Thursday, October 4, 2012

மன்மோகன் சிங்கின் கொலைவெறித் திட்டம்!
ஆனந்த விகடன், 03 அக்டோபர் 2012
சமஸ்
ஓவியம் : ஹாசிப் கான், படம் : பாலாஜி மஹேஷ்வர்
செலவுகளைக் குறைக்க ஓர் அதிரடி வழியாக, மரணத்தை யோசியுங்கள். - அமெரிக்கத் திரைப்பட இயக்குநர் உடி ஆலன் கிண்டலாகச் சொன்னது இது. இந்திய அரசோ அதை மறைமுகமாகச் சொல்கிறது.

பிரதமர் மன்மோகன் சிங், டீசல் விலையை உயர்த்தி, மானிய விலை கேஸ் சிலிண்டர்களின் எண்ணிக்கையை ஆறாகக் குறைத்து, இரண்டாம் பொருளாதாரச் சீர்திருத்த அறிவிப்பை வெளியிட்ட முதல் 24 மணி நேரத்துக்குள் அந்த முதல் தற்கொலை பதிவானது. காசியாபாத்தைச் சேர்ந்த தொழிலாளி டோமர். சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டை அனுமதிக்கும் அறிவிப்பை மறுநாள் அரசு வெளியிட்ட அடுத்த 24 மணி நேரத்துக்குள் இரண்டாவது தற்கொலை பதிவானது. மொரதாபாத்தைச் சேர்ந்த ரேஷ§ ஷர்மா. ஒரு மணி நேரத்துக்கு 15 தற்கொலைகள் பதிவாகும் ஒரு நாட்டில், இந்த மரணங்கள் அரசுக்கு ஒரு பொருட்டாக இல்லாமல் இருக்கலாம். ஆனால், சுதந்திர இந்தியாவில், 'விலைவாசி உயர்வைச் சமாளிக்க எனக்கு வேறு வழி தெரியவில்லை’ என்ற எழுத்துபூர்வமான பதிவுகளோடு நடந்த தற்கொலைகள் இவை. கொலைக்குற்றவாளியாகத்தான் நிற்கிறது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு. ஆனால், துளியும் குற்ற உணர்வு இல்லை; மேலும் பலரைக் கொல்லும் திட்டத்தோடும் வெறியோடும் நிற்கிறது.

பொருளாதாரச் சீர்திருத்த அறிக்கையை வெளியிடும்போது, ''கச்சா எண்ணெயின் தேவை அதிகரிக்கும் சூழலில், சர்வதேச அளவில் எண்ணெயின் விலை அதிகரிக்கும் சூழலில், இந்தியாவில் தேவை பெருகுகிறது. இறக்குமதி விலை அளவுக்கு பெட்ரோலியப் பொருட்களின் விற்பனை விலையை உயர்த்தாததால், எண்ணெய் நிறுவனங்கள் இழப்பைச் சந்திக்கின்றன. அதைச் சரிக்கட்ட அரசு அளிக்கும் எண்ணெய் மானியம் ஆண்டுதோறும் அதிகரிக்கிறது. கடந்த ஆண்டு 1.40 லட்சம் கோடியை எண்ணெய் மானியத்துக் காக ஒதுக்கினோம். இந்த ஆண்டு 1.60 லட்சம் கோடியாக அது அதிகரிக்கும். இப்போதும் டீசல் விலையை உயர்த்தாவிடில், அது இரண்டு லட்சம் கோடி ரூபாயாக உயரும். டீசல் விற்பனையால் ஏற்படும் இழப்பைத் தவிர்க்க, லிட்டருக்கு 17 ரூபாய் விலை ஏற்றி இருக்க வேண்டும்; 5 ரூபாய்தான் ஏற்றி இருக்கிறோம். இறக்குமதி விலையைவிட ஒரு லிட்டர் மண்ணெண்ணெயை 13.86 குறைவாகக் கொடுக்கிறோம். சமையல் எரிவாயு சிலிண்டரை 347 குறைவாகக் கொடுக்கிறோம். இதற்கு மேல் என்ன செய்ய முடியும்? பணம் மரத்திலா காய்க்கிறது?'' என்று கேட்டார் மன்மோகன் சிங்.

உண்மைதான்... பணம் மரத்தில் காய்க்கவில்லை. அதுவும், சரிபாதி மக்கள்தொகை பஞ்சத்தில் அடிபட்ட ஒரு நாட்டில் கல்வி, சுகாதாரத் துறைகளுக்கு ஒதுக்கீடு செய்யும் தொகையைவிடப் பெரும் தொகையை எண்ணெய் மானியத்துக்காக ஓர் அரசு செலவிடுவது பெரிய குற்றம். ஆனால், பெருநிறுவனங்களுக்கு ஆண்டுக்கு 4.87 லட்சம் கோடியை இதே அரசாங்கம்தான் மானியமாகப் படி அளக்கிறது. எண்ணெய் மானியத்தைப் போல் கிட்டத்தட்ட மூன்று மடங்கு.



கச்சா எண்ணெய் அரசு நிர்வாகத்துக்குப் பெரிய சவால் என்று அரசு சொல்கிறது. உண்மைதான். ஆனால், தன்னுடைய கச்சா எண்ணெய்த் தேவையில் 80 சதவிகிதத்தை இறக்குமதி செய்யும் நிலையில் இந்தியா இருக்கும் சூழலில், எண்ணெய்த் தேவையைக் கட்டுப்படுத்த கடந்த எட்டு ஆண்டுகளில் இந்த அரசு என்ன முயற்சி எடுத்தது? டீசல் தேவையை அதிகரிப்பதைப் பெரும் சவால் என்று சொல்லும் இதே அரசு, உயர்ந்துகொண்டே போகும் கார் விற்பனையைக் கட்டுப்படுத்த எடுத்த நடவடிக்கை என்ன? ஏழைகள் பயன்படுத்தும் மண்ணெண்ணெய்க்கு ரேஷன் முறை இருக்கும் நாட்டில், கார்களை ஓட்டும் கனவான்கள் பயன்படுத்தும் டீசலுக்கு ரேஷன் முறை ஏன் இருக்கக் கூடாது? டீசல் தேவையை அதிகரிக்கும் புதிய காரணிகளில் ஒன்றான செல்போன்கோபுரங் கள் இயக்கத்துக்கான டீசலையும் ஏன் மானிய விலையில் தர வேண்டும்? உள்நாட்டில் உற்பத்திஆகும் கச்சா எண்ணெயை - வரிகள் இல்லாமல் மலிவு விலையில் - ரயில்கள், லாரிகள், பேருந்துகள் போன்ற பொதுப் போக்குவரத்து வாகனங்களுக்குக் கொடுக்கலாமே... என்ன தயக்கம்?

உலகிலேயே எவர் வேண்டுமானாலும் விலைவாசியைத் தீர்மானிக்கலாம் என்ற சூழல் இந்தியாவில்தான் நிலவுகிறது. ஒன்றரை கிலோ நெல்லை அரைத்தால், ஒரு கிலோ அரிசி. ஒரு கிலோ சன்ன ரக நெல் அதிகபட்சம் 12-க்குக் கொள் முதல் ஆகிறது. அரவை, போக்குவரத்து,வியாபாரி கள் லாபம்... எல்லாவற்றுக்கும் ஏழு ரூபாய் சேர்த்தாலும் 25-க்குச் சன்ன ரக அரிசி கிடைக்க வேண்டும். அரிசிக் கடையிலோ 45-க்குச் சன்ன ரக அரிசி விற்கிறது. பொள்ளாச்சியில், விவசாயிகளிடம் 4 ரூபாய்க்குக் கொள்முதலாகும் ஒரு கிலோ தக்காளி... சென்னை, கோயம்பேடு சந்தையில் 10-க்கும், தி.நகர் 'சரவணா செல்வரத்தினம்’ அங்காடியில் 11.50-க்கும், சைதாப்பேட்டை 'காரணீஸ்வரர்’ அங்காடியில் 16-க்கும், தி.நகர் 'கோவை பழமுதிர் நிலைய’த்தில் 20-க்கும் விற்கிறது. கந்தசாமி மளிகைக் கடையில் 120-க்கு விற்கும் புளி, 'நீல்கிரீஸ்’ அங்காடியில் 160-க்கும் 'ரிலையன்ஸ் ஃப்ரெஷ்’ அங்காடியில் 164-க்கும் விற்கப்படுகிறது. திருச்சி, உறையூர் பழ வண்டிக்காரரிடம் 100-க்குக் கிடைக்கும் அதே ஆப்பிளை, 150-க்கு விற்கிறார் கிராப்பட்டி சாலையோரக் கடைக்காரர். மதுரையில் - ஒரே மாதிரியான கட்டமைப்பைக்கொண்ட உணவகங்கள் 'பெல்’, 'மீனாட்சி பவன்’, 'ஏ டு பி’. ஆனால், ஒரே சுவையுள்ள காபியின் விலை முறையே 12, 15, 20. ஒரு எலுமிச்சம் பழம் மூன்று ரூபாய். சென்னை 'சரவணபவன்’ உணவகத்தில் ஒரு எலுமிச்சை ஜூஸ் 30. குறைந்தபட்ச ஆட்டோ கட்டணம் டெல்லியில் 19; மும்பையில் 12; பெங்களூரில் 20; சென்னையில் 30. இந்தியாவில் பெட்ரோல் ஆட்டோக்களும் உண்டு; டீசல் ஆட்டோக்களும் உண்டு. ஆனால், பெட்ரோல் விலை ஏறும்போதும் சரி, டீசல் விலை ஏறும்போதும் சரி... இரண்டு வகை ஆட்டோக்காரர்களுமே கட்டணத்தை உயர்த்திக்கொள்கிறார்கள். வீட்டு வாடகையைப் பொறுத்த அளவில் உரிமையாளர்கள் வைத்ததே சட்டம். அரசாங்கம் என்று ஒன்று இருக்கிறதா இங்கே?



சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டை அனுமதிப் பதன் மூலம், இந்திய விவசாயிகளுக்கு விளைபொருட் களின் விலைக்கு நல்ல நிலை கிடைக்கும் என்று மீண்டும் மீண்டும் சொல்கிறார்கள் மத்திய அமைச்சர்கள். சுதந்திரம் அடைந்து 65 ஆண்டு காலம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கங் கள் உருவாக்கித் தர முடியாத நியாயமான விலை நிர்ணயச் சூழலை, கேவலம் லாப வெறிகொண்ட அந்நிய நாட்டுப் பெருநிறுவனங்களா உருவாக்கிவிடும்?

இந்த நாட்டின் உயிர்நாடியான விவசாயிகள் பல ஆண்டுகளாகவே விளைபொருட்களுக்கு உற்பத்திச் செலவைவிட 50 சதவிகிதம் கூடுதலாக நிர்ணயிக்கும் உரிமையைக் கேட்டுக் காத்துக்கிடக்கிறார்கள். நெசவாளிகள் குடும்பத்தோடு உழைத்தாலும் மாதம் 5,000 சம்பாதிக்க முடியவில்லை என்கிறார்கள். அவர்களுக்கு உதவும் 'சிகிடா’க்களோ மாதம் 2,000 சம்பா திக்கவே ஒரு நாளைக்கு 10 மணி நேரம் உழைக்க வேண்டி இருக்கிறது. உண்மை யில் உயிர் வாழ்வதற்காக இந்த நாட்டு மக்கள் ஒவ்வொரு நாளும் சாகிறார்கள். ஆனால், இத்தனை காலமாக தெரியாத ஒரு பேருண்மையை இப்போதுதான் மன்மோகன் சிங் மூலம் அவர்கள் தெரிந்து கொள்கிறார்கள். ஆமாம்... பணம் மரத்தில் காய்க்கவில்லை!

எஸ்.செல்வி7 Hours ago
விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை நேரடியாக நுகர்வோருக்கு விற்பனை செய்யும் வகையில் அங்காடிகளை அமைத்துத் தருவதன் மூலம் இரு தரப்பாருக்கும் கட்டுபடியாகக் கூடிய விலையில் நுகர் பொருட்கள் கிடைக்க அரசு வாய்ப்பினை ஏற்படுத்தித் தரலாம்.
30 சதவிகித வருமான வரி செலுத்தும் பிரிவில் உள்ளவர்களுக்கு அனைத்து வகையான மானியத்தையும் இரத்து செய்ய வேண்டும்.
+Reply ( 1 ) Like 7 | Report Abuse
karthikeyan3 Hours ago
What Ms. selvi is saying is 100% correct. the only way farmers get benifit is to contact customers directly in the nearby cities. this concept has been performing well in USA where these wallmarts are working.farmer and the customer has to be in good dealing. farmer instead of concentrating one crop, can cultivate many crops in small area and he can supply to the consumer at his doorstep for nominal rate still profitable to farmer. such kind of unity and knowledge will not come to these farmers as well as the customers. till then all such price hike will be a common phenomena.
Like 2 | Report Abuse
VEERAVALLI4 Hours ago
The Govt. is giving a new definition for REFORMS" ie rise in prices, cut subsidies and rationing of items like LPG etc.
Govt should go either in full swing as govt control or thro market economy.
Reply Like | Report Abuse
Venky9 Hours ago
ஆக்கபூர்வமாக விவாதித்து இருக்கலாம். ஒரு தேர்ந்த அரசியல் பத்திரிக்கை போல தலைப்பிலிருந்து வெறும் சென்சேஷனலாக எழுத வேண்டும் என்று எழுதிய தரமற்ற கட்டுரை. இந்த கட்டுரையை விவாதித்தால் அதுவே இதனி மதித்ததாக ஆகிவிடும். நடு நிலை பத்திரிக்கை என்றால் இதனை பதிக்கவும். வெறும் ஒரு உதாரணம் தருகிறேன். 2004 - அரசு ஊழியரின் சம்பளம் என்ன, 2012 - சம்பளம் என்ன? அன்று 10000 வாங்கியவர்கள் இன்று 40, 50 ஆயிரம் வாங்குகிறார்கள். ஆக பண வீக்கம் என்பதை அறியாது எழுதப்பட்ட ஒரு சாதாரண மனிதனின் கட்டுரையே அன்றி ஒரு தரமுள்ள சஞ்சிகையின் பொருளாதாரம் அறிந்த ஒருவர் எழுதியத விளக்க கட்டுரை அல்ல. வன்முறையை தூண்டிய வீடியோவிற்கும் இதற்கும் துளியும் வித்தியாசமில்லை.
+Reply ( 4 ) Like 199 | Report Abuse
Pirate5 Hours ago
Important point to note here is, the black money in swiss bank can help us to reduce these prices. Put a rule that in this country no body should hold more than 10 Crore worth of money or property. Then everyone in this country should be able to live happily forever.
Reply Like 3 | Report Abuse
N.Iyappan5 Hours ago
Very well written! Hats off!!
Reply Like | Report Abuse
Jeyaganesh Rajamanickam7 Hours ago
சவுக்கடி!
Reply Like 11 | Report Abuse
Raju5 Hours ago
வெளி நாட்டு நிறுவனங்கள் கொடுத்த அல்லது கொடுக்கப்போகும் லஞ்சப்பணமே காங்கிரசிற்கு முக்கியம், மக்களைப்பற்றி காங்கிரஸ் ஒருபோதும் சிந்தித்ததில்லை.
Reply Like 3 | Report Abuse
suhail5 Hours ago
Right but do you know the labours plight and how much overloaded these labourers in saravana stores,even annachi shops only exploits its labours

Also the same kandaswamy store owners earn more than a ordinary salaried middle class like me and yet does not pay any tax

Reply Like 2 | Report Abuse
sundar5 Hours ago
@ வெங்கி. பெரும்பாலும் நம் இருவரின் அபிப்ராயங்களும் ஒன்றாக இருந்திருக்கின்றன. இந்த ஒரு முறை மட்டும் மாறுபடுகிறோம். அரசாங்க ஊழியரின் வருமானத்தை கொண்டு பெரும்பாலாரின் வாழ்க்கை தரத்தை நிர்ணயிக்க முடியாது. அரசு 99% தன் ஊழியர்களை சந்தோஷமாக வைத்து கொள்கிறது. வருடம் இரண்டு பஞ்சப்படி உயர்வு, வருடாந்திர சம்பள உயர்வு ஆகியவை பொதுப்படையோருக்கு இல்லை.
Reply Like 5 | Report Abuse
M.R. MURTHI6 Hours ago
பணம் மரத்தில் காய்ப்பதில்லை என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது... மரம் தான் நிலக்கரியாகிறதுங்கோ.....
Reply Like 6 | Report Abuse
VRS6 Hours ago
புட் சட்னி... ஐ பே மனி... ஐ கம்ப்லைன் வார்டன்... நோ க்ரை, நோ க்ரை, மை பிரதர் மார்க் அன்ட்டனி ட சொல்லிருக்கேன்... அவன் வந்து நம்மலஎல்லம் காப்பாதுவான்... இன்டியா கிரேட்மா...
Reply Like 7 | Report Abuse
Padmapriya6 Hours ago
These people want FII to come just bocoz these politicians want to bring their black money in the name of FII,please think ,how many of us know what is the incometax paid by these dirty politicians...or even Ambani bros..but salaried class people take home only after tax is deducted...
Why people coming under 30% slab be rejected with facilities...just becoz for the sin of paying 30% tax from our hard earned money...
Think b4 you talk....
In India Govt depends on direct taxes...but salaried class people like us pay the tax...and suffer becoz of cost hike...
People like us are ready to write in book but not ready to come in roads to fight and get our rights...
When govt is not ready to give facilities for citizens what right they have to impose direct and indirect taxes from them..??
When we are fools these politicians will make us even more fools..
Reply Like 4 | Report Abuse
சந்திரா6 Hours ago
சிமென்ட் 2001 ஜூன் - சென்னை விலை ரூ 145
சிமென்ட் 2001 டிசம்பர் - சென்னை விலை ரூ 190

அன்று பிஜேபி சிமென்ட் ஆலை அதிபர்களுடன் கூட்டுக்களவாணி வேலை செய்து ஏற்றி ஒரு ஃபிராடை ஆரம்பித்து வைத்தார்கள்.
அவர்கள் வழியிலேயே இந்த காங்கிரஸும் ரூ 350க்கு இன்று விலையை ஏற்றி விட்டார்கள்.
Reply Like 81 | Report Abuse
சத்யமேவ ஜெயதே7 Hours ago
சுதந்திரம் அடைந்து 65 ஆண்டு காலம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கங் கள் உருவாக்கித் தர முடியாத நியாயமான விலை நிர்ணயச் சூழலை, கேவலம் லாப வெறிகொண்ட அந்நிய நாட்டுப் பெருநிறுவனங்களா உருவாக்கிவிடும்? = சரியான கேள்வி.
Reply Like 33 | Report Abuse
BALA.R7 Hours ago
என்னிடம் வாங்கும் ஒரு தேங்காயின் விலை 5 ருபாய். தன்னை மரத்தை வைத்து 6 முதல் 7 வருடங்கள் பராமரித்து அதற்கான இடுபொருள் செலவு , தண்ணீர் பராமரிப்புச் செலவு எல்லாம் செய்தால் எனக்கு 5 ரூபாய் கிடைக்கிறது. ஆனால் எதுவும் செய்யாமல் என்னிடமிருந்து வாங்கி அடுத்தவருக்கு விற்கும் ஒருவர் 10 முதல் 12 ரூபாய்க்கு ஒரு நாளில் வியாபாரத்தை முடித்து விடுகிறார். நானே எல்லா தேங்காயையும் விற்பது கஷ்டம். ஆனால் உற்பத்திச் செலவுக்கும் விற்பனை விலைக்கும் உள்ள வித்தியாசம் மிக அதிகம். இடைத்தரகர்களைக் கட்டுப்படுத்தினாலே போதும். ஆனால் ஊழல் இந்தியாவில் இது ஒருபோதும் நடக்கப்போவதில்லை.
Reply Like 53 | Report Abuse
stanislas7 Hours ago
செலவுகளைக் குறைக்க மரணத்தைப் பரிந்துரைக்கும் கையாலாகா பிரதமரின் வண்டவாளம் தண்டவாளத்தில்!என்ன செய்ய முடியும்?
Reply Like 13 | Report Abuse
Kulasekaran K7 Hours ago
Well said.
Reply Like 7 | Report Abuse
Sujatha7 Hours ago
கிராமத்திற்கும், கோயம்பேட்டிற்கும் உங்கள் வீட்டிற்கு அருகேயும் உள்ள விலை மாறுதல்கள் தூரம�

No comments: