Saturday, May 19, 2012

பழமொழிகள்


அகத்தின் அழகு முகத்தில் தெரியும்.
அச்சாணி இல்லாத தேர், முச்சானும் ஓடாது.
அறிவாளிகள் கூட்டம் உயிருள்ள நூல் நிலையம்.
அசையாத மணி அடிக்காது
அலங்காரம் இல்லாமல் அழகு இருப்பதில்லை.
அரண்மனை வாயிற்படி அதிகமாக வழுக்கும்.
அறுகல் கட்டையும் ஆபத்திற்கு உதவும்.
அழகும், மணமுள்ள பூக்களும் சாலையோரத்தில் வாழாது.
அறிவின் அடையாளம் இடைவிடா முயற்சி.
அதிர்ஷ்டம் அயர்ந்த நித்திரையிலும் வரும்.
அழகுள்ள பெண்ணையும் கிழிந்த ஆடையையும் யாரேனும் பிடித்து இழுத்து விடுவார்கள்.
அமைதி சாந்தத்தை உருவாக்கும். செல்வம் பெயரை உண்டாக்கும்.
அழகு வல்லமை உடையது. பணம் சர்வ வல்லமை உடையது.
அலை அடித்தால் பிரார்த்தனை துவங்கும். கரை சேர்ந்தால் பிரார்த்தனை நீங்கும்.
அதிர்ஷ்டம் ஒருவனுக்குத் தாய். மற்றவனுக்கு மாற்றாந்தாய்.
அழகான பெண் தலைவலி, அழகற்றவள் வயிற்றுவலி.
அழகும் மடமையும் பழைய கூட்டாளிகள்.
அடுப்பங்கரையில் கற்றதையெல்லாம் பிள்ளை பேசும்.
அறிவார் ஐயம் கொள்வார்; அறியார் ஐயமே கொள்ளார்.
அரைத்துளி அன்புகூட இல்லாமல் ஆயிரம் சட்டங்கள் இயற்றலாம்.
அன்பு மெலிந்து போனால், தவறு தடியாகத் தெரியும்.
அதிகப் பணப்புழக்கம் இளைஞனைக் கெடுக்கும்.
அசட்டுத் தனங்கள் எண்ணிலடங்காதவை; அறிவு ஒன்றே ஒன்றுதான்.
அடிப்பதும் அடிபடுவதும்தான் வாழ்க்கை.
அரை குறை வேலையை முட்டாளிடம் காட்டாதே!
அண்டை அயல் தயவு இன்றி எவரும் வாழ முடியாது.
அன்பும், மனைவியும் அமைவதே வாழ்க்கை.
அறிவாளிகள் கடிதங்களை ஆரம்பத்திலிருந்தே படிப்பார்கள்.
அழகு, அடைத்த கதவுகளை திறக்கும்.
அதிகப் பேச்சும், பொய்யும் நெருங்கிய உறவினர்.
அதிகப் பணிவும் அகம்பாவம் ஆகலாம்.
அடுப்பூதுபவனின் கண்ணில் நெருப்புப் பொறி விழும்.
அறுப்பு காலத்தில் தூக்கம்; கோடை காலத்தில் ஏக்கம்.
அகந்தை அழிவு தரும்; ஒழுக்கம் உயர்வு தரும்.
அதிக ஓய்வு அதிக வேதனை.
அடுத்தவன் சுமை பற்றி அவனுக்கு என்ன தெரியும்?
அழகின் இதழ்கள் கவர்ச்சி; கனிகள் கசப்பு.
அநாதைக் குழந்தைக்கு அழக்கற்றுத்தர வேண்டாம்.
அன்பை விதைத்தவன் நன்றியை அறுவடை செய்கிறான்.
அச்சம் அழிவிற்கு ஆரம்பம்; துணிவு செயலுக்கு ஆரம்பம்.
அண்டத்தில் உள்ளது பிண்டத்திலே.
அதிகமாக உண்பவனுக்கு அறிவு மட்டு.
அழுதாலும் பிள்ளை அவள்தான் பெற வேண்டும்.
அறுக்கத் தெரியாதவன் கையில் ஐம்பது அரிவாள்.
அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு.
அன்பாக பேசுபவருக்கு அந்நியர் இல்லை.
அன்னை செத்தால் அப்பன் சித்தப்பன்.
அன்பு இருந்தால் புளிய மர இலையில்கூட இருவர் படுக்கலாம்.
அரசனும் அன்னைக்கு மகனே.
அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்.
அறிவுடை ஒருவனை, அரசனும் விரும்பும்.
அழுத்த நெஞ்சன் யாருக்கும் உதவான், இளகிய நெஞ்சன் எவருக்கும் உதவுவான்
அரசனை நம்பி புருஷனைக் கைவிட்டது போல!
அஞ்சியவனைப் பேய் அடிக்கும்.
அடித்து வளர்க்காத பிள்ளையும், முறுக்கி வளர்க்காத மீசையும் உருப்படாது.
அவனன்றி ஓர் அணுவும் அசையாது.
அன்பே, பிரதானம்; அதுவே வெகுமானம்.
இணையத்திலிருந்து...
Engr.Sulthan

No comments: