ஏக இறைவனின் திருப்பெயரால்...
>
> அரஃபா நாள் நோன்பு
>
>
> துல்ஹஜ் மாதம் பிறை ஒன்பது அன்று ஹாஜிகள் அரஃபா பெருவெளியில் தங்குவார்கள்.
> அதனால் அந்த நாளுக்கு அரஃபா நாள் என்று குறிப்பிடுவர்.
>
>
>
> அரஃபா நாளில் ஹாஜிகள் நோன்பு நோற்கத் தடை உள்ளது. ஆனால் ஹாஜிகள் அல்லாதவர்கள்
> அரஃபா நாளில் நோன்பு நோற்க நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆர்வமூட்டியுள்ளார்கள்.
>
>
>
> அரஃபா நாளில் நோன்பு நோற்பது அதற்கு முந்திய வருடம் மற்றும் அடுத்த
> வருடத்திற்கான பரிகாரமாகும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.
> அறிவிப்பவர்: அபூகதாதா (ரலி) நூல்: முஸ்லிம் 1977.
>
>
>
> அரஃபா பெருவெளியில் தங்கியிருப்போர் அரஃபா நாளில் நோன்பு நோற்பதை நபிகள்
> நாயகம்(
> ஸல்) அவர்கள் தடை செய்தார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்:
> இப்னுமாஜா172
>
>
>
> அரஃபா நாள் என்று கூறிய நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எவ்வாறு அதை நடைமுறைப்
> படுத்தினார்களோ அவ்வாறு தான் நாமும் நடைமுறைப்படுத்த வேண்டும்.
>
>
>
> அரஃபா நாளில் நோன்பு நோற்கச் சொன்ன நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்காவுக்கு
> ஆளனுப்பி எந்த நாளில் ஹாஜிகள் அரஃபாவில் கூடுகிறார்கள் என்பதை விசாரிக்க எந்த
> ஏற்பாடும் செய்யவில்லை.
>
>
>
> அவர்கள் எப்போது தங்குகிறார்கள் என்பதை அறியாமலேயே மதீனாவில் காணப்பட்ட
> பிறையின்படி ஒன்பதாம் நாள் நோன்பு நோற்றார்கள். மக்காவில் பிறை காணப்பட்டவுடன்
> அந்தத் தகவலை ஓரிரு நாட்களில் அறிந்து கொள்ள வசதிகள் இருந்தும் நபிகள் நாயகம் (
> ஸல்) அவர்கள் அந்த வசதியைப் பயன்படுத்தவில்லை.
>
> எனவே சவூதி அரேபியாவில் அரஃபாவில் தங்கும் நாள், நாம் பிறை பார்த்த கணக்குப்
> படி எட்டாம் நாளாகவும் இருக்கலாம். அதைப் பின்பற்றத் தேவையில்லை. அதற்கு
> நபிவழியில் எந்த ஆதாரமும் இல்லை. நாம் பிறை பார்த்த கணக்குப் படி ஒன்பதாம்
> நாளில் நோன்பு நோற்க வேண்டும்.
>
>
>
>
>
>
>
>
>
> அதனடிப்படையில் தாயகத்தில் வியாழன் இரவு ஸகர் செய்து வெள்ளி அன்று நோன்பு நோற்க
> வேண்டும் நீங்களும் நோன்பு நோற்று, உங்கள் குடும்பத்தினரையும் நண்பர்களையும்
> நோன்பு நோற்க ஆர்வமூட்டுங்கள் அல்லாஹ் அருள்புரிவான்.
>
No comments:
Post a Comment