Sunday, April 12, 2009

தயிர்



1850
ஆம் ஆண்டு நியூயார்க்கில் ஒருவர் மதுக்கடை ஒன்றும் அதன் அருகிலேயே யோகர்ட் கடை ஒன்றும்(தயிர் போன்றது) திறந்தார். யோகர்ட் கடையில் வியாபார் பிய்த்துக்கொண்டு போகபலவிதமான இனிப்புச் சுவை சேர்க்கப்பட்ட தயிரைத் தயாரித்து பெரும் கோடீஸ்வரரானார்!

இன்று உலகெங்கிலும் தயிர் சாப்பிடுவது அதிகரித்து வருகிறது. பால் சாப்பிட்டால் ஒரு மணி நேரம் கழித்து 32%பால்தான் ஜீரணமாகியிருக்கும். ஆனால்,தயிர் சாப்பிட்ட ஒரு மணி நேரத்தில் 91% உடனேஜீரணிக்கப்பட்டிருக்கும்.

தயிரில் உடலுக்கு அழகைத் தரும் 'அழகு வைட்டமின்என்று சொல்லப்படும் ரிஃபோபிளவின் உள்ளது. இது உடலைப் பளபளப்பாக்க வல்லது. கண்வலிகண் எரிச்சல் முதலியவை இருந்தால் அப்போது தயிர் சாப்பிட வேண்டும். அப்படிச்சாப்பிட்டு வந்தால் போதுமானது! கண் நோய்களும் குணமாகும்.

பெண்களுக்கு மிகமிக முக்கியமான உணவாகத் தயிரே விளங்குகிறது. கரு நன்கு முதிர்ச்சி அடையவும்,பிரசவத்தின் போது உடல் நலமாக இருந்து எளிதாகப் பிரசவம் ஆகவும்குழந்தைக்குத் தாய்ப்பால் நன்கு உற்பத்தியாகிப் பால் கிடைக்கவும் தயிரில் உள்ள கால்சியம் உதவுகிறது. எனவே இவர்கள் தினமும் இரண்டு வேளையாவது நன்கு கட்டியான தயர் சாப்பிடுவது நல்லது.

பூப்படையத் தாமதம்மாதவிலக்குக் கோளாறுகள் முதலியவற்றையும் தயிர் மாமருந்தாக இருந்து குணப்படுத்துகிறது. மகாராஷ்டிராவிலும்,குஜராத்திலும் உள்ள பெண்களுக்கு பிறப்பு உறுப்பு சம்பந்தமான நோய்களே மிகவும் குறைவு. காரணம்,காலையில் தயிர் சேர்த்து சப்பாத்திரொட்டி இவற்றைச் சாப்பிடுவதுதான் என்கிறார்கள். கொழுப்புகுறைவாக இருக்கும் விதத்தில் கோதுமைமாவுடன் பருப்பு மாவைக் கலந்து ரொட்டி சுடுகின்றனர். மிஸி ரொட்டி என்ற பெயருள்ள இந்த ரொட்டியைத் தயிரில் தவறாமல் தோய்த்து எடுத்துச் சாப்பிடுகின்றனர்.

தினமும் தவறாமல் இரண்டு அல்லது மூன்று கப்தயிர் சாப்பிட்டு வந்தால் குடல் கோளாறுகள் முற்றிலும் குணமாகும். முதிய வயதிலும் விரும்பிய உணவை அளவுடன் ருசித்துச் சாப்பிடலாம்.

கால்சியத்தினால் பற்களும் உடம்பும் எண்பது,தொண்ணூறு வயதுக்குப் பிறகும் உறுதியாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும். இந்த உண்மையை நோபல் பரிசை வென்ற ரஷ்ய பாக்டீரியாலஜிஸ்ட்டான பேராசிரியர் எலிக் மெட்ச்ஜிக்கோப் கண்டுபிடித்தார்.

மேலும் இவர் பல்கேரியாவில் பலர் 100 வயதுக்கு மேல் வாழ்வதைப் பார்த்து அதிசயித்து அவர்களின் உணவு விபரங்களைக் கேட்டார். எல்லோரும் டீகாபி சாப்பிடுவது போல ஒரு நாளைக்கு ஐந்து அல்லது ஆறு தடவை உப்புச் சேர்க்காத தயிரைச் சாப்பிடுவதாகச் சொன்னார்கள்.

தயிரில் உள்ள லாக்டிக் அமிலமே உடல் தசைவயிறு,குடல் முதலியவற்றில் உள் அமிலத்தன்மையைச் சரிசெய்து ஆரோக்கியம்இளமை முதலியவற்றை எப்போதும் புதுப்பித்துப் பாதுகாத்து வருகிறது.

கல்லீரல் கோளாறுமஞ்சள் காமாலைசொறி சிரங்கு,தூக்கமின்மைமலச்சிக்கல் முதலியவை தயிரும் மோரும் சேர்த்தால் விரைந்து குணமாகும்.

தயிர்சாதம் சாப்பிட்டால் மூளை சுறுசுறுப்பாகும். காரணம்இவற்றில் உள்ள கால்சியமும்,பாஸ்பரஸும்தான்.

சூப்பர் உணவான தயிரைத் தினமும் சுறுசுறுப்பான டீ,காபி போன்று கருதி அடிக்கடி சாப்பிட்டு வந்தால் மூளையும் விழிப்புடன் இருந்து சாதனைகள் புரியவும் வழி காட்டும்.[/quote]
கூடுதல் தகவல் பெற
--------------------------------------------------------------
Abdul Karim Chisthi
MD Cptr Sect., Almech Enterprise,
c 15 Industrial Estate, Coimbatore- 641021,
ak@almech.co.in, mobile: 9944497786.
--------------------------------------------------------------
All my Articles Available At http://karim74.blogspot.com
Assalaamu Alaickum


No comments: