Tuesday, March 6, 2012

بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

அஸ்ஸலாமு அலைக்கும் வ றஹ்மத்துல்லாஹி வ பறகாத்துஹூ



நம் அனைவர் மீதும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக


குர்ஆன் மற்றும் ஹதீஸ்கள்
இணைவைப்பாளர்கள்
அல்லாஹ்வை தவிர எதையும் வணங்காதீர்கள்(அல்குர்ஆன்)
அவ்லியாவையும் வணங்குவோம்
இறந்தோரை பிரார்த்திக்காதிர்கள் (அல்குர்ஆன்)
பிரார்த்திக்கலாம் இறந்தோர் நமக்கு அருள்புரிவார்கள்
கப்ருகளை உயர்த்திக் கட்டாதீர்கள்(நபிமொழி)
கப்ருகளை உயர்த்திக் கட்டுவோம்
உயர்த்திக் கட்டப்பட்ட கப்ருகளை தரைமட்டமாக்குங்கள் (நபிமொழி)
உயர்த்திக் கட்டப்படட கப்ருகளையும், தர்காஹ்களையும் இடிக்கமாட்டோம்!
எவர் மார்க்கத்தில் புதுமையை ஏற்படுத்துகிறாரோ அல்லது அவ்விதம் ஏற்படுத்துபவருக்கு இடமளிக்கிறாரோ, அவர்கள் மீது அல்லாஹ்வினதும், மலக்குகளினதும், மனிதர்களினதும் சாபம் உண்டாகிறது என நபி அவர்கள் நவின்றார்கள்.
(அலி(ரலி) அபூதாவூது, நஸயீ.)
மார்க்கத்தில் புதுமையை விரும்புகிரோமோ இல்லையோ மவ்லூது, கத்தம் பாத்திஹா, கந்தூரி விழா, ஷபே பராத், மண்ணறை திருவிழா, 1000 முறை கவுஸ் என்ற அழைப்போம் இன்னும் ஏராளம் இருக்கு அது நம் மூதாதையர்கள் காட்டித்தந்த வழிமுறை, நன்மையானது அதை நாங்கள் விடமாட்டோம்!
நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்
தாயத்தை கட்டித் தொங்கவிடுபவன் நிச்சயமாக அல்லாஹ்வுக்கு இணைவைத்து விட்டான்.’அறிவிப்பவர்: உக்பா இப்னு ஆமிர் (ரலி), நூல்:முஸ்னது அஹ்மத்
தாயத்தை கட்டினால் என்ன? தாயத்தை கட்டுவோம், கட்டக்கூடாது என்று கூறுபவர் யார்?
அவ்லியாக்களுக்கு வணக்க வழிபாடுகளை செய்து வரும் என் அருமை சகோதர சகோதரிகளே இந்த அறிவுரை உன்னிப்பாக படித்த நீங்கள் இனி எந்த வழிமுறையை பின்பற்ற போகிறீர்கள் ? !
அல்லாஹ்வும் அவனது அனைத்து நபிமார்களும் காட்டித் தந்த வழிமுறையையா?
அல்லது
அல்லாஹ்வும் அவனது நபிமார்களும் காட்டித்தராத உங்கள் மூதாதையர்கள் பின்பற்றிய கண்மூடித்தனமான குருட்டு வழிமுறையையா?
நீங்கள் எங்கே திசை திருப்பப்படுகிறீர்கள்
1) இனிப்பு வேண்டுமா? கசப்பு வேண்டுமா என்றால் இனிப்பை அழகாக தேர்ந்தெடுப்போம் !

2) மானம் வேண்டுமா? அவமானம் வேண்டுமா என்றால் மானம்தான் பெரிது என்போம் !

3) சுவர்கம் வேண்டுமா? நரகம் வேண்டுமா? என்றால் சுவர்கம்தான் வேண்டும் என்போம் !

ஆனால்
அந்த சுவர்கத்திற்கு செல்ல வேண்டுமானால் நாம் நம் மூதாதையர்கள் பின்பற்றிய மார்க்கத்திற்கு முரணாண காரியங்கள் அனைத்தையும் இன்றே இக்கணமே விட வேண்டும் அதற்கு பதிலாக நபிகாளர் (ஸல்) அவர்கள் வாழ்ந்த வாழ்க்கை முறையை தேர்ந்தெடுக்க வேண்டும் அது எப்படிப்பட்டது இதோ அல்லாஹ் கூறுகிறான் கேளுங்கள்!
(நபியே) மனிதர்களுக்காக அருளப்பட்ட வேதத்தை அவர்கள் சிந்தித்து உணர வேண்டுமென்பதற்காக, தெளிவாக அவர்களுக்கு விளக்கிக் கொடுப்பதற்கே வேதத்தை நாம் உம்மீது அருளினோம். (அல்குர்ஆன், 16:44)
அல்லாஹ்வுக்கும் (அவன்) தூதருக்கும் கீழ்படியுங்கள், நீங்கள் (அதனால் அல்லாஹ்வினால்) கிருபை செய்யப்படுவீர்கள். (அல்குர்ஆன் 3:132)
(நம்) தூதர் உங்களுக்கு எதைக் கொடுக்கின்றாரோ அதை எடுத்துக் கொள்ளுங்கள், இன்னும், எதை விட்டும் உங்களை விலக்குகின்றாரோ அதை விட்டும் விலகிக் கொள்ளுங்கள். (அல்குர்ஆன்59:7)
சிந்திப்பவர்களுக்கே அல்லாஹ் ஹிதாயத்தை தருகிறான்

வஸ்ஸலாம்

சிந்திக்க தூண்டும் உங்கள் சகோதரன் ............

தக்கலை கவுஸ் முஹம்மது - பஹ்ரைன்

Visit My Blog: தக்கலை கவுஸ் முஹம்மத்

No comments: