இன்னும் கெடுவோம் என்ன பந்தயம்?
Source : http://ping.fm/GKdKY
30 செப்டம்பர் 2012 மாலை 09:51
இன்று 30-09-2012 ஞாயிற்றுக்கிழமை, சுட்டெரிக்கும் 12.00 மணி நன்பகல் வேளையில் நமதூர் பஜார் வீதியில் கூட்டத்தோடு கூடிய ஒரே பரபரப்பு. இந்த ஊரு பையனால் அவன்....நமதூரின் இந்த தெருவிலிருக்கும் 17 வயசு புள்ளயை லவ் பண்ணினானாம்...என்ற அசரீரி....
என்ன ஆச்சு? என்ன சம்பவம்? யார் அந்த பெண்பிள்ளை...அவளை தன் மாய வலையில் வீழ்த்திய கயவன் யார்? என்று நீங்கள் கேட்பது எங்களுக்கு புரியத்தான் செய்கிறது ஆக்கத்தை இறுதிவரை படியுங்கள்.
காயல்பட்டினம் சிறுமக்கம்!! என்ற பெருமைமிக்க சொற்றொடர் பழைய கதையாகி மலையேறி வெகுகாலமாகி விட்டது. இன்றோ டிவி, சினிமாக்கள், சின்னத்திரை, இணையம் என்று சீரழிந்து கொண்டிருக்கிறது நம் சமுதாயம். நீங்கள் இஸ்லாமிய அடிப்படையில் வாழ்கிறீர்களா இல்லையா என்பதை உங்கள் வீட்டின் குழந்தைகளின் நடத்தைகளை வைத்தே தெளிவாக அறிந்திட இயலும். நமது குழந்தைகளில் பெரும்பாலோர் கார்ட்டூன் படங்களில் வரும் கதாபாத்திரங்களாக மெல்லமெல்ல மாறிக்கொண்டிருக்கின்றனர் என்பதே உண்மை.
இது ஒரு புறமிருக்க இன்டர்நெட் என்னும் இணையத்தில் அறிவைத் தேடிக்கொள்வதற்கு பதிலாக அசிங்கங்களை தேடுகிறது இளைஞர் கூட்டம். மேலும் திருமணத்திற்குப் பின்னர் தன் மனைவியைக் காதலிப்பதை விட்டுவிட்டு காதல் – காதலர் தினம் என்று சிற்றின்பத்தில் வீழ்ந்து சீரழிகிறது நம் இளைய சமுதாயம். ஆர்குட், பேஸ்புக் என்ற இணைய கேளிக்கைகள்தாம் நமதூர் இளைஞர்களின் இதயத் துடிப்பாகிவிட்டது. வீட்டிலுள்ள முதியவர்களுக்கோ இவைகளைத் தட்டிக்கேட்க முடியாத துர்பாக்கிய நிலை.
இன்டெர்நெட் என்னும் மாயவலையை பாதுகாப்பாக பயன்படுத்துவது எப்படி? வீடுகளில் தம் பிள்ளைகளுக்கு இணையதள வசதியை ஏற்பாடு செய்துள்ள பெற்றோர்கள் கடைபிடிக்கவேண்டிய ஒழுங்கமுறைகள் என்னென்ன? இன்டெர்நெட்டில் உள்ள சாதக பாதகங்கள் என அனைத்தையும் கட்டுரைகளின் வாயிலாகவும், உபதேசங்களாகவும் சொல்லி சொல்லி அழுத்துப் போய்விட்டது. இருப்பினும் என்ன பயனை இந்த சமுதாயம் அடைந்துள்ளது?
பள்ளி கல்லூரி மாணவ மாணவியர்கள் கையில் தவழும் செல் போன்களால் ஏற்படும் விபரீதங்கள்? பள்ளிப்பருவ பாலகன்களுக்கு செல்போன்கள் தேவையா? என்றெல்லாம் அடுக்கடுக்கான பல கேள்விகள் கேட்கப்பட்டும் என்ன பிரயோஜனம்? 21ம் நூற்றாண்டின் ஈடு இணையற்ற கண்டுபிடிப்புகளான செல்போன் மற்றும் இன்டெர்நெட்டை எங்கள் வீட்டு பிள்ளைகள் பயன்படுத்தக்கூடாது என்று நீங்கள் சொல்கிறீர்களா என்ற எதிர்வாதங்களுக்கு மட்டும் குறைவில்லை.
நமதூரில் பல அம்பானிகளும், டாட்டா பிர்லாக்கலும் உருவாகிவிட்டார்கள் என்பதை பறைசாற்றும் விதமாக, சுமார் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் கையில்கூட பல்லாயிரம் பொருமதியுள்ள கணிணி வசதிகொண்ட உயர்தர அன்ட்ராயிடு, மற்றும் ஐஃபோன்கள்? நமதூர் தெரு வீதிகளில் மஃரிபு வேளைக்குபின்னர் சற்று வலம் வந்தால் இக்கண்கொள்ளா காட்சியைக் காணலாம். அந்த மொபைல் போன்களில் அவர்கள் கண்சிமிட்டாது பார்ப்பதென்ன? அவைகள் என்ன காட்சிகள் யாருக்கும் தெரியாது.
இன்னும் கல்லூரி வாழ்க்கை கேளிக்கை வாழ்கையல்ல. சுற்றுலா, பிக்னிக், ஜாலி பார்ட்டி என்று வயதுக்கு வந்த பெண்கள் மகரமில்லாமல், பொறுப்பில்லாமல், வெட்கமில்லாமல் சுற்றித் திரிவதும் வாடிக்கையாகிவிட்டது. அதை பெற்றோர்களே அனுமதிப்பது பற்றியும், அதனால் ஏற்படும் விபரீதங்கள் பற்றியும் நாமும் பலமுறை எழுதியாகிவிட்டது, ஏன் ஜூம்ஆ பயான்களிலிலும் இதன் விபரீதங்கள் பற்றி எச்சரிக்கப்பட்டு விட்டது. மார்க்க நெறிகளை பிண்ணுக்குத்தள்ளி, இஸ்லாமிய கோட்பாடுகளை காலில் போட்டு மிதித்து கேளிக்கையின் மோகத்தில் சிக்கித்தவிக்கும் எந்த இளைஞன் நம் உபதேசத்தில் அக்கரை கொண்டான்? எந்த யுவதி அதிலிருந்து திருந்தி விடுபட்டாள்? சற்று எண்ணிப்பாருங்கள்.
இஸ்லாத்தின் எதிரிகள் முஸ்லிம் இளம் பெண்கள் மீது திட்டமிட்டு மிக நேர்த்தியான முறையில் நடத்திக் கொண்டிருக்கும் லவ்-காதல் யுத்தங்கள் பற்றி எத்தனை கட்டுரைகளை எழுதாகிவிட்டது? விழிப்புணர்வு பிரசுரங்கள் பற்பல வெளியிட்டும் என்ன பயன்? படிதாண்டும் மங்கையர்களை நிறுத்த முடிகிறதா? நாம் உபதேசிக்க உபதேசிக்க இன்னும் கெடுவோம் என்ன பந்தயம் என்ற ரீதியில்தானே நம் இளைஞர்கள் யுவதிகள் இருக்கின்றனர். இதை யாரும் மறுக்க இயலுமா?
அந்நியனின் காதல் வலையில் வீழ்ந்து, பிறந்து வளர்ந்த தன் வீட்டை விட்டு வெளியேறி, கற்பிழந்து இறுதியில் ஈமானையே இழக்கிறார்கள் என்று நாம் எச்சரிக்கும் வேளையிலயே நமதூரில் இத்தனை ஓட்டங்கள்? இதை யார் தடுப்பது? யார் கவலை கொள்வது?
நமதூர் யுவதிகளுக்கு என்னதான் ஆயிற்று என்று பிற ஊர் நண்பர்கள் நம் மானத்தை வாங்கும் அளவிற்கு சிறுமக்கத்தின் புகழ் இவ்விஷயத்தில் கொடிகட்டிப் பறக்கிறது. அதெல்லாம் வெளியூறிலிருந்து குடியமர்ந்தவர்களின் பிள்ளைகளாக இருக்கும் என்ற அர்தமற்ற சால்ஜாப்புகள் நம்மிடம் ரெடிமேடாக இருக்கையில் நமக்கென்ன கவலை என்று இன்னும் அலட்சியமா?
பேஸ்புக், டிவிட்டர் என்று நமதூர் பெண்கள் குறிவைத்து காதலிக்கப்பட்டு பின்னர் மதம் மாற்றும் படலத்தையும் சிறப்பாக நடத்திய பின்னர் வேற்று மதத்தின் பெண்ணாக மாற்றி நமதூர் தெருவீதிகளிலே அவளின் கைகளை கோர்த்துக் கொண்டு வலம் வரச்செய்யும் துணிச்சல் அந்நிய மதத்தவனுக்கு வந்துள்ளது என்றால் இனியும் நாம் காயல்பட்டினம் என்று பெருமை பேசித்திரிவதில் பயன் ஏதும் உண்டோ?
கையும் களவுமாக பிடிபட்ட தம் மகள் சிலமணிநேர உபதேசத்திற்கப் பின்னர், தான் சூழ்ச்சியிலிருந்து மீட்கப்பட்டு விட்டதை உணர்ந்து இனி நான் மார்க்கக்கல்வி பயில்வதிலே கவனம் செலுத்தப் போகிறேன் என்று சொல்லும் வேளையில் நீ என்னுடன் வீட்டுக்கு வராவிட்டால் நான் தற்கொலை பண்ணிவிடுவேன் என்று மிரட்டும் தாய் எந்த கலாச்சாரத்திற்கு சொந்தமானவள்?
மேலும் உங்கள் மகள் இவ்வாறு அந்நிய மதத்தவனோடு மதம் மாறி ஓடிப்போய்விட்டாலே என்று நாம் கவலையோடு மகளை பறிகொடுத்த தந்தையிடம் வினவினால், நீங்கள் மட்டும் தஃவா செய்து அந்நிய பெண்களை முஸ்லிமாக மாற்றவில்லையா என்று கேள்விகேட்கும் கேடுகெட்ட சிந்தனை ஏற்படக்காரணம்தான் என்ன?
வளைகுடா வாழ்க்கையில் கொத்தடிமைகளாக ஊர் வராமல் பல வருடங்கள் அங்கே கிடப்பதால் ஏற்படும் அவலத்தை சுட்டிக்காட்டினால் அனைத்து வீடுகளுமா அப்படி இருக்கிறது என்று வாதம் மட்டும் புரிவோம். ஏசி அறையில் அமர்ந்து கொண்டு இணைய செய்தி மட்டும் கட்டுரைகளுக்கு வீரியமாக கமெண்ட்டுகள் இடுவோம். இவைகலெல்லாம் எதுவரை ? அல்லாஹ் பாதுகாக்கவேண்டும்.
எம் அருமையான மக்களே! உங்கள் வீட்டின் குழந்தைகள் ஒரு முன்மாதிரி இஸ்லாமியக் குழந்தைகளாகத் திகழவேண்டும். பசுமரத்தாணிபோல என்ற உவமைக்கு ஒப்ப இஸ்லாமியக் கோட்பாடுகளை உங்கள் வீட்டிலுள்ள குழந்தைகளுக்கு அவர்களின் குழந்தைப் பருவத்திலேயே தெளிவாக பயிற்றுவிக்க வேண்டும். ஏனெனில் இஸ்லாமிய எழுச்சி ஒரளவு துடிப்போடு இருக்கும் நமது காலகட்டத்திலேயே இத்தனை சவால்களை நாம் எதிர்கொள்கிறோம் என்றால் நாளைய இளைய சமுதாயமாக மாறவிருக்கும் நம் குழந்தைகள் எத்தகைய சூழ்ச்சிகளை எதிர்கொள்ள வேண்டிவரும்? என்பதை கனத்த மனதுடன் நினைத்துப் பார்க்கிறோம்.
அத்தகைய இடர்கள் அனைத்தையும் எதிர்கொண்டு வெற்றிபெறும் அளவிற்கு அவர்களின் ஈமானிய பலத்தை குழந்தைப் பருவத்திலேயே அளிக்கவேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். அத்தகைய பயிற்சியையும் இஸ்லாமியச் சூழலையும் நம்மில் எத்தனை பேர் நம் குடும்பத்தில் உருவாக்கியிருக்றோம் என்பதை சற்று சிந்தித்துப் பாருங்கள்.
நடந்த சம்மபவம் இதுதான்....
.நகர்வலத்திற்கு ஒரு அதிர்ச்சி செய்தி கிடைக்கவே வட்டமிட்டது சம்பவ இடத்தை. அப்படி என்ன சம்பவம்.??
ஒரு பருவமடையா சிறுவன் அலெக்ஸ் என்ற ஃபேஸ் புக் அக்கௌன்டிற்கு உரியவன். இவனின் சொந்த ஊர், நகரின் அருகாமையில் இருக்கும் ஒரு கிராமத்து பையன். அவன் ஒரு ஐ.டி.ஐ தொழில்நுட்ப கல்வி இரண்டாம் ஆண்டு படித்து வருகிறான். வெகு நாட்களாக நமதூர் யுவதி ஒருவரிடம் தொடர்புக்கொண்டு காதலை வளர்த்து, யுவதியிடம் அலைப்பேசி உட்பட அனைத்து முகவரிகளையும் பெற்றுக்கொண்டு பஸ் ஏறி யுவதியின் வீட்டிற்கு முன் வந்து நிண்டது நம்மை பெரும் அதிர்சிக்குள்ளாக்கியது.
இதனை கண்ட நகர சீர்திருத்த அமைப்பினர்கள் உட்பட நம் நகர்வலமும் கடும் விசாரணையை மேற்கொண்டு பின்னர் அவனை எச்சரித்தது மட்டுமல்லாது சமந்தப்பட்ட யுவதியின் வீட்டில் அவனின் அலைப்பேசியில் வைத்திருந்த அசிங்கமான குறுஞ்செய்திகளை யுவதியின் பெற்றோர்களுக்கு படித்துக்காட்டி யுவதிக்கும் அறிவுரைகளை வழங்குமாறு எச்சரித்தனர்.
அத்தோடு அந்த சிறுவனின் தாய் தந்தையரை தொடர்புக்கொண்டு அவனின் ஒழுக்கங்கெட்ட நிலைகளையும் தெரிவித்தனர்.
எம் அருமையான மக்களே! இக்கட்டுரை நமதூரின் நிதர்சன நிகழ்வுகளை மிகுந்த கவலையோடு தெரிவிப்பதற்காகவே வெளியிடப்பட்டுள்ளது. நமது காயல்கண்மணிகள் கலாச்சார சீரழிவுகளிலிருந்து முழுமையாக விடுபட்டு விழிப்படைய வேண்டும் என்ற நன்நோக்கில் தொடர்ந்து பாடுபடும் எமது காயல் நியூஸ் இணையதளத்திற்கு, எவரையும் புண்படுத்தும் நோக்கமோ, பிறரை இழிவுபடுத்தும் எண்ணமோ கிடையாது என்பதை திட்டவட்டமாக தெளிவாக பதியவைக்கிறோம். வல்ல அல்லாஹ் நம் யாவரையும் இத்தகைய அவலங்களிலிருந்தும் பாதுகாத்திடுவானாக.
எங்கள் கடமை இறைவனின் தூதுச் செய்தியை விளக்கமாக எடுத்துச் சொல்வதைத் தவிர வேறில்லை (36:17)
எந்த ஒரு சமுதாயத்தவரும் தம் நிலையயைத் தாமே மாற்றிக் கொள்ளாத வரையில் அல்லாஹ் அவர்களை நிச்சயமாக மாற்றுவதில்லை இன்னும் அல்லாஹ் ஒரு சமுதாயத்தாருக்குத் தீவினையை நாடினால் அதைத்தடுப்பவர் எவருமில்லை - அவர்களுக்கு அவனைத்தவிர துணை செய்வோர் எவரும் இல்லை. (13:11)
ஆக்கம் : நகர்வல நிருபர்கள் குழு
Help you one another in Virtue, Righteousness and Piety. But do not help one another in Sin and Transgression. (Glorious Qur'an 5:2)
No comments:
Post a Comment