Wednesday, October 17, 2012

கரண்ட் "கட்'டைப் பற்றிக் கவலையில்லை!

http://ping.fm/JOqQH



விவசாயம் செய்ய முடியாமல், அதை விட்டுவிட்டு வேறு தொழிலுக்குப் போகிற விவசாயிகள் இந்தக் காலத்தில் அதிகம்.

ஆனால் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்த ஒருவர், விவசாயத்தில் உள்ள ஆர்வம் காரணமாக, தனது வேலையை விட்டுவிட்டு விவசாயத்தில் இறங்கிவிட்டார் என்றால் ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. அதுவும் தனது தோட்டத்துக்குத் தேவையான மின்சாரத்தை சூரிய ஒளியின் மூலம் தயாரித்துக் கொள்கிறார் என்றால் வியப்பு இன்னும் அதிகமாகிறது.

கோவை கே.ஜி.சாவடி அருகே உள்ள முருகன்பதி என்ற கிராமத்தில் தனது தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த விவசாயி ஆர். விஜயகுமாரிடம் பேசினோம்.

""நான் பிறந்து வளர்ந்தது எல்லாம் கலங்கல் கிராமம். புகழ்மிக்க விஞ்ஞானி ஜி.டி.நாயுடு எங்கள் ஊர்க்காரர்தான். எங்கள் குடும்பம் பழமையான விவசாயக் குடும்பம். எனவே விவசாயத்தில் இயல்பாகவே எனக்கு ஆர்வம் இருந்தது. ஆனால் என் அப்பாவுக்கு நான் இன்ஜினியராக வேண்டும் என்று ஆசை.

நான் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் முடித்துவிட்டு ராமகிருஷ்ணா ஸ்டீல் இன்டஸ்ட்ரி என்ற நிறுவனத்திலும் லக்ஷ்மி மிஷின் வொர்க்ஸ் நிறுவனத்திலும் வேலை செய்தேன். என்றாலும் எனது மனம் என்னவோ விவசாயத்திலேயே இருந்தது.

எனது சொந்த ஊரான கலங்கலில் உள்ள நிலத்தில் விவசாயம் செய்யலாம் என்று நினைத்தேன். ஆனால் அங்கே தண்ணீர் தட்டுப்பாடு இருந்தது. எனவே கலங்கலில் இருந்த நிலங்களை விற்றுவிட்டு, கே.ஜி.சாவடிக்கு அருகே உள்ள முருகன்பதி என்ற ஊரில் 15 ஏக்கர் தோட்டத்தை வாங்கினேன். என்னுடைய வேலையை ராஜினாமா செய்துவிட்டு முழு நேர விவசாயியாக மாறினேன்.

600 தென்னை மரங்களையும், 300 எலுமிச்சை மரங்களையும் எனது தோட்டத்தில் வளர்க்கிறேன். மாட்டுத் தீவனமான புல்லையும் பயிர் செய்கிறேன். இந்தப் பகுதியில் தண்ணீருக்குக் குறைவில்லை. ஆனால், ஒருநாளைக்கு ஒன்றரை மணி நேரம்தான் மின்சாரம் கிடைக்கிறது. இந்த மின்சாரத்தை வைத்து எப்படி இவ்வளவு மரங்களையும் காப்பாற்றுவது? நினைக்கவே பயமாக இருந்தது.
ஜெனரேட்டர் ஒன்று வாங்கலாம் என்று நினைத்தேன். ஆனால் ஜெனரேட்டர் மூலமாக 1 யூனிட் மின்சாரத்துக்கு ரூ.22 வரை செலவாகிறது என்பதைத் தெரிந்து கொண்டேன். அவ்வளவு செலவு செய்து தோட்டத்துக்குத் தண்ணீர் பாய்ச்சி விவசாயம் செய்தால் இழப்புதான் ஏற்படும். அதைவிட சும்மா இருக்கலாம்.

அப்போதுதான் சூரிய ஒளி சக்தியின் மூலமாக, மின்சாரத்தைத் தயாரித்துப் பயன்படுத்தினால் என்ன? என்று தோன்றியது. யூபிவி சோலார் கம்பெனி என்ற நிறுவனத்தில் 5040 வாட்ஸ் சோலார் பேனலை வாங்கினேன். இதற்கு 5.5 லட்சம் செலவானது. ஆனால் இந்த சோலார் பேனல், 25 வருடங்களுக்கும் மேல் உழைக்கும் என்பதால் இந்தச் செலவைப் பற்றி நான் கவலைப்படவில்லை. இதிலிருந்து 870 வோல்ட் டிசி மின்சாரம் அல்லது 415 வோல்ட் ஏசி மின்சாரம் கிடைக்கும். 3 பேஸிலும் கரண்ட் வரும். மின்னழுத்தம் சீராக இருக்கும். இதனால் மோட்டார் எரிந்து போய்விடும் என்று பயப்படத் தேவையில்லை.

இப்போது காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை எங்கள் தோட்டத்தில் நீர் இறைக்கும் மோட்டார் வேலை செய்கிறது. உச்சி வெயிலில் அதிகமாகத் தண்ணீர் வரும். நான் சொட்டு நீர்ப் பாசன முறையில் மரங்களுக்குத் தண்ணீர் பாய்ச்சுகிறேன். இப்போது கரண்ட் பில் கட்டத் தேவையில்லை. கரண்ட் கட் ஆகிவிடும் என்ற பயமுமில்லை; கவலையுமில்லை.

சோலார் பேனல் வாங்கினால் மத்திய அரசு 30 சதவிகிதம் மானியம் தருகிறது என்று கேள்விப்பட்டு "மினிஸ்ட்ரி ஆஃப் நியூ அன்ட் ரினிவபிள் எனர்ஜி' துறையை அணுகினேன். அவர்கள் "தமிழ்நாடு எனர்ஜி டெவலப்மென்ட் அசோசியேஷன்' மூலமாகப் பெற்றுக் கொள்ளச் சொன்னார்கள். அவர்களிடம் கேட்டால், அவர்கள் குறிப்பிடும் சோலார் பேனல்களை வாங்கினால் மட்டும்தான் மானியம் என்றார்கள். நான் தொடர்ந்து முயற்சிக்கவில்லை.

மின்சாரப் பற்றாக்குறை அதிகமாக உள்ள இந்நாளில், சூரிய ஒளி மூலம் மின்சாரத்தைத் தயாரிப்பது மிகவும் நல்லது. சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு இல்லாதது. ஆனால் சோலார் பேனல்களின் விலை அதிகமாக இருப்பதால் எல்லா விவசாயிகளும் வாங்கத் தயங்குவார்கள். விவசாயிகள் சூரிய ஒளி மின்சாரத்துக்கு மாற அரசு உதவி செய்ய வேண்டும்'' என்கிறார் ஆர்.விஜயகுமார்.

கருத்துகள்(24)

வியகுமார் உங்களைப் போன்றவர்தான் இனி இந்த நாட்டின் அவசியத் தேவை . நீங்கள் ஒரு முன் மாதிரி. வாழ்த்துக்கள் . வணக்கம். நன்றி.
பதிவுசெய்தவர் கவிஞர் தணிகை 10/07/2012 15:43 இதற்கான பதில் முறையற்ற கருத்து
அன்பர் விஜயகுமாரின் சாதனை மிகவும் போற்றத்தக்கது. இவர்களின் முயற்சிக்கும சாதனைக்கும் தமிழக அரசு மானியம் வழங்க ஆவன செய்யாமல் அவர்கள் குறிப்பிட்ட சோலார் பேனலைத்தான் வாங்கவேண்டும்; மற்றதை வாங்கியதால் மானியம் தரமுடியாது என்று சொல்வது எந்த விதத்தில் நியாயம்? ஒருவேளை அவர்கள் சொல்கிற கம்பெனிக்கும் தா. நா அரசுக்கும் கமிஷன் அடிப்படையில் ஒப்பந்தம் போட்டிருக்கிறார்களோ என்னவோ?
பதிவுசெய்தவர் சா விஸ்வநாதன், புனே 10/07/2012 23:06 இதற்கான பதில் முறையற்ற கருத்து
இப்படிப்பட்டவர்களை முதல் அமைச்சர் அழைத்து வாழ்த்தி பரிசுகள் வழங்க வேண்டும்.அவர்களுக்கு உற்சாகம் கொடுக்கவேண்டும். நாங்கள் சொல்கிற கம்பெனியில் தான் சோலார் வாங்க வேண்டும் இல்லாவிட்டால் உதவி தொகை தரமாட்டோம் என்பதெல்லாம் வீண் ஜம்பம். ஊழலுக்கு வழி வகுக்கும். பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் அவர்கள் இப்படி பட்டவர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு உதவ முன்வரலாமே. தங்கள் கல்லூரிகளில் இதை ஒரு பாடமாக வைத்து, சூரிய ஒளியில் மின்சாரம் தயாரித்து புதுமை படைத்து நமது மாநிலத்தை இருட்டிலிருந்து வெளிச்சத்துக்கு கொண்டு வரலாமே, எத்தனை காலத்துக்கு இந்த அரசியல் வீணர்களின் வார்த்தைகளை நம்பிக்கொண்டு காலம் தள்ளுவது.தினமணி ஆசிரியர் அவர்களுக்கும் இதில் முக்கிய பங்கு உள்ளது. மாற்றி யோசியுங்கள்..ஆட்சியை மாற்றிக்காட்டியவர்கள் நீங்கள்.
பதிவுசெய்தவர் mackie noohuthambi, kayalpatnam tamil nadu 10/08/2012 06:26 இதற்கான பதில்முறையற்ற கருத்து
சூப்பர் விஜயகுமார் சூரிய சக்தி மின்சார தேவை இப்போது நமக்கு தேவை...
பதிவுசெய்தவர் சத்தியசீலன் 10/08/2012 10:15 இதற்கான பதில் முறையற்ற கருத்து
well done Vijaykumar....keep it up......
பதிவுசெய்தவர் S.SETHURAMAN 10/08/2012 12:46 இதற்கான பதில் முறையற்ற கருத்து
Well Done....Vijaykumar.....Keep it up......
பதிவுசெய்தவர் S.SETHURAMAN 10/08/2012 12:48 இதற்கான பதில் முறையற்ற கருத்து
அரசு இவருக்கு மானியம் வழங்க ஆவன செய்ய வேண்டும்...
பதிவுசெய்தவர் ஆதி 10/08/2012 14:58 இதற்கான பதில் முறையற்ற கருத்து
டியர் விஜயகுமார் sir, I Salute you for your brilliant decision and implementation. Like Gujarat, let us develop TN Ekanath
பதிவுசெய்தவர் Ekanath 10/08/2012 19:17 இதற்கான பதில் முறையற்ற கருத்து
Subsidy / மானியம் பெற ஐ தொடர்பு கொள்ளவும் http://ping.fm/a3pK0 http://ping.fm/GGPnXsite/index/id/6m3f3j5R6U TamilNadu Energy Development Agency E.V.K Sampath Maaligai, 5th floor, No.68, College Road, Chennai-600 006 Ph: 28222973 Email: info@teda.in ஏற்கனவே ஒருவர் 1.7 லட்சம் செலவு செய்து 80,000 மானியம் பெற்றுள்ளார் -> http://ping.fm/uQX0S
பதிவுசெய்தவர் விஜய் 10/09/2012 06:05 இதற்கான பதில் முறையற்ற கருத்து
vijayakumar avarkalai vaaltha vayathillai வணகுகிறேன்.. மின்பற்றாக்குறை என்று புலம்பும் அதீத அணுஉலை பிரியர்களுக்கு இது உதவட்டும்..
பதிவுசெய்தவர் டென்சிங் 10/09/2012 13:57 இதற்கான பதில் முறையற்ற கருத்து
சார் உங்களைப்போல அறிவியல் ரீதியாக செய்யும் ஒவ்வொரு முயற்சியும் வெற்றியடையும்.உங்களை தொடர்புகொள்ள ஆசைபடுகிறேன்,எனக்கும் சூரிய ஒளியை பயன்படுத்த எனக்கு ஆசை!!!
பதிவுசெய்தவர் பூபதிராஜா ப 10/09/2012 18:14 இதற்கான பதில் முறையற்ற கருத்து
தமிழ்நாடு எனர்ஜி டெவலப்மென்ட் அசோசியேஷன்' மூலமாகப் பெற்றுக் கொள்ளச் சொன்னார்கள். அவர்களிடம் கேட்டால், அவர்கள் குறிப்பிடும் சோலார் பேனல்களை வாங்கினால் மட்டும்தான் மானியம் என்றார்கள். நான் தொடர்ந்து முயற்சிக்கவில்லை. ....குறிப்பிட்ட கம்பனி பானல் வாங்கினால்தான் மான்யம் இந்த கழக அரசுகள் திருந்தவே செய்யாதா. கடவுளே. நல்லதை முயற்சித்தாலும் ஊக்காபடுதாத மக்கள் மெஜாரிட்டி அரசு.
பதிவுசெய்தவர் சபாஷ் 10/09/2012 18:21 இதற்கான பதில் முறையற்ற கருத்து
\ சோலார் பேனல் வாங்கினால் மத்திய அரசு 30 சதவிகிதம் மானியம் தருகிறது என்று கேள்விப்பட்டு "மினிஸ்ட்ரி ஆஃப் நியூ அன்ட் ரினிவபிள் எனர்ஜி' துறையை அணுகினேன். அவர்கள் "தமிழ்நாடு எனர்ஜி டெவலப்மென்ட் அசோசியேஷன்' மூலமாகப் பெற்றுக் கொள்ளச் சொன்னார்கள். அவர்களிடம் கேட்டால், அவர்கள் குறிப்பிடும் சோலார் பேனல்களை வாங்கினால் மட்டும்தான் மானியம் என்றார்கள். நான் தொடர்ந்து முயற்சிக்கவில்லை. //// அங்கதான் இருக்குது கமிஷனே! சர்க்கார் அதிகாரிகளா? கொக்கா?
பதிவுசெய்தவர் @முத்துக்குமார்@ 10/09/2012 18:45 இதற்கான பதில் முறையற்ற கருத்து
Br vijaykumar I would like to meet u pl
பதிவுசெய்தவர் rtram 10/09/2012 19:43 இதற்கான பதில் முறையற்ற கருத்து
அவர்கள் குறிப்பிடும் சோலார் பேனல்களை வாங்கினால் மட்டும்தான் மானியம் என்றார்கள். நான் தொடர்ந்து முயற்சிக்கவில்லை. - குறிப்பிட்ட கம்பெனி மூலம் கிடைக்கும் கமிஷன் அந்த அதிகாரிக்கு கிடைக்காமல் போகும். நாட்டு நலத்தை பற்றி அந்த நாய்க்கு கவலை ஏன்.?
பதிவுசெய்தவர் SESHASAYEE 10/09/2012 21:55 இதற்கான பதில் முறையற்ற கருத்து
விஜயகுமார்அவர்கள் மிக நன்றாக நாடுக்கு நல்ல பனி செய்துள்ளார்
பதிவுசெய்தவர் பட்டபிசீதராமன் .R 10/10/2012 13:22 இதற்கான பதில் முறையற்ற கருத்து
நன்று பனி thodaradum
பதிவுசெய்தவர் பட்டபிசீதராமன்R 10/10/2012 13:26 இதற்கான பதில் முறையற்ற கருத்து
சகோதரர் விஜயகுமாருக்கு வாழ்த்துக்கள் உங்களைபோன்றோரின் சேவையும் பங்களிப்பும் எல்லாக்கரியங்களிலும் எல்லாகலத்திலும் இந்தியாவுக்கு தேவை. மேலும் கூடங்குளம் ஆதரவாளர்கள் யாராவது இருந்தால் உங்கள் வெற்றியை அவர்களுக்கும் கொஞ்சம் சொல்லுங்கள்.
பதிவுசெய்தவர் கிராமத்தான் 10/10/2012 17:09 இதற்கான பதில் முறையற்ற கருத்து
சபாஷ்,தம்பி.......இதை யாராவத து முதல்வர் கவனத்துக்கு கொண்டுவந்து தமிழகத்துக்கு மின் வேட்டை குறைக்க வழ்ழி செய்யும் அர்ரசியால்வதீ உண்ட?.கண்ணனுக்கு தெரிந்தவரை யாரயும் காணவில்லை -ப.விசு .இங்கிலாந்து
பதிவுசெய்தவர் Dr .ப.visuwanathan 10/10/2012 21:41 இதற்கான பதில் முறையற்ற கருத்து
சபாஷ்,தம்பி.......இதை யாராவத து முதல்வர் கவனத்துக்கு கொண்டுவந்து தமிழகத்துக்கு மின் வேட்டை குறைக்க வழ்ழி செய்யும் அர்ரசியால்வதீ உண்ட?.கண்ணனுக்கு தெரிந்தவரை யாரயும் காணவில்லை -ப.விசு .இங்கிலாந்து
பதிவுசெய்தவர் Dr .ப.visuwanathan 10/10/2012 21:43 இதற்கான பதில் முறையற்ற கருத்து
I also wish to do like this.
பதிவுசெய்தவர் uduman 10/11/2012 07:40 இதற்கான பதில் முறையற்ற கருத்து
வெள்!
பதிவுசெய்தவர் சச்சின் கம்ளிஓல 10/11/2012 14:59 இதற்கான பதில் முறையற்ற கருத்து
சோலார் எஞ்ச்னியர் ங் என்று ஒரு டிபார் மென்ட் அரசு கல்லூரிகளில் உருவாக்க வேண்டும்.
பதிவுசெய்தவர் Parivel 10/11/2012 15:50 இதற்கான பதில் முறையற்ற கருத்து




--
MUDUVAI HIDAYATH

http://ping.fm/zAxzl

http://ping.fm/b80sP

--

No comments: