கை கழுவ கத்துக்கோங்க!
தேவையில்லாத எத்தனையோ விஷயங்களை ‘கை கழுவியாச்சு’ என்கிற ஒற்றை வார்த்தையில் அலட்சியம் செய்கிறோம். ஆனால், கை கழுவுவது என்பது அன்றாட ஆரோக்கியத்துக்கு மிக அவசியமான விஷயம். சாப்பாட்டுக்கு முன்பும் (பலருக்கு அதற்குக்கூட பொறுமை இருப்பதில்லை), சாப்பிட்ட பிறகும் மட்டுமே கை கழுவுவோர் நம்மில் பலர். 24 மணி நேரமும் நம் கைகளில் ஒட்டி உறவாடும் கண்ணுக்குத் தெரியாத கிருமிகளால், எத்தனை எத்தனை நோய்களை நாமே அழைத்துக் கொள்கிறோம் தெரியுமா?
அடிக்கடி கைகளைக் கழுவி சுத்தமாக வைத்திருப்பதே ஆரோக்கியத்தின் அடிப்படை. ஏதோ தண்ணீரில் கையை நனைத்தோமா, உதறினோமா என்று கழுவுவது கூடாது. அதற்கும் ஒரு முறை இருக்கிறது. அது...
குழாயைத் திறந்து விடவும். வெதுவெதுப்பான, உங்கள் கைகள் பொறுக்கும் சூடுள்ள தண்ணீர் பெட்டர்.
வாஷ் பேசின் அல்லது பாத்ரூமில் எப்போதும் லிக்யூட் சோப் வைத்திருங்கள்.
அதிலிருந்து ஒரு துளி எடுத்து, கைகளில் நுரை வரும் அளவுக்கு 20 நொடிகள் தேய்க்கவும்.
விரல்களுக்கிடையில், நகக்கண்களின் இடுக்குகளில் நன்கு தேய்க்க வேண்டும். முடிந்தால் நெயில் பிரஷ் வைத்துக் கொள்ளலாம்.
மீண்டும் தண்ணீரைத் திறந்து விட்டு, சோப் முழுக்க நீங்கும்படி கழுவவும்.
பேப்பர் டவல் அல்லது டிஷ்யூ வைத்து ஈரத்தைத் துடைக்கவும். அதே பேப்பரால் குழாயை மூடிவிட்டு, ஞாபகமாக டிஷ்யூவை குப்பைத் தொட்டியில் போடவும்.
வெந்நீரில்தான் கழுவ வேண்டும் என்றில்லை. சுத்தமான தண்ணீராக இருந்தாலே போதும்.
முறைப்படி கை கழுவுவோருக்கு, தொற்றுக் கிருமிகளின் மூலம் சட்டென ஏற்படும் ஆரோக்கியக் கோளாறுகள் வராது.
கை கழுவுவதை விட, கழுவிய கைகளை ஈரம் போகத் துடைக்க வேண்டியது மிக முக்கியம். அசுத்தமான கைகளைவிட, ஈரமான கைகளில் கிருமிகள் அதிகம் பரவும்.
கை கழுவி முடித்ததும், குழாயை பேப்பரால் மூடச் சொன்னதற்குக் காரணமுண்டு. குழாயில் ஒட்டிக் கொண்டுள்ள கிருமிகள் மீண்டும் உங்கள் கைகளுக்குத் தாவாமல் தடுக்க வேண்டாமா?
நன்றி:தினகரன்
Engr.Sulthan
No comments:
Post a Comment