Monday, October 15, 2012

மகாராஷ்ட்ரா மாநிலத்தில் உள்ள சிறைச்சாலைகளில் உள்ள முஸ்லிம் கைதிகள்
குறித்து ஆய்வு

This is what happens to Muslims in India

மகாராஷ்ட்ரா மாநிலத்தில் உள்ள சிறைச்சாலைகளில் உள்ள முஸ்லிம் கைதிகள்
குறித்து ஆய்வு மேற்கொண்ட போது, காவல்துறையினர் மத்தியில் முஸ்லிம்
எதிர்ப்பு மேலோங்கியுள்ள கடும் அதிர்ச்சிகரமான உண்மை வெளிவந்துள்ளது.

Tata Institute Of Social Science (TISS) எனப்படும் உயர் கல்வி

நிறுவனத்தின் பேராசிரியர்கள் விஜய் ராகவன் மற்றும் டாக்டர் ரோஷினி நாயர்
ஆகியோர் மேற்கொண்ட ஆய்வின் முடிவில் சுமார் 141 பக்கங்களை கொண்ட
ஆய்வறிக்கை இதன் பல்வேறு பரிமாணங்களை ஆய்ந்துள்ளது (இந்த ஆக்கத்தின்
முடிவில் முழுமையான வடிவத்தில் அந்த ஆய்வரிக்கை வழங்கப்பட்டுள்ளது ).

மகாராஷ்டிரா முழுவதிலும் உள்ள 15 சிறைச்சாலைகளில் உள்ள 339 முஸ்லிம்
சிறைக்கைதிகளை, பெண்கள் உள்ளிட்டு, பேட்டி எடுத்து ஆய்வு செய்ததில் பல
நடுங்க வைக்கும் அநீதிகளை அவர்கள் எதிர்கொள்வது தெரியவந்துள்ளது.

குஜராத் மற்றும் கேரளா ஆகிய இரு மாநிலங்களுக்கு அடுத்ததாக, மாநிலத்தில்
உள்ள முஸ்லீம் சனத்தொகைக்கு எதிராக முஸ்லீம் ஜெயில் கைதிகளின் எண்ணிக்கை
விகிதாச்சாரத்தில் மிகவும் அதிகமாக உள்ளதும் இந்த ஆய்வறிக்கை மூலம்
தெரியவந்துள்ளது.
மகாராஷ்டிரா முழுவதிலும் உள்ள 15 சிறைச்சாலைகளில் உள்ள 339 முஸ்லிம்
சிறைக்கைதிகளை, பெண்கள் உள்ளிட்டு, பேட்டி எடுத்து ஆய்வு செய்ததில் பல
நடுங்க வைக்கும் அநீதிகளை அவர்கள் எதிர்கொள்வது தெரியவந்துள்ளது.

மாநிலத்தில் உள்ள முஸ்லீம் சனத்தொகைக்கு எதிராக முஸ்லீம் ஜெயில்
கைதிகளின் எண்ணிக்கை விகிதாச்சாரத்தில் குஜராத் மற்றும் கேரளா ஆகிய இரு
மாநிலங்களில் உள்ளது போன்ற மிக அதிகமாக உள்ள மற்றுமொரு மாநிலமாக
மகாராஷ்டிரா திகழ்வது தெரியவந்துள்ளது.

கைதாகும் அப்பாவி, ஏழை, படிப்பறிவில்லா முஸ்லீம்களின் அவல நிலை:

குறிப்பாக முஸ்லீம் கைதிகளில் பெரும்பாலோர், எந்தவித குற்ற பின்னணியோ
அல்லது சமூக விரோத இயக்க தொடர்புகளோ இல்லாதவர்கள் என்பதும் இவர்களில்
கால்வாசி பேர் தங்களுக்காக வாதாட ஒரு வக்கீலை கூட அமர்த்த வசதியில்லாத
ஏழைகள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மகாராஷ்டிரா அரசின் புள்ளிவிவரப்படி மொத்த ஜனத்தொகையில் முஸ்லிம்களின்
பங்கு 10.5% ஆகும். ஆனால் மகாராஷ்டிராவில் உள்ள ஜெயில்களில் உள்ள
முஸ்லிம்களின் விகிதச்சாரமோ மொத்த கைதிகளில் 32.3% ஆகும். அதாவது,
முஸ்லீம் ஜெயில் கைதிகளின் சதவீதம், மாநிலத்தின் முஸ்லிம்களின் சதவீதத்தை
விட மூன்று மடங்கு அதிகமாகும். இதில் 5.2% முஸ்லிம் பெண் கைதிகளும்
அடக்கம்.

பெண் கைதிகளை பற்றி குறிப்பிடும் இந்த ஆய்வறிக்கை, முஸ்லீம் ஆண் கைதிகளை
காட்டிலும் அதிகமாக அவர்கள் சிறைச்சாலைகளில் துன்புறுத்தப்படுவதையும்
சுட்டி கட்டியுள்ளது.
குறிப்பாக மகாராஷ்டிராவின் தலைநகர் மும்பையில் மட்டும் முஸ்லிம்
கைதிகளின் சதவிதம் 55.1% ஆகும். இது மகாராஷ்டிரா முஸ்லீம்களின்
ஜனத்தொகையை விட 5 மடங்கு அதிகம்.

முஸ்லிம் கைதிகளில் 96% பேர் குற்றமற்ற அப்பாவிகள். அதிலும் சுமார் 65.5%
முஸ்லீம் கைதிகள் 18 முதல் 30 வயதுடயவர்களே சுமார்.

இவர்களில் 58.2% கைதிகள் மட்டுமே அடிப்படை கல்வியை முடித்தவர்கள். சுமார்
31.4% சதவீதம் முஸ்லீம் கைதிகள் படிபறிவில்லாதவர்கள் எனவும் தெரிய
வந்துள்ளது.
இந்த அப்பாவி முஸ்லிம் கைதிகளில் 25% கைதிகள், தங்களுக்கான வக்கீல்கள்
கூட வைத்துக்கொள்ள முடியாத சூழலில் உள்ளனர்.

கொடுமையிலும் கொடுமையாக முஸ்லிம் கைதிகளில் 44% கைதிகளுக்கு தமது
குடும்பத்தினரை உடனடியாக சந்திக்க அனுமதி மறுக்கபடுகிறது. மேலும் ஒரு 38%
கைதிகளுக்கு உறவினர்களை சந்திக்கவும் அனுமதி தரப்படுவதேயில்லை.

முஸ்லிம் கைதிகளில் 23% கைதிகளுக்கு, தாங்கள் எந்த சிறையில்
அடைக்கப்பட்டுள்ளோம், என்பது கூட தெரியவில்லை.

வேடிக்கை என்ன வென்றால், 50% கைதிகள் வரும் 2013ம் ஆண்டில் விடுதலயாகவுள்ளனர்.

மாநிலத்தில் உள்ள மொத்த முஸ்லிம் கைதிகளில் 47% பேர் மீது மட்டும் தான்
குற்றப்பத்திரிக்கை தாக்கல் ஆகியுள்ளது.

இவர்கள் யாரும் பெரும் குற்றமிழைத்தவர்கள் அல்ல என்றும், தேடுதல் வேட்டை
என்ற பெயரிலும் விசாரணைகள் என்ற பெயரிலும் பொய்யான குற்றச்சாட்டுக்களில்
ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் அறிக்கை கொடுத்துள்ளனர்.

நீதி விசரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ள 47.4% கைதிகள் மீது மட்டுமே
குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இவற்றில் வெறும் 3.8%
கைதிகளின் விசாரணை மட்டுமே தீர்ப்பு வழங்கும் நிலையில் உள்ளது.

முஸ்லீம் கைதிகள் இழைக்கும் குற்றங்களும் காவல்துரையினரின் பாரபட்சமும்:

முஸ்லீம்களின் குற்ற செயல்கள் பற்றி கூறுகையில், “முஸ்லீம் கைதிகள்
ஈடுபடும் பெரும்பாலான குற்றங்களில் குடும்ப சண்டைகள், பணம் மற்றும்
சொத்து விவகாரங்கள், காதல் பிரச்சனைகள், நண்பர்களுடனான மோதல்கள் மற்றும்
பழிக்கும் பழி ஆகியவைகளாகவே உள்ளது குறிப்பிடத்தக்கது.

எனினும் இந்த கைதிகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்ட
15 விவகாரங்களிலும் காவல்துறை அத்துமீறலும், கொடுமையும் தெளிவாக
தெரிகிறது”, என இந்த ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

வேறு வார்த்தைகளில் கூறுவதானால், முஸ்லீம் கைதிகள் தெரிந்தும்,
தெரியாமலும், பழிவாங்கும் நோக்கிலும் இழைக்கும் பல குடும்ப மற்றும் சமூக
குற்றங்களே அவர்களை சிறைச்சாலைகளின் இந்த கொடும நிலைகளுக்கு ஆளாகி
விடுகிறது.

எளிதாக சமரசமாக சென்று விடக்கூடிய பல குற்றங்களில் முஸ்லீம் கைதிகள்
காவல்துறையின் பாரபட்ச போக்கினால் நீண்ட கால சிறை தண்டனைகளில் சிக்க
வைக்க படுகின்றனர்.

முஸ்லீம்கள் செய்ய வேண்டியது என்ன?

முஸ்லீம்கள் இவ்வாறு சிறை சென்று கொடுமை அனுபவிக்க காவல்துரையினரின்
பாரபட்சம் முதல் காரணியாக இருந்தாலும், முஸ்லீம்களின் படிப்பறிவின்மை,
ஏழ்மை, நீதி இல்லாத நடத்தை, மன்னிக்க விரும்பாத பழி வாங்கும் போக்கு
யாவையும் இந்த அவல நிலைக்கு காரணிகள் என்பதையும் மறுக்க இயலாது.

இதற்கு முதலாவதாக செய்ய வேண்டியது, ஒவ்வொரு பள்ளிவாசல் ஜமாத்திலும் உள்ள
இளைஞர்கள் குறித்த தகவல்களான, கல்வி, பொருளாதார, வேலைவாய்ப்பு
குடும்பசூழல் குறித்த தரவுகளையும் சேகரித்தல் வேண்டும்.

அடுத்ததாக சமூக சேவை எண்ணம் கொண்ட ஒரு குழுவினர் இந்த இளைங்கர்களுக்கு
எழும் அனைத்து பிரச்சனைகளுக்கும் தகுந்த ஆலோசனை மற்றும் வழிகாட்டலை வழங்க
துவங்க வேண்டும்.

இதற்கு அடுத்த படியாக, கல்வி, வேலைவாய்ப்பு, திருமணம், குடும்ப வாழக்கை
ஆகிவற்றில் உதவியும் செய்ய ஆவன செய்தல் வேண்டும்.

குறிப்பாக குடும்பங்களில் எழும் தீவிரமான பிரச்சனைகளை இந்த ‘சமூக
சேவகர்களிடம்’ பகிர்ந்து கொள்ள யாவரையும் ஊக்கப்படுத்த வேண்டும்.

அடுத்ததாக காவல்துறை மற்றும் அரசுத்துறைகளுடன் நல்ல தொடர்பும் அனுபவமும்
பெற்றவர்களை வைத்தும் குறிப்பாக டாக்டர்கள், வக்கீல்கள் மற்றும் அரசு
ஊழியர்களை கொண்ட ஒரு சமூக சேவை குழுவை அமைத்து, பிரச்சனைகள் எழும் பொது
தீர்வு கிடைக்க முயற்சி செய்ய வேண்டும்.

அரசுத்தரப்பில் முஸ்லீம்களுக்கு செய்ய வேண்டியது என்ன?

அரசுத்தரப்பில் முஸ்லீம்களுக்கு செய்ய வேண்டிய முதலுதவி அவர்களுக்கு
கல்விக்கான வாய்ப்பை உறுதி செய்ய வேண்டியதுதான். ஏனெனில், இது ஒன்றே
முஸ்லீம்களின் பிரச்சனைகளுக்கு நீண்ட கால தீர்வாக அமைய முடியும்.

இதற்காக அரசு உட்கட்டமைப்பு வசதிகளுக்கு கூட பெரிய அளவில் செலவு செய்ய
வேண்டாம். காரணம் இப்போதுள்ள முஸ்லீம் மதரசாக்களில் இலவசமாக வழங்கப்படும்
இஸ்லாமிய பாட திட்டத்தோடு இணைந்த பொதுக்கல்வியை வழங்க அரசு உதவினாலே இது
பெரிய அளவில் வெற்றி பெரும்.

அடுத்ததாக, முஸ்லீம் இளைஞர்களின் வேலைவாய்ப்பு, தொழில் முனைவு
ஆகிவற்றிக்கு அரசு சிறு அளவிலாவது உதவிகளை செய்ய துவங்க வேண்டும்.

முஸ்லீம் இளைஞர்கள் அதிக அளவில் பிந்தங்குவது உயர் கல்வியிலும், தொழில்
கல்விலும் தான். எனவே அவர்களை உயர் கல்வி மற்றும் தொழில் கல்வி
நிலையங்களில் பயிற்சி பெற வசதியான முறையில் முஸ்லீம்கள் அதிகம் வாழும்
பகுதிகளில் இத்தகு கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களை அமைத்தல் வேண்டும்.

குறிப்பாக, காவல்துறை மற்றும் நீதித்துறை மற்றும் இன்ன பிற
அரசுத்துறைகளில் முஸ்லீம்களை அதிக அளவில் நேரடியாக தேர்ந்தெடுக்க ஆவன
செய்யவேண்டும். இதற்கான முதல் படியாக அரசுப்பணி தேர்வாணையங்களில்
முஸ்லீம் அதிகாரிகளை கண்டிப்பான முறையில் பணியிலமர்த்த ஏற்பாடுகள்
செய்தல் வேண்டும்.

முக்கியமாக, முஸ்லீம்களை கொள்கை வகுப்பாலர்களாக அரசின் பல்வேறு
மட்டங்களில் பணியிலமர்த்த அரசு ஆவண செய்தல் வேண்டும். குறைந்த பட்சம்
முஸ்லீம்கள் அதிகம் வாழும் பகுதிகள் குறித்த திட்டங்களை நிறைவேற்றும்
துறைகளைலாவது முஸ்லீம் பிரதிநிதித்துவம் உறுதி செய்யப்படல் வேண்டும்.

முஸ்லீம்கள் பிரச்சனையின் அங்கமல்ல, தீர்வின் அங்கம்!!!

அரசின் மனப்போக்கில் ஏற்பட வேண்டிய மாற்றங்களில் முக்கியமானது
என்னவென்றால், “முஸ்லீம்கள் பிரச்சனையின் அங்கமல்ல, தீர்வின் அங்கம்”,
என்பதை உணரத்தலைப்படுவது தான்.

குறிப்பாக இந்தியா தற்போது இருக்கும் சூழலில் அரசியல் ரீதியாகவும்,
போருளாதார ரீதியாகவும், சமூக ரீதியாகவும் பல்வேறு சவால்களை தேசம்
எதிர்கொண்டுள்ளது யாவரும் அறிந்ததே.

அமேரிக்கா போன்ற வல்லரசுகளின் சர்வதேச அரசியல் நிர்பந்தம், சீனா,
பாகிஸ்தான் போன்ற அண்டை நாடுகளின் சூழ்ச்சி, உள்நாட்டில் மாவோயிஸ்ட்களின்
கிளர்ச்சி, ஜனநாயக அமைப்பில் ஊழல், நிர்வாகத்துறை, நீதித்துறை மற்றும்
அரசுத்துறைகளில் உள்ள அலட்சியம் மற்றும் அசமந்தம், நூறு கோடி மக்களின்
நலனை உறுதி செய்ய வேண்டிய அவசியம் ஆகிவற்றோடு மல்லுக்கட்டும் இந்த
நேரத்தில் இந்தியாவின் மிகபெரிய சிறுபான்மையினரான முஸ்லீம் சமுகத்தை
அலட்சிபடுத்துவதால், பெருந்தீமை தான் விளையும் என்பதில் சந்தேகமில்லை.

குறிப்பாக நீதிபதி ராஜேந்திர சச்சார் அவர்கள் சமர்பித்த சச்சார்
அறிக்கையின் அடிப்படையில் உடனடியாக நடவடிக்கைகளை எடுத்து முஸ்லீம்களின்
கல்வி மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்கான வழிவகைகளை ஆராய்ந்து அரசுகள்
செயல்படுத்த வேண்டும்.

முஸ்லீம்களின் கல்வி, பொருளாதார மற்றும் வேலைவாய்ப்பு ஆகிவற்றில் அரசுகள்
உரிய கவனம் செலுத்தினால், சுதந்திர இந்தியாவில் மிகவும் பிற்பட்ட
நிலைக்கு ஆளாகி, சிறைப்பறவைகளாக மாறும் அவல நிலையில் துன்புறும் ஒரு
பெரும் சமுதாயத்தை இந்தியாவின் முன்னேற்றத்திற்கு உறுதுணையான ஒரு
சமுதாயமாக மாற்ற இயலும்.

S.AYUB ALI

அநீதிக்கு எதிராக நியாயத்தின் குரலாக உங்கள் அனைவரையும் அன்போடு அழைக்கிறோம்.
=================================================================================

Source: TISS Report: Prisons Muslims Study Maharashtra

அதிரை தமீம் அன்சாரி கைது – முழுக்க முழுக்க முஸ்லிம்களுக்கு எதிரானது?!
கடந்த 17.09.2012 அன்று கியூபிரான்ச் போலிஸாரால் பாக்கிஸ்தான் உளவாளி
என்று அதிராம் பட்டிணத்தை சேர்ந்த தமீன் அன்சாரி என்பவர் கைது
செய்யப்பட்டார்?
எங்கே கைது செய்தார்கள் என்பதையே போலிஸார் குழப்புகிறார்கள். 1.TVS Toll
Gateல் கைது. 2. திருச்சி ஏர்போட்டில் கைது 3 – திருச்சி பேருந்து
நிலையத்தில் கைது.
இப்படி ஆரம்பமே குழப்பத்தில் உள்ளது.
இந்தியா டுடே(oct3-2012 உளவு உண்மையா? கதையா?),
ஜூனியர் விகடன்(30.09.12 – அன்சாரி அப்பாவியா?),
குமுதம் ரிப்போர்ட்டர்(30.09.12 – தமிழகம் முழுக்க உளவாளிகள்)
மேற்கண்ட இதழ்களில் இருந்து அன்சாரி குறித்த தகவல்களின் அடிப்படையில்
இக்கட்டுரை எழுதப்பட்டுள்ளது.
அன்சாரி யார்? ஒரு சமூக ஆர்வலர், முஸ்லிம் அடையாளங்களை துறந்தவர்,
உருளைகிழங்கு, வெங்காய வியாபாரி, இல�

No comments: