கொல்கத்தா:
இந்திய முஜாஹிதீன் என்ற இயக்கத்தின் பெயரால் தாக்குதல் மிரட்டல்
செய்தியை எஸ்.எம்.எஸ் மூலம் அனுப்பிய பாலிடெக்னிக் மாணவர் சவ்ராதீப்சிங்
(வயது 17) என்பவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
ஸீல்டா, ஹவுரா ஸ்டேசன்களிலும், முதல்வர் மற்றும் தலைமை போலீஸ் அதிகாரியின்
அலுவலகத்திலும், அருகிலுள்ள பாரா பஜாரிலும் கடந்த செவ்வாய்க்கிழமை வேலை நிறுத்தம்
நடைபெற்ற நாளில் குண்டுவைக்கப் போவதாக எஸ்.எம்.எஸ் மிரட்டல் வந்தது.
இச்செய்தியுடன் ‘இந்தியன் முஜாஹிதீன்’ என்ற பெயரையும் இணைத்து சவ்ராதீப் சிங்
ஏராளமானோருக்கு எஸ்.எம்.எஸ் ( SMS ) அனுப்பியுள்ளார். எஸ்.எம்.எஸ் (SMS)
செய்தி வேகமாக பரவியதை தொடர்ந்து போலீஸ் பாதுகாப்பை பலப்படுத்தி விசாரணையை
துவக்கியது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை சவ்ராதீப் சிங் எஸ்.எம்.எஸ் செய்தியை அனுப்பியுள்ளார்.
அவருடைய ஃபோன் நம்பரை பின் தொடர்ந்த போலீஸ் செவ்வாய்க்கிழமை கைது செய்தது.
பிர்பம் மாவட்டத்தில் உள்ள சூரியில் சவ்ராதீபின் வீட்டில் வைத்து போலீஸார்
அவரை கைது செய்தனர். ஐ.டி சட்டத்தின் அடிப்படையில் போலீஸ் வழக்கு பதிவுச்
செய்துள்ளது.
இம்மாதம் 6-ஆம் தேதி சவ்ராதீப் சிங் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்.
இவருக்கு 3 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளது என்று அரசு தரப்பு
வழக்குரைஞர் ஸைஃபுல் அலி கான் தெரிவித்துள்ளார்.
Thanks: தூதுஆன்லைன்
No comments:
Post a Comment