ஆஸ்திரேலியாவில் முஸ்லிம்கள்- ஓர் பயணக் கட்டுரை!
ஆஸ்திரேலியாவில் முஸ்லிம்கள்- ஓர் பயணக் கட்டுரை!
டாக்டர் ஏ.பீ. முகம்மது அலி, PhD., IPS (R)
ஆஸ்திரேலியா நாட்டில் கிட்டத்தட்ட 70 நாடுகளில் இருந்து வந்த முஸ்லிம்கள் தங்களுடைய நாடுகளின் கலாச்சாரங்களுடன், மொழிகளுடனும் வேறு பட்டு இருந்தாலும் இஸ்லாம் என்ற மார்க்க கயிறால் இணைக்கப் பட்டு ஒரே சமூகமாக உள்ளனர் என்பதினை 2011 வருடம் பிப்ரவரி மாதத்திலிருந்து மே முதல் வாரம் வரை மேற்கொண்ட பயணத்தில் தெரிய வந்தது. அதனை உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என எண்ணுகிறேன.
30 சதவீத முஸ்லிம்கள் ஆஸ்திரேலியாவில் பிறந்தவர்கள். மற்றவர்கள் ஐரோப்பியாவில் இஸ்லாத்தினை தழுவியவர்கள், மத்திய கிழக்கு ஆசிய நாடுகள், ரஷ்யா, இந்தியா, ஆப்பிரிக்கா, சீனா, மற்றும் தென் கிழக்கு ஆசியாவிருந்தும் குடி பெயர்ந்தவர்கள் ஆவர். பெரும்பாலான இஸ்லாமிய மக்கள் ஆங்கில மொழியினையும், மற்றவர் துருக்கி மற்றும் அரேபிய மொழிகளையும் பேசுகின்றனர்.
ஆஸ்திரேலிய மொத்த ஜனத் தொகை 2.2 கோடியில் இஸ்லாமியர் இரண்டு சதவீதத்தில் உள்ளனர். அதாவது கிட்டத் தட்ட 2,50,000 மக்கள் ஆவர். அதில் பெரும்பாலோர் சிட்னியிலுள்ள அபர்ன், கீரீனேக், பேங்க்ஸ்டன், லக்கம்பி, பஞ்சபவள், மெல்போனிலுள்ள மீடோ ஹெட்ஸ், ரிசர்வான், டல்லாஸ், நோபள் பார்க்இகோபர்க், டாஸ்மானியா, அடிலேடு, கியூன்ஸ்லேண்டு ஆகிய பகுதியில் வசிக்கின்றனர்.
பெரும்பாலோனோர்; பல்வேறு வேலைகளில் உள்ளனர். 27 சதவீதம் மேனேஜர்களாகவும், நிர்வாகிகளாகவும், தொழில் நட்ப வல்லுநர்களாகவும் உள்ளனர். அதில் ஆங்கிலம் தெரியாத முஸ்லிம்கள் தான் வேலை வாய்ப்பில்லாமல் உள்ளனர்.
இந்திய நாடு, பாகிஸ்தான், எகிப்து, பங்களாதேஷ் ஆகிய நாடுகளிலிருந்து வந்த முஸ்லிம்கள் தொழிழ் நட்பவாதிகளாக இருப்பதால் மற்ற தேசிய முஸ்லிம்களை விட வேiலை வாய்ப்பில் சிறந்து விளங்குகின்றனர். பெரும்பாலான முஸ்லிம்கள் சுன்னி மதகினைச் சார்ந்தவர்களாகவும் மிக குறைந்த அளவே ஷியா இனத்தவர் உள்ளனர்.
காலூன்றிய வரலாறு:
இந்தோனேசியாவினைச் சார்ந்த மெக்காசான்ஸ் என்ற மீனவர்கள் வட ஆஸ்திரேலியா கடற்பகுதிகளில் கிடைக்கும் டிரப்பாங்க் என்ற வகை மீன்களைப் பிடிக்க 1750 ஆம் வருடங்களில் காலடி வைத்தனர். அவர்கள் கடலோரப் பகுதிகளில் வாழ்ந்த பழங்குடியினருடன் சுகுமமான உறவூ கொண்டனர். ஆனால் மேற்கத்திய நாடுகளின் வருகையால் இந்தோனேஷியா மீனவர்களின் வருகைக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.
ஆப்கானிஸ்தானிய முஸ்லிம்கள் தான் முதன் முதலில் குடி பெயர்ந்து அவர்களைத் தொடர்ந்து லெபனான், துருக்கி, போஸ்னியா, பாகிஸ்தான் மற்றும் இந்தோனேஷியா நாடுகளிலிருந்து இடம் பெயர்ந்தனர். விக்டோரியா மாநிலத்திலுள்ள பாலை வனத்தில் வேகமாக செல்வதிற்காக 1860 ஆம் ஆண்டில் மூன்று பாலை வனக்கப்பல் என அழைக்கப்படும் ஒட்டகங்களை ஆப்கானிஸ்தானின் ஓட்டுனர்களுடன் கொண்டு வரப்பட்டனர்.
அதனைத் தொடர்ந்து 1865 ஆம் ஆண்டு தென் ஆஸ்திரேலியாவினைச் சார்ந்த தாமஸ் எல்டர் என்பவர் 124 ஒட்டகங்களை 31 ஆப்கானிஸ்தான் ஓட்டுனர்களுடன் கொண்டு வந்தார்.1901 வரை ஒட்டக வர்த்தகத்தினை ஆப்கானிஸ்தானியர் கையாண்டு 600 ஒட்டகங்கள் அங்கு இருந்தன. ஆனால் 1920 வருடம் இயந்திரத்தில் ஓடும் வாகனங்களை அங்குள்ள அரசு கையாண்டதால் ஒட்டக வர்த்தகம் தடைப்பட்டது.
அப்படி வந்த ஆப்கானிஸ்தானிய முஸ்லிம்கள் எண்ணிக்கை 13000 த்தை 2008ஆம் ஆண்டு தாண்டியது. அவர்கள் சிட்னி, மெல்போர்ன் போன்ற நகரங்களில் தங்கெளுக்கென்ற சமூக அமைப்பினையூம், தொழுகை இடங்களையூம் அமைத்துக் கொண்டனர். அதே போன்று 20ஆம் நூற்றாண்டில் இடம் பெயர்ந்த லெபனான் நாடடு முஸ்லிம்கள் 21ஆம் நூற்றாண்டில் 40000த் தாண்டினர். அவர்கள் வழிபாட்டுத் தளங்கள் அமைப்புகளில் மற்ற முஸ்லிம்களை புறக்கணித்தனர்.
லெபனான் நாட்டு முஸலிம்கள் தங்களுக்கென்ற ஒரு சமுதாய அமைப்பினை ஏற்படுத்தி லக்கம்பீயில் ஒரு இமாம் அலி பள்ளிவாசலினை 1976ஆம் ஆண்டு ஏற்படுத்தினர். அந்தப் பள்ளியில் 9.3.2011 அன்று ‘ஓப்பன் டே” என்ற நிகழ்ச்சியினைக் காணச் சென்றேன். அங்குள்ள சேக இஸ்லாமியர் அல்லாத ஆஸ்திரேலியர் இஸ்லாத்தினைப் பற்றி எழுப்பப்ட்ட சந்தேகங்களுக்கு பதிலளித்தது மிகவும் விழிப்புணர்த்தினை ஏற்படுத்துவதாக இருந்தது. லெபனான் நாட்டு ஷியா இனத்தவர் தனியாக ஒரு பள்ளியினை அர்னாலிப் என்ற இடத்தில் 1983ல் ஏற்படுத்தினர்.
துருக்கியர் வருகை முதல் உலக யுத்தத்திற்க பின்பு கட்டுப்படுத்தப்பட்டது. ஏனென்றால் ஆஸ்திரேலியாவும், நியூஜிலாந்து துருக்கிக்கு எதிராக போரிட்டது குறிப்பிடத் தக்கது. அதன் பின்பு 1967ஆம் ஆண்டு அந்தக் கட்டுப்பாடு தளர்த்தப் பட்டதால் இன்று அவர்கள் எண்ணிக்கை 30000த் தாண்டும். அவர்களுக்கென்ற ஒரு பிரமாண்டமான பள்ளிவாசலினை அபர்ன் பகுதியில் அமைத்துள்ளனர். அதனை 10.3.2011 அன்று காண வாய்ப்புக் கிடைத்தது.
இரண்டு பெரிய மினாராக்கள், வேலைப்பாடு அமைந்த பளிங்குகளால் மிகவும் நேர்த்தியாக டிசைனில் அந்தப் பள்ளி அமைந்திருந்தது. விக்டோரியா மாநிலம் மெல்போர்னில் விக்டோரிய என்ற இடத்தில் பெரிய பள்ளி வாசலுக்கு 22.4.2011 ஜூம்மா தொழுகைக்குச் சென்றேன். மிகவும் அதிக கூட்டமாக நெரிசலுடன் தொழுதது அல்லாஹ் சுபஹானத்தாலாவிற்கு நன்றி சொல்ல வேண்டும்.
ஓன்று பட்ட யூகோஸ்லேவியாவில் 1990ஆம் ஏற்பட்ட சிவில் யுத்தத்தில் பாதிக்கப்பட்ட போஸ்னிய முஸ்லிம்கள் ஆஸ்திரேலியாவில் குடிபெயர்ந்து இன்று 15000த்தை தாண்டியூளளனர். பெரும்பாலான மக்களுக்கு ஆங்கில மொழி தெரியாததால் தொழிற்காலைகளில் கூலி வேலை செய்கின்றனர்.
1947ஆம் ஆண்டு இந்திய துணைக் கண்டத்திலிருந்து பாகிஸ்தான் பிரிந்த பின்பு படித்த இஸ்லாமிய இளைஞர்கள் ஆஸ்திரேலியாவில் குடியேறி பெரும்பாலான இஸ்லாமிய அமைப்புகளில் ஆதிக்கம் செலுத்துகின்றனர். அவர்களுடைய எண்ணிக்கை 20000த்தை எட்டியுள்ளது. இந்திய முஸ்லிம்கள் எண்ணிக்கை மிகவும் குறைந்தளவே7000த்தினை எட்டியுள்ளது. ஈரானியர் எண்ணிக்கை 10000 பங்களாதேஷ் நாட்டினர் 10000.
சமூக வாழ்க்கை முஸ்லிம்கள் மைனாரிட்டியாக வாழ்வதால் லோக்கல் கவுன்ஸில் கட்டுப்பாடு இருப்பதினால் பள்ளிவாசல்களில் தொழுகைக்கான பாங்குகளை ஒலி பெருக்கி மூலம் தெரிவிப்பதில்லை. வேலை பார்க்கும் இடங்களிலும், பார்க்கில் தனியான இடத்திலும், வாடகைக் கட்டியங்களிலும் ஜூம்மா தொழுகை நடத்தப்படுகிறது.
1980ஆம் ஆண்டுக்குப் பின்னால் ஆஸ்திரேலியர்கள் இஸ்லாத்திற்கு வருவது அதிகரிக்கப்பட்டுள்ளது. அவர்கள் சூபியிஸத்தின் பால் இழுக்கப்பட்பவர்களாக இருக்கிறார்கள். பொதுவாக ஜூம்மா பிரசங்கம் அரேபிய மொழியில் சொல்லப்பட்டு ஆங்கிலம் பயின்றவர்களால் ஆங்கிலத்திலும் சொல்லப்படுகிறது. தொழுகை பள்ளிகளை மூன்று விதமாக பிரிக்கலாம்:
1) தொழுகைப்பள்ளி, மதரஸா மற்றும் லைப்ரரி அடங்கியது.
2) தொழுகைப்பள்ளி தொழுகை நடத்துவதிற்கு மட்டும்
3) கிறித்துவ ஆலயங்களின் மற்றும் லோக்கல் கம்யூனிட்டி செண்டரில் ஒரு பகுதியினை வாடகைக்கு எடுத்து தொழுகை நடத்துவது.
சிட்னி மற்றும் மெல்போர்ன் பகுதிகளில் 100 மேற்கொண்ட பள்ளிகள் உள்ளன.
தமிழ் இஸ்லாமிய அமைப்புகள் சிட்னி, மெல்போர்ன் போன்ற இடங்களில் சிறப்பாக செயல் படுகின்றன.. பெற்றோர்கள் பார்த்து ஒரு தேச முஸ்லிம்களுடன் திருமணம் செய்து கொள்வது மிகவும் குறைவே. குடும்பக் கட்டுப்பாடு செய்து கொள்வதில்லை என்றாலும் பெரும்பாலும் சிறிய குடும்பத்தினையே அங்குள்ள முஸ்லிம்கள் கொண்டுள்ளனர். லெபனான் மற்றும துருக்கி நாட்டு சில முஸ்லிம் இளைஞர்கள் கேம்ப்பீல்டு மற்றும் லக்கம்பீ பகுதியில் குற்றச் செயல்கள் ஈடுபடுவதால் ஆஸ்திரேலியரின் வெறுப்புகளை சந்திக்க நேரிடுகிறது.
வயதானவர்களை பாதுகாக்க விக்டோரியா மாநிலத்தில் லஸ்டர்பீல்டு என்ற இடத்தில் ஒரு காப்பகத்தினை ‘இஸ்லாமிக் சொசைட்டி ஆப் மெல்போர்ன் ஈஸ்ட்டர்ன ரீஜன்’ என்ற அமைப்பு நடத்துகிறது. அது போன்று ஒரு காப்பகத்தினை துருக்கியர் பிராடுமீடோஸ் என்ற இடத்திலும், கியூன்லோண்டில் ‘இஸ்லாமிக் பெண்கள் அசோஸியேஸன் ஒரு காப்பகத்தினையும் நடத்துகின்றனர்.
சில முஸ்லிம் தொழிளார்கள் வட்டி வாங்குவதினை விரும்பாததால் வங்கிக்கு தங்கள் சேமிப்பிற்கு வட்டி வேண்டாம் என சொல்லி விடுகின்றனர். லக்கம்வி பெரிய பள்ளியின் அருகில் உள்ள கட்டிடத்தில் ‘கவூஸ் ஆப் ஜக்காத்’ என்ற பலகையினை கண்டேன். ஜக்காத் கொடுப்பவர்கள் அந்த அலுவலகத்திற்கச் சென்று டாலரைக் கொடுத்து விடுகின்றனர். அதனை பயனுள்ள ஏழைகளுக்கு வழங்கப் படுகிறது.
வட்டியினை எதிர்க்கும் இளைஞர்கள் ‘தி முஸ்லிம் கம்யூனிட்டி கார்ப்பரேசன் ஆப் ஆஸ்திரேலியா’ என்று ஆரம்பித்து யாருக்கும் நஷ்டம் யாருக்கும் லாபமில்லாத பைனான்ஷியல் முறை தொடங்கப்பட்டுள்ளது. சமீபத்தில் ஐ.டிபி என்ற வட்டியில்லா வங்கியும் இயங்கி வருகிறது.
கல்வி நிலையங்கள்: 1957ஆம் ஆண்டில் தனது 23 ஆவது வயதில் 1957ஆம் ஆண்டு லெபனானைச் சார்ந்த சேக் பகீம் என்ற இளைஞர் ‘இஸ்லாமிக் சொசைட்டி ஆப் விக்டோரியா’ என்ற அமைப்பினை ஏற்படுத்தி வார விடுமுறை நாட்களில் 15 மாணவர்கள் பயிலும் பள்ளியினை ஆரம்பித்தார் அவர் பிற்காலத்தில் வளர்ந்து ஆஸ்திரேலியாவில் உலக மத அமைதி மாநாட்டினை நடத்தும் ஒரு இயக்கினராக சிறப்பாக செயல் பட்டதால் அவருக்கு, ‘ஆஸ்திரேலியாவின் உயர்ந்த விருது’ பாரத் ரத்னா போன்ற விருது வழங்கப்பட்டது
அதன் பின்பு இஸ்லாமிய அமைப்புகளை ஒரே குடையில் கொண்டு வரும் விதத்தில் ‘ஆஸ்திரேலியன் பெடரேசன் ஆப் இஸ்லாமிக் சொரைட்டி” என்ற அமைப்பு 1964 ஆம் ஆண்டு உருவானது. அரேபிய நாட்டு பண உதவியுடன் 198ஆம் ஆண்டு, ‘கிங்க் காலித் இஸ்லாமிக் ஸ்கூல்’ மெல்போர்னில் ஆரம்பிக்ப்பட்டது. அதன் பின்பு ஒவ்வொரு இடத்திலும் கல்வி நிலையங்கள் ஆரம்பிக்கப்பட்டன.
சிட்னியில் உள்ள, ‘மலக் பகாத் இஸ்லாமிக் பள்ளி” ஆயிரம் மாணவர்களைக் கொண்டது. ‘கிங் காலித் கல்லுரி” ஆண்களும் பெண்களும் பயிலும் கல்லுhரியாக இருக்கிறது. ‘இஸ்லாமிக் காலேஜ்” மெல்போர்னிலும் பிரிஸ்பேனிலும், அடிலேடிலும், கேன்பராவிலும், மற்றும் லாங்க்போர்டு இஸ்லாமிக் ஸ்கூல் பெர்த்திலும் செயல்பட்டு மார்க்க மற்றும் பொது கல்வியினை முஸ்லிம் மாணவர்களுக்குத் தருகின்றனர்.
ஆஸ்திரேலிய முஸ்லிம் பெண்களுக்கு வாஃபா தாபா என்ற பெண்மணி முன்னோடியாக உள்ளார். அவர் கப்பற் படையில் ‘லெப்டிணன்ட் கமாண்டராக’ உள்ளார். அவர் ஐந்து வேலை தொழுகையினைக் கடைப்பிடித்தும், தன் தலையில் நேவல் தொப்பிக்குக் கீழெ ஹிஜாப் அணிந்துள்ளார். சி7 மற்றும் 9எம்.எம். என்ற தானியங்கி துப்பாக்கி சுடுவதில் வல்லவர். அவர் எகிப்தில் பிறந்த பாலஸ்தீன பெண்மணி ஆவார்.
அவர் ஒரு கேள்விக்கு பதில் சொல்லும் போது தான் கப்பல் படையில் பணியாற்றுவதாலும், படித்திருப்பதாலும் பலர் நினைப்பார்கள் குடிப்பழக்கம், மற்றும் பன்றி உணவு சாப்பிடுவேனென்று. ஆனால் நான் அந்தப் பக்கமே தலையெடுத்து பார்த்ததில்லை எனக் கூறுவது பெருமையாக இருக்கிறது. நமது ஊரில் படித்த பெண்கள் வெளிநாடுகளுக்குச் செல்லும் போது தலையில் முக்காடு போடாமல் ஜீன்ஸ் மற்றும் டி சர்ட் போட்டுக் கொண்டு ஆண்களைப் போல அலையும் காலத்தில் எம்.பி.ஏ படித்து ஆஸ்திரேலியாவின் ராணுவத்தில் உயர்ந்த பதவியினை வகிக்கும் வஃபா தாபா ஒரு இஸ்லாத்தின் நம்பிக்கை நச்சத்திரப் பெண்ணென்றால் மிகையாகாது. அவருடைய படத்தினை முஸ்லிம் அமைப்பகள் வெளியிடுவது தவறில்லை என எண்ணி இத்துடன் இணைத்திருக்கின்றேன.
நியூசவூத் வேல்ஸ் மாநிலத்தில் உள்ள ஹான்ஸ்பீ என்ற இடத்திலுள்ள ‘வெஸ்ட்
No comments:
Post a Comment