அறியாத சில விசயங்களை
தெரிந்து கொள்வோம் வாங்க! பகுதி-15
*முதன் முதலில் மின்சாரம் தாக்கி இறந்தவர் யார் தெரியுமா?... அமெரிக்காவின் டபிள்யூ. ரிச்மேன் ஆவார். பெஞ்சமின் பிராங்கிளின் 1749-ம் ஆண்டு மின்னலுக்கு மின்சக்தி உண்டு என்ற உண்மையை உலகிற்கு கண்டறிந்து சொன்ன போது அதை உண் மையா, பொய்யா என நிரூபிக்கிறேன் என தைரியமாகக் கூறிய ரிச்மேன் பரிசோதனையில் ஈடுபட்டபோது மின்சாரம் தாக்கி உயிரை இழந்தார்.
***
*தென் அமெரிக்க கண்டத்தில் கான்டோர் என்னும் ராட்சத பருந்து காணப்படுகிறது. இதை தென் அமெரிக்க நாடுகளில் வசிக்கும் ஸ்பானிஷ்காரர்கள் தெய்வமாகக் கருதுகிறார்கள். இதற்காக ஒவ்வொரு ஆண்டும் ஜுலைமாதம் 29-ந்தேதி கான்டோர் தினம் என்னும் நாளையும் கடைப் பிடிக்கிறார்கள். அன்று இந்த பருந்தை எருதின் முதுகில் கட்டி விடுவார்கள். பருந்து தன்னை விடுவித்துக் கொள்ள எருதைக் குத்திக் குத்திக் காயமாக்கும். முடிவில் எருது இறந்து போகும். எருது சொர்க்கத்திற்குப் போகும் என எண்ணி விழாவை நடத்துவோர் மகிழ்ச்சி அடைவார்கள்.
இப்படி எருதைக் கொல்வதற்கு மிருகவதை சங்கத்தினர் எதிர்ப்புத் தெரிவித்ததையொட்டி இப்போது இந்தப் போட்டிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
***
*அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள அல்டமெண்ட் கணவாய் பகுதியில் நூற்றுக்கணக்கான காற் றாலைகள் உள்ளன. இதன் மூலம் உற்பத்தியாகும் மின் சாரத்தின் மூலம் கலிபோர்னியா மாகாணத்தின் தேவையில் 10 சதவீதம் பூர்த்தி செய்யப்பட்டு விடுகிறது.
இதில் இன்னொரு குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால் உலக காற்று சக்தி மின்சாரத்தில் 85 சதவீதத்தை கலிபோர்னியா மாகாணம் பயன்படுத்திக் கொள்கிறது.
***
*மிக வேகமாக ஓடக் கூடிய குதிரையையும் மிஞ்சி சாதனை படைத்து உலக சாதனை புத்தகமான கின்னசிலும் இடம் பிடித்திருக்கிறார், ஆப்பிரிக்கா கண்டத்தைச் சேர்ந்த ஐப்பால் லூம் என்னும் ஓட்டப் பந்தய வீரர்.
குதிரையுடனான 10 ஆயிரம் மீட்டர் தூரப் போட்டியில் அவர் கலந்து கொண்டார். இந்த பந்தயத்தில் அவர் குதிரையை விட 20 செகண்டுகள் முன்னதாக ஓடி வந்து வெற்றிக் கம்பத்தைத் தொட்டு வெற்றி பெற்று சாதனை நிகழ்த்தினார்.
***
*ஒலிம்பிக்கில் ஒரே விளையாட்டில் தொடர்ந்து நான்கு தடவை தனி ஒருவரே தங்கப்பதக்கத்தை வென்றவர் என்ற பெருமை ஒரே ஒரு வருக்கு மட்டுமே உண்டு. அவர் அமெரிக்காவின் ஆல்பிரட் அடால்ப் ஆர்ட்டர். 1956-ம் ஆண்டு முதல் 1968- ம் ஆண்டு வரை நடந்த நான்கு ஒலிம்பிக் போட்டிகளில் வட்டு எறியும் போட்டியில் தொடர்ந்து தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
*****
"ஹான்ஃபில்" என்பது அமேசான் காடுகளில் காணப்படும் ஒருவகை சிலந்தி. இவற்றின் முக்கிய உணவு என்ன
தெரியுமா? மீன்கள்தான். இந்த சிலந்திகள், மீன்களைப் பிடித்துத் தின்பதற்காகக் குளம், குட்டைகளில் மூழ்கும். நீரிலும் வாழக்கூடிய தன்மை கொண்டிருந்தாலும் இவ்வகை சிலந்திகள் இரைக்காக மட்டுமே தண்ணீருக்குள் செல்லும். எப்படி தெரியுமா?
கனமான பொருள் ஒன்றைக் கவ்விக் கொண்டு நீரில் மூழ்கும். தண்ணீருக்குள் இரை தின்றதும், கவ்விய கனப்பொருளை விட்டு விடும். உடல் கனம் குறைவதால் தானாக நீரின் மேற்பரப்புக்கு வந்து சேர்ந்து விடுமாம்.
****
*வெனிஸ் நகரில் கோமாளி கல்லூரி அமைந்துள்ளது. கோமாளிகளுக்குப் பயிற்சியளிக்கும் இக்கல்லூரியில் 50 மாணவர்களுக்கு மட்டுமே இடமுண்டு. எட்டு வாரப் பயிற்சியில் கழைக் கூத்தாடுதல், பொய்க்கால் கட்டி ஆடுதல் போன்ற பல வித்தைகள் கற்றுக் கொடுக்கப்படுகின்றன.
* எறும்புகள் பூமிக்கு அடியில் கூடுகள் கட்டிக் கொள்கின்றன. சில வகை எறும்புகள் மட்டும் உயர்ந்த மரங்களில் கூடுகளை உருவாக்கிக் கொள்கின்றன.
* எறும்பு, பூச்சி வகைகளில் ஹைமனாப்டிரா என்ற வகையைச் சேர்ந்தது.
* ஹனி ஆன்ட்ஸ் என்ற அழைக்கப்படும் தேன் எறும்புகள் தங்கள் வயிற்றிலேயே தேன் போன்ற பொருள்களைச் சேகரித்து வைக்கின்றன. இதனால், இவற்றின் வயிறு பருத்து உருண்டு தேன் குடமாகக் காட்சியளிக்கும். தேன் கிடைக்காத காலங்களில் வாய் வழியே தேனைத் துப்பி மற்ற எறும்புகளுக்குக் கொடுக்கின்றன.
* எறும்புகளுக்கு பார்வை தெரியாது. தன்னுடைய உணர்வுத் திறனால் மோப்பம் பிடித்து வழியை அறிந்துக் கொள்கின்றன.
*தொடரும்...
இணைய தள கடலில் மூழ்கி உங்களுக்காக முத்துக்கள் எடுத்து கோர்த்து தருபவன்,
Engr.Sulthan
No comments:
Post a Comment