Visit- www.mohamedbunder.tk
மூளையை சுறுசுறுப்பாக்கும் வாழைப்பழம்
முக்கனிகளில் ஒன்றான வாழைப்பழம் பல்வேறு உயிர்சத்துக்களையும் கனிமங்களையும் தன்னுள்ளே கொண்டுள்ளது. சுண்ணாம்புச்சத்து அதிக அளவு உள்ளதால் இப்பழம் பல நோய்களை கண்டிக்கும் ஆற்றல் பெற்றுள்ளது. இதில் "ப்ரக் டோஸ், க்ளூக் கோஸ், சக்ரோஸ்'ஆகிய மூன்று வித சர்க் கரைகள் உள்ளன. ஒரே உணவில் இவை கிடைப்பது மிக அபூர்வமானது. உடலுக்கு அவசிய தேவையான நார்ச்சத்து, புரதச் சத்து போன்ற முக் கியமான சத்துக்களையும் வாழைப்பழம் தன்னுள்ளே கொண்டுள்ளது. மேலும்,வைட்ட மின்கள், கனிம சத்துக்கள், பொட்டாஷியம் ஆகிய சத்துக்களும் இருப் பதால்,உடலில் எதிர்ப்பு சக்தி அதிகமாகவே கிடைக்கிறது.
வாழைப்பழத்தின் வகைகள்
ஒவ்வொரு வகை பழத்திற்கும் ஒவ்வொரு விசேச பலனும், குணமும் உண்டு. வாழையில் 70க்கும் மேற்பட்ட வகைகள் உண்டு. இரசத்தாளி வாழை வையைக் கொடுக்கும்.செவ்வாழை பலமளிக்கும். மொந்தன் காமாலைக்கு நல்லது. பச்சைவாழை வெப்பத்தைக் குறைக்கும். மலைவாழை சோகையை நீக்கும். பேயன் வாழை குடற்புண் தீர்க்கும். நவரை வாழை கரப்பான் நோயை அதிகப்படுத்தும்.
சரும நோய் நிவாரணி
வாழைப்பழம் உணவை எளிதில் ஜீரணமாக்கும் ஆற்றல் உள்ளது. பித்தத்தை நீக்கும். உடலுக்கு வலுவும் எடையை அதிகரிக்கும் ஆற்றலும் கொண்டது. ரத்த ஓட்டத்தை விருத்தி செய்யும். மலச்சிக்கல் இருந்தால் போக்கிவிடும்.. ஒழுங்கற்ற மாதவிலக்கு உள்ளவர்கள் வாழைப்பழம் சாப்பிட்டால் ஒழுங்கு ஏற்படும். ஜீரணத் தொடர்பான நோய்களை கண்டிப்பதோடு, குடலில் புண் இருந்தால் ஆற்றும் தன்மை உண்டு. சரும நோய்களுக்கு இது தகுந்த நிவாரணி,
சோர்வை நீக்கும்
கடும் வேலையிலும் சோர்வு வராமல் நீக்குவது வாழைப் பழம் தான். சாப்பிட்ட பின் சுறு சுறுப்பு தானாக வந்து விடும். அதன் பின், மீண்டும் சில மணி நேரம் வேலை செய்யலாம். வாழைப்பழத்தில் உள்ள, "ட்ரைப் டோபன், செரடோனின்' ஆகிய ரசாயன சத்துக்கள் தான் இதற்கு காரணம்.
ரத்த அழுத்தம், பக்கவாதம்
பக்க வாதங்கள் வராமல் தடுக்க வாழைப் பழம் பெரிதும் உதவுகிறது. மற்றவர்களை விட, 50 சதவீதம் அளவுக்கு பக்கவாதம் வராமல் தடுப் பதில் வாழைப் பழம் உதவுகிறது. வாழைப் பழத்தில், "ஷுகர்' அளவு குறைவு; பொட்டாஷியம் சத்து அதிகம். அதனால், ரத்த அழுத் தத்தை அறவே தடுத்து விடும். வாழைப்பழத் தில், "வைட்டமின் பி6' உள்ளது.ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை சீராக்குவது இதுதான். வாழைப்பழத்தில், "ஆன்டாசிட்' ரசாயனம் உள்ளதால், உணவு சாப்பிட்ட பின் சிலருக்கு ஏற்படும் நெஞ்செரிச்சலை சுலபமாக போக்கி விடுகிறது. வாழைப்பழத்தில், இரும்புச்சத்து உள் ளது. ரத்தத்தில் ஹீமோக் ளோபின் சத்து இல்லாததால் தான் ரத்த சோகை ஏற்படுகிறது. ரத்த சோகை உள்ள வர்கள், வாழைப்பழம் சாப் பிட்டு வந்தால்,
ரத்த சோகை போயே போச்சு.
மூளை சுறுசுறுப்பு
காலை உணவிலேயே ஒரு வாழைப்பழம் சாப்பிடுவது, மூளைக்கு சுறு சுறுப்பை தரும். மதிய உணவு, மாலை வேளை நொறுக்குத் தீனி, இரவு சாப்பாடு ஆகிய வற்றுடன் வாழைப்பழம் சாப்பிட்டால் மூளைக்கு பலம் அதிகரிக்கும்..கனிந்தும் கனியாமல் அரை குறையாக இருக்கும் வாழைப் பழத்தை பாலில் வேக வைத்து கூழ் போல் ஆக்கி, அதனுடன் பாதாம் பருப்பு, பேரீச்சம்பழம் ஆகியவற்றை துண்டுகளாக நறுக்கி போடவும். இவற்றுடன் தேனும் கலந்து வைத்துக் கொள்ளவும். இதை தினமும் காலை, மாலையில் சாப்பிட்டு வந்தால் நரம்புத் தளர்ச்சி, கை, கால் நடுக்கம் ஆகியவை நீங்கும். மூளையின் ஆற்றல் திறன் அதிகரிக்கும்.
வறட்டு இருமல் போக்கும்
உடம்பில் கை, கால் எரிச்சல் அல்லது கண் எரிச்சல் அல் லது உடலில் எரிச்சல் என்று இருந்தால் கவலை வெண்டாம். நன்றாக பழுத்த வாழைப் பழத்தை மோருடன் சேர்த்து, காலையில் சாப்பிடுங்கள். சிறிது நேரத்தில் குணமாகும்.. தீராத வறட்டு இருமல் போன்ற பிரச்சினைகளுக்கு கனிந்த வாழைப் பழத்தை சாப்பிட்டால் குணமாகும்.
உடலில் சிலருக்கு சிலந்தி போன்ற கட்டிகள் ஏற்படும். இந்த கட்டிகள் மீது
வாழைப்பழத்தை நன்றாகக் குழைத்து பூசி வந்தால் கட்டிகள் சீக்கிரமே பழுத்து சீழ் வெளியாகி குணமாகும். கரப்பான் நோய்க்கு வாழைப்பழத் தோலை நெருப்பினில் எரித்து சாம்பலாக்கி, அதை கடுகு எண்ணை கலந்து கரப்பான் மீது பூசினால் குணமாகும்.
வயிற்றுப்புண், மூலம்நோய் கட்டுப்படும்
பல பழங் களில், அமிலச் சத்து இருக்கிறது. அதனால், வயிற்றுப் புண் (அல்சர்)
உள்ளவர்கள் சாப்பிட கூடாது. ஆனால், வாழைப் பழத்தில் அமிலச் சத்து இல்லவே இல்லை. அத னால், தாராளமாக சாப்பிடலாம். வயிற்றில் வாழைப் பழம் போனதும், வயிற் றில் உள்ள அமிலச் சத்தை குறைக் கிறது. அதனால், "அல்சர்' உள்ள வர்களுக்கு கை கொடுக்கிறது வாழைப்பழம்.
மூலம் மற்றும் பவுத்திரம் ஆகிய சிக்கல்களால் சிக்கித் தவிப்போர், நன்றாக
பழுத்த வாழைப் பழத்தை பாலில் போட்டு வேகவைத்து, மசித்து, காலை, மாலை சாப்பிட்டு வந்தால், மேற்கண்ட பிரச்சினைகள் ஓரளவு கட்டுப்படும். திராட்சை சாறு, தேன், வாழைப்பழம் ஆகியவற்றை சேர்த்து சாப்பிட்டு வந்தால் வாத நோய்கள் கட்டுப்படும்.
வாழை பிஞ்சுகளை சின்ன சின்ன துண்டுகளாக நறுக்கி, காலை, மாலை சாப்பிட்டு வந்தால் குடல்புண், இரைப்பை புண் மற்றும் நெஞ்சு எரிச்சல் ஆகிய பிரச்சினைகள் நீங் கும். அதேபோல், வாழைப்பழத்தை தேனில் ஊறவைத்து, அதனுடன் 2 பேரீச்சம் பழத்தை சேர்த்து, பாலுடன் கலந்து சாப்பிட்டால் குடல்புண் ஆறிவிடும்.
எப்பொழுது சாப்பிடலாம் ?
இப்பழத்தை அதிகம் சாப்பிட்டால் வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்படும். மயக்கமும், மூச்சு திணறலும், உண்டாகும். அதனால் உணவு அருந்திய பிறகே அளவாக சாப்பிட வேண்டும். உணவு சாப்பிட பிடிக்காது போய்விடும்.
சிலர் இரவில் படுக்கும் முன்பு பாலும் பழமும் சாப்பிடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். அதில் முதலில் பழத்தையும், பின்பு பாலையும் அருந்து கின்றனர்.அது முறையல்ல. முதலில் பாலையும், பின்பு பழத்தையும் சாப்பிடுவதுதான் சரியானது. உடல் நலத்திற்கு ஏற்றதும் கூட.
100 கிராம் வாழைப்பழத்தில் உள்ள சத்துக்கள்
நீர் 61.4%, மாவுச்சத்து 36.4.%, சுண்ணாம்புச்சத்து 0.01%, மை.கிரிபோபிளேவின்
0.08 மி.கி., வைட்டமின் 'சி' 7 மி.கி., புரோட்டின் 1.3%, கொழுப்பு 0..2%,
Visit- www.mohamedbunder.tk
No comments:
Post a Comment