ஒரு பழக்கத்தை சும்மா ஜன்னல் வழியே தூக்கி எறிந்து விட முடியாது.தாஜா செய்து ஒவ்வொரு படியாகக் கீழே இறக்கிக் கொண்டு வர வேண்டும்.
**********
பணம் பேசக் கூடியது மட்டுமல்ல பேசுபவர்களின் வாயை அடைக்கக் கூடியதும் ஆகும்.
**********
ஒவ்வொரு திறமை வாய்ந்த மனிதனின் மூளையிலும் முட்டாள் தனமான பக்கம் ஒன்று கட்டாயம் உண்டு.
**********
சிறு கேள்விகளுக்கு நீண்ட விடை அளிப்பவனிடம் சற்று ஜாக்கிரதையாக இருங்கள்.ஏனெனில் நிச்சயமாக அவன் எதையோ மறைக்கிறான்.
**********
முகஸ்துதி உப்பைப் போன்றது.கொஞ்சம் உபயோகித்தால் தான் ருசியாய் இருக்கும்.அதிகமானால் கரிப்பாக இருக்கும்.
**********
இரண்டு நண்பர்களிடையே மத்தியஸ்தம் செய்யாதீர்கள்.செய்தால் ஒரு நண்பனை இழப்பீர்கள்.
இரண்டு அன்னியர்களிடையே மத்தியஸ்தம் செய்யுங்கள்.செய்தால் ஒரு நண்பன் கிடைப்பான்.
**********
அதிகப் பேச்சு,பொய் இரண்டுமே நெருங்கிய நண்பர்கள்.
**********
நாம் அனைவரும் மரண தண்டனைக்குள்ளானவர்கள் தான்.அந்த நாள் தான் வித்தியாசம்.
**********
செய்து காட்டுபவர்கள்தான் குழந்தைக்குத் தேவை.குறை காண்பவர்கள் அல்ல.
**********
அடிக்கடி தவறு செய்பவன் அப்பாவி.
ஒரே தவறை திரும்பத் திரும்பச் செய்பவன் மூடன்.
ஒரு தவறும் செய்யாதவன் மரக்கட்டை.
தன்னை அறியாமல் தவறு செய்து பின் திருத்திக் கொள்பவன் மனிதன்.
No comments:
Post a Comment