அதாவது, தர்பூசணி பழம் ஓர் இயற்கையான 'வயாக்ரா'என்பது தான்.
அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் ஏ&எம் புரூட்ஸ் அண்ட் வெஜிடபிள் இம்ப்ரூவ்மெண்ட் மையத்தின் இயக்குனரான பீமு பாட்டீல் என்ற இந்தியர்,இதுகுறித்து மேற்கொண்ட ஆய்வில் பல்வேறு ஆச்சரியமான தகவல்கள் தெரியவந்துள்ளன.
அதன்படி, தர்ப்பூசணியில் உள்ள ஃபைட்டோ - நியூட்ரியன்ட்ஸ் என்ற சத்துக்கள், உடம்பை ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்பாகவும் வைத்திருக்கின்றன.
இதில் உள்ள மூலப்பொருட்கள் ரத்தம் வழியாக சென்று நரம்புகளுக்கு கூடுதல் சக்தியை தருகிறது.
அதாவது, ஒரு வயாக்ரா மாத்திரையில் அடங்கியுள்ள சக்தி, தர்பூசணி பழத்திலும் இருப்பது தெரியவந்துள்ளது.
இது தொடர்பான ஆய்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
புகை பிடிப்பதனால் ஏற்படும் தீமைகள் ஏராளமானவை உண்டு. அந்த வரிசையில் புதிதாக சேர்ந்திருக்கிறது முடி கொட்டும் பிரச்சினை.
புகை பிடிக்கும் ஆசிய நாடுகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான நபர்களை ஆய்வு செய்துபார்த்ததில், அதிகம் புகைபிடிக்கும் நபர்களுக்கு முடி கொட்டுதலுக்கு காரணமான நோய் ஏற்படும் என்று கண்டறிந்துள்ளனர்.
இதனால் வயதாக வயதாக தலையில் முடி சுத்தமாகஇல்லாது போகும். எனவே முடி கொட்டுவதை நிறுத்தி அழகாகவே இருக்க வேண்டுமெனில் புகைபிடிக்கக்கூடாது என்று எச்சரித்துள்ளனர்
|
பருப்பு வகைகளும் நார்ச்சத்தும் அதிகமாக உள்ள உணவை சாப்பிட்டு வந்தால், வயிறு சம்பந்தமான நோய்கள் பெரும்பாலும் குறையும். ஆரோக்கியமான வாழ்வை வாழலாம் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நபர்களிடம், ஆய்வு செய்து இந்த உண்மையை கண்டறிந்துள்ளனர். அதில் அதிகம் பருப்பு வகைகள், நார்ச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிட்டு வந்தவர்களுக்கு, கணையம், இதயம்தொடர்பான நோய்களும், நீரிழிவு நோயும் உண்டாகும் ஆபத்துகள் குறைந்திருப்பதை கண்டறிந்துள்ளனர்.
எனவே தினசரி உணவில் பாதிக்குபாதி பருப்பு வகைகள் அடங்கியிருப்பது நல்லது.
உடலின் பாதுகாப்புத்தன்மையின்மையால் நோய்க் குள்ளாகி ஆஸ்பத்திரிக்கு அலைவதை விட நாம் உண்ணும் உணவுகளே பிரதான நோய் தடுக்கும் ஆற்றலைக் கொடுக்கிறது.
அரைக்கீரையின் பயன்களும் அப்படித்தான்/ நோய் தீர்க்கும் அரும் மருந்தாக உதவுகிறது.
அரைக்கீரை அதிக அளவிலும்/ தமிழக மக்கள் அதிகமாக பயன்படுத்தும் கீரையுமாகும். அரைக்கீரை இதன் விதை இரண்டுமே உணவாகப் பயன்படுகின்றன. இந்த கீரையில் அற்புதம் தரும் பயன்கள் உள்ளன. இதில் வைட்டமின்களும்/ தாதுஉப்புகளும் குறிப்பிடத்தக்க அளவில் உள்ளன. பல்வேறு பக்குவங்களில் இக்கீரையைச் சமைத்து சாப்பிடலாம். அபார ருசியையும்/பசியையும் உண்டுபண்ணும் இக்கீரை குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு முக்கிய உணவாகும்.
