாடம் நடத்துவதையுமே 80 சதவிகிதத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் விரும்புகின்றன. தண்டனை தருவது, போர் அடிப்பது போல் பாடம் நடத்துவது ஆகியவற்றை பிடிக்காத விஷயங்களாகவும் குழந்தைகள் வரிசைப்படுத்தியுள்ளன.
''நட்புடன் சிரிக்கும் டீச்சரைத்தான் குழந்தைகளுக்கு அதிகம் பிடித்திருக்கிறது. அத்தகைய ஆசிரியர் நடத்தும் பாடத்தைத்தான் விரும்பிப் படிக்கின்றன குழந்தைகள். இதை ஆசிரியர்கள் புரிந்துகொள்ள வேண்டிய காலகட்டம் இது. ஆசிரியருக்கு கிடைக்கும் தகவல்கள், இன்று தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக முன்கூட்டியே மாணவனுக்கும் கிடைத்துவிடுகிறது என்பதையும் ஆசிரியர்கள் உணர வேண்டும்.
ஒரு விதை எப்படி வளர்கிறது என்பதை கையில் விதையைக் கொடுத்து, மண்ணில் போட்டு வளர், செம்மண்ணில் வைத்து வெயிலில் படும்படி வை என்றெல்லாம் பிராக்டிகலாக சொல்லிக் கொடுப்பதற்கும், 'விதை வளர்வதற்கு சூரிய ஒளி, தண்ணீர், மண் வேண்டும்' என்று வாசித்து மனப்பாடம் செய்ய வைப்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது என்பதையும் ஆசிரியர்கள் புரிந்துகொள்ள வேண்டும்'' என்றார் ஜெயந்தினி.
குழந்தைகளின் மனங்களைக் குடைந்து, உள்ளே குடிகொண்டிருக்கும் குமுறல்களை இங்கே கொட்டிவிட்டோம். தீர்வு காண வேண்டியது... பெற்றோரும்... ஆசிரியர்களும்தான்!
--
ALAVUDEEN
No comments:
Post a Comment