பிரசவித்த பெண்களுக்கு சீதளம் வராமல் பாதுகாக்கும்.உடலுக்கு பலத்தையும், சக்தியையும் கொடுக்கும். கீரையின் சத்துக்கள் பெருமளவில் தாய்ப்பாலில் கலப்பதால, குழந்தையையும் நோய்களிலிருந்து பாதுகாக்கிறது. இக்கீரையை மிளகு ரசத்துடன் கலந்து உட்கொண்டால் உடல் நலமடையும். அரைக்கீரையை பழைய புளியுடன் கடைந்து சாப்பிட்டு வந்தால் பித்த சுரம்/ வாய்ருசியற்றுப்போதல், பசி இல்லாத நிலை போன்றவை குணமாகும். அரைக்கீரையுடன் பூண்டு, மிளகு,பெருகாயம் ஆகியவற்றை சோத்து மசியல் , குழம்பு,பொரியல் செய்து சாப்பிட வாதம், வாய்வு தொடாபான உடல் வலிகள் நீக்கி விடும்.
நாள்தோறும் இக்கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நோய்கள் எதுவும் ஆகாது. நரம்பு சம்பந்தப்பட்ட நோய் களுக்கு இந்தக் கீரையை மருந்தாகப் பயன்படுத்துகிறார்கள். பிடா வலி,மண்டை பீனிச நரம்பு வலி, ஜன்னி தலை வலி, கன்ன நரம்பு புடைப்பு ஆகியவற்றையும் இந்தக் கீரைகுணப்படுத்தும். இக்கீரை மலமிளக்கியாகவும் திகழ்கிறது. குழந்தைகளுக்கும் மலச்சிக்கல் தீர,உணவாக இக்கீரையை கொடுக்கலாம். அரைக்கீரை விதைகளை இடித்துக் கூழ் போல காய்ச்சி உணவாக உட்கொள்கின்றனா. இக்கீரை விதை யில் தயாரிக்கப்படும் தைலம் கண்ணுக்கு குளிர்ச்சியைத் தருவதுடன் தலைமுடி மின்னி கருமையாகவும்,செழித்து வளரவும் செய்கிறது.
இத்தனை அற்புதங்களை அரைக்கீரை தரும்போது இதனை உணவில் யாரும் சோக்கவா மறப்பார்கள்>எங்க கிளம்பிட்டீகளா அரைக்கீரையை வாங்கவா..
|
இளமையுடன் இருக்க ரகசியம் தினமும் 50 கிராம்வேர்க்கடலை
நியூயார்க்: தினமும் ஐம்பது கிராம் வேகவைத்த வேர்க் கடலைச் சாப்பிட்டால், இளமையாக இருக்கலாம். நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.நியூயார்க்,எல்பாசா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் உணவுப்பழக்கம் தொடர்பாக ஓர் ஆய்வு நடத்தினர். அதில் பல்வேறு உணவுப் பொருட்களில் உள்ள பயன்பற்றிய விவரங்கள் சேகரிக்கப்பட்டது. வேகவைத்த வேர்க்கடலையில், விஷக்கிருமிகளை கொல்லும் ஆற்றல் அதிகமாக இருப்பதாக கண்டறிந்துள்ளனர்.
அன்றாடம் சாப்பிடும் உணவு மற்றும் காய்கறிகள் மூலமாகவும் உயிர்க்கொல்லி நோய்கள் ஏற்படுகின்றன. இது போன்ற விஷக்கிருமிகளோடு போராடும் சக்தி வேர்க்கடலையில் அதிகமாக உள்ளது. தினமும் 50 கிராம் வேகவைத்த வேர்க்கடலையை காலையில் சாப்பிட்டால், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். அத்துடன் உடல் இளமையோடும் இருக்கும் என்கிறது ஆய்வு
Abdul Karim Chisthi
MD Cptr Sect., Almech Enterprise,
c 15 Industrial Estate, Coimbatore- 641021,
ak@almech.co.in, mobile: 9944497786.
--------------------------------------------------------------
All my Articles Available At http://karim74.blogspot.com
Assalaamu Alaickum
No comments:
Post a Comment